يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن
ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ
أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13)
சனாதன தர்மம் என்பது
இபோது நாட்டில் மிக முக்கியமான பிரச்சனையாகி இருக்கிறது.
சனாதனத்திற்கு
ஆதரவான பிரச்சாரத்தை முடுக்கி விட வேண்டும் என்று நேற்று பிரதமர் கூறியதாக இன்றைய தினத்தந்தி,
தலைப்புச் செய்தியிட்டு கூறியிருக்கிறது.
இது மிக ஆபத்தான
கீழ்த்தரமான ஒரு கருத்தும் திட்டமும் ஆகும்.
சனா தனம் என்பது
எவ்வளவு கொடுமையான தீமையை சமூகத்தில் உருவாக்கி விட்டிருக்கிறது என்பதற்கு
வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. இன்றைய அதே தினத்தந்தி பத்ரிக்கையின் கடைசி பக்கத்தை
பார்த்தால் போதுமானது.
16 வது பக்கத்தில்
ஒரு செய்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம்
நாங்குனேரியில் ஓரிரு மாதங்களுக்கு முன் சாதிய தீண்டாமையால் ஒரு மாணவன் கண்மூடித்தனமாக
வெட்டப்பட்ட செய்தியை அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் நேற்று அதே ஊரிலுள்ள சங்கர்
செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 , 12 படிக்கும் 4 மாணவர்கள் சாதீய வன்முறையை
தூண்டும் வகையில் வகுப்பறை சுவர்களில் எழுதி வைத்திருந்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
இன்னொரு வேதனையான
வீடியோ இன்ஸ்டாகிராமில் நேற்று முதல் பிரபலமாகி வருகிறது. ஒரு பாடகி கூறுகிறார். நாங்கள்
நன்றாக பாடுவோம். கோவில்களில் அழைப்பார்கள். அங்கும் பாடுவோம். அப்போது என்ன ஜாதி என்று
கேட்பார்கள். சாதியை சொன்னால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் நாங்கள் மிகவும் பயந்து தயங்கி
கண்ணீரோடு சமாளீப்போம் என்று கூறூகிறார்.
என்ன திறமை இருந்தும்
அந்தஸ்திருந்தும் உயர் ஜாதியினரின் தீண்டாமையிலிருந்து இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும்
மக்கள் தீண்டாமையிலிருந்து தப்பிக்க முடியாத ஒரு சூழல் இருப்பதுதான் சனாதனத்தின் இயல்பாகும்.
சனாதனம் என்ற வார்த்தைக்கு
புராதான தர்மம் என்று விளக்கம் சொல்கிறார்கள்.
கிருஷ்ணபரமாத்மா
அதை உருவாக்கியதாக சொல்கிறார்கள்.
சனாதனம் மனிதர்களை
நான்கு வகையாக பிரிக்கிறது. அதை தான் நான்கு வர்ணம் என்கிறார்கள். வர்ணம் என்றால் வகை
என்று பொருள்.
·
பிரம்மாவின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்
·
தோளிலிருந்து படைக்கப்பட்டவர்கள் சதிரியர்கள்
·
கைகளிலிருந்து படைக்கப்பட்டவர்கள் வைஷியர்கள்
·
காலிலிருந்து படைக்கப்பட்டவர்கள் சூத்திரர்கள்
உண்மையில் இது
மக்களை பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்திய த்த்துவமே யாகும்.
பிராமணார்கள் வேதம்
ஓதுவார்கள் கல்வி கற்பார்கள்
சத்ரியர்கள் போர்
புரிவார்கள்
வைஷியர்கள் வாணிபம்
செய்வார்கள்
சூத்திரரர்கள்
உடல் உழைப்பால் செய்கிற காரியங்களை செய்வார்கள்.
என்று அந்த தத்துவம்
தொழிலையும் வகுத்தது.
எந்த குடும்பத்தில்
பிறக்கிறார்களோ அந்த குடும்பத்திற்குரிய பணிகளையே அவர்கள் செய்ய வேண்டும்.
அதற்கு மேலே செல்ல
அவர்கள் முயசிக்க கூடாது என்றும் மிக அழுத்தமாக போதிக்கப்பட்டிருந்தது.
