வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 05, 2023

விளையாட்டுப் போட்டிகளில் கடமை தவற வேண்டாம்

நம்முடைய நாட்டில் உலக கிரிக்கெட் போட்டி தொடங்கி இருக்கிறது. 19 ம் தேதி வரை நடை பெற இருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்திருக்கிறது. இந்தியாவின் மதம் என்று கிரிக்கெட் விளையாட்டை குறிப்பிடுவது உண்டு.

கிரிக்கெட்,இங்கிலாந்தில் தோன்றிய விளையாட்டு. அங்கு குளிர் அதிகம். அதனால் அங்குள்ள தட்ப வெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல வெயில் அதிக நேரம் நின்று ஸ்வெட்டர் அணிந்து கொண்டு கையிக்கும் காலுக்கும் உறைகள் அணிந்து கொண்டு விளையாடப்படும் விளையாட்டு.. 

இது அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிற விளையாட்டும் கூட. அதே நேரத்தில் மற்ற விளையாட்டுக்கள் அளவு இந்த விளையாட்டால் நன்மைகள் இல்ல. 

தொடர்ந்து டேபிள் டென்னிஸ் விளையாடுவது பல வகையான உடல் நோய்க்கு தீர்வாக அமையும். குறிப்பாக பெண்களுக்கு பிரசவ வேதனையை குறைக்கும்

டென்னிஸ் மற்றும் இறகுப் பந்து  விளையாட்டு உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்

நீச்சல் மற்றும் குதிரையேற்ற விளையாட்டுக்கள் ஆபத்து காலங்களில் உதவும் 

இது போல் குறிப்பிட்டுச் சொல்லும் படியான நன்மைகள் எதுவும் பெரிதாக கிரிக்கெட் விளையாட்டில் கிடையாது.

டென்னிஸ் விளையாட்டைப் போல நீண்ட பயிற்சியோ, புட்பால் விளையாட்டை போன்ற அதிகப்படியான உடல் வலுவோ , செஸ் விளையாட்டை போன்ற அதீத கவனமோ தேவைப்படுகிற விளையாட்டு அல்ல. எல்லோராலும் விளையாட முடிந்த விளையாட்டு என்பதால் அது மிகவும் பிரபலமாக இருக்கிறது. அவ்வளவு தான்.  

அதனாலே இங்கிலாந்தின் மிக புகழ்பெற்ற எழுத்தாளரும் விமர்சகருமான பெர்னாட்ஷா கிரிக்கெட் விளையாட்டை மிக கடுமையாக விமர்ச்சித்தார்.

11 முட்டாள்கள் விளையாட 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு என்று கிரிக்கெட்டப் பற்றி அவர் கூறினார்.

இப்போது கிரிக்கெட் விளையாட்டு ஒரே நேரத்தில் 11 கோடிக்கும் மேற்பட்ட மக்களை ஈர்த்திருக்கும் விளையாட்டாக மாறி இருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம், மோசடி, கார்ப்பரேட்டுகளின் சதித்திட்டங்கள், கணக்கு வழக்கற்ற பணப்புழக்கம் மது, ஆபாசம் என் பல தீமைகள் இருந்தாலும் அதன் முக்கிய தீமை நேரத்தை திண்பதாகும். மக்கள் மற்ற கடமைகளை மறந்து அதிக நேரம் இந்த விளையாட்டில் ஈடுபாடு காட்டுவதாகும்.

எந்த விளையாட்டு மக்களின் அடிப்படை கடமைகளை மறக்கடிக்கிறதோ அது விளையாட்டல்ல. போதையாகும். எந்த  போதையும் ஹராமாகும்.  

நமது கடமையை மறக்கடிக்கிற போதையிலிருந்து கண்டிப்பாக விலகி நிற்கவேண்டியது நமது அறிவார்த்தமான கடமையாகும்.

நன்றாக யோசித்துப்பாருங்கள்

நமக்கு மருத்துவம் பார்க்கிற டாக்டர் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நோயாளிகளை பார்க்க தவறினால், அல்லது விளையாட்டைப் பார்த்துக் கொண்டே வைத்தியம் பார்த்தால் அது எந்த அள்வு மோசமான கடமை மீறுதுலாகும் ?

கடமை மீறுதல் மட்டுமல்ல, அது மனுஷத்தன்மை அற்ற செயலாக அல்லவா கருதப்படும் ?

அது போலத்தான் ஒரு வங்கி பணியாளரோ, அரசு அதிகாரியோ அலுவலக இருக்கையில் அமராமல் விளையாட்டு நடைபெறும் கேலரியில் அமர்ந்திருந்தால் அது கண்டிக்கப்படக் கூடியதல்லவா ?

இத்தகையோரை பெருமானார் (ஸல்) அவர்கள் எப்படிக் கண்டிக்கிறார்கள் தெரியுமா ?

