வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 29, 2023

சாத்தானை துரத்தும் தெளிவும் தைரியமும்

«وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ اتَّقَىٰ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ» (سورة البقرة: 203

ஹஜ் இஹ்ராமில் தொடங்கி சைத்தானை கல்லெறிவதில் முடிவடைகிறது.

ஹாஜி துல்ஹஜ் ஹஜ் 9 ம் நாள் லுஹருக்குப்பின் அரபா மைதானத்திலும் மஃரிபுக்குப் பின் முஜ்தலிபா மைதானத்திலும் தங்கும் போது அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. அவர் அன்று பிறந்த பாலகனைப் போல பரிசுத்தமானவராகிவிடுகிறார்.

 அதன் பிறகு 10 ம் நாள் காலை அவர் செய்யும் பிரதான வேலை சைத்தானை கல்லெறிவதாகும். அன்று ஜமரத்துல் அக்பாவில் மட்டும் கல்லெறிவார். அதன் பிறகு 11, 12 ஆகியர இரண்டு நாட்களிலும் தேவை பட்டால் 13 ம் நாளிலும் ஜம்ரத்துல் ஊலா உஸ்தா அகபா என மூன்று இடங்களிலும் கல்லெறிவார்.

ஹஜ்ஜில் ஒரு ஹாஜி செய்கிற அதிகபப்டியான வணக்கம் என்பது சைத்தானை கல்லெறிவதாகும்.

சைத்தானை கல்லெறிவது என்பது மினா மைத்தானத்தில் இருக்கிற மூன்று தூண்களை சுற்றி 7 கற்களை தனித்தனியாக வீசுவதாகும்.

பலரும் அங்குதான் சைத்தான் அடைக்கப்படீருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . அது தவறு,

அந்த தூண்கள் சைத்தானை அடையாளப்படுத்துவதாகவும் நினைக்கிறார்கள். அதுவும் தவறு, ஹாஜி எறியும் கல் அந்த தூண் மீது பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை சுற்றி இருக்கிற தொட்டியில் விழுந்தால் போதுமானது.

கல்லெறிவதன் தத்துவம் என்ன வெனில் ?

நான் என் வாழ்விலிருந்து சைத்தானை வெறுத்து ஒதுக்குவேன் என்பதாகும்.

ஹாஜியும் மற்றவர்களும் இந்த த்த்துவத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜினால் வாழ்க்கை பரிசுத்தப்படுத்தப் பட்டுவிட்ட பிறகு சைத்தான் தான் அவரை அசுத்தப்படுத்தப்படுத்த காத்திருக்கிற அவருடைய மிகப்பெரிய எதிரி . அவனது தீமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே அவருடைய பிராதன கவனமாக இருக்க வேண்டும். அதற்காகவே பல முறை அவர் சைத்தானை கல்லெறிகிறார். மூன்று நாட்களிலும்.

கல்லெறியும் போது ஓதப்படும் திக்ரை பலரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை , அது கல்லெறிவதன் த்த்துவத்தை நினைவூட்டுவதாகும்.

ரஃமன் லிஷ்ஷைத்தானி வரிழன் லிர் ரஹ்மானி

بسم الله والله أكبر رجمًا للشيطان ورضا للرحمن،

நான் சைத்தானை வெறுக்கிறேன். அல்லாஹ்வைவே ஆதரவு வைக்கிறேன் என்பது இதன் பொருள்

மூன்று இட்த்தில் மூன்று சைத்தான் இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவும் தவறு. உண்மையில் இவை மூன்றும் சைத்தானை கல்லெறியும் மூன்று இடங்களாகும்.

அவை மூன்றும் சைத்தான் விளையாடும் மூன்று மைதான்ங்களை அடையாளப்படுத்துகின்றன்.

ஒரு ஈமானிய இலட்சியம் கொண்ட மனிதர் சைத்தானின் அந்த மூன்று மைதானங்களிலும் தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்பதே கருத்து,

فعن ابن عباس رضي الله عنهما، يرفعه إلى النبي - صلى الله عليه وسلم - قال: ((لما أتى إبراهيم خليل الله المناسك عرض له الشيطان عند جمرة العقبة، فرماه بسبع حصيات حتى ساخ  في الأرض، ثم عرض له عند الجمرة الثانية فرماه بسبع حصيات حتى ساخ في الأرض، ثم عرض له عند الجمرة الثالثة، فرماه بسبع حصيات حتى ساخ في الأرض))، 

قال ابن عباس رضي الله عنهما: الشيطان ترجمون، وملة أبيكم إبراهيم تتبعون)

 ساخ في الأرض: أي غاص فيها.

