நம்முடைய நாட்டில் சமீபத்தில் ஜீ 20 மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
உலகின் 48 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பைடன். இங்கிலாந்து
பிரதமர் ரிஷி சுனக், துருக்கி அதிபர், தையிப் எர்துகான், சவூதி இளவரசர் முஹம்மது பின்
சல்மான், ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றது நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்த்தது.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரும் தலைவர்களை வரவேற்று , மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தற்காக
உலக தலைவர்கள் நமது நாட்டை பாராட்டியுள்ளனர். ஒரு இந்தியனாக நாம் அனைவரும் பெருமை படத்தக்க்க
நிகழ்வு இது.
அதே நேரத்தில், உலகமே ஒரு கிராமம் போல சுருங்கி வருகிற வருகிற நிலையில் உலக மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள
பல முக்கிய பிரச்சனைகளை குறித்து இவ்வளவு பெரிய மாநாடு ஒரு சரியான அளவில் அக்கறை செலுத்தியதா
என்பது கேள்விக்குரியாகும். அதிலும் குறிப்பாக
ஏழைகள், சாமாணியர்கள், பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிற மக்களை பற்றி
அவர்களது பிரச்சினைகளைப் பற்றி இந்த மாநாடு எந்த அளவு விவாதித்து தீர்வு கண்ட்து என்று
யோசித்தால் அதற்கு திருப்தி அளிக்கிற பதில் ஒன்று இல்லை.
இதில் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு.
ஜி 20 என்ற கூட்டமைப்பே வளர்ந்த நாடுகளுக்கான வியாபார பெருக்கம் பற்றி பேசுவதற்கான
அமைப்பே ஆகும்.
இது ஆரம்பத்தில் ஜீ 7 என்று இருந்த்து. அப்போது இதை செல்வ வள நாடுகளின் கூட்டமைப்பு
என்று அழைத்தார்கள். உலகில் வியாபாரத்திலும்
தொழில் திறனிலும் வளர்ந்த நாடுகள் மட்டுமே தங்களது நன்மைக்காக இந்தக்குழுவை அமைத்தன.
இப்படி சில பேர் மட்டுமே இருந்தால் போதாது, மற்ற பலரையும் இணைத்துக் கொண்டால் தான்
தமது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காக மற்ற பல வளரும் நாடுகளையும்
இணைத்துக் கொண்டார்கள். அது இப்போது ஜீ 20 ஆக வளர்ந்திருக்கிறது. இந்த முறை ஆப்ரிக்க
யூனியனையும் இதில் இணைத்துக் கொண்ட்தால் இப்போது
இது ஜீ 21 என்றாகிவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை உலக அடிப்படையில் மக்களின் அனைத்து வகை பிரச்சனைகளையும் ஆய்வு
செய்யக் கூடிய சபை. அது போல இல்லாமல் இது வளர்ந்த நாடுகளின் வியாபார நலனுக்காகவே அமைக்கப்பட்டது
என்பதால் அந்த அளவில் மிக எச்சரிக்கையாக தங்களுடைய வளர்ச்சிக்கான வழிகளை பற்றி மட்டுமே இந்த மாநாடு பேசி இருக்கிறது.
சுருக்கமாக சொன்னால் ஒரு ஊரில் உள்ள பணக்காரர்கள் மட்டுமே ஒரு விருந்தில் சந்தித்துக்
கொண்டால் எப்படி தங்களது பொருளாதார வாய்ப்புக்களை பற்றி மட்டுமே பேசிக் கொள்வார்களோ
அதே போல இந்தக் கூட்டம் நடை பெற்று முடிந்திருக்கிறது.
இன்றளவும் யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற உக்ரைன் பிரச்சனைக்கு ஒரு
சின்ன தீர்வை பற்றி கூட யோசிக்க வில்லை.
சமீபத்தில் கூட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இது போல வளைகுடா நாடுகளில், ஆப்ரிக்க நாடுகளில் இன மத சாதீய மோதல்களால் பிளவு பட்டிருக்கிற
மக்களை ஒன்று படுத்துவதற்கான எந்த திட்டமும் விவாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு உதவுவதற்கான
எந்த ஒரு சிறு அறிவிப்பும் இல்லை. பாலஸ்தீன் மக்களை அடிமைகளைப் போல நடத்துகிற இஸ்ரேலைப்
பற்றி எந்த விவாதமும் இல்லை. இத்தனைக்கும் துருக்கி சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம்
போன்ற பல முஸ்லிம் நாடுகள் பங்கேற்றிருக்கின்றன.
