வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 30, 2025

Fbi அதிகாரி அட்ரின் அத்னான் ஆன கதை

 إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ 

ஷபான் மாதம் பிறந்து விட்டது.

தமிழகம் எங்கும் அரபுக்கல்லூரிகள் - குர்ஆன் மதரஸாக்களில் ஆண்டு விழாو பட்டமளிப்பு விழாو சான்றிதழ வழங்கும் விழாக்கள் வர்சையாக நடை பெறுவதை காண்பீர்கள்.

உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அந்த விழாக்களுக்கு செல்லுங்கள். பட்டம் பெறுவோரை வாழ்த்துங்கள். அல்லாஹ் தீனின் ஞானத்தையும் தேடலையும் நமக்கும் தரட்டும் என்று துஆ செய்யுங்கள்

நமது மார்க்கத்தை அடி நிலையிலும் உச்ச் நிலையிலும் உண்மையில் உயிர்ப்பித்து கொண்டிருப்பது இந்த அரபுக்கல்லூரிகளும் குர்ஆன் மதரஸாக்களும் ஆகும்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! இந்த நிறுவனங்கள் இல்லை என்றால் நமது தீனின் நிலை என்னவா இருக்கும் ? நம்மில் எத்தனை பேருக்கு கலிமா தெரியும் ? எத்தனை பள்ளிவாசல்களில் சரியாக தொழுகை நடக்கும் ? 

மதரஸாக்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தால் நம்மில் ஒவ்வொருவரும் அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முடியுமா என்று ஆசைப்படுவோம். !

நாகர் கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் பஜ்ரு ஜமாத்தை சீக்கிரமே முடித்து விடுகிறார்கள். “இங்கு மதரஸா நேரத்திற்காக பஜ்ரு தொழுகை சீக்கிரமே நடந்து விடும் என்ற அறிவிப்பு அந்த பள்ளிவாசலில் ஒட்டப் பட்டிருந்தது.

காலை ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கிற மதரஸாவுக்காக  8 வேன்கள் வைத்திருக்கிறார்கள்.  அந்த வேன்களுக்கு கூலிக்கு டிரைவர்கள் கிடையாது.  மதரஸா நிர்வாகிகளே வேன்களை முறை வைத்து  ஓட்டிக் கொண்டு போய் மாணவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

சுப்ஹானல்லா! அல்ஹம்துலில்லாஹ்.

என்ன அருமையான சேவை!

மதரஸாக்களின் மரியாதை தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி நடக்க முடியும்

இன்று நாம் பள்ளிக்கல்விக்கு தாராள முக்கியத்துவம் கொடுக்கிறோம். தப்பில்லை. எந்த கல்வியும் நம்மை உயர்த்தும். பண்படுத்தம்.

ஆனால் ஒரு முஸ்லிமாக மார்க்க கல்விக்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்க வேண்டியது நமது அடிப்படை கடமையாகும்.

நமது நபி (ஸல்) அவர்கள் கூறிய சொற்களில் மிகப் பிரபலமான சொல்!

طلب ‏العلم فريضة على كل مسلم ومسلمة

இந்த நபி மொழி பொதுவாக கல்வி என்று சொன்னாலும். இதன் கருத்து   

لاسلامه  

அதாவது இஸ்லாமிய வாழ்க்கைகான கல்வியை கற்பது கடமை என்பதே இதன் பொருளாகும் என் இதன் على كل مسلم ومسلمة என்ற சொற் கோவையை காட்டி விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து மதரஸா கல்விதான் இஸ்லாமிய வாழ்க்கையை உயிப்பிக்கிறது என்ற தத்துவத்தை நாம் உணரலாம். அதனால் தான் பள்ளிவாசல் தோறும் மதரஸாக்களை உயிர்ப்பிக்கும் வழக்கத்தை நம்முடைய முன்னேர்கள் தவறாமல் கடைபிடித்தார்கள்.

நம்முடைய மாநிலத்தின் தலை நகருக்கு பிரபலமான பெயர் மதராஸ். சென்னையில் நிறைய மதரஸாக்கள் இருந்த காரணத்தால் மதாரிஸ் என்று அழைக்கப் பட்டு வந்தது. அதுவே மதராஸ் ஆகிவிட்டது, மதரஸாக்களின் பட்டணம் தான் மதரஸா பட்டனமாக ஆகியிருந்த்து.

