தமிழகத்தில் 12 ம் வகுப்பில் படித்து வந்த மீரா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி பரபரப்பாக இருக்கிறது.
இது
மிகவும் கவலைக்குரியது. இந்த வயதில் வாழ்க்கையை நிராகரிப்பதற்கான எந்த பெரிய காரணமும் இருக்க முடியாது. தூக்கம் வராமல் தவித்து வந்தார் என்று சொல்கிறார்கள். மிக அற்பமான காரணத்திற்காக அந்தஸ்த்தும் வசதியும் நிறைந்த ஒரு பெண் தவறான முடிவை எடுத்துள்ளார்.
அவரது
தந்தை விஜய் ஆண்டனி ஒரு சினிமாக்காரர் என்பது இந்த விவாகரத்திற்கு அதிக வெளிச்சம் கொடுத்துள்ளது,
ஒரு
பெரிய உண்மை என்னவெனில் இந்தியாவில் இளைஞர்கள் அவசர தீர்வாக தற்கொலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒரு மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பது அதிக கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகும்.
இது,
ஆட்சியில் இருப்பவர்களும் சமூக அமைப்புக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு அக்கறை செலுத்த வேண்டிய ஒரு பிரச்சினையாகும். இன்று விஜய் ஆண்டனி என்ற பிரபலமான சினிமா காரர் வீட்டில் நடந்திருக்கிறது. நாளை யார் வீட்டிலும் நிகழலாம்.
நமது
இளம் பிள்ளைகள் அற்ப பிரச்சினைகளுக்கு உள்ளாகிற போது தற்கொலை தீர்வு என்ற சிந்தனையே அவர்களுக்கு வரக்கூடாது.
எல்லாம் வல்ல
இறைவன் மக்கள் அனைவரையும் இத்தீய கொடுமையிலிருந்து பாதுகாப்பானாக!
உலக
மக்களிடம் இச்சிந்தனை பரவாமல் தடுத்ததில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
ஒரு
மீலாது நேரத்தில் இந்த உலகம் முஹம்மது நபியால் அடைந்த நன்மையை நினைவூட்டி பெருமையடைகிறோம் என்பதை விட இத்தீமையை தடுப்பதற்கு முஹம்மது நபிகள் நாயக் (ஸல்) அவர்கள் காட்டிய அக்கறையையும் உத்திகளையும் உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நினைவூட்டுகிறோம்.
முஹம்மது
நபியை பற்றிய குறிப்பை முந்தைய வேதங்களே இப்படி குறிப்பிடுகின்றன்.
الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ
முஹம்மது
நபி என்பவர் உலக மக்களின் சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வானவர் என்ற கருத்தை முந்தைய வேதங்களே அழுத்தமாக வெளிப்படுத்தின.
இபோதும்
நாம் அழுத்தமாக தெரிவிக்கிறோம்.
உலகில்
யாருக்கு எந்த
தீர்க்க முடியாத சிரமம் என்றாலும் அதற்கான திர்வையும் தெளிவையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.
உலகை
பெரிதும் பாதிக்கிற செயல்களில் ஒன்று தற்கொலை. இது யுத்தங்களை விடவும் - கொடிய நோய்களை விடவும் அதிகமாக மக்களை துன்புறுத்துகிறது.
உலகில் ஒரு ஆண்டில் 15 இலட்சம் பேர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது
2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு. இந்த அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
வருகிறது.
ஒரு நாளில்
3,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நவூதுபில்லாஹ்.
எண்ணிக்கையை சிந்தித்துப் பாருங்கள் ஒரு நாளில் எத்தனை பேர்
கவனியுங்கள்!
நாற்பது வினாடிகளுக்கு
ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன என்று உலக சுகாதார
நிறுவனம் கூறுகிறது.
இன்னும் அச்சமூட்டுகிற வகையில் “மூன்று வினாடிக்கு ஒருவர் என்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக அவ்வறிக்கை
கூறுகிறது.
.மூன்று விநாடிக்கு
ஒருவர் முயற்சிக்கிறார். 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஒரு நாளில் மூவாயிரம் பேர் இறக்கிறார்கள். ஒருவருடத்தில்
15 இலட்சம் பேர் உலகில் மறைந்து போகிறார்கள் எனில் ?
உலகில் இதை விடப் பேரழிவு வெறென்ன இருக்கிறது ?
இந்தப் பேரழிவிலிருந்து உலக மக்களில் கனிசமானோர பாதுகாத்த பெருமை
பெருமானார் (ஸல்) முஹம்மது (ஸல்) அவர்களுக்கு
இருக்கிறது.
இதை உணர்ந்து கொள்ள ஒரு புள்ளிவிவரம் போதுமானது.
உலகில் அதிகமான தற்கொலை எங்கு நடக்கிறது என்றால் ? விஞ்ஞானத்திலும்
நாகரீகத்திலும் தனிமனித மதிப்பிலும்
உச்சத்திலிருப்பதாக பெருமையடித்துக் கொள்ளும் ஐரோப்பாவில் தான்.