புதிதாக செய்யப்பட்டுள்ள பல அறிவிப்புகளும் வளர்ந்த நாடுகள், அல்லது வளர்ந்து வருகிற
நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வது பற்றி மட்டுமே முக்கிய ஆலோசனைகளை
நடத்தியுள்ளன.
பொருளாதார வளர்ச்சி என்ற ஒற்றை நோக்கோடு ஒரு பெரிய மாநாடு நடை பெற்று முடிவது மனித குலத்திற்கு நன்மையானதோ நாகரீகமானதோ அல்ல. அரசுகள்
கூட கார்ப்பரேன் கம்பனிகளைப் போல சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்து விட்டன என்பதற்கான
அடையாளம் இது.
எல்லாம் வல்ல இறைவன் உலக நாடுகளின் தலைவர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்க வேண்டும்.
--------
இப்போது உலகமெங்கும் மீலாது விழாக்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பெருமைகளை பலரும் நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.
நமது மாநிலத்திலும் மாநில முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் முஹம்மது
நபி (ஸல்) அவர்களை பற்றி மிக சிறப்பாக கூறியிருக்கிறார்கள்.
நாம் அனைவருக்கும் ஒன்றை நினைவூட்டுகிறோம். நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் மதபோதகர்,
சமூக சீர்திருத்த வாதி மட்டும் அல்ல,
உலகின் மிகச் சிறப்பான அரசியல் தலைவரும் ஆவார்.
அன்னார் மனித வரலாற்றுக் கற்றுக் கொடுத்த மிகப்பெரிய பாடம்.
தலைவர்களும் செல்வந்தர்களும் பிரமுகர்களும், சாமானிய மக்களைப் பற்றி எப்போதும்
சிந்திக்க வேண்டும் என்பதாகும்.
الصلاة وما ملكت أيمانكم
நபி (ஸல்) அவர்கள் தனது இறுதிவார்த்தைகளாக உதிர்த்த இரு சொற்களை வரலாறு பத்திரமாக
பாதுகாத்து வைத்திருக்கிறது.
في سنن ابن ماجه عن أم سلمة: أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في مرضه
الذي توفي فيه: الصلاة وما ملكت أيمانكم، فما زال يقولها حتى يفيض بها لسانه
அன்றைய சமூகம் ஜமீந்தாரி சமூகமாக இருந்தது. செல்வந்தர்கள் பாவப்ப்பட்ட மக்களை அடிமைகளாக
வைத்திருந்தார்கள். அந்த அடிமைகளின் உரிமைகளையும் உணர்வுகளையும் பற்றிய உணர்த்தியதே
நாயகத்தின் கடைசி அறிவுரையாகும்.
எந்த சர்வதேச பிரம்மாண்ட மாநாட்டின் தீர்மாணத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
இந்த வார்த்தைகளுக்கு அதிக சக்தி இருந்த்து.
முஸ்லிம் சமூகம் அந்த வார்த்தைகளுக்கு மிக முக்கியத்துவம் அளித்த்து. அதனால் ஒரு
கட்ட்த்தில் எந்த வித போராட்டங்களுக்கும் இடமில்லாமல் அடிமை முறை அரபு நாட்டில் காணாமல்
போனது.
உலகில் பாவப்பட்ட ஒரு பிரிவாக இருந்த மனித அடிமைகள் என்ற ஒரு இழிவை சப்தமில்லாமல்
ஒழித்துக் கட்டிய பெருமை முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருக்கிறது.
சிரம்ப்படுவோர் குறித்த கவலை
வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான கூட்ட்த்தில் அதைப் பற்றி மட்டும்தான் பேச முடியும்
என்று சிலர் வாதிடலாம்.
அந்த சிந்தனை மாற்றப்பட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத போதகராக வந்தவர் . ஆனால் அவர் மக்கள் படும் சிரமங்களைப்
பற்றியே அதிகம் கவலை கொண்டிருந்தார்.
பெருமானாரின் முதல் அடையாளம்.