மகாபாரம் கூறும்
துரோணர் துரோக கதையை பாருங்கள்
பாணடவர்களின் ஆசிரியரான
துரோணர் என்ற குரு, வில் வித்தயையை தாழ்ந்த சாதியை சேர்ந்த ஏகலைவனுக்கு கற்றுத்தர மறுத்துவிட்டார்.
அவன் அவரை மதித்து
அவரது சிலையை செய்து அதற்கு மரியாதை செய்து சிறந்த வில் வித்தகைக்காரனாக மாறினான்.
ஒரு தடவை அவன்
பயிற்சியில் இருந்த போது, ஒரு நாய் குலைத்தது. அந்த நாய் மீது அவன் அம்பெய்தினான்.
அது அதன் வாயை குறைக்க முடியாதவாறு தைத்துப் போட்டது.. ஓடி வந்த அந்த நாயை பார்த அர்ச்சுனன் அதை பிடித்துக்
கொண்டு துரோணரிடம் வந்தான். “இவ்வாறு செய்தவனை விட பெரிய வில் வித்தைக்காரன் யாராக
இருக்கும் என்று ஆச்சரியப்பட்டு இருவரும் தேடி
வந்தனர். ஏகலைவனைக் கண்டனர். ஏகலைவன் குரூவுக்கு பணிந்து நின்றான். அவன் கல்விக் கற்றுக்
கொண்டதை சகித்துக் கொள்ள முடியாத துரோணர் அவனை முடமாக்குவதற்காக “உனது கட்டை விரலை
எனக்கு காணிக்கையாக தர வேண்டும் என்று கேட்டார். கட்டை விரல் தான் வில்வித்தகைக்கு
மூலமானது. ஆனாலும் ஏகலைவன் குரு கேட்டு விட்டார் என்பதற்காக சற்றும் யோசிக்காமல் கட்டை
விரலை வெட்டிக் கொடுத்தான். அதன் பிறகு அர்ச்சுனன் உலகின் சிறந்த வில்லாளியானான் என்கிறது
மகாபாரதம்.
விக்கீபீடியா இந்த
செய்தியை கூறும் போது துரோணரின் துரோகம் என்றே கூறுகிறது.
(ஏகலைவன் வரலாற்றை
வாசிக்க https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D)
ஒட்டு மொத்த சனாதனமும்
ஒவ்வொரு மேல் ஜாதியும் கீழ் சாதியை முடமாக்கி உயரும் தத்துவத்தை கொண்டது தான்.
இப்போது சில பேர்
சனாதனம் என்றால் ஒழுக்கம் கட்டுப்பாடு பாரம்பரியம் என்றெல்லாம் விளக்கம் பேச புறப்படுகிறார்கள்.
இந்த ஒழுக்கம் பாரம்பரியம் கட்டுப்பாடு என்ற வார்த்தைகள் எல்லாம் இந்த தீண்டாமையை அடிப்படையாக
கொண்டதுதான்.
நாம் வாழ்கிற இன்றைய
காலப்போக்கில் இராணுவம், வியாபாரம், கைத்தொழில் என்பதும் எல்லோரும் செய்யக் கூடியது
என்று பொதுவாகி விட்ட நிலையில் எது எந்த சாதிக்குரியது என்ற அடையாளம் தொலைந்து போய்விட்டது.
அதனால் செல்வாக்குள்ள
சாதிகள் பலவும் தங்களை பிராமணர்களுக்கு அடுத்த உயர் சாதியினர் என்று கூறி தம்மை விட
கீழான சாதியினரை அவமானப்படுத்தவும் துன்புறுத்தவும் அவர்கள் மேம்பாடு அடைவதை தடுக்கவும்
முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள்.
நாடு சுதந்திரம்
அடைந்து 75 ஆண்டுகளை கடந்த பிறகு இன்றும் தாழ்த்தப்பட்ட பட்டியலின் மக்கள் உயர் சாதியினரின்
சுரண்டலுக்கு ஆளாகிவருகின்றனர்.
