வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 14, 2023

ஈமானை பாதுகாக்க இறைத்தூதரை நேசிப்போம்

இன்றைய முஸ்லிம் சமுதாயம் நம்பிக்கையிலும் பின் தங்கியிருக்கிறது நற்செயல்களிலும் பின் தங்கியிருக்கிறது.

காசு பணம்  அல்லது அதிகாரம் நம்மை மேலேற்றி விடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அதைப்பற்றி பேச்சுதான்.

சமுதாயத்தின் அதிகார மட்டத்தை உயர்த்துவது எப்படி ? முஸ்லிம் மக்களின் பொருளாத உயர்வுக்கு என்ன வழி  ? என்பது பற்றி மட்டுமே இப்போது பெரிதாக அக்கறை செலுத்தப்படுகிறது.

அதிகாரமும் செல்வமும் தான் நம்மை மேம்படுத்தும் என்று நினைத்தோம் என்றால் ஒருக்காலும் நாம் வெற்றி பெற முடியாது.

மிக அழுத்தமாக சொல்கிறோம்.

அதிகாரமும் செல்வமும் தான் நம்மை மேம்படுத்தும் என்று நினைத்தோம் என்றால் ஒருக்காலும் நாம் வெற்றி பெற முடியாது.

இன்று உலகில் அதிகாரத்திலும் செல்வத்திலும் முன்னணியில் இருக்கிற நாடு இஸ்ரேல், அங்குள்ள இன்றைய நிலவரம் என்ன தெரியுமா > அந்த நாட்டில் இருக்கிற மருத்துவர்கள் உள்ளிட்ட ஆய்வாளர்கள் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்க் செல்ல ஆசைப்படுகிறார்கள் என்று பிபிசி கூறுகிறது.

அருமையானவர்களே முஸ்லிம்களின் முதல் பலம் நம்பிக்கையாகும்.

அந்த நம்பிக்கையிலேயே அவர்கள் முழு உலகையும் வென்றார்கள்.

காலித் பின் வலீத் ரலி அவர்கள் பிந்தைய காலத்தில் இஸ்லாமை ஏற்றவர். ஆனால் மிக உறுதியான ஈமானுக்குச் சொந்தக்காரர். மட்டுமல்ல். அவர் பெற்றுக் கொடுத்த வெற்றிகளை இன்றுவரை முஸ்லிம் உம்மத்திற்குரியதாக நிலைக்கச் செய்திருக்கிறது.

அவரது வரலாற்றின் இரண்டு நிகழ்வுகள் அவரது உறுதி மிக்க நம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடியவை.

காலித் ரலி அவர்கள் ஹீரா என்ற இடத்திலுள்ள வெள்ளை கோட்டையை முற்றுகையிட்டிருந்தார்கள். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த கோட்டையிலிருந்த மிக வயது மூத்த அப்துல் மஸீஹ் பின் அம்ர் பின் பகீலா என்பவர் நடந்து வந்தார். அவரது கையில் ஒரு குப்பி இருந்தது. இது என்ன குப்பி என்று காலித ரலி கேட்டார். இது விஷக் குப்பி, உங்களுடனான பேச்சுவார்த்தையில் என மக்களுக்கு நல்ல முடிவு ஏற்படுமானால் நான் இறைவனை புகழ்வேன், இல்லை எனில் என் மக்களுக்கு துன்பம் ஏற்படுவதை பார்ப்பதற்கு முன் இதை நான் உண்டு மரணித்து விடுவேன் என்றார். 

"அப்படியா? அல்லாஹ் நாடாமல், இந்த விஷம் மரணத்தை தந்துவிடுமா" என்று கூறிய காலித் ரலி அந்த குப்பியை வாங்கி பிஸ்மில்லாஹ் சொல்லி  கட கட வெனக் குடித்தார். கொஞ்சம் வியர்த்து தெளிந்த்து. அவ்வளவுதான் ஆச்சரியமுற்ற இப்னு பகீலா தனது மக்களிடம் சென்று இவருடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் என்றார்.

