வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 22, 2023

அல்ஹரம் ; அல்லாவாசிகளுக்கான உலகு

أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ ۚ

புனிதம் மிகு மக்கா நகரில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் வருகிற செவ்வாய்க்கிழமை ஹஜ் எனும் மகத்தான் வணக்கத்தை நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள்.

அனைவரின் ஹஜ்ஜையும் அல்லாஹ் அங்கீகரிப்பானக!

அனைவருக்கும் ஹஜ்ஜின் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக!

இந்த முழு உலகு அல்லாஹ் படைத்தது தான் என்றாலும் அவன் படைத்த நோக்கத்தில் வாழும் மக்கள் கூடும் உலகமாக ஹஜ் இருக்கிறது.

அல்லாஹ் தன்னை வணங்கி வாழவே மனிதர்களான நம்மை படைத்தான்.

நாம் வேலையை விட்டு தேவையகளுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

மர்ஹும் கலீல் அஹ்மது கீரனூரி ரஹ் ஹஜ்ரத் ஒரு அருமையான உதாரணம் சொல்வார்கள்.

ஒரு கொத்தனார். வேலைக்கு வந்தால் வேலை பார்ப்பான். இடையிடையே வெத்திலை போடுவான். டீ குடிப்பான். ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவான் அது அவனது தேவை  . கொத்தனார்  வெத்திலை போட்டுக் கொண்டு டீ குடித்துக் கொண்டிருப்பதிலேயே நேரத்தை கழித்தால் அவனை நாம் என்ன செல்வோம்.

அல்லாஹ்வை வணங்கி வாழ்வதை வேலையாக கொள்ள வேண்டிய நாம் உலகில் பெரும் பாலும் அந்த  வேலைக்காக வாழ்வதை விட தேவைகளுக்காகவே அதிக நேரத்தை செலவிடுகிறோம்.

புனிதம் மிக்க ஹஜ்ஜில் திரளும் ஹாஜிகள் இலட்சக்கணக்கானோர் சில நாட்களுக்கு என்றாலும் அல்லாஹ்விற்கான வாழ்கையை வாழ்கிறார்கள். அனைத்தையும் துறந்து. இஹ்ராம் ஆடையுடன்.

இபாதத் செய்வது தான் அவர்களது நோக்கமாகவும் தேடலாகவும் இருக்கும்.

தேதி கவனத்தில் இருக்காது. நேரம் தெரியாது. வீட்டில் நடப்பது என்ன? வியாபாரத்தின் அன்றாட நிகழ்வு என்ன என்பது அவரது இரண்டாவது இலக்காகவே இருக்கும்.

இதன் காரணமாக ஹஜ்ஜை சிறந்த ஜிஹாத் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عن عائشة رضي الله عنها قالت: قلتُ: يا رسول الله، نرى الجهاد أفضل العمل، أفلا نجاهد؟ فقال:(لَكُنَّ أفضل الجهاد: حَجٌّ مبرور). [رواه البخاري].

ஹாஜி ஒரு வழிப்போக்கனை மினா அரபா முஸ்தலிபா என அங்கும் இங்குமாக  தங்க வைக்கப்படுகிறார்.

ஒரு பக்கீர்ஷா வின் நிலைக்கும் அதற்கு தோற்றத்தில் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருக்காது.

அல்லாஹ்தான் பணம் பதவி அந்தஸ்து என எல்லாவற்றையும் வழங்கும் சக்தி படைத்தவன். நாம் யாராக இருந்தாலும் அவன் வழங்குவதை பெற்றுக் கொண்டிருப்பவர்களே

ஹஜ்ஜில் ஒரு ஹாஜி படுகிற சிரமங்களை விட அவர்கள் வாழ்கிற உணர்வுகளின் உலகம் அல்லாஹ்விற்கானது.

உடலுக்கான சிரமங்கள் என்பதை விட உள்ளத்தில் நிகழும் மாற்றங்கள் காரணமாகவே ஹஜ் சிறந்த ஜிஹாத் என்று சொல்லப்படுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல

ஹஜ்ஜில் மக்கண் அனைவருக்கும் உணர்த்தப்படுகிற – அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு தத்துவம் இருக்கிறது.