ஒரு சின்ன உதாரணம்
இந்தியாவின் உச்சபட்ச நீதி அமைப்பான சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளில் 90 சதவீதம் பேர்
பிராமணர்களே! மத்திய அமைச்சர்களில் அதிகம் பேர் பிராமணர்களே! நாட்டின் உயர் நிர்வாக
அமைப்புகள் முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்களது அதிகார துஷ்ப்பிரயோகத்திற்கு
எந்த கட்டுப்பாடும் இல்லை
தமிழகத்தில் பிராமணரான
எச் ராஜா உயர் நீதிமன்றங்களை பற்றி என்னென்னவோ பேசுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையிம்
எடுக்க முடிவதில்லை. உ.பி. யில் ஒரு சாமியார், தமிழ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டுவருபவருக்கு
10 கோடி பரிசு என்று அறிவிக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இவை எல்லாமே சனாதனத்தின்
விளைவுகளாகும் . முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வார்களே அது போல சனாதனத்தின்
ஆபத்துக்களை மறைத்து விட இன்று சிலர் முயற்சிக்கிறார்கள்.
உண்மையில் சனாதனம்
என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே சொந்தமான தீமை அல்ல. உலகம் முழுவதிலுமுள்ள மனிதர்களிடம்
வெளிப்பட்ட தீமையே ஆகும்.
மனிதர்கள் சைத்தானிடமிருந்து
கற்றுக் கொண்ட முதல் தீய பழக்கமாகும் இந்த தீண்டாமை இயல்பு.
அதாவது நான் உயர்ந்தவன்
மற்றவன் தாழ்ந்தவன் அவனுக்கு நான் எந்த மரியாதை
தர முடியாது என்ற சிந்தனை
قَالَ
مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ
خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ (12)
சைத்தான் தனது
இந்த சிந்தனையை தான் மனிதர்களுக்குள் விதைத்து வெற்றி பெருகிறான்.
உலகத்தில் பல்வேறு
நாடுகளில் இதற்கு பல்வேறு காரணங்களை வைத்திருக்கிறார்கள் அவ்வளவே!
வெள்ளை கருப்பு
நிரம் ஒரு சில இடங்களில் பேதம் பாராட்டக் காரணமாக இருந்தது. சில இடங்களில் மொழி, சில
இடங்களில் தேசிய இனம் என பல வகை காரணங்களை
வைத்துக் கொண்டு மக்கள் தமக்கிடையே பேதம் கற்பித்துக் கொண்டனர். , ஒரே நிரமுடைய கருப்பு
இனத்தவர்களிடையே கழுத்து உயர்ந்த ஹூட்டு இனம் உயர்ந்தது கழுத்து சிறுத்த டூட்ஸி இனம்
தாழ்ந்த்து என்ற அடிப்படையில் பேதம் பாராட்டுவதும் உலகில் நடை பெறும் ஒரு பெரும் விந்தையாகும்.
இதே போல செய்யும்
தொழிலை அடிப்படையாக கொண்டு பேதம் பாராட்டிய தர்மம் தான் சனாதன தர்மமாகும்.
பிறந்த குலத்தின்
அடிப்படையிலும், பேசும் மொழியில் பயன்படுத்தும் சொற்களிலும் உச்சரிக்கும் ஒலியிலும்
கூட பேதம் பாராட்டுகிற ஒரு சமூகமாக முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சமூகம்
இருந்த்து.
ஹிஜிரீ 6 ம்வருடம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா என்ற
உடன்படிக்கை எழுதப்பட்ட போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதுமாறு முஹம்மது
நபி *ஸல்) அவர்கள் வாசகம் சொன்னார்கள். ஆனால் ரஹ்மான் என்ற வார்த்தையை மக்கா காபிர்களின்
தரப்பில் வந்த சுஹைல் பின் அம்ரு மறுத்தார். ரஹ்மான் என்றால் எங்களுக்கு தெரியாது என்றார்,
. அதன் பொருள் புரியாது என்பதல்ல. அந்த வார்த்தையை உபயோகிக்கும் பழக்கம் தங்களிடம்
இல்லை என்பதே அதன் காரணம்.
அரபுகளில் ஒரு
சாரார் பிஃஸ் என்று சொல்வார்கள் மற்றொரு சாரார் பீஸ என்று சொல்வார்கள்.