قَدْ
جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ
عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَحِيمٌ} [التوبة: 128]
திருக்குர் ஆன் நபிகள் நாயகத்தை ஒற்றை வாக்கியத்தில் அறிமுகப்படுத்துகிறது.
عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ
நீங்கள் சிரமப்படுவது அவருக்கு
பொறுக்காது.
இந்த வார்த்தை ஒரு பெரும்
தத்துவத்தை போதிக்கிறது. நீங்கள் யாராக இருந்தாலும் சிரமப்படுவோர் குறித்து சிந்திக்கவும்
அவர்களுக்கு உதவவும் முற்பட வேண்டும்.
அதுதான் சிறப்பான மனித வாழ்வின்
முதல் அடையாளமாகும்.
குடும்ப தலைவர்கள், சமூக பொறுப்பாளர்கள்
அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் என நம்மில் ஒவ்வொருவரும் மறக்க கூடாத வார்த்தை இது.
சிரமப்படுவோரை நாம் ஒதுக்கி
விடக் கூடாது. அலட்சியப்படுத்தி விடக் கூடாது. அவர்களைப் பற்றி சிந்திக்காமலே இருந்து
விடலாகாது.
கூட்டிப் பெருக்கும்
பெண்ணுக்கு பெருமானார் கொடுத்த மரியாதை
முஸ்லிம்களிடம் பேசப்படுகிற ஒரு பிரபலமான செய்தி இருக்கிறது.
الراوي : أبو
هريرة | المحدث : مسلم
பள்ளிவாசலை கூட்டிப்பெருக்கும் ஒரு கருப்பின பெண்ணுக்கு
பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்பது நீங்கள் இத்தகையோரை எப்போதும்
மறந்து விடக் கூடாது என்று சமூகத்திற்கு உணர்த்தியதே ஆகும்.
பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்
இன்னும் ஒரு பிரபலமான நபி மொழி இருக்கிறது.
அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க
கடைசி ஹஜ்ஜின் போது நிகழ்த்தப்பட்ட உரையில் சொல்லப்பட்ட வாசகம்.
எந்த காலத்திலும் பெண்கள் துன்புறுத்தலுக்கு அநீதிக்கும்
ஆளாகி வந்தார்கள். அதற்கு முடிவு கட்டிய வார்த்தை இது.
استوصوا بالنساء خيرا) رواه مسلم.
அவற்றில் ஒன்று
இதன் பொருள்.
ஒருவார்த்தையில் தலைமுறை தாண்டியும் பலவீனமான இனம் பற்றிய கவலையை பெருமானார் உபதேசித்து சென்றுள்ளார்கள்.
நபிகள் நாயகத்தின் மற்றொரு அறிவுரை
கணவரில்லாத விதவை பெண்கள் ஏழைகளுக்காக உழைப்பது ஜிஹாது ஆகும். நெடிய வணக்கமும்
ஆகும்.
بي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (السَّاعي على الأرملة والمسكين،
كالمجاهد في سبيل اللَّه، أو القائم الليل والصائم النهار) رواه البخاري.
பெருமானாரின் இந்த வாசகங்களில் தென்படுகிற ஆதங்கத்தை கவனியுங்கள்.
ஒரு அற்புதமான தலைவர் மனித சமூகம் கவனிக்க வேண்டிய அடிப்படையான கவலைகளை எப்படி
அருமையாக ஊட்டுகிறர் என்று பாருங்கள்.
இந்த கவலையில் உருவாக்கப்பட்ட ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் ஏழை எளியவர்களுக்கு பார்த்துப்
பார்த்து செய்தார்கள். எனினும் கத்திக் குத்துக்கு ஆளாகி தனது உயிர் பிரியும் நேரத்தில்
இராக்கின் விதவைப் பெண்களை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி விட்டு இறையடி சேர்ந்தார்கள்.
வளர்ச்சி எப்போது கிடைக்கும் ?.
மிக முக்கியமாகவும் அடிப்படையாகவும் உலகம் கவனிக்க வேண்டிய இறைவனின் ஒரு இரக்சியத்தை
பெருமானார் (ஸல்) அவர்கள் பகிரங்கப்படுத்தினார்கள்.
இன்றைய காலத்தில் மக்கள் தங்களது வள்ர்ச்சி பற்றி தங்களுக்கு தோன்றியபடி சிந்திக்கிறார்கள்
.
