وَقَدْ أَخَذَ مِيثَاقَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٨ الحديد﴾
ரமலானுக்கான ஆயத்தங்களும் திட்டங்களும் சிறப்பாக நடக்கட்டும்.
2025 புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.
இரண்டையும் எப்படி அமைத்துக் கொள்வது என்பதற்கான சில உறுதிமொழிகளை நாம் எடுத்துக்
கொள்வோம்.
உற்சாகம் மிக்க மனிதர்கள் ஆண்டு தொடக்கத்தின் போது புதிய் உறுதி மொழிகளை எடுத்துக் கொள்வார்கள்.
வாழ்க்கையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்வது சிறப்பானது. நமது வாழ்க்க்கயை மரியாதையானதாகவும்
புகழுக்குரியதாகவும் மாற்றக் கூடியது. புதிய உத்வேகத்தை தரக் கூடியது.
இமாம் புகாரி ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் பெருமானாருக்கு விசிறி வீசி,
பெருமானார் மிது ஈக்கள் வந்து உட்காராத்த படி அவர் தடுத்துக் கொண்டிருந்தார். அதற்கான விளக்கத்தை தேடினார். நபி
(ஸல்) அவர்களது பொன்மொழிகளில் ஆதாரப்பூர்வமானவற்றை தொகுப்பது என்று உறுதி எடுத்துக்
கொண்டார். மாஷா அல்லாஹ்..
இலட்சக்கணக்கான ஹதீஸ்களை அவற்றின் அறிவிப்பாளர் தொடரோடு மன்னம் செய்து வைத்திருந்த
பலர் இருந்தனர். ஆனால் அவற்றில் மிக ஆதரமானதை திரட்டி பெருமானாரின் தருவேன் என்ற இமாம்
புகாரியின் உறுதி மொழி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. முஸ்லிம் சமூகத்திற்கு
மகத்தான நன்மையை கொண்டு வந்து சேர்த்தது.
இமாம் புகாரிக்கும் 6 இலட்சம் ஹதீஸ்கள் மனனமாக தெரியும். அவற்றிலிருந்து 7593
ஹதீஸ்களை மட்டும் தேடி எடுப்பது என்பது சாமாணிய விவகாரமா சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மிக நுனுக்கமான விதிகளை கடைபிடித்து அவர் தனது உறுதி மொழியை நிறைவேற்றினார். அதற்கு
அவருக்கு 16 ஆண்டுகள் பிடித்தது.
وقد جمع فيه البخاري حوالي 7593 حديثاً حسب عدّ محمد فؤاد عبد الباقي،[ اختارها الإمام البخاري من بين ستمائة ألف حديث
يحفظه حيث إنه كان مدقِّقاً في قبول الرواية، واشترط شروطاً خاصة دقيقة في
رواية راوي الحديث
யூசுப் அல் பன்னூரி, இமாம் புகாரிக்கு கிடைத்த பெருமையை அடக்க முடியாத வார்த்தைகளில்
விவரிக்கிறார்.
“ஒரு சூரியனைப் போல அவர் பிரகாசிக்கிறார். மக்களது அங்கீகாரத்தை பெற்றதில் புகழின்
உச்சத்தில் அவர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவரது நூலுக்கு கிடைத்த அங்கீகாரத்திற்குக்
சான்றாக அதை சார்ந்து பன்னூற்றுக்கணக்கான நூற்கள் வெளிவந்து விட்டன, இன்றும் வெளியாகிக்
கொண்டிருக்கின்றன.
இன்றைய வழக்கிற்கு இன்னொரு உதாரணத்தை சொல்லலாம்.
1985 ம் ஆண்டு அமெரிக்காவில் வசித்த ஒரு இளைஞர் தான் உருவாக்கும் ஒரு தயாரிப்பு
அடுத்த 16 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று உறுதி
மொழி எடுத்து செயல்பட்டார்.
அது இப்போது உலகம் முழுவதிலும் ஏன் ஒவ்வொரு மனிதருடைய கைகளிலும் இருக்கிறது.
அவர் தான் பில்கேட்ஸ் – அவர் உருவாக்கிய தயாரிப்புதான் இன்று உலகம் முழுவதிலும்
இருக்கிற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகீற விண்டேஸ் என்ற செயலி.
பில் கேட்ஸ் இப்போது உலகின் பெரும் பணக்காரர் ஆகியிருக்கிறார். 12 ஆண்டுகள் உலகின் முதல் செல்வந்தராக அவர் இருந்தார்.
இதற்கு அப்பாலும் அவரது செல்வாக்கு பிரம்மாண்டமானது.
உறுதி மொழிகள் உன்னதமானவை வாழ்க்கையை புதிய திசைக்கு கொண்டு சேர்ப்பவை.
