கடந்த 22 ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2;45 மணியளவில் காஷ்மீர் மாநிலம் அனந்த நாக் மாவட்டத்தில் உள்ள பெஹல்காம் நகரில் உள்ள பைசரன் புல் வெளியில் ( Baisaran meadow ) பயங்க்ரவாதிகள் நடத்திய தாகுதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் அப்போது குழுமியிருந்த 2000 பயணிகள் உட்பட காஷ்மீர் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகி தங்களது வீடுகளுக்கு திரும்ப அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு
காஷ்மீருக்கு செல்லும் பிரதான சாலையை மூடி வைத்திருக்கிறது. விமான கட்டணங்கள் பெருமளவில்
உயர்ந்திருக்கிறது . 6000 ரூபாயுக்கு விற்ற டிக்கட்டுகள் இப்போது 65 ஆயிரத்தை கடந்து
செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மகிழ்ச்சிக்காக
சுற்றுலா சென்ற அப்பாவி பொது மக்கள் மீது திடீரென்று இயந்திர துப்பாக்கியால் சுட்டுக்
கொள்வது அதுவும் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே ஆண்களை கொலை செய்வது என்பது பிர்
அவ்னிய கொடூரமாகும்.
இந்த
செயல் ஒரு கோழைத்தனமான குற்றமாகும்.
நிராயுதபாணியான
அப்பாவி பொதுமக்களின் முன் ஆயுதம் ஏந்தி செல்வதே குற்றம் என பெருமானார் (ஸல்) அவரக்ள்
கூறிய்ள்ளார்கள்.
وقال
رسول الله صلى الله عليه وسلم: ((لا يمشين أو لا يشير أحدكم إلى أخيه بالسلاح؛
فإنه لا يدري أحدكم لعل الشيطان ينزع في يده، فيقع في حفرة من نار))؛ [البخاري
(7072)، ومسلم (2617)].
“நீங்கள் உங்கள் சகோதர்ர் இருக்குமிட்த்திற்கு ஆயுத்த்தோடு செல்ல வேண்டாம். அதை எடுத்துக் காட்டி பேச வேண்டாம். யாருக்கு தெரியும் சைத்தான் சட்டென கோபத்தை கிளறி விட்டு உங்களை நரகில் வீழ்த்தி விடக் கூடும்
மலக்குகளின் சாபம்
وقال رسول الله صلى الله عليه وسلم: ((من أشار على أخيه بحديدة،
لعنته الملائكة، وإن كان أخاه لأبيه وأمه))؛ [مسلم (2616)].
தனது சகோதர்ர்களிடம் ஆயுதத்தை எடுத்துக்காட்டுபவனை மலக்குகள் சபிக்கிறார்கள்.
அந்த சகோதரர்கள் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவர்களாக இருந்தாலும் சரி.
அதாவது சொந்த சகோதரர்களை எச்சரிக்கவும் மிரட்டவும் ஓரளவு உரிமை இருக்கிறது.
அப்படி இருக்கிற இடத்தில் கூட ஆயுத்த்தை எடுத்துக் காட்டக் கூடாது. எனும் போது அப்பாவிகளான
மற்ற பொதுமக்கள் முன்னிலையில் ஆயுதத்தை துக்கி காட்டுவதே பெரும் குற்றம் என்பது இதன்
பொருளாகும்.
கேடு கொட்டவர்கள்
அநியாய கொலை சாதாரண குற்றம் அல்ல; அது ஒரு மனிதரிடம் இருக்கிற மொத்த நன்மையையும் பாழாக்கி
விடக் கூடியது.
சமூக செயல்பாட்டாளர்களுக்கு
(ஆக்டிவிடி பர்சனாலிட்டீஸ்) பெருமானார் (ஸல்)
அவர்களின் ஒரு மிகப் பிரதான வழிகாட்டுதல்.
ஒரு முஃமின் நல்ல செயல்பாட்டாளராகவே
இருப்பார். அவர் அநியாய கொலை செய்யாத வரை.
அப்படி செய்து விட்டால் அவர் நன்மையிலிருந்து அறுந்து விடுவார் என்றார்கள் பெருமானார்
(ஸல்)
قال رسول الله صلى الله عليه وسلم : " - لا يَزالُ المؤمِنُ مُعْنِقًا صالحًا ما لم
يُصِبْ دمًا حرامًا، فإذا أصابَ دمًا حرامًا بَلَّحَ.
عن ابن مسعود رضي الله عنه، قال: قال رسول الله
صلى الله عليه وسلم: ((أول ما يُقْضَى بين الناس يوم القيامة في الدماء))؛ [البخاري
26 உயிர்களை காஷ்மீரி கொலை காரர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள் எனில்
குறைந்த்து சுமார் இரண்டாயிரம் பேரை குதிரை
ஓட்டிகள் பத்திரமாக காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார்கள்.
செய்யத் ஆதில் ஹுசைன் ஷா என்ற ஒரு குதிரை ஓட்டி தன்னுடன் அழைத்து வந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்பட்டிருக்கிறார்.