நபி இபுறாகீம் அலை அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் அலை அவர்களை குர்பானி கொடுப்பதற்காக மினா மைதானத்திற்கு அழைத்து வந்தார்.

ء

சைத்தான் அவரை இடை மறித்தான்.  இந்த மகன் உங்களூக்கு மட்டும் சொந்தமல்லவே உங்களது மனைவிக்கும் சொந்தமானவரல்லாவா ? அவரை அறுப்பதெனில் அவரது தாயாரின் சம்மத்த்தை யு ம் பெற வேண்டும் அல்லவா என கேள்வி எழுப்பினான்.

லாஜிக் கான கேள்வி இது.

சைத்தானி மிக முக்கியமான வழி கெடுக்கும் வழி இது. லாஜிக்காக கேள்வி கேபது.

மிக நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், ஈமானிய வாழ்க்கைகு லாஜிக் என்பது ஒரு பெரிய ஆபத்தாகும்.

இன்று பலரு லாஜிக் தான் வாழ்க்கையின் மிக உச்சபட்ச வெற்றி என்று நினைக்கிறார்கள். அதனால் எல்லாவற்றையும் லாஜிக்காகவே சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்று நினைக்கிறார்கள்

இது மிக உறுதியான தவறான போக்காகும்.

ஏனெனில் லாஜிக்கை அறிவின் எல்லை என்று நினைப்பது தவறு. அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் சரணடைவதே  லாஜிக்கின் எல்லையாகும்.

ஒரு நண்பர் நான் குர்பானி கொடுக்க மாட்டேன் அந்த காசை ஒரு ஏழைக்கு கொடுப்பேன் என்றார்.

மார்க்கத்தின் பல விசயங்களிலும் இப்படி மாற்றி  யோசிப்பவர்கள் உண்டு.

அத்தகையவர்களை கடுமையாக எச்சரிக்கிறோம். மார்க்க விவகாரங்களில் இது மிக முக்கியமான வழிகேடாகும்.

குர்பானி கொடுக்க மாட்டேன் என்று சொன்ன சகோதர்ரை அழைத்து பெருமானார் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்களே என்று சொன்னேன். சட்டென்று யோசித்த அவர் நான் தவறாக கூறிவிட்டே ன் என்றார்.

அதனால் லாஜிக் என்ற வார்த்தையை எல்லா விசயத்திலும் இறுதி தீர்ப்பாக எடத்துக் கொள்ள கூடாது. லாஜிக் என்ற வார்த்தையில் தீனை தவற விட்டு விடக் கூடாது.   

நம் முன்னோர்கள் சொல்வார்கள் தீன் அறிவைப் பற்றியதாக இருக்குமானால் – மோசா எனும் கால் உறையின் மீது மஸஹ் செய்வது என்பது உறைக்கு கீழே மஸஹ் செய்ய வேண்டும் என்று இருக்க வேண்டும். ஆனால் மார்க்கம் மோசாவுக்கு மேலே மஸஹ் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

சைத்தானை நடு இடத்தில் ஜம்ரத்துல் உஸ்தாவில் ஏழு கற்களை எறிகிறோம்.

நபி இபுறாகீம் அலை தனது கடமையை நிறைவேற்ற தயாரான போது சைத்தான் மீண்டு தலையிட்டான்.

உனக்கு கனவில் தான் உத்தரவு வந்த்து. இறைவன் உறுதியாக நேரடியாக சொல்ல வில்லையே என்றான்

இபுறாகீம் நபி தூரப்போ என்று கற்களால் அடித்து விரட்டினார்கள்

இறைவனின் உத்தரவு எந்த வடிவில் உறுதியாக கிடைத்தாலும் அதற்கு உடன்பட்டேயாக வேண்டும்

ஒரு உண்மையில் இந்த உலகமே ஒரு கனவு தான். காரில் கிளம்புகிறோம் இலக்கை அடைவோம் என்பதே கூட ஒரு கனவுதான். வியாபாரம் செய்கிறோம் லாபம் கிடைக்கும் என்பதும் கூட ஒரு வகை கனவு தான். அந்த கனவுகளை நாம் அலட்சியப் படுத்துவதில்லை.

எனவே மெலிதான காரணங்களை காட்டு நல்லதை தெடுக்கும் ஏற்பாடுகளை சைத்தான் செய்வான். முஃமின் உஷாரக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக ஜமரத்துல் அகபா வில் கல்லெறிகிறார் ஹாஜி.

நபி இபுறாகிமீன் வாழ்வில் சைத்தான் மீண்டும் தலையிட்டான்.