விக்கீபீடியா தகவல் தருகிறது.
Europe had the highest
rates of suicide by region in 2015.There
are an estimated 10 to 20 million non-fatal attempted suicides every year. Non-fatal
suicide attempts may lead to injury and long-term disabilities.]In
the Western world, attempts are more common among young people and women.
கண்டங்கள் வாரியாக கணக்கிடுகிற போது தற்கொலைகளில்ன் சதவீதம்
அமெரிக்க கண்டத்தில் 9. % , ஐரோப்பா கண்டத்தில் 10.5 %, ஆப்ரிக்காவில் 11. % வீதமுமாக இருக்கையில் முஸ்லிம்கள்
அதிகமாக வாழ்கிற மத்திய தரைக்கடல் பகுதியில் 6.4 சதவீதமாக இருக்கிறது.
(விக்கீபீடியா https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_suicide_rate)
யுத்தங்கள் பிரச்சனைகள் என்பது முஸ்லிம்கள் வசிக்கும் நிலப்பரப்பில்
அதிகமாக இருந்த போதும் தற்கொலைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு
காரணம் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள்.
தற்கொலையை தடுக்க பெருமானார் பயன்படுத்திய உத்திகள் –
தற்கொலைக்கு என்று மட்டுமல்ல அனைத்து வகையான தீமைகளையும் தடுக்க
பெருமானாரின் இந்த உத்திகள் உதவும்.
சட்டரீதியாக தடை
முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் தற்கொலையை சட்ட ரீதியாக தடை செய்தார்கள்.
لا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيماً *
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَاناً وَظُلْماً فَسَوْفَ نُصْلِيهِ نَاراً وَكَانَ
ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيراً[النساء:29، 30].
இது உரிமை சம்ப்ந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது எல்லை மீறுதலாகும். இது பெரும் குற்றமாகும். இங்குள்ள துயரத்திலிருந்து விலக தற்கொலைக்கு முடிவு செய்கிறவர்கள் நேரே நரகிற்கு செல்வார்கள். அந்த துயரம் எப்படிப் பட்ட்து என்று சிந்தித்துப் பார்க்க இவ்வசனம் தூண்டியது.
தற்கொலைக்கு
கிடைக்கும் தண்டனையின் கொடுமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் கடுமைப்படுத்தினார்கள்
عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ
فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى خَالِدًا مُخَلَّدًا
فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ
يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ
قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ ثُمَّ انْقَطَعَ عَلَيَّ شَيْءٌ خَالِدٌ يَقُولُ
كَانَتْ حَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ
خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
தற்கொலையை பரிதாபமாக கருதாமை
உஹது
யுத்தத்தில் சிறப்பாக பங்காற்றிய ஒரு நபித்தோழர், வலி பொறுக்க முடியாமல் வாளின் பிடியை மண் தரையில் குத்தி அதன் முனையில் தன் நெஞ்சை வைத்து அழுத்தி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு யுத்ததில் பங்கேற்றதற்கான மரியாதையை முஸ்லிம் சமூகம் தரவில்லை.
وفي
حديث سهل بن سعد رضي الله عنه في قصة
الرجل الذي جرح جرحا شديدا في احدى الغزوات ، فوضع سيفه بين ثدييه ، وتحامل عليه
فقتل نفسه ، فقال رسول الله صلى
الله عليه وسلم :((اما انه من اهل النار)) رواه البخاري.
உலகின்
சில நாடுகள் தற்கொலை செய்து கொள்வதை பரிதாபமாகவும், தனி மனித சுதந்திரமாகவும் பார்க்கின்றன.
இப்போதும்
கூட பார்த்தீர்கள் எனில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மீது எவ்வளவு பரிதாபம் காட்டப்படுகிறது என்று பாருங்கள். அவள் சிறந்தவள். நன்றாக படிப்பவள். ஸ்கூல் லீடர் என்றெல்லாம் பேசப்படுகிற செய்திகள் அப்பெண்ணின் முடிவை நியாயப்படுத்துவது போல் ஆகிவிடும் இத்தீமையை தடுக்க முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு பெரும் காரணமாகும்.
தற்கொலை
செய்து கொள்வதை பரிதாபமாக பார்ப்பதை சமுதாயம் தவிர்க்க வேண்டும். அத்தகையோரை குற்றவாளியாக பார்க்கும் வழக்கம் படர வேண்டும்.
கொலை
செய்தவன் குற்றவாளி என்றால் தற்கொலை செய்தவனும் குற்றவாளிதான் என்ற கண்ணோட்டம் படர வேண்டும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு நபி மொழிக்கு விளக்கம் அளிக்கிற இப்னு ஹஜர் (ரஹி) இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்கள்.