அவர்களது வீடுகளை எரித்து விட வேண்டும் என்கிறார்கள்.

 لقد هممَتُ أن آمُرَ بالصَّلاةِ فتقامَ ، ثُمَّ آمُرَ رجلًا فيصلِّيَ بالنَّاسِ ، ثمَّ أنطلِقَ برجالٍ معَهم حزمٌ من حطبٍ إلى قومٍ لا يشهدونَ الصَّلاةَ ، فأحرِّقَ عليهم بيوتَهم بالنَّارِ

الراويأبو هريرة  | المصدرصحيح ابن ماجه

 இந்த நபி மொழி தொழுகையை தவற விடுவோரைக் நேரடியாக குறிக்கிறது என்றாலும் மற்ற கடமைகளை புறக்கணித்து நடப்போருக்கும் இது பொருந்தும்.

 விளையாட்டுப் போட்டியில் மனம் இலயித்து கடமைகளை தவறவிடுவோர், மனோ இச்சைகளை பின் தொடர்வோர் ஆவ்ர்,

 இத்தகையோரை மிக மோசமாக வழி கெட்டவர்கள் என்கிறது குர் ஆன், அப்படி நடப்பது அல்லாஹ்விடமிருந்து நேர்வழி கிடைக்காமல் போவதன் அடையாளம் அத்தகையோர் நேர்வழி பெறுவதற்கான வாய்ப்பே இருக்காது என்றும் குர் ஆன் கூறுகிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)

فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءهُمْ" (القصص: 44).

وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ" (القصص: 50

أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَن يَهْدِيهِ مِن بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ" (الجاثية: 23).

பாங்கின் அழைப்பிற்கு பதிலளிக்காமல் இருப்பது, மகனே என்ற அம்மாவின் விழிப்பை கண்டு கொள்ளாம்ல விடுவது, சார் என்ற தேவையுடையோரின் குரலை செவி மடுக்காமல் போவது எல்லாம் மனோ விருப்பத்திற்கு அடிமையானவர்களின் குணமாகும்.

இத்தகையை போக்கு நன்மையை கொண்டு வந்து தராது. அந்தஸ்தை அழித்துவிடும். மரியாதையை கெடுத்துவிடும்.

மனோ இச்சையின் வழியில் மதிப்பிழந்த ஒரு மனிதனின் கதை திருக்குர்ஆன் சொல்கிறது. அது மிக பிரபலமானது.

بلعم بن باعوراء 

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِيَ آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ * وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَـكِنَّهُ أَخْلَدَ إِلَى الأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ذَّلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ" (الأعراف: 175 ـ 176).

قال ابن عباس وابن مسعود ومجاهد رحمهم الله : نزلت هذه الآية في بلعم بن باعوراء ، وذلك لأن موسى - عليه السلام - قصد بلده الذي هو فيه ، وغزا أهله وكانوا كفارا ، فطلبوا منه أن يدعو على موسى - عليه السلام - وقومه ، وكان مجاب الدعوة ، وعنده اسم الله الأعظم ، فامتنع منه ، فما زالوا يطلبونه منه حتى دعا عليه فاستجيب له ، ووقع موسى وبنو إسرائيل في التيه بدعائه ، فقال موسى : يا رب بأي ذنب وقعنا في التيه ؟ فقال : بدعاء بلعم . فقال : كما سمعت دعاءه علي ، فاسمع دعائي عليه ، ثم دعا موسى عليه أن ينزع منه اسم الله الأعظم والإيمان ، فسلخه الله مما كان عليه ونزع منه المعرفة . فخرجت من صدره كحمامة بيضاء ، فهذه قصته . ويقال أيضا : إنه كان نبيا من أنبياء الله ، فلما دعا عليه موسى انتزع الله منه الإيمان وصار كافرا ) التفسير الكبير(

பல்அம் பின் பாஊரா எனும் பெரு மனிதன் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு மூஸா ஆலை அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்தான் அதன் காரணமாக அவனது அந்தஸ்து அனைத்தையும் இழந்தான். அந்த அறிவாளி கடைசியில் நாயை போல நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலைபவன் என்று குர் ஆன் வர்ணித்தது.

இந்த எச்சரிக்கை கடுமையாக இருந்தாலும் இன்றுள்ள சூழ்நிலையில் விலையாட்டு மோகத்தில் அனைத்தையும் மறந்து விட்டு விளையாட்டில் மட்டுமே மனம் லயித்து கிடக்கிற போது அதில் இப்படியும் மரியாதை கெட்டுப் போகிற ஆபத்து இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே இதை இங்கு குறிப்பிடுகிறோம்.

அதே நேரத்தில் விளையாட்டில் ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் கவனமாக இருப்போமானால், அதற்காக மனோவிருப்பத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்போமானால் அல்லாஹ் நிச்சயமாக அதற்கு பெரும் கூலியை தருவான்.