அருமையானவர்களே!

குர் ஆனுடைய அறிவு நம்மிடம் இருக்கும் எனில் அது வே பெரிய செல்வம்.

உண்மையில் இந்த மரியாதையை நாம் சரியாக உணர்ந்து கொண்டால் மதரஸா கல்வியின் மதிப்பை நாம் குறைத்து மதிப்பிட மாட்டோம்

அதிகாரம் கேட்டு வந்தவர் குர் ஆன் போதும் என்றார்

உமர் ரலி அவர்களின் ஒரு மனிதர் வந்து அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அதிகாரத்தில் எனக்கு கொஞ்சம் கொடுங்கள். என்னையும் ஒரு அதிகாரியாக நியமியுங்கள் என்றார்.

உங்களுக்கு குர் ஆன் ஓத தெரியுமா என்று உமர் ரலி கேட்டார்கள். அவர் தெரியாது. என்றார். குர் ஓத தெரியாதவரகளுக்கு நான் பதவியளிப்பதில்லை.  நீங்கள் குர்ஆனை ஓதி விட்டு வாருங்கள் என்றார் உமர் ரலி .

அவர் குர் ஆன் ஓதச் சென்றார்  நீண்ட நாட்களாகியும் அவர் திரும்ப வரவில்லை

ஒரு நாள் அவரை சந்தித்த உமர் ரலி அவர்கள் நீங்கள் என்ன வெறுத்து விட்டீர்களா என்று கேட்டார்கள். அதற்கவர் உங்களையா வெறுக்க முடியும் என்று சொல்லி விட்டு அடுத்துச் சென்ன வார்த்தைகள்

அற்புதமானவை ஆச்சரியகரமானவை

நான் க்குர்ஆனை கற்றுக் கொண்டேன். அது உமரிடமும் அவரது வீட்டு வாசலுக்கும் வருவதிலிருந்து என்னை தேவையற்றவனாக்கி விட்டது என்றார்.

أتى رجلٌ عمرَ رضي الله عنه فقال:أولني مما أولاك الله،

فقال: أتقرأ القرآن؟ قال: لا،

قال: إنا لا نولي من لا يقرأ القرآن، فانصرف الرجل واجتهد حتى تعلم القرآن رجاء أن يعود إلى عمر فيوليه،فلما تعلم القرآن تخلّف عن عمر، فرآه ذات يوم فقال: يا هذا! أهجرتنا؟

فقال: يا أمير المؤمنين! لست ممن يهجر؟

ولكني تعلمت القرآن، فأغناني الله عن عمر وعن باب عمر، قال: أي آية أغنتك؟

قال: قوله تعالى: ﴿ومن يتق الله يجعل له مخرجا﴾﴿ويرزقه من حيث لا يحتسب﴾.

 

என்னே சத்தியமான செய்தி!

குர்ஆனை வைத்திருப்போர் பெரும் செல்வந்தர்கள். பெரிய அதிகாரிகளை விடச் சிறந்தவர்கள் ஆவார்கள்.

எனவே மதரஸாக் கல்வி நம் தனிப்பட்ட வாழ்கையையும் உயர்த்தும்சமூகத்தின் மரியாதையையும் உயர்த்தும்.

குர் ஆனிய கல்வியின் மாண்பை உணர்ந்தவர்கள் அதன் பிறகு வேறு எதையும் பெரிதாக கருத மாட்டார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம் சமீபத்தில் நடந்திருக்கிறது.

யூடியூபில் பிரபலமாக இருக்கிற ஒரு வீடியோ விரிவாக பேசுகிறது. 

அமெரிக்காவில் அட்ரின் என்ற இளைஞர் சர்ச்சுகளில் சேவை செய்து கொண்டிருந்தார். அவருக்கு அது போர் அடித்திருக்கிறது.