வளர்ச்சிக்கான ஒரு வழியை பெருமானார் சுட்டிக் காட்டுகிறார்கள்.
عن أبي الدرداء رضي الله
عنه أن النبي صلى الله عليه وسلم قال: (ابغوني (اطلبوا لي) الضُّعفاءَ،
فإنَّما تُرزَقونَ وتُنصَرونَ بضُعفائِكُم)
என்னிடம் பலவீனமானவர்களை அழைத்து வாருங்கள். உங்களது பொருளாதார வளம் உங்களைச் சார்ந்த
பலவீனமானவர்களை உபசரிப்பதில் தான் இருக்கிறது என்றார் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள்
இதையே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான
காரணியாக குறிப்பிட்டார்கள்.
إِنَّمَا يَنْصُرُ اللَّهُ هَذِه
الْأُمَّة بِضَعِيفِهَا
எளிய மக்களுக்காக செய்கிற காரியங்களே நம்மை நிலை நிறுத்தும் என்பதற்கு எங்களூரில்
உள்ள ஒரு உதார்ணத்தை கூறுகிறேன்.
கோவையில் பிரபலமான பி எஸ் ஜி நிறுவனம் இருக்கிறது. மருத்துவ கல்லூரி பொறியியல்
கல்லூரி என பல கல்வி நிறுவன்ங்களிலும் அவர்கள் முன்னோடிகளாக இன்று மிளிர்கின்றனர்.
ஆனால் இந்நிறுவனத்தை நடத்துகிறவர்களுடைய குடும்ப தொழில் ஜவுளி உற்பத்தியாகும், கல்வி
நிறுவனம் நடத்துவது அல்ல.
பீளமேடு சமாநாயுடு கோவிந்த சாமி நாயிடு என்பது தான் பிஎஸ்ஜி ஆகும்.
கோவிந்த சாமி நாயிடுக்கு நான்கு மகன்கள். அவர் தனது சொத்தை 5 ஆக பங்கு வைத்தார்.
ஐந்தாவது பங்கை தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு
கல்வி கற்றுக் கொடுக்க ஒதுக்கினார். சர்வஜன பள்ளி என்ற ஒரு பள்ளிக் கூட்த்தை தொடங்கினார்.
அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை 1926 ல் இரண்டு இலட்சத்து ஓராயிரம் ரூபாயாக இருந்தது.
தனது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளிகளை பற்றி கவலைப்பட்ட கோவிந்த சாமி நாயிடுவின்
குடும்பம் இன்று அந்த கல்விப்பணியில் ஏராளமான ஆல் போல் தழைத்த நிறுவங்களை வைத்து உலக
அளவில் பிரபலமாகி இருக்கிறது.
அவர்களுடைய குடும்ப தொழிலான ஜவுளி மில்கள் பலதும் இப்போது இல்லை.
எளிய மக்களைப் பற்றிய கவலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் அற்புதமான வாக்கை உணர்வதற்கான ஒரு நல்ல உதாரணம் இது.
நம்முடைய நாட்டில் மிக வேகமாக செல்கிற பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதே அளவில் கிராமப்புற சாலைகள் மேம்பாடு பற்றி சிந்தித்தால் மட்டுமே அது உண்மையான
வளர்ச்சி என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம்.
எனவே இந்த சிறப்பான மீலதின் நல்ல நேரத்தில்
ஒரு தொழிலதிபரின் சிந்தனையில் தொழிலாளர்களின் நலன் பற்றி ஒரு சிறு கவலை,
முதலாளிகளிடம் வேலைக்கார்ர்களைப் பற்றியை ஒரு சிறு கவலை,
பணக்கார்ர்களிடம் ஏழைகளைப் பற்றிய ஒரு கவலை.
அரசுகளிடம் சாமாணிய மக்களைப் பற்றியை ஒரு கவலை
நீதிபதிகளிடம் அடித்தட்டு மக்களைப் பற்றிய ஒரு கவலை எப்போதும் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே அது வளர்ச்சியும் நாகரீகமும் ஆகும் என்ற பெருமானரின் வழிகாட்டுதலை
நினைவில் நிறுத்துவோம்.
அல்லாஹ் தவ்பீக செய்வானாக!.
அற்புதமான சிந்தனை.மாஷாஅல்லாஹ். பாரகல்லாஹ்.
ReplyDelete