மகனுக்கு பதில் ஒட்டகங்களை பறி கொடுக்கலாமே என்றான். அவ்வாறு செய்வது அப்போது பழக்கில் இருந்தது. மகனது பெயரையும் ஒட்டகையின் எண்ணிக்கையையும் சீட்டுகளில் எழுதிப்போடுவது. ஒட்டகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். எப்போது ஓட்டகைகளின் சீட்டு வருகிறதோ அந்த அளவு ஒட்டகைகளை பலி கொடுத்தால் போதுமானாது.

இது சைத்தானின் அடுத்த உத்தியாகும் மாற்று யோச்னைகளை உத்தி களை யும் கையாள்வது.

மார்க்கத்தில் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் மாற்று உத்திகளை யோசிக்க கூடாது. இது அல்லாஹ்வை ஏமாற்ரும் முனையும் ஒரு சிந்தனையாகும்.

இரண்டாவது ஹஜ்ஜு செய்கிற காசை ஓரு ஏழைக்கு குமருக்கு கொடுக்கலாமே என்று மற்று யோசனைகளை கூறுவது உண்டு. உண்மையில் இதுவும் சைத்தானின் திட்டமாகும். ‘

பொதுவாக இந்த மாதிரியான யோசனைகள் நமது முன்னேற்றத்தை தடுத்து விடும்.

இது ஊட்டி போகலான் என்று நினைத்து கொடைக்கானலுக்கு பொகிற காரியமல்ல.

வணக்க வழிபாடுகள் வணக்கம் தான். அதை மாற்று உத்திகளில் மடை மாற்ற கூட்து.

கல்வி உதவித்தொகை வழங், திருமண உதவி, மருத்துவ உதவிகளை ஊக்க்கு விப்பதற்கு மற்ற ஏராளமான வழிமுறைகள் இருக்கிறது.

அதை முறையற்ற வகையில் யோசிக்க கூடாது.

பெருமானார் (ஸ்ல) அவர்கள் ஒரு ஹஜ்ஜு செய்தார்கள். நான்கு உம்ரா செய்தார்கள். சஹாபாக்கள் பல ஹஜ்ஜு செய்திருக்கிறார்கள்.

இமாம் அபூஹனீபா ரஹ் 50 க்கு மேற்பட்ட ஹஜ்ஜு செய்துள்ளார்கண்.

வணக்கத்தை யோசிக்கிற போது அவற்றை அதிகமாக செய்வதற்கேற்ற வழி முறைகளை தான்  யோசிக்க வேண்டும். இதிலுள்ள பலன் என்ன மற்றதில் உள்ள பலன் என்ன என்று யோசிப்பது ஒட்டகங்களை பலி கொடுக்க கூறிய சைத்தானின் சிந்தனையாகும்.

அப்படி யோசிக்க தொடங்கினால். ஒரு சமூக சேவகன் நான் பலருக்கும் உதவுகிறேன். எனக்கு தொழுகிற அளவு நேரம் இருந்தால் நாலு ஏழைக்கு உதவி விடுவேன்று என்று சொல்வதற்கு நிகராகி விடும்.

ஆகவே வணக்கங்கல் மாற்று உத்தியை கற்பிப்ப்பதை நாம் உறுதியாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சைத்தானை கல்லெறிகிற  .ஹாஜி و சைத்தானின் வலைகளுக்கு எதிராக தன து விழிப்புணர்வை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

எனவே சைத்த்தானை கல்லறிதல் ஒரு மகத்தான வணக்கமாகும். அதனால் தான் பெருமானார் (ஸள்)) இதற்கான கூலி உனது இறைவனிடம் சேமிக்கப்ப்பட்டிருக்கிறது என்றார்கள்

 وأما رميك الجمار، فإنه مذخور لك

.லாஜிக், இலேசாக கருத்துதல் மாற்று உத்திகளின் சிந்தனை ஆகிய சைத்தானிய இயல்புகளை தன் வாழ்விலிருந்து ஒதுக்குவேன் என 70 கற்ற்களை வீடி எறிந்து ஹாஜி உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

இதுவே ஹஜ்ஜின் நீண்ட வணக்கமாக இருக்கிறது.

சைத்தானின் திட்டங்களை புரிந்து அவனை கல்லால் அடித்து துரத்தும் தெளிவும் தைரியமும் இபுறாகீம் நபி (அலை) அவர்களுக்கு இருந்த்து.

ஒவ்வொரு ஹாஜியும் அந்த உறுதியை பெற்றுக் கொள்ளவே அதே இடங்களில் கல்லெறிகிறார்.  

அல்லாஹ் நம்மனைவரையும் சைத்தானிய இயல்புகளிலிருந்து பாதுகாப்பானாக!,

( மினாவின் 5 எண் கூடாரத்திலிருந்து ஒரு கல்லெறியும் நாளில்)

No comments:

Post a Comment