அட்ரின் கூறுகிறா

படிக்கிற் காலத்தில் புதிதாக சர்ச்சுக்கு பொறுப்பேற்ற  ஒரு பாதிரியார் ஆண்டாண்டுகளாக நடைபெற்று வந்த  பிரார்த்தனையின் நடைமுறையை மாற்றினார். எல்லோரும் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டனர். எனக்கு  ஒரு மனிதர் எப்படி கால காலமாக செய்து வந்த நடைமுறையை மாற்ற முடியும் என்று நான் கேள்வியை எழுப்பியது. .

அதன் பிறகு ஒரு சரியான இறைத்தொடர்பு எனக்கு தேவையாக இருந்தது.

நான் சர்ச் பணியை விட்டு விட்டு அமெரிக்காவின் புலான்ய்வு நிறுவனமாக எப் பி யில் சேர்ந்து விட விரும்பினேன்.

எனக்கு தெரிந்த ஒருவர் அதில் பணியில் இருந்தார். அவரிடம் எப்படியாவது நான் எப் பி ஐயில் பணியில் சேர்ந்து விட வேண்டும் என்ன செய்வது என்று கேட்டேன். அவர் கூறினார். எப் பி ஐயில் பணியில் சேர நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். அதனால் வாய்ப்புக் குறைவு, அரபி பார்ஸி படித்தவர்களுக்க்கு மட்டும் தான் இப்போதைக்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

அதன் பிறகு அமெரிக்காவின் New Hampshireபகுதியில் இருக்கிற Dartmouth college கல்லூர்யில் அரபு பயில நான் சேர்ந்தேன்.

படிப்பின் ஒரு பகுதியாக அரபு கலாச்சாரத்தைப் பற்றியை islam empire of faith என்ற  ஒரு டாகுமெண்டிரியை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அதில் முதல் முறையாக அதான் எனும்பாங்கை நான் கேட்டேன். அந்த ஓசையும் வார்த்தைகளும்  .என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது.

அதன் பிறகு கல்லூரியில் இருந்த முஸ்லிம் ஸ்டூடண்ட் அசோசியேசன் அறைக்கு சென்றேன். அங்கிருந்த தொழுகை பற்றிய புத்தகத்தை படித்தேன். குர் ஆனை படித்தேன்.

ஒரு சரியான இறைத்தொடர்பு வேண்டும் என நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த்தற்கான தீர்வாக அது பட்டது.

இஸ்லான் ஒரு சரியான மார்க்கமாக எனக்கு பட்டது. .

நான் முஸ்லிமாகிற போது நான் கிருத்துவத்தை விட வில்லை. சிறந்த கிருத்துவனாக வாழ்வதாக உணர்ந்தேன்.

It was a choice to b a better Christian 

புத்தம் கிருத்துவம் யூதம்  போன்ற மற்ற மதங்கள் மனிதர்களின் பெயர் களை சுமந்திருந்தன.  முஸ்லிம் என்பது இறைவனுக்கு கட்டுப்படுவதைச் சார்ந்து இருந்தது.

குர் ஆனை படித்து பார்த்தேன் .

எனவே நான் இஸ்லாமை தழுவினேன்.

அட்ரின் என்ற பெயரை  அட்னான் என்று மாற்றினேன்.

தொடர்ந்து எப் பி யில் சேருவதற்கான எனது படிப்பை நிறைவு செய்தேன். நீ பணியில் சேருவதில் பிரச்சனைகள் இருக்க கூடும் என்றார்கள். அப்படியே  இருந்தது. எனினும் எனது தேர்வுகள் அன்னத்திலும் வென்று எப் பி ஐயில் பணியில் சேர்ந்தேன்.

நான் இதுவரை ஆசைப்பட்ட பணியில் சேர்ந்த போதும் இப்போது இடையில் நான் படித்த குர் ஆனின் பக்கமே என்னுடைய கவனம் இருந்தது.

அதனால் வேலையை ராஜினாமா செய்து விட்டு, எங்களது பகுதி பள்ளிவாசலில் இமாமாகவும் குர்ஆன் ஓதிக் கொடுப்பவராகவும் இப்போது பணியாற்று கிறேன் என்று அட்ரின் என்ற அத்னான் கூறுகிற வீடுயோ இப்போதும் யூடியூபில் இருக்கிறது. 