திருக்குர்ஆன் உறுதியளிக்கிறது.

"وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى * فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى" (النازعات: 40 ـ 41

இறைத்தூதர் சுலைமான் அலை அவர்களுக்கு குதிரையில் ஆர்வம் அதிகம்.

அது சாமாணிய மக்களுக்கே இயல்பானது என்கிறது குர் ஆன்.

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاء وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ" (آل عمران، آية: 14).

 அரசர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?

 அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆர்வத்தில் ஒரு மாலை தொழுகை அவருக்கு தவறிப்போக இருந்தது.  சட்டென்று சுதாகரித்துக் கொண்டார். தொழுது முடித்த பிறகு தனது கவனத்தை திருப்பி அனைத்து மதிப்புமிகு குதிரைகளையும் கொன்றார்.

திருக்குர் ஆன் இந்த நிகழ்வை கூறுகிறது.

إِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصَّافِنَاتُ الْجِيَادُ ۝ فَقَالَ إِنِّي أَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّي حَتَّى تَوَارَتْ بِالْحِجَابِ ۝ رُدُّوهَا عَلَيَّ فَطَفِقَ مَسْحًا بِالسُّوقِ وَالْأَعْنَاقِ [سورة ص:30-33].

 

الصَّافِنَاتُ الْجِيَادُ  என்றால் மூன்று கால்களை ஊன்றியும் ஒரு காலை ஊன்றாமல் பாயவதற்கு தயாராக இருக்கிற உரமான குதிரைகள் என்று பொருள் )

 

ஆ.க. தர்ஜமா)

(யுத்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:) ‘‘நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரை, அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேனே (என்று மனம் வருந்தி), அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்'' எனக் கூறி, அவற்றின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார்.

 பிறகு அவற்றை கொன்றார்.

 இதற்காக அவருக்கு அல்லாஹ் காற்றை கட்டுப்படுத்திக் கொடுத்தான்.

சுலைமான் நபியின் காற்றுவெளிப்பயணம் சாமாணியமானதல்ல.

காற்று அவருக்கு பெருந்திரளாக கூடும். அதில் அவரது இருக்கை வைக்கப்படும். அவரது பரிவாரங்கள் அனைத்தும் ஏற்றப்படும். அனைத்தையும் சுமந்து கொண்டு வானத்திற்கு கீழே அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு மிக விரைவாக அந்த காற்று அவரை கொண்டு சென்று விடும்.

இந்த தகவல்கள் அனைத்தும் தப்ஸீர்களில் இருக்கின்றன.  

أخرج ابن أبي حاتم عن عبد الله بن عبيد بن عمير قال : كان سليمان يأمر الريح فتجتمع كالطود العظيم، ثم يأمر بفراشه فيوضع على أعلى مكان منها، ثم يدعو بفرس من ذوات الأجنحة فترتفع حتى تصعد على فراشه، ثم يأمر الريح فترتفع به كل شرف دون السماء، فهو مطأطئ رأسه، ما يلتفت يمينا ولا شمالا، تعظيما لله وشكرا؛ لما يعلم من صغر ما هو فيه في ملك الله، تضعه الريح حيث يشاء أن تضعه .

பரிவாரங்கள் அனைத்திற்கும் பறவைகள் நிழல் கொடுக்கும்.

وأخرج ابن أبي شيبة ، والحاكم وصححه ، عن ابن عباس قال : كان سليمان عليه السلام يوضع له ستمائة ألف كرسي، ثم يجيء أشراف الناس فيجلسون مما يليه، ثم يجيء أشراف الجن فيجلسون مما يلي أشراف الإنس ثم يدعو الطير فتظلهم، ثم يدعو الريح فتحملهم، فيسير مسيرة شهر في الغداة الواحدة 

காற்றை வசப்படுத்திக் கொடுத்த்தில் அது பயனத்திற்கு பயன்பட்ட்து என்ற செய்தி மட்டும் கிடையாது. அதற்கு மேலே இன்றைய நவீன உலகம் வியக்கிற ஒரு செய்தி இருக்கிறது.

இமாம் சுயூத்தியின் துரருல் மன்ஸூர் தப்ஸீரில் ஒரு செய்தி வருகிறது.

அல்லாஹ் சுலைமான அலை அவர்களுக்கு காற்றின் குரல் அலைவரிசையையும் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். அதனால் மக்கள் பேசும் ரகசியங்களை காற்று அவரிடம் கொண்டு வந்து சேர்த்து விடும்

وأخرج الحاكم عن محمد بن كعب : فأوحى الله إليه أني زدت في ملكك أن لا يتكلم أحد بشيء إلا جاءت الريح فأخبرتك 

நம்முடைய ஆர்வம், அல்லது ஆசாபாசங்களை கவனிப்பதில் கடமைகளை மறந்து விடாமல் இருக்கும் போது அல்லாஹ் அதற்கு பெருங்க் கூலியை தருகிறான். அது நாம் கற்பனையும் செய்து பார்த்திராரத்தாக அமையும்.

உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடை பெறுகிற நாட்களில் நாம் இந்த தத்துவத்தை நினைவில் வைப்போம்.

ஒரு அணி வெற்றி பெறுகிறதா என்று அறியும் ஆர்வத்தில்

ஒரு சதம் அடிக்கப்படுகிறதா என்பதை காண

அல்லது ஒரு விக்கட் விழுவதை பார்க்கும் மும்முரத்தில்  

·         ஒரு தொழுகையை தவற விடுவது,

·         பெற்றோரின் பேச்சுக்கு கட்டுப்பட மறுப்பது

·         பள்ளி கல்லூரிகளை புறக்கணிப்பது

·         விருந்தினர்களை ஒதுக்குவது

·         அலுவலகங்களில் கடமைகளை ஆற்றத் தவறுவது

என எந்தக் தவறையும் செய்துவிட வேண்டாம்.

இளைஞர்கள் குறிப்பாக இதில் கவனம் செலுத்தட்டும்.

இன்னொன்றும் கவனிக்கத்தக்கது.

ஒது ஒரு விளையாட்டு அந்த அளவில் அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு பிரியமான அணி வெற்றி பெற்றாலோ தோற்றுப் போனோலோ நீங்கள் அதிக உணர்ச்சி வசப்படாதீர்கள்!

சண்டையிட்டுக் கொல்லாதீர்கள்.

எதிரெதிராக மோதிக் கொண்ட அணிகள் அன்று மாலை ஒரு பணக்காரன் கொடுக்கிற விருந்தில் ஒன்றாக சேர்ந்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். கிளப்பில் நடனமாடிக் கொண்டிருப்பார்கள்.

ரசிகர்கள் சண்டையிட்டு தலையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதை விட அறிவீனமான செயல் வேறு இருக்க முடியாது.

ஒரு முறை வென்றவர்கள் எப்போதும் வெல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது.

நபி ஸ்ல்) அவர்களின் கழ்பா என்ற ஒட்டகை எப்போதும் பந்தயத்தில் முதலிடம் பிடிக்க கூடியது. ஒரு முறை அது பின்தங்கிவிட்ட்து.

சஹாபாக்களில் சிலர் அதை பெரிதாக நினைத்தார்கள் . அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்தார்கள்.

عَنْ أَنَسٍ قَالَ: كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ ﷺ تُسَمَّى: العَضْبَاءَ، وَكَانَتْ لا تُسْبَقُ، فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ لَهُ فَسَبَقَهَا، فَاشْتَدَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ، وَقَالُوا: سُبِقَتِ العَضْبَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لا يَرْفَعَ شَيْئًا مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ.

 இளைஞர்களுக்கு குறிப்பாக ஒரு வேண்டு கோள்

 நீங்கள் விரும்பும் அணீ வெற்றி பெற்றது அல்லது தோற்று விட்ட்து என்பதை பற்றியை சந்தோசத்தையோ கவலையையோ அதிகப்படியாக வெளிப்படுத்தி தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

 இந்த உலகப் போட்டியில் பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு அணிகளும் இங்கு வந்து மோதுகின்றன.

 இது மத்திய அரசு அனுமதித்து நடக்கிற விளையாட்டுப் போட்டி

 ஆயினும் சில அணிகள் மோதுகிற போது அதை வைத்து பிரச்சனை செய்து இங்குள்ள முஸ்லிம்களுக்கு தொல்லை தருவதற்கு அரசின் ஆதரவு பெற்ற அமைப்புக்கள் காத்திருக்கின்றன,

கடந்த காலத்தில் சில பல்கலை கழக வளாகங்களில் பாக்கிஸ்தான் அணி வென்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பல மாணவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்.

திட்டமிட்டு செய்யப்படும் இது போன்ற அவதூறுகளுக்கு துன்புறுத்தல்களுக்கும் சமூக பதற்றத்திற்கும் ஒரு விளையாடு காரணமாகி விடக் கூடாது என்பதிலும் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நமது நாட்டில் நடைபெறுகீற உலக கிரிக்கெட் போட்டியை நன்மையான காரியங்களுக்கும் உண்மையான மகிழ்ச்சிக்கும் சரியான திறமை வெளிப்பாட்டிற்கும் எல்லாம் வல்ல இறைவன் காரணமாக்கி வைப்பானாக!  

1 comment:

  1. Anonymous10:40 PM

    அல்ஹம்து லில்லாஹ்
    அருமை

    ReplyDelete