புனித மக்கா நகரில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட அளவிலான பகுதியை இஸ்லாம் -ஹரம் -புனிதப் பகுதி என்று அறிவித்துள்ளது. இந்தப் பகுதிக்குள் யாருக்கும் எந்த தொல்லையும் தரப்படக் கூடாது. விலங்குகள் செடிகொடிகளுக்கும் கூட இப்பகுதியில் அபயம் தரப்பட்டிருக்கிறது,  முஸ்லிம்கள் மட்டுமே இதற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் நான்கு திசைகளிலும் இதற்கான எல்லைகள் தீர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

இந்த எல்லைகளை எப்படி தீர்மாணமாயின தெரியுமா?

ஆதம் அலை அவர்கள் தவாபு செய்ய வந்த போது பயந்தார்கள். அவருக்கு நிம்மதியளிக்க அல்லாஹ் நான்கு புறமும் சூழ்ந்து நிற்க மலக்குகளை அனுப்பினான். மலக்குள் சூழ்நு நின்று நிம்மதியளித்த இடம் ஹரமாயிற்று.  

انه لما خاف ادم من الشيطان فاستعاذ بالله فارسل الله اليه ملائكه خفوا مكه من كل جانب وقفوا حواليها وحرمه الله الحرم من حيث كانت الملائكه وقفت

நபி இபுறாகீம் (அலை) இறைக் கட்டளைப்படி கஃபாவை கட்டி முடித்த பிறகு இறைவா! இங்கு வழிபடும் முறைகளை எங்களுக்கு கற்றுக் கொடு என்று பிரார்த்தித்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரயீல் ஹரமின் அந்த எல்லைகளை இபுறாகீம் (அலை) அவர்களுக்கு அடையாளப் படுத்தினார்கள்.

நபி இபுறாகீம் (அலை) அந்த இடங்களில் அடையாளக கற்களை நட்டு வைத்தார்கள்.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு, தமீம் பின் அஸத் (ரலி) என்ற நபித் தோழரை அனுப்பி அந்த அடையாளங்களை புதுப்பித்து அதற்கு மறு அங்கீகாரம் கொடுத்தார்கள். எனவே ஹரம் புனித நிலம் என்ற அடையாளம் 4 ஆயிரம் வருடம் பாரம்பரியத்தை கொண்டதாகும். முஸ்லிம்களுக்கு மடுமே அனுமதி எனும் நடைமுறை ஹிஜ்ரி 10 ம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வந்தது. இச்சட்டத்தை  திருக்குர் ஆனின் தவ்பா அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலிலிருந்து மதீனாவின் திசையில் 7 கீமி தொலைவிலுள்ள தன்ஈம் என்ற இடம் ஹரமின் வடக்கு எல்லையாகும். அங்குதான் புகழ்பெற்ற ஆயிஷா பள்ளிவாசல் உள்ளது.

அரபாவின் திசையில் 20 கீமி தொலைவிலுள்ள மஸ்ஜிதுன்னமிரா ஹரமின் தெற்கு எல்லையாகும்

நஜ்தின் திசையில் 25 கீமி தொலைவிலுள்ள ஜிஃரானா எனும் இடம் ஹரமின் கிழக்கு எல்லையாகும். இங்கிருந்து ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்து உம்ரா செய்துள்ளார்கள்.

ஜித்தாவின் திசையில் 18 கீமி தொலைவிலுள்ள  ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்த இடம் ஹரமின் மேற்கு எல்லையாகும்.

ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் ஹரமில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஹஜ்ஜின் நாளான துல் ஹஜ் 9 ம் நாளில் மட்டும் அரபா எனும் ஹரமிற்கு வெளியே இருக்கும் இட்த்திற்கு சென்று விட்டு 10 ம் நாளில் மினா எனும் ஹரம் எல்லைக்கு திரும்பிவிடுகிறார்கள்.  

ஹஜ்ஜின் இந்த  முக்கிய நடவடிக்கையில் ஒரு பிரதான இரகசியம் இருக்கிறது.