குர் ஆனின் மகிமை அதை சரியாக கற்றுக் கொண்டவர்களை அது மற்றவை அனைத்தையும் விட்டு விட்டு தன்னளவில் ஈடுபாடு காட்ட வைத்து விடுகிறது.

இது அமெரிக்கா போன்ற மத தெளிவற்ற நாடுகளில் மிகச் சிற்ந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அத்னான் தொடர்ந்து சொல்கிறார்;

எங்களது பாட்டி எங்களது குடும்பத்திற்கு ஒரு விருந்து வைத்தார். அதில் குடும்பத்தினர் எல்லோரும் இருந்தனர். நான் விருந்துக்கு இடையில் தொழுவதற்காக எழுந்து மாடிக்கு சென்று வந்த்தை அவர் கவனித்தார். அடுத்த முறை அவரிடம் நான் சென்ற போதுநீ மாடிக்கு சென்று காரியத்தை நானும் செய்ய விரும்புகிறேன் என்றார். நான் சரி என்றேன். என்னுடன் சேர்ந்து அவர் தொழுதார்.

அடுத்த முறை அவர் இஸ்லாமை ஏற்றுக் கலிமா சொன்னார்.

இது இஸ்லாமின் பலம் . அதன் வேர்கள் எங்கும் நீண்டு விடும்.

ஒரு எப் பி அதிகாரி இப்போது மதரஸாவில் உஸ்தாதாக மனம் விரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது மதரஸா கல்வியின் மரியாதையை நமக்கு உணர்த்து கின்றன

அத்னானின் முழு பேட்டியை https://www.youtube.com/watch?v=GEEZTI6deOA என்ற இணைப்பில் காணலாம். அல்லது I Gave up The FBI For Islam என்று யூடியூபில் தேடலாம்.

 

நமக்கு இமாம்களாக கிடைக்கும் பலரையும் பல வருட அர்ப்பணிப்புகளுக்கு பிறகு நமக்கு தருபவை அரபுக்கல்லூரிகள் ஆகும்.

இந்த கல்லூரிகளின் பணி சாமாணியமானது அல்ல.

சமூகத்திற்கு பயன்படுகிற இமாம்களை ஆசிரியர்களை அவர்கள் தயார் செய்து அனுப்புகிறார்கள்.

அதிலும் குறிப்பாக அர்ப்பணிப்பு உணர்வோடு அனுப்பி வைக்கிறார்கள்.

இன்றும் மிக குறைந்த சம்பளத்திற்கு ஆலிம்கள் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறார்கள். சம்பாதித்துக் கொள்வதற்கு  ஒரு மாற்று திட்டம் அவர்களுக்கு காட்டப்ப்பட்டிருக்குமானால் நிச்சயம் அவர்கள் வேறு வேலைகளுக்கு சென்றிருப்பார்கள். ஆனால் அரபுக்கல்லூரிகளின் நான்கு சுவர்களுக்குள் பணியாற்றுகிற ஆசிரியர்கள் தம் மாணவர்களை தீனுக்காகவும் சமுதாயத்திற்காக அர்ப்பணிப்போடு பங்காற்ற வேண்டும் என்பதை பல வகையிலும் தொடர்ந்து வலியுறுத்தி அந்த பக்குவத்திற்கு தமது மாணவர்களை கொண்டு வந்திருப்பார்கள்.

எங்களுடைய் உஸ்தாத் மர்ஹூம் பி எஸ் பி ஜைனுல் ஆபிதீன் ஹழ்ரத் மாணவர்களிடம் அடிக்கடி சொல்வார்கள். உங்களுக்கு சமுதாயம் 7 வருடம் சாப்பாடு போட்டிருக்கிறது. நீங்கள் 7 வருடங்களாவது சமுதாயத்திற்காக  வேலை செய்ய வேண்டும்.

எங்களுடைய் உஸ்தாத் மர்ஹும் கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் சொல்வார்கள். நீ வேலைக்கு சேருகிற போது எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காதே! எனக்கு இவ்வளவு தேவை இருக்கிறது என்று சொல் என்பார்கள்.