فأقبل يمشي إلى خالد ... قال: ومعه سم ساعة يقلبه في يده، فقال له: ما هذا معك؟ قال: هذا السم، وما تصنع به؟ قال: أتيتك فإن رأيت عندك ما يسرني وأهل بلدي حمدت الله، وإن كانت الأخرى لم أكن أول من ساق إليهم ضيمًا وبلاء فآكله وأستريح، وإنما بقي من عمري يسير، فقال: هاته، فوضعه في يد خالد، فقال: بسم الله وبالله رب الأرض ورب السماء الذي لا يضر مع اسمه داء، ثم أكله، فتجلته غشية، فضرب بذقنه على صدره، ثم عرق وأفاق، فرجع ابن بقيلة إلى قومه، فقال: جئت من عند شيطان أكل سم ساعة فلم يضره، أخرجوهم عنكم، فصالحوهم على مائة ألف

 காலித் ரலி அவர்களின் மற்றொரு நிகழ்வும் வரலாற்றில் மிக முக்கியமானது.

பண்டைய பாரசீக  நாடு அன்றைய உலகின் மாபெரும் வல்லரசாக இருந்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் தான் உலகின் முதன்மையான வல்லரசாக இருந்தார்கள். அந்த பேரரசின் சக்ரவர்திக்கு உமர் ரலி அவர்களின் படைத்தளபதி காலித் ரலி  எழுதிய கடிதம் உலகின் புகழ் பெற்ற கடிதங்களில் ஒன்றாகும். காலித் ரலி அதில் எழுதியிருந்தார்.

فقد ذكر ابن جرير الطبري في تاريخه وابن كثير في البداية والنهاية وغيرهما من المؤرخين أن خالداً رضي الله عنه كتب إلى ملك فارس: بسم الله الرحمن الرحيم، من خالد بن الوليد إلى ملوك فارس، فالحمد لله الذي حل نظامكم ووهن كيدكم، وفرق كلمتكم... فأسلموا وإلا فأدوا الجزية وإلا فقد جئتكم بقوم يحبون الموت كما تحبون الحياة

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது அடிபணியுங்கள். அப்படியில்லை எனில்  “ நான் ஒரு படையை அனுப்ப நேரிடும் .நீங்கள் வாழ்க்கையை எப்படி நேசிக்கிறீர்களோ அதை விட அதிகமாக அவர்கள் மரணத்தை நேசிப்பவர்களக இருப்பார்கள்.

காலித் ரலி கூறியபடி அன்றைய பேரரசை மிகச் சாதாரணமான ஆனால் நம்பிக்கையில் உறுதி மிக்க முஸ்லிம்கள் வெற்றி கொண்டார்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் சிந்திக்க வேண்டும்.

காலித் பின் வலீத் ரலி அவர்களிடன் அன்றைய உலகு போற்றும் வீரம் இருந்தது. இரண்டு கைகளிலும் வாள் சுழற்றும் திறமை இருந்தது. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமானதாக ஆக்கிக் கொள்ளும் தீரம் இருந்தது. அவர் குறைஷி குடும்பத்தை சார்ந்தவர் என்ற பெருமை இருந்தது. ஆனால் இவற்றை எல்லாம் விட அவரது நம்பிக்கையே அவரது பெரு வெற்றிகளுக்கு காரணமாக இருந்த்து.

காலித் பின் வலீத் ரலி அவர்கள் விஷம் அருந்திய நிகழ்வை ஒப்புக் கொள்கிற இப்னு தைய்மிய்யா இப்படி கூறூகிறார்.  “இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது முஸ்லிம் உம்மத் கொண்டிருந்த நம்பிக்கைகான ஒரு அடையாளமாகும்”

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த கொள்கைகள், செயல்திட்டங்களில் அழுத்தமான நம்பிக்கை கொண்டால் சமுதாயம் உயர்வடையும். அதில் தவறினால் எந்த நிலையிலும் சமுதாயம் தாழ்வு பெறும்.

இன்றைய உலகில் பணம் பெரிதாக  தெரியலாம், தொழில்நுடபம் பெரிதாக தோன்றலாம் பகட்டும் ஆடம்பரமும் கேளிக்கைகளும் பெரிதாகப் படலாம். ஆனால் முஸ்லிம்கள் அதில் ஏமாந்து விடக் கூடாது. 

