அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.75000 பேர் ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றன.
மே 22 ம் தேதி
381 ஹாஜிகளுடன் முதல் விமானம் தில்லியிலிருந்து புறப்பட்டு விட்டது.
தமிழகத்திலிருந்து
நேற்று முந்தினம் 7 ம் தேதி 416 பயணிகள் சென்னையிலிருந்து புறப்பட்டனர். கோரோனோவிற்குப்
பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னையிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
உலகம் முழுவதிலும்
இருந்து அணியணியாக மக்கள் புனித மக்கா நகருக்கு புறப்பட்டு வருகிறார்கள்.
இந்த காட்சியே கண் கொள்ளா காட்சி. இது போன்ற ஒரு ஒப்பற்ற மானுடத் திருவிழா உலகில் வேறெதுவும் இல்லை.தூர் தூர தேசங்களிலிருந்தும் சாரை சாரையாய் புறப்படுகிற கூட்டம் திருமற்றயின் கூற்றை நிருபிக்கிறது.
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
عن ابن عباس قوله : ( وأذن في الناس بالحج ) قال : قام إبراهيم خليل الله على الحجر ، فنادى : يا أيها الناس كتب عليكم الحج ، فأسمع من في أصلاب الرجال وأرحام النساء ، فأجابه من آمن من سبق في علم الله أن يحج إلى يوم القيامة : لبيك اللهم لبيك .
عن مجاهد ، في قوله : ( وأذن في الناس بالحج ) قال : قام إبراهيم على مقامه ، فقال : يا أيها الناس أجيبوا ربكم ،
فقالوا : لبيك اللهم لبيك ، فمن حج اليوم فهو ممن أجاب إبراهيم يومئذ .
அன்று பதிலளித்தவர்கள் இன்று
பயணப்படுகிறார்கள்.
அல்லாஹ் புனிதப்பயணிகள் அனைவருடைய
ஹஜ்ஜையும் கபூல் செய்வானாக! பயணத்தின் அனைத்து பணிகளையும் இலகுவாக்குவானாக!. எல்லா
இட்த்திலும் அவர்களை பாதுகாத்தருள்வானக!
ஹஜ் எதற்காக என்று கூறும் போது لِيَشْهَدُوا
مَنَافِعَ لَهُمْ என்று
அல்லாஹ் கூறுகிறான்.
ஹஜ்ஜில் ஏராளமான
பலன்கள் உண்டு என்றாலும் அதில் பிரதானமானது நான்கு என அறிஞர்கள் கூறுகிறார்கள்
1. மன்னிப்பு
2. பரக்கத்
3. துஆ அங்கிகரிக்கப்படுதல்
ஒரு நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி இது.
நீ கேட்க வந்த்தை நானே சொல்லட்டுமா ?
ஹஜ் எனும் வண்க்கத்த்தின் மிகப்பெரிய பலன் ஹாஜியின் பிரார்த்தனை
ஏற்கப்ப்டும் அவருக்காகவும் மற்றவர்களுக்காகவும்.
ஹாஜி இதை தெளிவாகவும் கவனமாகவும் சிறப்பாகவும் உணர வேண்டும்.
“இந்தப்பயணத்தில் நாம் கேட்கிற துஆக்களை அல்லாஹ் அங்கீகரிப்பான்.”
எத்தனை பேருக்கு இதில் பரிபூரண நம்பிக்கை இருக்கிறதோ அவர்களின்
ஹஜ் கபூலாகும்.
فقد روي عن أبي هريرة رضي الله عنه، عن رسول
الله صلى الله عليه وسلم أنه قال:(الحجاج والعمار وفد الله؛ إن دعوه أجابهم، وإن
استغفروه غفر لهم) رواه ابن ماجه.
இது ஹாஜிக்கு கிடைக்கும் பலன் என்றால் அவரிடம் துஆ
செய்ய கேட்போருக்கும் இதே பலன் கிடைக்கும்.
عن أبي هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ:" اللهم اغفر للحاج، ولمن استغفر له الحاج "
கஃபா இஸ்லாத்தின் தூண். அங்கு செல்பவர் அதற்குரிய
கூலியை பெறாமல் திரும்புவதில்லை.
