தீய குணங்கள் பலது இருக்கிறது. கொலை கொள்ளை விபச்சாரம் சூதாடுல் வஞ்சகம் அநீதியிழைத்தல்
என ஒரு பெரிய பட்டியல் அதில் உண்டு.
இத்தீமைகள் அனைத்திலிருந்தும் நல்ல மனிதர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும்.
இத்தீமைகளில் மிகவும் அச்சப்பட வேண்டிய இரண்டு தீமைகளை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஒரு ஹதீஸில் கூறினார்கள்.
ஒரு முஃமினிடம் எந்த குணமும் பதியலாம் நம்பிக்கை மோசடியும்
பொய்யும் தவிர.
وعن أبي أمامة - رضي الله
عنه - قال: قال رسول الله ﷺ:
"يطبع المؤمن على الخلال كلها إلا
الخيانة والكذب"
[رواه أحمد
இதில் நம்பிக்கை மோசடி செய்யும் குணம் என்பது ஈமானையே அசைத்துப் பார்த்து விடக் கூடியதாகும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!
அதனால் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
لا إيمانَ لِمَن لا أمانةَ له
என்று நம்பகத்தன்மை இல்லாதவரிடம் ஈமானே இல்லாமல் போய்விடும் என்றார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ ரலி அவர்கள் கூடுதலாக ஒரு செய்தியை கூறுகிறார்கள் . பெருமானாரின் எந்த உரையிலும் இந்த வாசகம் இடம் பெற்றே தீரும் என்கிறார்கள்.
ما خطبنا رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم
إلَّا قال : لا إيمانَ لمن لا أمانةَ له
ஈமானில் இதன் முக்கியத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
நம்பகத்தன்மை என்பது மிக வலிமையான ஒரு குணம் அதை பராமரிப்பது
மிகப் பெரிய வேலை தான் என்பதை குர் ஆன் இன்னொரு
இடத்தில் சொல்லிக் காட்டுகிறது.
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا
الْإِنسَانُ ۖ
இந்த
குணம் மனிதன் ஏற்றுக் கொண்ட பெரும் பொருப்பாகும்.
ஒரு
சிங்கம் ஒரு ஆட்டை வேட்டையாடி கொண்டு வருகிறது. அதை பக்கத்தில் இருக்கிற சிங்கத்திடம்
இதை கொஞ்சம் பார்த்துக் கொள் நான் கை கழுவி விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு செல்லுமானால்
அது திரும்பி வருகிற வரை அந்த ஆடு அப்படியே இருக்குமா ? இருக்காது.
ஆனால்
மனிதர்களிடம் இதை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்லி விட்டு சென்றால்
நாம் திரும்பி வருகிற வரை அவர் அதிக கவனத்தோடு பார்த்துக் கொள்வார்.
மிக
சாதாரணமாக நாம் அனுபவிக்கிற இந்த நம்பகத் தன்மை மனிதனின் அடிப்படை உயர் குணமாகும்.
நம்பிக்கைகுரிய
மனிதர் எந்த நிலையிலும் தனது நம்பகத்தன்மையை விட்டுத்தர மாட்டார். இது மனிதன் ஏற்றுக்
கொண்ட பெரும் பொறுப்பு.
நாம்
சொந்தமாக வளர்க்கிற மிருகம் எத்தனை பாசத்தோடு வளர்க்கப் பட்டாலும் அதற்கு அளவு மீறி
பசிக்கிற போது அது தன் குணத்தை காட்டி விடும்.
ஒரு
வேளை ஒரு மனிதர் நம்பகத்தன்மையை விட்டுக் கொடுத்து
விடுவார் எனில் – உதாரணத்திற்கு ஒரு ராணுவ வீரன் எதிர் நாட்டுக்கு உதவி செய்பவராக மாறி
விடுவார் எனில் அவர் மிக மிருகத்தை காட்டிலும் மோசமானவராக கருதப்படுவார் என்பது இயல்பு
தானே
لا إيمانَ لمن لا أمانةَ له
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதன் ஆழத்தை இதில் புரிந்து கொள்ளலாம்,
நம்பகத்தன்மையை
தவற விடுவோர் அதாவது நம்பிக்கை மோசடி செய்வோர் எத்தகைய கடும் குற்றவாளிகள் என்பதை ஒரு
நபி மொழி விவரிக்கிறது. அப்துல்லாஹ் பின் மஸ்வூத்
ரலி கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஷஹீத் ஆவது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பை
தரும். ஆனால் நம்பிக்கை மோசடியை அது காப்பாற்றாது (பைஹகீ)
القتلُ في سبيلِ اللهِ يكفِّرُ الذُّنوبَ كلَّها إلَّا الأمانةَ
தொடர்ந்து அப்துல்லாஹ்
பின் மஸ்வூத் ரலி கூறியது இன்னும் அதிக கவனத்தை ஈர்க்க கூடியது. கியாமத் நாளில் ஷஹீத்
தனது நம்பிக்கை மோசடிக்கான பதிலை கொடுத்தே ஆகவேண்டும் என இறைவன் சொல்லுவான்.