இப்போதை சவூதி அரேபியாவின் அரசர்கள் அவர்களது நிலப்பரப்பில் மதுவுக்கும் கேளிக்கைகளுக்கும் ஆபாசத்திற்கும் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்..

இந்த மடையர்கள் சற்றும் சிந்தித்துப் பார்த்தார்களா?.

அரபு நிலப்பரப்பை  ஒரு புண்ணிய பூமியாக மாற்றியது முஹ்மது நபி (ஸல்) அவர்களின் சாதனையாகும்.  ஆயிரமாண்டுகளுக்கு மேலாக பூமியின் இந்த நிலப்பரப்பை முஹம்மது (ஸல்) அவர்களது பெயரே காப்பாற்றி வந்தது. எவனுடைய வேறு எந்த அப்பன் பெயரும் அல்ல

இப்போதிருக்கிற அதிகாரத்தை வைத்து இந்த அரசர்கள்  இந்த நிலையை மாற்றினால் பிறகு எத்தனை நூற்றாண்டுகளை தலை கீழாக நின்று தவம் செய்தாலும் பழைய நிலையை மீட்க முடியுமா என்று அவர்கள் சிந்திக்க வில்லை

ஹாஜ்ஜுக்கு சென்ற ஹாஜிகளுக்கு தெரியும். மக்காவிலிருக்கிற போது ஆபாசம் என்பதற்கு துளியும் இடமிருக்காது. ஜித்தாவிற்கு வரும் போது மாற்று சமயப் பெண்கள் பர்தா அணிந்திருப்பார்கள் என்றாலும் தலை திறந்திருக்க அனுமதி    உண்டு. அவ்வாறு தலை திறந்திருக்கும் பெண்களைப் பார்த்தாலே அசூசையாக தெரியும். ஜித்தாவிலிருக்கிற ஒரு நண்பர் சொன்னார். நான் 20 வருடங்களாக இங்கு இருக்கிறேன். பெண்களை இப்படித்தான் பார்க்கிறேன். உலகில் எங்கு போனாலும் ஆபாசமே தலை தூக்கி நிற்கிற போது இந்த நிலத்தில் மட்டும் தான் அதற்கு இடமில்லாமல் இருந்தது. இப்போது இந்த நடைமுறையை மாற்றப்போவதாக கூறுகிறார்கள். தியேட்டர்களையும், சூதாட்ட விடுதிகளையும் கேளிக்கை விடுதிகளையும் திறக்க போவதாக கூறுகிறார்கள். ஜித்தாவின் இந்த புனிதம் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. என்று 10 வருடங்களுக்கு முன் அவர் ஆதங்கப்பட்டார்.

இப்போது சவூதியின் பல நகரங்களிலும் தியேட்டர்களும் கிளப்புகளும் வந்து விட்டன. சவூதியை புதிய ஐரோப்பாவாக மாற்றப்போவதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்

இந்த முட்டாள்கள் முஹம்மது நபி (ஸ்ல) அவர்களது மகத்துவத்தை உணராமல் போனதுதான் இத்தகைய தீய முடிவுகளுக்கு காரணமாகும்

இது வஹாபிஸத்தினால் விளைந்த பெரும் தீமையாகும்.

ஆயிரமாண்டு கால வராலாற்றில் நிகழ்ந்த அன்னிய படை எடுப்புக்கள், உலக யுத்தங்கள் போன்ற  எத்தனையோ பேராபாத்துக்களின் போதும் அரபு தேசத்தில் இஸ்லாமின் மரபு காப்பாற்றப்பட்டு வந்தது.

வஹாபிஸம் அந்த ஆபத்துக்கள் அனைத்தையும் விட மோசமான ஆபத்தாக ஆகிவிட்டத்து.

வஹாபிஸம் பெருமானாரின் முக்கியத்துவத்த்தை குறைத்துக் காட்டியது. அவர்களது மீதான அன்பு மரியாதையில் குளறுபடிகளை செய்தது.   அதுவே கற்பனை செய்ய முடியாத இப்போதைய தீய போக்குகளுக்கு காரணமாகும்.

அருமையானவர்களே முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களின் மீதான அன்பும் பற்றும் நம்பிக்கையும் நமது ஈமானிய வாழ்வில் மிகப் பிரதானமானது.

