வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 06, 2023

சட்டங்கள் மக்களுக்கானவை

 பிரச்சனைகள் வரூம் போது தீர்ப்புகள் சட்டப்படி அமைய வேண்டுமா ? நீதிப்படி அமைய வேண்டுமா ? என்ற ஒரு கேள்வி உண்டு.

இதை புரிந்து கொள்வது சிரம்மாக தெரியலாம்.  சட்டப்படி நடப்பது தானே நீதி இது என்ன புது வகை கேள்வி என்று தோன்றாலாம்.

தாவூத் அலை அவர்களது வரலாற்றின் மூலம் திருக்குர் ஆன் இதை தெளிவு படுத்துகிறது. ஒரே ஒரு வரியில் சட்ட இயலின் சாயல் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர் ஆன் புலப்படுத்தி விட்டது.

;.  وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ (78فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ ۚ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا

 

عن ابن مسعود في قوله( وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم ) قال : كرم قد أنبتت عناقيده ، فأفسدته . قال : فقضى داود بالغنم لصاحب الكرم ، فقال سليمان : غير هذا يا نبي الله! قال : وما ذاك؟ قال : تدفع الكرم إلى صاحب الغنم ، فيقوم عليه حتى يعود كما كان ، وتدفع الغنم إلى صاحب الكرم فيصيب منها حتى إذا كان الكرم كما كان دفعت الكرم إلى صاحبه ، ودفعت الغنم إلى صاحبها ، فذلك قوله( ففهمناها سليمان ) 

 ஒருவரின் ஆடுகள் மற்றவரின் தோட்ட்த்தை நாசம் செய்து விட்டன.

தோட்டக்காரனுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக ஆடுகளை மொத்தமும் கொடுத்தாக வேண்டும் என்பது சட்டம். அதையே தாவூத் அலை கூறினார். (தாவூத் அலை அவர்களுக்கு கலீபத்துல்லாஹி பில் அர்ழ் என்ற ஒரு பெயர் உண்டு,)

அவரது மகன் சுலைமான அலை அவர்களோ இதை விட சிறந்த தீர்ப்பு ஒன்றிருக்கிறது என்று கூறினார்கள்.

தோட்டக்காரன் சில காலம் ஆடுகளை தன் வசம் வைத்திருக்கட்டும். அதன் பாலை அருந்திக் கொள்ளட்டும். ஆட்டுக்காரன் தோட்டத்தில் உழைத்து பயிர் விளைவித்து கொடுக்கட்டும் என்றார்கள்

இதில் இரண்டு பேரையும் காப்பாற்றலாம் என்பது நீதி. இது ஒரு வகை சுமூக முயற்சியாகும்.

நீதியில் சட்டத்திற்கு அப்பாலும் தீர்வு இரண்டு தரப்பினரும் நிம்மதி பெறும் அம்சங்களை கொண்ட்தாக இருக்கும்.

இதுவே சிறப்பானது.

சுலைமானுக்கு அதை நாம் புரிய் வைத்தோம் என்று திருக்குர்ஆன் சொல்கிற வார்த்தையில் இது வலியுறுத்தப்படுவதாக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

பிரபல காஜி சுரைஹ் அவர்களிடம் இதே போல ஒரு வழக்கு வந்த்து.

جاء رجلان إلى شريح ، فقال أحدهما : إن شاة هذا قطعت غزلا لي ، فقال شريح : نهارا أم ليلا؟ فإن كان نهارا فقد برئ صاحب الشاة ، وإن كان ليلا ضمن ، ثم قرأ( وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه ) الآية .

இவ்வாறு அவர் தீர்ப்பளிக்க காரணம் ஒரு ஹதீஸ் ஆகும்.

عن حرام بن محيصة ; أن ناقة البراء بن عازب دخلت حائطا ، فأفسدت فيه ، فقضى رسول الله صلى الله عليه وسلم على أهل الحوائط حفظها بالنهار ، وما أفسدت المواشي بالليل ضامن على أهلها- رواه الإمام أحمد ، وأبو داود ، وابن ماجه ،

சட்டப்படி பார்த்தால் பாதிக்கப்பட்டவனுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 

ஆனால் இங்கு நீதிப்பதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 நீதிப்படி பார்க்கிற போது . ஒவ்வொருவரின் பொறுப்பு கவனிக்கப்பட வேண்டும். தோட்ட்த்தை பகலில் பாதுகாக்க வேண்டியது தோட்டக்காரனின் பொறுப்பு, கால்நடைகளை இரவில் பாதுகாக்க வேண்டியது இடையனின் பொறுப்பு

 எந்த ஒரு சரியான சட்ட அமைப்பிலும் மக்களின் நியாயமான உணர்வுகளுக்கும் வசதிகளுக்கும் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

உமர் ரலி அவர்கள் ரமலானுடைய இரவில் மனைவியோடு உறவு கொண்டு விட்டார்கள். அப்போது அது தடை செய்யப்ப்பட்டிருந்த்து. பின்னர் அந்த சட்ட்த்தில் சலுகை அறிவிக்கப்பட்டது.  