ஷஹீத், நரகில் தனது நமபிக்கை
மோசடியை அதன் வடிவத்தில் பெற்றுக் கொள்வார். (அதற்கு ஒரு வடிவம் கொடுக்கப் பட்டிருக்கும்.)
அதை அடையாளம் கண்டு அதை துக்கி எடுத்து போட்டு விட அவர் செல்வார். அது மலைகளை விட கனமாக
இருக்கும். அதை எடுத்துக் கொண்டு நரகின் வாசலுக்கு அவர் வரும் போது அது சரிந்து கீழே
விழுந்து விடும். இப்படியே நெடுங்காலம் நடக்கும் என்றார் அப்துல்லாஹ் பின் மஸ்வூத்
ரலி
قال : يؤتَى بالعبدِ يومَ القيامةِ وإنْ قُتِلَ في سبيلِ اللهِ،
فيقالُ : أدِّ أمانتَكَ، فيقولُ : أي ربِّ ! كيف وقد ذهبتِ الدُّنيا ؟ قال : فيقالُ
: انطلقوا به إلى الهاويةِ، فيُنطلَقُ به إلى الهاويةِ، وتمثلُ له أمانتُهُ
كهيئتِها يومَ دُفِعَتْ إليه، فيراها فيعرفَها، فيهوِي في أثَرِها حتَّى يدركَها
فيحملَها على منكبيهِ، حتَّى إذا نظر ظنَّ أنَّه خارجٌ زلَّتْ عن منكبيهِ، فهو يهوي في أثرِها أبدَ الآبدينَ،
இந்த
உலகில் அல்லாஹ் கொடுத்த உயிரை அவனுக்காக அர்ப்பணித்து விட்ட நிலையிலும் கூட என்ன கடுமையான
மோசமான சூழ்நிலை பாருங்கள்!
நினைத்துப்
பார்க்கவே உள்ளம் நடுங்குகிறது.
நம்முடைய
முன்னோர்கள் அதன் காரணமாகவே அனைத்து விவகாரங்களிலும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்தார்கள். நம்பிக்கை மோசடி என்ற பெயருக்கு எந்த நிலையிலும் ஆளாகிவிடக் கூடாது
என்று அஞ்சினார்கள்.
உமர்
ரலி அவர்கள் எம்மா பெரிய மனிதர் ?
روى الترمذي عن عقبة بن عامر، قال: قال النبي صلى الله عليه وسلم:
"لو كان بعدي نبيّ لكان عمر بن الخطّاب
என்று
பெருமானாரால் பெருமைப்படுத்தப் பட்டவர்.
அவர்
தன்மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை துளியளவிலும் தவற விட்டு விடக் கூடாது என்று நினைத்தார்.
ஒரு
உண்மையான தலைமையின் மிக சரியான அடையாளம் அது.
மதீனாவில்
இருந்து கொண்டு அவர் சொன்னார்
இராக்கின்
டைகிரிஸ் நதியின் ஓரத்தில் தாகத்தால் ஒரு நாய் இறந்து விடுமானால் அதற்கும் கூட நான் பதிலளிக்க வேண்டியதாகும் என்றார்.
அவர்
ஆட்சிப் பொறுப்பேற்றா பிறகு ஒரே ஒரு தடவை வெளிநாடு சென்றார். அதுவும் ஜெரூசலமில் இருந்த
பாதிரிகள் கேட்டுக் கொண்ட்தற்கு இணங்க ஜெரூசலமின் சாவியை பெருவதற்காக சென்றார்.
அதற்காக
மதீனாவிலிருந்து கொஞ்ச காலம் வெளியே சென்று விட்டு மீண்டும் மதீனாவிற்கு திரும்பிய
உமர் ரலி எப்போதும் போல மக்களின் நிலையை நேரடியாக அறிய யாரும் அறியாதவாறு உமர் ரலி
நகர் வலம் சென்றார். பாதுகாப்புக்கோ உதவிக்கோ யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை. தனியாகவே
சென்றார்.
