وَأَتِمُّوا
الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ
الْهَدْيِ وَلا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ
அல்லாஹ்வுக்காக
மக்கள் நிறைவேற்றுகிற வணக்கங்களில் ஹஜ்
1.
அதிக செலவு பிடிக்க கூடியது
2.
அதிக உடல் சிரமங்களை தரக்கூடியது.
சூரத்துல்
பகராவின் இந்த 196 வசனம் அப்படி நிறைவேற்றப்படுகிற ஹஜ்ஜை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுமாறு
கூறுகிறது.
இது
இந்த வணக்கத்தில் ஏற்படக் கூடிய புகழ் கவர்ச்சியை கடந்து உள்ளத்தை பரிசுத்தமாக வைத்திருப்பதன்
அவசியத்தை வலியுறுத்துகிறது.
திருக்குர்
ஆனின் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் கவனிக்க தக்க பல செய்திகள் இருப்பதாக விரிவுரையாளர்கள்
கூறுவது உண்டு.
தொழுகையை
பற்றி சொல்லும் போது தொழுங்கள் என்று அல்லாஹ் சொல்வதில்லை மாறாக தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்ற
பொருளில் அகீமூ என்று சொல்வான்.
அது
உணர்த்துகிற செய்தி என்ன வெனில்?
மக்கள்
தொழுது விடுவார்கள். ஆனால் அதில் ஒரு பலவீனத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. தொழுகையை
தொடர்ச்சியாக நிறைவேற்றுவதில் சிலர் கவனம்
செலுத்த மாட்டார்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது தொழுவார்கள். பெருநாள் தொழுகையாளிகளாக
அல்லது வெள்ளிக்கிழமை தொழுகையாளிகளாக மட்டுமே பலர் வாழ்ந்து விட்டு சென்றுவிடுவார்கள்.
அது இஸ்லாமிய வாழ்விற்கு போதுமானது அல்ல; அத்தகைய பல வீனம் தொழுகையில் இருக்க கூடாது
என்பதற்காகவே தொழுகை நிலை நாட்டுங்கள் என்று அல்லாஹ் சொன்னான்.
அதே
போல இந்த ஹஜ் வசனத்தை கவனித்தால் இதில் அதிம்மூ பரிபூரணப் படுத்துங்கள் என்ற ஒரு உத்தரவு
இருக்கிறது.
இது தருகிற கருத்து என்ன வெனில்
மக்கள் பல சந்தர்ப்பத்திலும் ஹஜ்ஜுக்கு போகவேண்டும் என்று
நினைப்பார்கள். ஆனால் அதற்கு முயற்சி செய்யமாட்டாரக்ள். அல்லது ஹஜ்ஜுக்கு செல்வார்கள்
ஆனால் அதன் கடமைகளை முறையாக செய்யாமல் . இது போதும் என்ற அளவில் திரும்பி விடுவார்கள்.
ஹஜ்ஜின் சட்டங்களில் உரிய கவனம் செலுத்தமாட்டார்கள். பயணம் செயதால் போதும் என்ற மனோ
நிலையில் இருப்பார்கள். இத்தகைய போக்கு ஹஜ்ஜின் கூலியை பெற்றுத் தந்து விடாது.
இது ஹஜ்ஜில் ஏற்படக் கூடிய பலவீனம்.
இந்த பலவீனத்தை சுட்டிக் காட் அதை சரி செய்ய வேண்டும்
என்பதற்காக தான் வதற்காக தான் وَأَتِمُّو என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.
ஹஜ் ஒரு பயணம் மட்டுமல்ல. அது ஒரு வணக்கம் . அதற்குரிய வகையில் அதை பரிபூரணப்படுத்த ஒவ்வொரு ஹாஜியும் ஆசைப்படனும் முயற்சி செய்யனும்
ஹஜ் செய்ய நினைத்த ஒருவர்
அதை நிறைவேற்ற முடியாமல் தடுக்கப் பட்டு விட்டால் என்ன செய்வது ? என்பது பற்றியாகும்.
எவ்வளவு
வசதிகள் பெருகி விட்ட காலத்திலும் ஹஜ் ஒரு சிரமமே!