திருக்குர் ஆன் பல இடத்தில் நாம் உறுதி மொழியை பெற்றோம் என்ற சொல்லைப் பயன்படுத்தி
இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Ø وَلَقَدْ عَهِدْنَا إِلَىٰ آدَمَ مِن قَبْلُ فَنَسِيَ وَلَمْ
نَجِدْ لَهُ عَزْمًا
Ø وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا
بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
Ø وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ ﴿٨١ آل عمران﴾
Ø وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ ﴿١٨٧
آل عمران﴾
நமது கல்வியில், நமது தொழிலில் நமது படைப்புக்களில், நமது சமூக செயல்பாடுகளில் நாம் அடுத்து என்ன செய்யலாம் என்ற உறுதி மொழிகள் நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்க கூடியதும் பெரிய வெற்றிகளை தரக் கூடியதுமாகும்.
இமாம் புகாரியின் வரலாறு சொல்கீற செய்தி என்ன வெனில் அவர் ஒரு சாதனையோடு நின்று விட வில்லை. ஒன்றை தொடர்ந்து மற்றொன்று என்று கடந்து சென்று கொண்டே இருந்தார்.
எனவே
புதியவர்களும் சாதனையாளர்களும் கூட அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களை பற்றி உறுதி
மொழிகளை எடுத்த்துக் கொள்ள வேண்டும்.
விரைந்து
யூதர்களின் மொழியை கற்க உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பெருமானாருக்கு நெருக்கமானவர்
ஆனார். சமுதாயத்தின் நம்பிக்கை குரியவராகவும் ஆனார்.
உறுதி
மொழி எடுத்துக் கொண்டால் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆனால்
இந்த உணவு சமைக்கும் முறையை கண்டறிந்த காலனெஸ் சாண்டர்ஸ் 1950 ம் ஆண்டுகளில் சுமார்
1100 உணவகங்களுக்கு இதன் மாதிரியை கொண்டு சென்று வாய்ப்புத் தேடியிருக்கிறார். அதன்
பின்னர் அமெரிக்காவின் சால்ட் லேக் என்ற இடத்தில் 1952 ல் முதல் உணவகத்தை தொடங்கினார்.
இன்று இந்தியாவில் மட்டும் சுமார் 500 கிளைகள் அதற்கு இருக்கின்றன.
நான்
ஒரு அன்சாரி நண்பரை துணைக்கு அழைத்தேன். வாருங்கள்
நாம் நபித்தோழர்களிடம் ஹதீஸ்களை கேட்டறிவோம் என்று கூறினேன். மிகச் சிறிய வயதுக் காரராக
இருந்த அவரைப் பார்த்து அவருடைய நண்பர் உன்னிடமிருந்தெல்லாம் அறிவை கற்க மக்கள் வருவார்கள்
என்று நினைக்கிறாயா ஏகடியமாக சொல்லி வர மறுத்து விட்டார். ஆனால் உறுதி மொழி எடுத்துக்
கொண்ட இப்னு அப்பாஸ் ரலி சும்மா இருக்கவில்லை. ஒரு நபி மொழியை வைத்திருக்கிற நபித்தோழரி
வீட்டு வாசலில் அவர் வரும் வரை காத்திருந்தார். கதவை தட்டவில்லை. வெயிலையும் பாலை வனத்தின்
சுடு மணல் தூசிகளையும் பொருட்படுத்தாமல அவர்களது வீட்டு வாசலில் படுத்துக் கொண்டார்.
அவர்கள் வெளியே வந்து பார்த்து பெருமானாரின் குடும்பத்துக் கொளுந்து தன் வீட்டு வாசலில்
படுத்திருப்பதை கண்டு பதறி விசாரிக்கிற போது நான் உங்களை தேடி வருவது தான் நியாயம்
என்று சொல்லி அவர்களிடமிருந்து கல்வி கற்றார். அந்திஅ முயற்சி தான் பின்னர் திருவினையானது.
அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் ரலி உலகம் இன்று வரை போற்றும் பேர் அறிஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
فيقول: «لما قُبِضَ رسول الله قلت لرجل من الأنصار:
هلم فلنسأل أصحاب رسول الله
فإنهم اليوم كثير. فقال: "يا عجبا لك يا ابن عباس! أترى الناس يفتقرون إليك
وفي الناس من أصحاب رسول الله من فيهم؟"، فترك ذلك وأقبلت أنا أسأل أصحاب
رسول الله، فإن كان ليبلغني الحديث عن الرجل فآتي بابه وهو قائل فأتوسد ردائي على
بابه يسفي الريح عليّ من التراب، فيخرج فيراني فيقول: "يا ابن عم رسول الله
ما جاء بك؟ هلا أرسلت إليّ فآتيك؟" فأقول: "لا! أنا أحق أن آتيك."
فأساله عن الحديث. فعاش هذا الرجل الأنصاري حتى رآني وقد اجتمع حولي الناس
يسألوني، فيقول: "هذا الفتى كان أعقل مني"
إِن
تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا ۖ وَإِن تَظَاهَرَا عَلَيْهِ
فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ ۖ
وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَٰلِكَ ظَهِيرٌ
என்ற
வசனத்தில் கூறுகிறான். அது யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல்ல ஒரு வருடமாக காத்திருந்து
விளக்கம் கேட்டார் இப்னு அப்பாஸ்
ஒரு பெண்மணியின் பேட்டி சமீபத்திய பதிரிகையில் வந்திருக்கிறது. கடந்த ஆண்டு
உடலை மெலிய வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன். அப்போது 84 கிலே இருந்தேன். ஆனால்
இந்த ஆண்டு 96 ஆகியிருக்கிறேன்.
உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்த முயற்சிக்காதவர்களை நஷ்டவாளிகள்
என்கிறது திருக்குர் ஆன்
الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۚ أُولَـٰئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿٢٧
البقرة﴾
உயர்ந்த உறுதி மொழிகள்ள எடுத்துக் கொண்டு அதற்கேற்ப செயல்பட முயற்சித்தால் அல்லாஹ்
வெற்றியை தருவான்.
அந்த திட்டம் எவ்வளவு பெரிதாக இருந்து நாம் எவ்வளவு பலவீனமாக
இருந்தாலும் சரி.
அபூஹுரைரா ரலி அவர்களது தாயார் அவருடன் மதீனாவிற்கு வந்து விட்டார். ஆனால் இஸ்லாமை
தழுவ வில்லை. அவரது மனதை மாற்ற அவர் எவ்வளவோ முயற்சித்தார் பயனளிக்கவில்லை. ஒரு தடவை மனம் வருந்தி பெருமானாரிடம் இதைப்பற்றி
முறையிட்டார்.
பெருமானார்
(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள் அவர் முஸ்லிமாக ஆனார்.
ஸஹீஹ்
முஸ்லிமில் இந்த வரலாறு வருகிறது
حدثني أبو هريرة، قال: كنت أدعو أمي إلى الإسلام وهي
مشركة، فدعوتها يومًا فأسمعتني في رسول الله -صلى الله عليه وسلم- ما أكره، فأتيت
رسول الله -صلى الله عليه وسلم- وأنا أبكي، قلت: يا رسول الله، إني كنت أدعو أمي
إلى الإسلام فتأبى علي، فدعوتها اليوم فأسمعتني فيك ما أكره، فادع الله أن يهدي أم
أبي هريرة. فقال رسول الله -صلى الله عليه وسلم-: «اللهم اهد أم أبي هريرة».
فخرجتُ مستبشرًا بدعوة نبي الله -صلى الله عليه وسلم-، فلما جئت فصرت إلى الباب،
فإذا هو مجاف، فسمعت أمي خشف قدمي، فقالت: مكانك يا أبا هريرة. وسمعت خضخضة الماء،
قال: فاغتسلتْ ولبستْ درعها وعجلتْ عن خمارها، ففتحت الباب، ثم قالت: يا أبا
هريرة، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله. قال: فرجعت إلى
رسول الله -صلى الله عليه وسلم-، فأتيته وأنا أبكي من الفرح، قال: قلت: يا رسول
الله، أبشر قد استجاب الله دعوتك وهدى أم أبي هريرة. فحمد الله وأثنى عليه وقال
خيرًا، قال: قلت: يا رسول الله، ادع الله أن يحببني أنا وأمي إلى عباده المؤمنين،
ويحببهم إلينا. قال: فقال رسول الله -صلى الله عليه وسلم-: «اللهم حبب عبيدك هذا
-يعني أبا هريرة- وأمه إلى عبادك المؤمنين، وحبب إليهم المؤمنين». فما خلق مؤمن
يسمع بي ولا يراني إلا أحبني
தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகப்பெரிய ஏழையாக இருந்த அபூஹுரைரா ரலி அவர்கள்
உன்னதமான தனது உறுதிப்பாட்டினாலும் முயற்சியினாலும் முஸ்லிம் உம்மத்திற்கு மகத்தான
செல்வங்களை வழங்கினார். இன்று அமீரூல் மிஃமினீன் பில் ஹதீஸ் ஆக திகழ்கிறார்.
நாம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் நல்ல இலக்கோடு சாத்தியப்பட்ட முயற்சியை தொடர்ந்தால்
அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.
இன்னொன்றையும் இங்கு மறக்க கூடாது.
உயர்ந்த இலக்கு, அதை நோக்கி திட்டமிட்ட இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ளும் உறுதி
மிக்க தீர்மானங்கள் நம்மிடம் இருந்தாலும் இதற்கான வசதி வாய்ப்புக்கள் நம்மிடம் இருந்தாலும்
நாம் அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைக்க வேண்டும். அவன் நாடியபடியே எல்லாம் நடக்கும்
என்பதை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும்.
திருக்குர் ஆன் கூறுகிறது.
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ
يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159
அவர் இரு பெரிய இரும்பு அணை கட்டினார். ஆச்சரியமாக
அதன் பிறகு சொன்னார். இந்த சாதனையை எதிரிகளால் வெல்ல முடியாது. ஆனால் என் இறைவன்
நினைத்தால் தகர்த்து விடுவான் என்றார்.
فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ
نَقْبًا (97) قَالَ هَٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي ۖ فَإِذَا
جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ
هَٰذَا مِن
فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا
يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ (40
No comments:
Post a Comment