ஒரே வார்த்தைதையை
கூட உச்சரிப்பதில் மாறு பாடு இருக்கும் அல்லவா ?
நாம் ஆரஞ்சு
என்று சொன்னால் மளையாளிகள் ஓரஞ்சு என்று சொல்கிறார்கள் அல்லவா அது போல
மக்காவின் ஒரு
குடும்பமான பனூ தமீம்கள் பிஹி به என்று சொல்வார்கள். குறைஷிகள் அதையே பிஹு بهو என்று சொல்வார்கள்.
இந்த சின்ன
காரணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வேறு நாங்கள் வேறு என்று பேதம் பிரித்து விடுவார்கள்.
மக்களை பிரிக்க
சைத்தான் கையாளும் எளிய தந்திரமாகும் இது.
எனவே சனாதன்
என்பது இந்தியாவில் மட்டும் ஊடுறுவியுள்ள தீமை அல்ல. அது முழு உலகிலும் இருக்கிறது.
அந்த தீய எண்ணத்தின்
கொடூரம் சாதாரணமானதல்ல. மிக கொடூரமானது. அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்ட போது அங்கிருந்து
கொண்டு வரப்பட்ட செவ்விந்தியவர்களை ஸ்பெயின் நாட்டுக் காரர்களான் வெள்ளையர்கள் நாய்களை
விட கேவலமாக நட்த்தியதாகவும் செவ்விந்தியர்களை ஓட விட்டு நாய்களை விட்டு கடிக்க விடுவார்கள்
என்றும் வரலாறு சொல்கிறது.
இந்தியாவில்
சனாதனத்தின் கொடுமையால் நிகழ்ந்துள்ள துயரங்கள் சாமானியமானவை அல்ல.
இந்தியா முழுவதும் 2018 - 2020 காலகட்டத்தில் மட்டும் 1,38,825
வன்கொடுமைகள் தலித்
மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதி - அதிகாரப்படுத்தும்
அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில்
மட்டும் 3,831 வன்கொடுமைகள் பதிவாகியிருக்கின்றன. 2021இல்
இவ்வன்கொடுமைகள் 9.3% அதிகரித்துள்ளன (தி ஹிந்து தமிழ் 25ஜன 2023)
2022 ம் ஆண்டு
டிஸம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற தாழ்தப்பட்ட மக்கள் வசிக்கும்
பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை உயர்சாதிக்காரர்கள் கலந்து விட்டனர்.
இவை மிகச் சில
உதாரணங்கல் பட்டியலிட்டால் நூற்றுக்கணக்கான இதயத்தை உருக்கும் நிகழ்ச்சிகள் கிடைக்கும்.
மிக புனிதமான
உயர் கல்வி நிலையங்களை கூட சனாதனம் விட்டு வைக்க வில்லை.
கடந்த 2019
ம் ஆண்டு சென்னை ஐஐடி யில் பாத்திமா லத்தீப்
என்ற ஒரு முஸ்லிம் மாணவி உயர்சாதிக்க ஆதிக்க
வெறிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
அறிவியல் தொழில்
நுட்ப நாகரீக முன்னேற்றத்தின் எந்த எல்லையை தொட்டு விட்ட போதும் சனாதனத்தினால் விளைந்த
தீண்டாமை தீயின்
சூடு ஆறாமலேயே
இருக்கிறது.
மக்கள் அனைவரையும்
ஒரே தட்டில் வைத்து மதிப்பதுதான் இக்கொடுமைக்கான ஒரே தீர்வு.
இஸ்லாம் அந்த
பணியை வெகு சிறப்பாக நிறைவேற்றியது. இது சாமாணிய செய்தியல்ல
திருக்குர்
ஆன் மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தியதன் மதிப்பு
எத்தகையது என்பதை ஒப்பீடுகிறது.
هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ (62) وَأَلَّفَ
بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ
بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ
حَكِيمٌ (
இன்றும் இஸ்லாம்
மட்டுமே மனிதர்கள் சம்மாக மதிக்கப்படுவதற்கான ஒரே வழியாக அமைந்திருக்கிறது.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் திட்டவட்டமாக எந்த வடிவிலும் மக்களுக்கிடையே முறைகேடான பேதம் பாராட்டுதலை
அங்கீகரிக்கவில்லை.