இதனால்
தான் ஹஜ்ஜை ஜிஹாதோடு மார்க்கம் ஒப்பிட்டது
عن الحسين بن علي ـ رضي الله عنه ـ قال:" جاء رجل إلى النبي ـ
صلى الله عليه وسلم ـ فقال إني جبان وإني ضعيف، قال: هلم إلى جهاد لا شوكة فيه، الحج "
.ஜித்தாவில் தரை யிறங்கினால் அங்கிருந்து மலைகளை கடந்து மக்காவிற்கு செல்ல 3 நாட்கள் ஆகும் என்றும் பழைய வரலாறு சொல்கிறது.
என்றாலும்
இப்போதும் கூட ஹஜ்ஜில் எதிர்பாராமால் பல சிரமங்கள் ஏற்பட்டு விடுவதுண்டு
இதில் 1,22,518 பேர் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செய்ய உள்ளார்கள். அவர்களுக்கான பயண ஏற்பாடுகள் சிறப்பாக முடிந்துவிட்டன. அல்ஹம்து லில்லாஹ்.
இந்த தடையும் அசாதாரணமனது. இந்த் எண்ணிக்கையும் அசாதாரணமானது. உலகின் பல நாடுகளில் இருந்து வருகிற மொத்த ஹாஜிகளின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை அதிகமானது.
என்ன ? வெளியுலகில் நாம்
ஹாஜி என்று சொல்லிக் கொள்ள முடியாமல் போகலாம் அவ்வளவு தான்.
அவர் ஹஜ் செய்த போது இந்த ஆந்து டமாகளை சேர்ந்த செருப்பு வியாபாரி
ஷரீப் என்பவரின் ஹஜ் தான் முதன்மையாக அங்கீகரிக்கப்
பட்ட்து என்று அவருக்கு இல்ஹாமின் வழியாக சொல்லப் பட்டது.
ஒரு நாள் என மகன் அழுது கொண்டு வீட்டுக்கு வந்தான். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள்
இறைச்சி சாப்பிடுகிறார்கள். எனக்கு தராமல் துரத்தி விட்டர்கள் என்று அழுதான்
என் பக்கத்து வீட்டுக் கார்ர்களை இந்த நிலையில் விட்டு விட்டு நான் ஹஜ்ஜு செய்ய விரும்ப வில்லை. எனவே ஹஜ்ஜுக்காக வைத்திருந்த பணத்தை அந்த ஏழைகளுக்கு கொடுத்து விட்டேன். அதனால் என்னால் இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வரமுடியவில்லை என்று அவர் கூறினார்
அவ்வாறு தடுக்கப் பட்டோர் துஆ செய்து கொண்டு இன்னும் சிறப்பாக நிறைவேற்ற
காத்திருக்க வேண்டியது தான்
ஆனால்
பல்லாயிரம் பேரின் ஹஜ் கனவை கலைத்தவர்கள் சாமாணியமாக விடப் பட மாட்டாரக்ள் .
ஹஜ்ஜை
தடுப்பவர்களை தான் மிகப் பெரிய அநீதிக்கார்ர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் .
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ
اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ
பாலஸ்தீனத்தை கைப்பற்றி வைத்திருந்த சிலுவை யுத்தக் காரர்கள்
சுமார் 90 வருடம் அதை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
அப்போது எகிப்தின் அரசராக இருந்த சலாஹுத்தீன் அய்யூபி
நோய் படுக்க்கயில் இருந்தார்.
சிலுவைப் படை வீர்ர்கள் ஹஜ்ஜுக்கு செல்வோரை இடை மறித்து இடையூறு செய்கிறார்கள்
என்ற செய்தி அவருக்கு வந்த்து.
கடும் கோபமடைந்த அவர் இறைவா! எனக்கு நிவாரணம் கொடு! நான்
ஹாஜிகளுக்கு இடையூறு செய்கிறவரகளை விரட்டி பைத்துல் முகத்தஸை மீட்கிறேன் என்று சபதம்
செய்தார்.
அல்லாஹ்வின் துணை அவர் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டுக் கொடுத்தார்
.