கிடைக்கிற சம்பளத்தைப் பொருந்திக் கொள்கிற ஒரு பக்குவத்தை உண்டாக்கி அவர்களை மார்க்கப் பணிக்கு அனுப்பவதில் அரபுக்கல்லூரிகள் மிகம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல் இமாமுக்கு இப்போது 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள். அந்த இமாம் சொல்கிறார். இங்கு இமாமாக பணியாற்றிய எனது தகப்பனார் என்ன குறைவான சம்பளம் கொடுத்தாலும் நீ இங்கே இமாமத் செய் என்று சொல்லிவிட்டார். அதனால் 2 ஆயிரம் ரூபாயுக்கு பணியில் சேர்ந்தேன் என்று கூறுகிறார். இப்போதும் அவர் இளைஞர் தான்.

நம் கண் முன்னே உலாவுகிற ஆலிம்களை பார்க்கிற போது அவர்களிடமிருந்து பயன்பெறுகிற போது அவர்களை உருவாக்கிய அரபுக்கல்லூரிகளை எண்ணிப்பார்க்கிற கடமை நமக்கு இருக்கிறது. அவற்றை மதிக்கவும் உதவிகள் செய்யவுமான கடமையும் நமக்கு இருக்கிறது.

தற்காலத்தில் சில அரபுக்கல்லூரிகளில் பல்கலை கழக படிப்புகளோடு ஆலிம்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் படிக்கிற காலத்திலேயே வேறு தொழில்களுக்கான வழிகள் காட்டப்படுகின்றன. அங்கிருந்து வெளியேறுகிற ஆலிம்களில் சுமார் 70 சதவீதம் பேர் மார்க்கப் பணிக்கு வருவதில்லை. அவர்களது பெற்றோரும் அனுப்புவதில்லை. தாம் பெற்ற கல்வி தமக்கு பயனளித்தால் போதும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த சிந்தனையிலிருந்து மாறு பட்டு பாரம்பரிய அரபுக்கல்லூரிகள் சமுதாயத்திற்காக உழைப்பவர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு உழைக்கின்றன.

அவற்றின் உழைப்பு அபரிமிதமானது.

மதீனா வாசிகளில் 12 பேர் இஸ்லாமை தழுவியிருந்த போது அம்மக்களுக்கு குர் ஆன் ஓதிக் கொடுக்க  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ் அப் பின் உமைர் ரலி அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர் அங்கு சென்று குர்ஆனை கற்றுக் கொடுத்தார். மதீனா நபி (ஸ்ல) அவர்கள் வருவதற்கு முன்பே முஸ்லிம் நகராக மாறிவிட்டது.

முஸ் அப் ரலி யின் வாரிசுகளாகத்தான் இப்போது அரபுக்கல்லூரிகளிலிருந்து ஆலிம்கள் நாடு நகரெங்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இத்தகை மகத்தான பணிதான் நம் சமூகத்தில் இஸ்லாம் இன்று மலர்ச்சியாக இருப்பதற்கு துணையாக இருக்கிறது.

ரஷ்யாவில் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டு மதரஸாக்கள் மூடப்பட்டு திருக்குர் ஆனின் பிரதிகள் தடை செய்யப் பட்ட போது ஆலிம்கள் வீடுகளின் கீழ் நிலவறைகளை உண்டாக்கி தம் மாணவர்களுக்கு மனப்பாடமாக குர் ஆனை கற்றுக் கொடுத்தனர். அதன் காரணமாக கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பிறகு இஸ்லாம் வெகு எழுச்சியோடு அந்தப் பகுதிகளில் நிலை பெற்று வருகிறது.

நிறைவாக ஒரு ஹதீஸை நினைவூட்டுகிறோம்.

عن عثمان بن عفان رضي الله عنه، عن النبيِّ صلّى الله عليه وسلّم قال: «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرآنَ وَعَلَّمَهُ
 

நான் திருக்குர் ஆனோடு தொடர்பு கொள்வோம். அது நமது வாழ்க்கையை எல்லா நிலையிலும் உயர்த்தி வைக்கும். திருக்குர் ஆனை கற்றுக் கொடுக்கிற மதரஸாக்களை கண்ணியம் செய்வோம் அது நமது சமூகத்தை உயிர்த் துடிப்போடு வாழ வைக்கும்.  

 

   

 

No comments:

Post a Comment