நமது மார்க்க அறிஞர்கள் ஒரு அழுத்தமான செய்தியை கூறுவார்கள்.

“பெருமானாரை நேசிப்பதற்கு இஸ்லாத்தில் மிக மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஏன் தெரியுமா ?

நபி (ஸல்) அவர்களை நேசிக்காத இபாதத் தகப்புர் (தற்பெறுமை) ஆகவும் அந்த ஆபித் முப்தின் (குழப்பவாதி) ஆகவும் இருப்பான்

இன்றைய நம்முடைய தமிழ் நாட்டின் இயக்க வாதிகளின் நிலையை  கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

தொழுகை ஜகாத் சக்தா என்று எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் எவ்வளவு குழப்பவாதிகளாகவும் இருக்கிறார்கள் ?

மோட்டார் வாகணங்களின் பாஷையில் சொல்வதானால் பெருமானார் (ஸல்) அவர்களின் மீதான அன்பு கிளட்சைப் போன்றது. கிளட்சை பற்றாமல் கீர் போட்டால் கீர் பாக்ஸ் உடைந்து விடுமே அது போல பெருமானார் (ஸ்ல) அவர்கள் மீது மதிப்பில்லாத இபாதத் நன்மையை தராது.

கிளட்சை கவனமாக கையாள்கிறவர் தான் சிறப்பாக வண்டியை ஓட்ட முடியும் என்பது போல பெருமானார் (ஸ்ல) அவர்கள் விசயத்தில் மிக கவனமான அக்கறை கொண்டவர் தான் இஸ்லாம் என்கிற வண்டியில் மிகச் சரியாக பயணிக்க முடியும்.

முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு மார்க்கத்தில் இருக்கிற முக்கியத்துவத்தை சரியாக உணராதவர்கள் ஒரு எதார்த்த்தில் மார்க்கத்திற்கு வெளியே இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இது திருக்குர் ஆன் தெளிவுபடுத்தும் தத்துவமாகும்.

ஹிஜிரீ 10 ம் ஆண்டு கடைசி ஹஜ்ஜின் போது அரபா பெருவெளியில் வைத்து மார்க்கம் நிறைவு பெற்று விட்ட்து என்ற வசனம் அருளப்பட்டது. அத்தோடு இஸ்லாமிய சட்டங்கள் நிறைவு பெற்றன.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இதற்குப் பிறகு இறங்கிய வசனம் தான்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெருமையை கூறுகிற இந்த வசனம்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ (128

இந்த வசனத்தில் தனது இரண்டு பண்புகளை அல்லாஹ் முஹம்மத்து நபி (ஸல்) அவர்களுக்கு கூறினான். رَءُوفٌ رَّحِيمٌ

وقال الحسين بن الفضل : لم يجمع الله لأحد من الأنبياء اسمين من أسمائه إلا للنبي محمد صلى الله عليه وسلم ; فإنه قالبالمؤمنين رءوف رحيم وقالإن الله بالناس لرءوف رحيم 

உபைய் இப்னு கஃபு ரலி அவர்கள்  இந்த வசனமே திருமறையின் நிறைவு வசனங்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 மொத்த  மார்க்கத்தையும் ஒரு பட்டு நூல் கொண்டு கட்டி வைக்கிற வசனமாக பெருமானாரின் பெருமையை பேசும் இந்த வசனம் இருக்கிறது.

 இந்த வசனத்திற்கு ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்று அறிஞர்கள் பட்டியலிடுகிறார்கள்.

 எந்த ஒரு காரியத்தையும் இந்த வசனத்தை கொண்டு ஆரம்பிப்பது முன்னோர்களின் வழக்கில் இருந்தது.

 கப்பல் கேப்டன் கப்பலை ஓட்ட்த்தொடங்கும் முன் தன் தலை மீது கை வைத்து இந்த ஆயத்தை ஒரு தடவை ஓதி விட்டு தொடங்கினால் கப்பல் எந்த வித சேதமும் இல்லாமல் இலக்கை சென்றடையும் என்று நம்பிக்கை முன்னோர்களிடம் இருந்தது.  