சிலுவை யுத்தக்காரக்ரள் மோசமான தோல்வியை ச்ந்தித்தார்கள்
ஹஜ்ஜில்
தடை ஏற்படுத்துகிற யாரும் பெரும் அழிவை சந்திப்பார்கள்.
இப்போது
ஏற்பட்டிருக்கிற தடைக்கு யார் காரணம் என்பதை ஆளாளுக்கு மாற்றி சொல்கிறார்கள்.
தற்போதைய பிரச்சனை என்ன ?
ஹஜ்ஜின் பிரதான கடமைகள் நிறைவேறுகிற மினா மற்றும் அரபா டெண்டுகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கு என சவூதி அரசு ஒரு நேரத்தை நிரணயம் செய்திருந்தது.
இதற்கான பணத்தை முன்பு ஹஜ் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் சவூதியில் உள்ள தம்முடைய அக்கவுண்டில் வைத்திருந்து அதை இதற்கான நிறுவங்களுக்கு செலுத்துவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு இந்திய அரசு, ஹஜ் டிரால்வஸ்காரர்கள் அந்த பணத்தை இந்திய ஹஜ் கமிட்டி அக்கவுண்டில் செலுத்த வேண்டும் எனவும் ஜித்தாவில்
உள்ள இந்திய தூதரகம் வழியாக அந்த பணம் சவூதி
நிறுவனத்திற்கு செலுத்தப்படும் என்று கட்டளையிட்டிருந்தது.
இதில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது
உரிய நேரத்திற்குள் சவூதி அரசிற்கு பணம் செலுத்தப்பட வில்லை. அது மினா ஒதுக்கீடு
முடிந்து விட்ட்தாக அறிவித்து விட்டது.
இதற்கு பொறுப்பான மத்திய அமைச்சர் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் உரிய நேரத்தில் பணம்
செலுத்த தவறியது தான் காரணம் என்று கூறியுள்ளார். அதை பதிரிக்க்களும் செய்தி நிறுவனங்களும்
வெளியுலகிற்கு கூறியுள்ளனர்.
இதில் மத்திய அரசின் நடவடிக்கைகளில் என்ன குறை என்பதை இப்போதைக்கு ஹஜ் ஏற்பாட்டாளர்கள்
வாய் திறந்து பேச வில்லை. அரசின் கோபத்தை சம்பாதித்து க் கொள்ள வேண்டாம் என்று மெளனமாக
இருக்கிறார்கள்.
ஆனால் இதில் மத்திய அரசின் குறுக்கீடு இறுப்பதை வெள்ளிடை மலையாக நாம் தெரிந்து
கொள்ள முடியும்.
ஹஜ் ஏற்பாட்டாளர்களின் சுயநலமும், சிலருடைய தில்லு முல்லுகளும் உலகிற்கு தெரியாதது
அல்ல என்றாலும் இத்தனை ஆயிரம் ஹாஜிகளின் ஹஜ் விவகாரத்தில் இப்படி ஒரு மெத்தனத்தை அவர்கள்
வெளிப்படுத்துவார்கள் என்பது எதிர்பார்க்க கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் இதி பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போகிறவர்கள் அவர்கள் தான்.
இப்போதைக்கு முஸ்லிம்களின் இந்த விவகாரத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு
நடந்து கொண்டுள்ளாது என்பதே உண்மை. ஹஜ் கோட்டாவை
தான் குறைத்து விட்ட்தாக காட்டிக் கொள்ளாமல் சவூதி குறைத்து விட்ட்தாக கூறி நாடகமாடுகிறது
என்றே தோன்றுகிறது.
ஹஜ் கோட்டாவை தானே குறைத்தால் இந்திய முஸ்லிம்கள் ஒரு புறமும் சவூதி அரசு மறுபுரமும்
கோபத்திற்குள்ளாகும். அதை தவிர்ப்பதற்கு நிர்வாக ரீதியாக ஒரு வழியை கண்டு பிடித்து
கிட்ட தட்ட மூன்றில் ஒரு முஸ்ல்ம்களை ஹஜ்ஜு செய்ய விடாமல் இந்திய அரசு தடுத்திருக்கிற
என்றே நினைக்க தோன்றுகிறது.