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ

ما كان عليه الأمر في ابتداء الإسلام ، فإنه كان إذا أفطر أحدهم إنما يحل له الأكل والشرب والجماع إلى صلاة العشاء أو ينام قبل ذلك ، فمتى نام أو صلى العشاء حرم عليه الطعام والشراب والجماع إلى الليلة القابلة 

أن عمر بن الخطاب بعدما نام ووجب عليه الصوم وقع على أهله ، ثم جاء إلى النبي صلى الله عليه وسلم فقال : أشكو إلى الله وإليك الذي صنعت . قال" وماذا صنعت ؟ " قال : إني سولت لي نفسي ، فوقعت على أهلي بعد ما نمت وأنا أريد الصوم . فزعموا أن النبي صلى الله عليه وسلم قال" ما كنت خليقا أن تفعل " . فنزل الكتاب( أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم )

இது கற்றுத்தறுகிற செய்தி என்ன வெனில்

நாம் ஒரு சட்டம் இயற்றுகிறோம். அந்த சட்ட்த்தில் பிடிவாதமாக இருப்பது முக்கியம் தான், அதே நேரத்தில் மக்களுக்கு தேவையான இலகுதல்களுக்கும் அதில் இடமிருக்க வேண்டும்.

அப்போதுதான் அது சரியான சட்டமாக நிலைக்க முடியும்.

இந்த கருத்து உலகம் முழுவதிலுமுள்ள சட்ட வல்லுனர்களின் கருத்தாகும்.

பஞ்சாயத்து செய்வோர் இத்தகைய நீதி நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

நம்முடைய நாட்டில் அந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு சமூக மக்களின் நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிற வகையில் சிவில் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஒரே மாதிரியான சட்டமாக மாற்ற நினைப்பது என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்த கூடியதல்ல அனைத்து மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

இது சாத்தியமாகாத ஒன்று.  

மத்தியில் ஆட்சி செய்கிற அரசு தனது தவறுகளை மறைப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வரப்போகிறோம் என்று கூறுகிறது.

இது சாத்தியமானதல்ல என்று ஆர் எஸ் எஸ் தலைவர்களே கூறியுள்ளார்கள்.

பிறகும் இதற்கு முயற்சிப்பதாக அரசு கூறுகிறது. 

இது எல்லா வகையிலும் தோல்வி கண்டு விட்ட ஒரு அரசின் திசை திருப்பும் நடவடிக்கையே ஆகும்.

இப்படி ஒரு செய்தி பரபரப்பாக்கப்படும் போது நல்லது கெட்டது என்பதை யோசிக்காமல் இந்துத்துவ வெறீயூட்டப்பட்டிருக்கிற மக்கள் பலரும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு வலிந்து ஆதரவு தர முயல்வார்கள். ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் அதற்கான வேலையை பல முனைகளிலும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இது ஒரு சிறு குழுவின் தந்திரமாகும்.

ஆயினும் அந்த முயற்சிக்கு இடமளிக்காத வகையில் விழிப்புணர்வோடு அதை தடுத்த நிறுத்த முழு முயற்சி செய்யவேண்டியது மக்கள் நலனை விரும்பும் அனைவரின் கடமையாகும்.

நாம் இதை செய்ய தவறி விட்டால் தங்களது கையால்களை வைத்து கருத்துக்களை திரட்டி ஒட்டு மொத்த நாடும் பொது சிவில் சட்டத்தை விரும்புகிறது என்று பறைசாற்றி விடுவார்கள்.

ஆகவே நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும்.

மற்ற குடிமக்களையும் தூண்ட வேண்டுன்,

இது தேவையற்று உருவாக்கப்பட்டுள்ள  ஒரு டென்சன் தான். ஆனால் நாம் கவனமற்று இருந்து விடக் கூடாது.

இப்படி ஒரு முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வரமாட்டார்கள். ஏனெனில் அது கற்பனையானது , சாத்தியமற்றது

என்ன செய்வார்கள் எனில் சிறுபான்மை மக்களுக்கு இருக்கிற அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் தனி அடையாளமாக இருக்கிற முஸ்லிம் பர்சனல் லா போன்ற சட்டங்களை அகற்றி விடுவார்கள்.

அதற்கு நாம் இடமளிக்க கூடாது. அதனால் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இதற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும். அத்தோடு அவர்களுக்கு தெரிந்த மாற்று மத நண்பர்களில் நாட்டு நலனில் அக்கறையுள்ளோரையும் இதற்கு தூண்ட வேண்டும்.

தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை ஸ்கேன் செய்வதற்கான கோடை உருவாக்கி கொடுத்திருக்கிறது. அவை களை ஸ்கேன் செய்து இலகுவாக கருத்து தெரிவிக்கலாம்.

தஞ்சை அஞ்சுமன் அறிவகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிற ஒரு ஏற்பாடு இந்த கருத்து பதிவை இன்னும் இலகு வாக்கியிருக்கிறது.

இரண்டு சிங்கில் கிளிக்குகளில் ஸ்மார்ட் போனில் கருத்து பதிவிட்டு விடலாம். அதற்கான லிங்கை கீழே தந்திருக்கிறேன்.

https://anjumanarivagam.com/uniform-civil-code/

நாம் நமது கருத்துக்களை பதிவு செய்வோம், தீய சக்திகள் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக/

அல்லாஹ் நம் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் சிந்தனையை தந்தருள்வானாக!

மக்களில் ஒரு சாராருக்கு எதிராக வன்மாமாக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பானாக! 

No comments:

Post a Comment