وفي الحديث: «عن ثابت الضحاك قال: قال النبي ﷺ: ومن قتل نفسه بشيء عذب به في نار جهنم قال ابن حجر: «ويؤخذ منه أن جناية الإنسان على نفسه كجنايته على
غيره في الإثم لأن نفسه ليست ملكا له مطلقا بل هي لله تعالى فلا يتصرف فيها إلا
بما أذن له فيه
முஸ்லிம்
சமூகத்தில் இன்றும் அந்த நிலை இருக்கிறது. யார் தற்கொலை செய்து கொண்டாலும் அது இழிவானதாக பெரிய குற்றச் செயலாக – ஒரு மரணம் எபதற்கான மரியாதையை இழந்ததாக கருதப்படுகிறது. தற்கொலை நடை பெற்ற வீட்டில் “அல்லாஹ்வுக்கு பாவியாகிவிட்டாயே என்று அழும் அழுகையில் முஸ்லிம் சமுதாயம் தற்கொலையை அவமரியாதை செய்து விடுகிறது.
தற்கொலை எந்தக் காரணத்திற்காக நடந்திருந்தாலும்
இஸ்லாம் அதை பரிதாபத்திற்குரிய ஒன்றாக சகஜமாக எடுத்துக் கொள்ள வில்லை. பாவமாகவே பார்க்கிறது.
وقال المتحدث الرسمي باسم الأزهر، السفير محمد رفاعة الطهطاوي، إن
"القاعدة الشرعية العامة تؤكد أن الإسلام يحرم الانتحار تحريما قطعيا لأي سبب
كان ولا يبيح للإنسان أن يزهق روحه كتعبير عن ضيق أو أحتجاج أو غضب"
தற்கொலை
ஒரு குற்றச் செயல் அதை எக்காரணம் கொண்டு நியாயப்படுத்த முடியாது என்ற ஒரு சமூக மனப்பான்மைய இஸ்லாம் வலியுறுத்தியது இது சமூகத்தில் தற்கொலையை பற்றிய குற்ற உணர்வை ஏற்படுதியது.
இதில்
ஒரு பெரிய நன்மை என்ன வெனில் ?
சாதாரணமாக
மக்களுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதை ஓரளவிலாவது அது தடுக்கும்.
தலைவர்கள் பிரமுகர்கள் இறுதி
மரியாதையை
தவிர்ப்பது.
முஸ்லிம்
சமூகத்தில் தற்கொலை எண்ணம் மிக குறைவாக இருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் உண்டு.
அந்த
காரணம் தான் இதுவிசயத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பங்களிப்பின் பிரம்மாண்டத்தை எடுத்துக் கூறக்கூடியது.
தற்கொலை
செய்து கொண்ட ஒருவரின் பிரதேம் இறுதி மரியாதைக்காக பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்ட போது முஹம்ம்து நபி (ஸல்) அவர்கள் “ நானோ தொழ் வைக்க மாட்டேன் என்று கூறினார்கள்.
கருணைக்கடலான
பெருமானார் (ஸல்) அவர்கள் பெரும் பெரும் குற்றவாளிகளை மன்னித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முனாபிக்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலூக்கு ஜனாஸா தொழ வைத்த நபி (ஸல்) அவர்கள் தற்கொலை செய்தவனுக்கு தொழ வைக்க மாட்டேன் உங்களில் யாராவது தொழ வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள் .
عَنْ ابْنِ سَمُرَةَ
أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا أَنَا فَلَا أُصَلِّي عَلَيْهِ
முஸ்லிம்
சமுதாயத்தை சார்ந்தவர்கள் எத்தகை கஷ்ட்த்தில் இருந்தாலும் தற்கொலையை நாடமால் இருக்க ஒரு பெரும் தடையாக இருப்பது இந்த வாசகமாகும்.
இது
நமக்கு தருகிற ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் செல்வதற்கு தலைவர்கள் பிரமுகர்கள் செல்லலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தச் செல்வதை தவிர்க்கலாம்.
அது சமூகத்தில்
தற்கொலையை பற்றிய ஒரு அசூசை ஏற்பட உதவும். அது எதிர்கால சந்த்திகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் மட்டுமல்ல முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தற்கொலையை தடுக்க கையாண்ட வெற்றிகரமான ஒரு உத்தி இது.
இது
போன்ற மனித சமூகத்தின் ஏராளமான தீமைகளை அடியோடு கலைவதில் பெரும் வெற்றி கண்ட மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
அவர்
நமக்கு தலைவர் என்பதால் நமக்கு பெருமை.
அல்லாஹ்
அந்த எம்பெருமானை காலமெல்லாம் நேசித்தும் புகழ்ந்தும் பாராட்டியும் வாழ்கிற தவ்பீக்கை நமக்கும் நம் சந்த்திகளுக்கும் தந்தருள்வானாக!
அல்ஹம்துலில்லாஹ் அருமையான வரிகள் பாதுகாக்கப்பட வேண்டிய வார்த்தைகள் உலகம் முழுவதும் பேண வேண்டிய கட்டுரை
ReplyDelete