அதற்கு ஹஜ் ஏற்பாட்டாளர்களை பலி கடவாக்கியிருக்கிறது.
ஹஜ்ஜின் நடைமுறையை சிக்கலாக்கி வருவதில் சவூதி அரசிற்கும் ஒரு பங்கு இருக்கிறது.
இதற்கு முந்தைய வருடங்களிலும் கூட 30 லடசம் ஹாஜிகள் ஹஜ்ஜு செய்யத்தான் செய்தார்கள்.
பெரும்பாலும் ஹஜ் அமைதியாகவெ நிற்றவேறி வந்தது.
முற்காலத்தில் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மக்காவில் ஹஜ் ஏற்பாடுகளை கவனிக்க – முஅல்லிம்களை அனுகுவார்கள். பாரம்பரியமாக ஹாஜிகளுக்கு சேவை செய்து வருகிற முஅல்லிம்கள் ஹாஜிகள் ஜித்தாவில் இறங்கியதிலிருந்து அவர்களை மக்காவிற்கு கொண்டு சேர்ப்பது, மினா அரபா முஜ்தலிபாவிற்கு கொண்டு செல்வது அது போல மினா அரபா மைதான்ங்களில் ஹாஜிகளின் தங்குமிட ஏற்பாடுகள் மதீனாவிற்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருவது நிறைவாக ஜித்தாவிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது என்பது வரைக்குமான பிரதான வேலைகள் அனைத்தையும் செய்வார்கள். ஹாஜிகளுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் முஅல்லிம்களிடமே இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக சவூதி அரசு பாரமபரியமாக நடை பெற்று வந்த இந்த பணியில் புதிய கார்ப்பரேட் மாற்றங்களை கொண்டு வந்தது. முவல்லிம்களின் தனிப்பட்ட அதிகார வரம்பை கட்டுப்படுத்தி முஅல்லிம்களை குழுக்குழுவாகா ஆக்கி அவர்களை ஒரு கம்பனிக்கு கீழ் கீழ் கொண்டு வந்தது. இதன் படி சுமார் 5 அல்லது 10 முஅல்லிம்களை ஒரு கம்பணி நிர்வகிக்கும். அவர்கள் சம்பந்தப்பட்ட ஹாஜிகளின் தங்குமிடங்களை அதுவே அமைக்கும். பெரிய எண்ணிக்கையிலேன ஹாஜிகளுக்கு ஒரு நிறுவனமே உணவு போக்கு வரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை கவனிக்கும்.
இதில் ஹாஜிகள் இரண்டு வகையான சிரமங்களை எந்த வித காரணமும் இன்றி அனுபவித்தார்கள் . அதுவும் ஹஜ்ஜின் பிரதான நாட்களில் மினா அரபா போன்ற இடங்களில் அனுபவித்தார்கள்.
இந்த நிறுவன்ங்களால் சரியாக ஏற்பாடுகளை கவனிக்க முடியவில்லை. முஅல்லிம்களும்
ஏதும் செய்ய முடியாமல் கையை விரித்து விடுகிறார்கள்
ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுக்க வியாபாரமாக ஆக்கி விட்ட சவூதி அரசிடம் யாரும்
பேச தயங்குகிறார்கள்.
எனவே இப்போதைய பிரச்சினையில் சவூதி அரசின் நடைமுறைகளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது.
எல்லாஹ் வல்ல அல்லாஹ் ஹஜ்ஜின் புனித்த்தை பாதுகாத்து ஹஜ் ஏற்பாட்டாளர்களுக்கு
ஹிதாயத்தை வழங்குவானாக! இதில் குற்றமிழைப்பவர்களை அகற்றி விடுவானாக!
மாஷா அல்லாஹ் ,,, பாரகல்லாஹ்... அல்லாஹ் இந்த வருடம் வாய்ப்பு கிடைத்த அனைவருக்கும் ஹஜ்ஜுடைய நஸீபை தந்தருள்வானாக...
ReplyDelete