قال الامام النووي في الايضاح
إن الدعاء يستجاب هناك في خمس عشرة مواضع
1. في الطواف
2. وعند الملتزم
3. وتحت الميزاب
4. وفي اللبيت
5. وعند الركن
6. وعند زمزم
7. علي الصفا
8. وفي السعي
9. وخلف المقام
10. و في عرفات
11. وفي المزدلفة
12. وفي مني
13. وفي الجمرات
நான் கேள்விப்பட்ட
சில அனுபவங்கள்
ஒரு முதியவர் முதுமையினால்
பார்வையை இழந்தார். ஜம் ஜம் தண்ணீரை அருந்திய பிறகு இறைவா! குர் ஆனை ஒதவேண்டும் எனக்கு
பார்வையை தார் என்று கேட்டார். பாவை திரும்பியது.
தீர்க்க முடியாத
சோரியாஸிஸ் நோயினால் சிரமபட்டவர் ஜம் ஜமை குடித்து துஆ கேட்டார். அந்நோய் நீங்கியது.
மகளுக்கு குழந்தை
வேண்டும் என்று முல்தஸிமில் இரவில் துஆ கேட்டவருக்கு காலையில் மகள் கர்ப்பம் தரித்திருப்பதாக
செய்தி வந்த்து.
பெரும்பாலான ஹாஜிகளின்
அனுபவம் ஹஜ்ஜில் கேட்ட துஆ அடுத்த வருட ஹஜ்ஜிற்குள் அங்கீகரிக்கப்பட்டு விடும்.
எனவே ஹஜ் பிராத்தனைகளின்
பிரதேசமும் பிரார்த்தனைகளின் பருவ காலமும் ஆகும்.
ஹாஜியும் பிரார்த்திக்கட்டும்
நமக்காகவும் பிரார்த்திக்க அவரிடம் சொல்லி அனுப்புவோம்.
அவ்வாறு கேட்கப்படும்
பிரார்த்தனைகளில் சிறந்தனைகளுக்கா இப்போது பயணம் புறப்படுகிற ஒவ்வொரு ஹாஜியும் தயாராகவே
இருக்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களது
துஆ க்களை அங்கீகரிக்கட்டும்.
ஆனால் ஹாஜிகள்
நினைவில் வைக்க வேண்டிய் முக்கிய மான ஒரு செய்தி.
நாம் இந்த உலகின்
நன்மைகளுக்காக கேட்கிற அதே அளவு அல்லது அதை விட கூடுதலாக மறுமைக்காக கேட்க வேண்டும்.
நமக்காக மட்டுமல்ல.
மற்ற யாருக்காக வெல்லாம் துஆ கேட்கிறோமோ அவர்களுக்கும் சேர்த்துத்தான். பிள்ளைகள் பெற்றோர்கள்
உறவினர்கள் அனைவரின் மறுமை வாழ்க்கையை மறந்து விடக் கூடாது.
அருமையானவர்களே
நாம் அதிகமாக ஓதுகிற ரப்பனா ஆதினா துஆ . மிக உன்னதமனது. ஆழமானது.
அந்த துஆ ஹஜ்ஜின்
சமயத்தில் கேட்கப்பட அருளப்பட்ட்து தான்
அன்றைய காபிர்கள்
ஹஜ் செய்து விட்டு உலகில் அவர்கள் விரும்புவதை மட்டும் கேட்டார்கள். அது நல்லதாக இருந்தாலும்
கெட்ட்தாக இருந்தாலும்.
அல்லாஹ் திருத்திக்
கொடுத்தான்.உலகில் நல்லதை கேளுங்கள் மறுமையிலும் நல்லதை கேளுங்கள்
ثُمَّ أَفِيضُواْ مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُواْ ٱللَّهَ ۚ
إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ
كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ النَّاسِ مَن يَقُولُ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ (200)
அதனால் ஹாஜிகள் மிக முக்கிய மாக ஈமானிய வாழ்வையும்
ஹராம்களை விட்டு விலகிய வாழ்வை – அல்லாஹ்வுக்கு பொருத்தமான வாழ்வை தனக்காகவும் பிறருக்காகவும்
அதிகம் கேட்கட்டும்.
அதுவே முஃமின்களின்
ஹஜ்ஜின் இயல்பாகும்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
தரணியெங்கும் தரமான ஜும்ஆ உரை தரும் தாங்களும், வாசிக்கும் நாங்களும், கேட்டு பயன்பெறும் மக்களும், ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் பி ஹக்கி ஸய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வ ஆலி ஸய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..
ReplyDeleteஹஜ் உடைய நான்கு பிரயோஜனங்களில் மூன்று மாத்திரமே கூறப்பட்டிருக்கிறது நான்காவது என்ன?
ReplyDelete