 இது போல பல காரியங்கலின் போதும் இந்த வசனம் ஒதப்பட்ட்தன் காரணம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகிமையை இந்த உம்மத் எதன் தொடக்கத்திலும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

 பெருமானார் (ஸல்) அவர்களின் மாக்க முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள இன்னும் சில செய்திகள் இருக்கின்றன.

 பாங்கில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது

 இதைத்தான் ஹஸ்ஸான் பின் சாபித் ரலி தனது கவிதையில் வெளிப்படுத்தினார்.

وضَمَّ الإلهُ اسمَ النَّبيِّ إلى اسمِهِ
إذا قالَ في الخَمْسِ المُؤذِّنُ أشْهَدُ
وشقَّ لهُ مِنِ اسمِهِ ليُجِلَّهُ
فذو العَرْشِ مَحْمودٌ وهذا مُحمَّدُ

 ஹஸ்ஸான் ரலி அவர்கள் இவ்வாரு பாடுகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 இவ்வாறு பெருமானாரைப் புகழ்ந்து பாடிய கவிஞர் ஹஸ்ஸான் ரலி அவர்கள் பெருமானாரின் துஆ வை பெற்றார்கள். அதானால் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அபோது அவருடைய பல் ஒன்று கூட விழுந்திருக்க வில்லை என்று வரலாறு கூறுகிறது.

 நபி (ஸல்) அவர்களின் மார்க்க முக்கியத்துவத்திற்கு மற்றுமொரு சாட்சி

 நாம் முன்னோக்கி நிற்கிற கிப்லா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய கிப்லாவாகும்.

  قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام

 தொழுகை அல்லாஹ்விற்குரியது என்றாலும். அதில் பெருமானாரின் மீது சலாமும் . சலவாத்தும் இருக்கிறது.  

 ஜனாஸா தொழுகையில் ஸஜ்தா இல்லை என்றாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் இருக்கிறது .

 கப்ரின் கேள்விகளிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றிய ஒரு கேள்வி இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி கூறும் போது  وهي آخِرُ فِتنةٍ تُعرَضُ على المُؤمِنِ என்று கூறினார்கள்.

قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم 

العَبْدُ إذَا وُضِعَ في قَبْرِهِ، وتُوُلِّيَ وذَهَبَ أصْحَابُهُ حتَّى إنَّه لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أتَاهُ مَلَكَانِ، فأقْعَدَاهُ، فَيَقُولَانِ له: ما كُنْتَ تَقُولُ في هذا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عليه وسلَّمَ؟ فيَقولُ: أشْهَدُ أنَّه عبدُ اللَّهِ ورَسولُهُ، فيُقَالُ: انْظُرْ إلى مَقْعَدِكَ مِنَ النَّارِ أبْدَلَكَ اللَّهُ به مَقْعَدًا مِنَ الجَنَّةِ، قَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: فَيَرَاهُما جَمِيعًا، وأَمَّا الكَافِرُ - أوِ المُنَافِقُ - فيَقولُ: لا أدْرِي، كُنْتُ أقُولُ ما يقولُ النَّاسُ، فيُقَالُ: لا دَرَيْتَ ولَا تَلَيْتَ، ثُمَّ يُضْرَبُ بمِطْرَقَةٍ مِن حَدِيدٍ ضَرْبَةً بيْنَ أُذُنَيْهِ، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَن يَلِيهِ إلَّا الثَّقَلَيْنِ.

الراويأنس بن مالك | المحدثالبخاري 

 முஹம்ம து நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கிற இத்தகை முக்கியத்துவத்தையும் மரியாதையையும் சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் இஸ்லாமிய வட்டத்திற்கு வெளியே இருக்கிறார்கள். அவர்கள் கரங்களில் குர்ஆனை ஏந்தி இருந்தாலும் சரி.

 ரபீ உல் அவ்வல் மாதம் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் . இதில் பெருமானாரின் பெருமையை உணர்த்தும் பல்வேறு காரியங்கள் முஸ்லிம்களின் வாழ்விடங்கள் தோறும் நடை பெறுகின்றன.

 நாம் அதில் அன்போடும் மரியாதையோடும் பங்கேற்போம்.

 ஈமானைப் பாதுகாப்போம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! 

No comments:

Post a Comment