தற்போது தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிற சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும்
காஷ்மீரிகளின் விருந்தோமபலையும் அனுசரனையையும் கிளாகித்து பேசி வருவதை தொடர்ந்து உலகம்
கண்டு வருகிறது.
தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை தாக்குதலில் இழந்த ஒரு பெண்மணி அங்கு தனக்கு
உதவிய இரு காஷ்மீரிகளை குறிப்பிட்டு தனக்கு இப்போது இரண்டு சகோதாரக்ள் கிடைத்துள்ளர்கள்
என்று கூறுகிறார்.
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
அரசு திசை திருப்ப முயற்சிக்க கூடாது
ஏனெனில்
தொடர்ந்து மத்திய அரசு முஸ்லிம் வெறுப்புணர்வுடன் செயல் பட்டு வருகிறது. வெறுப்புணர்வை
பரப்பும் வேலையை ஆளும் கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் பரப்பி வருகிறார்கள்.காஷ்மீர்
தாக்குதலில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு அனுதாபங்கள் என்று அமைச்சர்கள் உடபட பலர் செய்தி வெளியிடுகிறார்கள்.
விடுதலை
கட்சித்தலைவர் தோழர் திருமாளவன் சொல்வது போல நியாயமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா
செய்ய வேண்டும்.
வெட்கக் கேடு
இவ்வளவு பிரச்சினைகள் நடந்து முடிந்த
பிற்கு - மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு
பற்றி ஆளும் கட்சியியை சார்ந்தவர்களே குறை கூறுகிற சூழலில் மத்திய பாதுகாப்பு துறை
அமைச்சர் கூட்டிய அனைத்து கட்சி ஆலோசனைகளுக்குப் பிறகு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை. பைசரன் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு திறக்க போலீசார் அனுமதி அளிக்க
வில்லை என்று கூறுகிறது
officials from the Home
Ministry and the Intelligence Bureau informed that there was no police
permission to open the Baisaran meadow where the incident occurred.
என்ன ஒரு அறிக்கை இது ? அப்படியானால்
இத்தனை ஆயிரம் பேர் எப்படி அங்கு தொடர்ந்து சென்று வந்தார்கள். ? கடந்த பல மாதங்களாக
சென்று வருகிறார்கள் ? இந்த அறுவெறுப்பான கேள்விகளுக்கு
எந்த பதிலும் இல்லை.
காஷமீர் மக்களின் உணர்வுகளை குழி தோண்டிப் புதைக்கிற பல
காரியங்களை அரசு செய்து வருவதாக தொடர்ந்து குற்றச் சாட்டுகள் இருக்கின்றன.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்குள்ள
பெரும்பான்மையான பணிகளில் முஸ்லிம் அல்லாத அதிகாரிகளை நியமிக்கிற மத்திய அரசு அந்த
அதிகாரிகள் அங்கேயே நிலம் வாங்கவும் வீடுகளை அமைத்துக் கொள்ளவும் ஆதரவு தெரிவிப்பதாக
ஒரு குற்றச் சாட்டு தொடர்து வைக்கப்பட்டு வந்திருக்கிறது . இந்த குடியேறிகளுக்கு எதிராக
அங்கு போராடுகிற குழு தான் த ரெஸிஸ்டன்ஸ் பிரண்ட் என்று அல் ஜஸீரா உள்ளிட்ட செய்தி
சேனல்கள் கூறுகின்றன.
இத்தகைய ஒரு சூழலில் பெரும்பான்மையான சுற்றுலா பயணிகள்
வருகிற சந்தர்ப்பத்தில் அனைத்து இடங்களிலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க
வேண்டிய பொறுப்புள்ள அரசு இத்தக்கய ஒரு விபரீதம் நடந்த பிறகு அந்த இடத்தை திறக்க போலீஸ்
அனுமதிக்க வில்லை என்று சொல்லவதை மிக வெட்கரமானது என்று சொல்வதை விட வேறென்ன சொல்ல.
எனவே இது முழுக்க மத்திய அரசின் பாதுகாப்பு தோல்வியாகும்.
அரசு இனியாவது மதவெறுப்பு வேலைகளை கை விட்டு நாட்டின் உண்மையான நலன்களிலும் மக்களின்
பாதுகாப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாடு முழுவதிலும் மத வெறுப்புணர்வு
பரப்ப படுவதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
தன் உயிரை கொடுத்த சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய சேக்
ஹுசைன் ஆதிலுக்கு நாட்டின் உயர்ந்த விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும்,
எல்லாம் வல்ல இறைவன் பல் நூறு கோடி மக்கள் வாழும் நமது
நாட்டை நன்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த நாடகாவே வைத்திருப்பானாக!
அநீதியும் அக்கிரமும் எந்த வடிவத்திலும் வந்து விடாமல்
பாதுகாத்து அருள்வானாக!
மாஷா அல்லாஹ் அருமை பாரகல்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். உலகம் முழுவதும் இன்றைய ஜுமுஆவில் பேசப்பட வேண்டிய வார்த்தைகள்
ReplyDelete