கொஞ்ச நேரத்திற்கு அரபாவிற்கு செல்கிறார்கள் ஹாஜிகள் . அதுதான் ஹஜ்ஜின் பர்ளும் பிரதான வணக்கமும் ஆகும்.

அல் ஹஜ்ஜு அல் அரபா என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.  

பெருமானார் (ஸல்) அவர்கள் 9 ம் நாளின் மதியம் வரை அரபாவின் எல்லையில் காத்திருந்து விட்டு மதிய நேரம் ஆனவுடன் தான் அரபாவிற்குள் நுழைந்தார்கள்/ 

ஹஜ் என்பது துல் ஹஜ் 9 ம்நாளில் இருந்து 10 ம் நாள் பஜ்ருக்குள் கொஞ்ச நேரமாவது அர்பாவில் தங்கியிருப்பது தான்.

ஹரமிற்கு உள்ளே வாழ்ந்தவர்களை கொஞ்ச நேரத்திற்கு ஹரமிற்கு வெளியே செல்ல விட்டு மீண்டும் ஹரமிற்கு திரும்புகிற ஏற்பாடுதான் ஹஜ்.

இந்த உலகம் வாழ்கை என்பது இவ்வள்வு தான். கொஞ்ச நேரம் போய்விட்டு திரும்பி விட வேண்டியது தான் என்பதை. பாதுகாப்பும் நிம்மதியும் தருகிற இடம் இதற்கு முன்னாள் இருந்தது. இனி பின்னால் இருக்கிறது என்பதை மக்கள் அனுபவித்தில் உணர்ந்து கொள்ள அல்லாஹ் செய்த ஏற்பாடு. இது

ஹாஜிகளும் இதை உணர வேண்டும் . மற்றவர்களும் இதை உணர வேண்டும்.

ஹரம் என்றால் புனிதப்பகுதி என்று பொருள். நம் வாழ்வின் இனியுள்ள பகுதிகள் புனித ஹரமாக ஆக அல்லாஹ் துணை செய்யட்டும்.

அனைவருக்கும் இனி ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

 (மக்கா அல் முகராமாவின் அஜீஜிய்யா ஜமாஜிம் விடுதியிலிருந்து உங்களின் துஆ வை எதிர்பார்த்து)

 

9 comments:

  1. Anonymous6:07 PM

    தங்களின் மேலான துஆவை நாடியவனாக!! புதுக்கோட்டை அண்டக்குளம் இமாம் S. அய்யூப் அலிை பைஜி

    ReplyDelete
  2. Anonymous7:12 PM

    Barakallah

    ReplyDelete
  3. Anonymous7:38 PM

    துஆ செய்யுங்கள் ஹஜ்ரத் தமிழ்நாடு உலமாக்களின் ஈருலக நன்மைக்காக வும், வாழ்வாதார அபிவிருத்திக்கும்.... துஆ வை எதிர்பார்த்தவனாக s.தமீம் ஜைனி இமாம் மாப்பிள்ளை கவுண்டன் புதூர்.....

    ReplyDelete
  4. அல்லாஹ் அருள் செய்யட்டும்

    ReplyDelete
  5. Anonymous10:31 PM

    அல்லாஹ் தங்களது ஹஜ்ஜையும் அனைவரது ஹஜ்ஜையும் கபூல் செய்வதோடு ஹஜ் செய்யாத அனைவருக்கும் மக்பூலான ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் தருவானாக ஆமீன்.
    உலகில் அனைத்து முஃமின்களும் இறையச்சம் கொண்டு இறை திருப்தியுடன் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். தாங்களும் அவசியம் ஈருலக நலனுக்காக துஆ செய்யுங்கள்.

    ReplyDelete
  6. Anonymous10:32 PM

    அல்லாஹ்

    ReplyDelete
  7. Baarakkallah. تقبل الله منا ومنكم صالح الاعمال وجعل حجكم حجا مبرورا

    ReplyDelete
  8. Anonymous5:14 AM

    Alhamdulillah

    ReplyDelete