إنَّ اللهَ أذهب عنكم عبيَّةَ الجاهليَّةِ وفخرَها بالآباءِ . إنَّما
هو مؤمنٌ تقيٌّ ، وفاجرٌ شقيٌّ ، النَّاسُ بنو آدمَ ، وآدمُ خُلِق من ترابٍ
لا فضلَ لعربيٍّ على عجميٍّ ، ولا لعجميٍّ على عربيٍّ ، ولا لأبيضَ
على أسودَ ، ولا لأسودَ على أبيضَ - : إلَّا بالتَّقوَى ، النَّاسُ من آدمُ ،
وآدمُ من ترابٍ
மக்கா
வெற்றியின் போது கருப்பினத்தவரான பிலால்
ரலி அவர்களை கஃபாவின் மீது
ஏறி பாங்கு சொல்ல பெருமானார்
உத்தரவிட்டார்கள். அவர் தனது கருப்பு
நிற கால்களால் கஃபாவின் மீதேறிய போது முஸ்லிமாகிவிட்ட
போதும் கூட சில அரபுகளால்
அது சகித்துக் கொள்ள முடியாத காட்சியாக
இருந்தது.
நல்ல
வேளை என் தந்தை பூமிக்குள்
சென்று விட்டார் என்று சிலர் பேசிக்
கொண்டார்கள்.
ஆனால் பெருமானார்
(ஸல்) அவர்களின் அந்தப் பணி இந்த உலகிற்கு மிக முக்கியமான ஒரு திட்டவட்டமான ஒரு தீர்மாணத்தை
சமிக்ஞையாக கொடுத்தது. மனிதர்கள் யாரும் பிறப்பின்
அடிப்படையில் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதே அந்த தீர்மானம்
ஒவ்வொரு நல்ல
அரசுக்கும் மக்களுக்கு இடையே சம் நீதியை நிலைநாட்டி பேதத்தை ஒழிக்க வேண்டிய கடமை இருக்கிறது.
துரதிஷ்ட வசமாக
நமது நாட்டை தற்போது ஆட்சி செய்கிற் அரசே மக்களுக்கிடையா தீண்டாமையை போதிக்கிற சனாதனத்திற்கு
ஆதரவாக இருக்கிறது.
இது மிகவும்
கண்டனத்திற்குரியது.
நாம் சனாதனத்தின்
தீமைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது மத்திய
அரசின் தந்திரத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்
சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமை கணக்கு அலுவலகம், மத்திய அரசின் திட்டங்களை தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அது சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்தில், திட்ட மதிப்பீடுகளுக்கு மாறாக, பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. சில கிலோ மீட்டர் தூரம் சாலை போடு வதற்கு பல நூறு கோடிகள் கணக்கு காட்டப்பட்டுள்ளன. இப்படி பல துறைகளிலும் தவறான கணக்குகள்
காட்டப்பட்டுள்ளன. மொத்தம் ஏழரை இலட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே
இப்போது பல விவகாரங்களையும் கையில் எடுக்கிறது
.
அந்த வகையில் தான் இப்போது சனாதனத்திற்கான ஆதரவு போக்கும் அமைந்திருக்கிறது.
மக்கள் அடிப்படை பிரச்சனைகளை மறந்து விடக் கூடாது. அரசு ஊதிப்பெரிதாக்கும் சர்ச்சைகளில் தங்களை பறிகொடுத்து
விடவும் கூடாது.
பல வகையிலும் நாட்டை சீரழிக்கிறவர்கள் ராட்ச தனமான சதித்திட்டங்களோடு
அடுக்கடுக்காக புறப்பட்டு வருகிற போது எல்லாம் வல்ல இறைவன் மக்களுக்கு சரியான புரிதலை
ஏற்படுத்தி நன்மைகள் அமைய துணைய செய்வானாக! ஆமின்
Masha alllah
ReplyDeleteஅருமை الحمد للله
ReplyDeleteஅருமை
ReplyDelete