ஒரு
மூதாட்டி தனது கூடாரத்தின் வாசலில் அமர்ந்திருந்தார். அவருக்கு உமர் ரலி சலாம் சொன்னார்.
அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார். அவர் நன்றாக இருப்பதாக கூறீவிட்டு, உமர்
திரும்பி விட்டாரா எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.
தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளாத உமர் ரலி, அவர் நன்றாக
இருக்கிறார். மதீனாவிற்கு திரும்பி விட்டார் என்று பதிலளித்தார்.
பிறகு
அந்த பெண்மணியிடம் உமரை பற்றி என்ன நினைக்கிறீர் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மனி என்
விசயத்தில் அல்லாஹ் அவருக்கு நன்மையை தரமாட்டான் என்றார்
அதிர்ச்சியடைந்த
உமர் ரலி அவர்கள் உங்களது சிரமத்தை அவருக்கு சொன்னீர்களா என்று கேட்டார். அதற்கு அந்த
பெண்மனி ஆட்சி பொறுப்பேற்ற ஒருவருக்கு அவருடைய ராஜ்யத்தின் கிழக்கு முதல் மேற்கு வரை
என்ன நடக்கிறது என்று எப்படி தெரியாமல் போகலான் என்று கூறீனார்.
இந்த
நாட்டில் கிழவிகள் கூட உமரை விட அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று கூறிய உமர் ரலி அவர்
அந்த பெண்மணியின் நம்பிக்கைக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக 25 தீனார் விலை பேசி அதை கொடுத்து
எழுதி வாங்கிக் கொண்டார். ஒரு பேனாவை எடுத்து எழுதுவதற்கு காகிதம் தேடிய போது கிடைக்க
வில்லை. சட்டென்று தனது ஆடையை கிழித்து அதில் எழுதி வாங்கிக் கொண்டார். அந்த ஒப்பந்தத்தில்
அலீ ரலி , அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி இருவரின் கை யொப்பத்தையும் பெற்றுக் கொண்டார்.
பிறகு அந்த துணியை தனது மகனிடத்தில் கொடுத்து தான் இறந்து விட்டால் தன்னுடைய கபனுடன்
இந்த துணியை வைக்குமாறு உபதேசித்த்தார்.
لما رجع عمر بن الخطاب - رضي
الله عنه - من الشام إلى المدينة انفرد عن
الناس ليعرف أخبار رعيته فمر بعجوز في خباء لها فقال: ما فعل
عمر؟
قالت: أقبل من الشام
سالما.
فقال: ما
تقولين فيه؟
قالت: يا هذا، لا جزاه الله عني خيرا.
قال: ولم؟
قالت: لأنه ما أنالني من عطائه منذ ولي أمر المسلمين دينارا ولا
درهما.
فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟
فقالت: سبحان الله، والله ما ظننت أحدا يولى على الناس ولا يدري
ما بين مشرقها ومغربها.
فبكى
عمر وقال: واعمراه!
كل الناس أفقه منك حتى العجائز يا عمر، ثم قال لها: يا أمة
الله بكم تبيعين ظلامتك من عمر فإني أرحمه من النار؟
فقالت: لا تهزأ بنا، يرحمك الله.
فقال
عمر: لست أهزأ
بك، ولم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين دينار.
فبينما هو كذلك إذ أقبل علي بن أبي طالب، وعبد الله بن
مسعود، فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأشها
وقالت: واسوءتاه!
شتمت أمير المؤمنين في وجهه.
فقال لها عمر: لا بأس
عليك، يرحمك الله، ثم طلب قطعة جلد يكتب فيها فلم يجد، فقطع قطعة من مرقعته وكتب فيها: "بسم الله الرحمن الرحيم، هذا ما اشترى عمر من فلانة
ظلامتها منذ ولي الخلافة إلى يوم كذا بخمسة وعشرين دينارًا، فما تدعي عليه عند
وقوفه في الحشر بين يدي الله تعالى فعمر بريء منه، شهد على ذلك علي وابن مسعود".
ثم دفعها إلى ولده وقال له: إذا أنا مت فاجعلها في كفني ألقى بها ربي
மாஷா
அல்லாஹ்!
தம்
மீது மக்கள் வைக்கிற நம்பிக்க்கயில் ஒரு சிறு பழுதும் வந்து விடக் கூடாது என்பதில்
உமர் ரலி அவர்கள் காட்டிய அக்கறை அவரது துடி துடிப்பும் வானமும் பூமியும் ஏற்க மறுத்த
நம்பக தன்மையை மனிதன் ஏற்றுக் கொண்டான் என்ற வார்த்தைக்கு சத்தியமான சாட்சியாகும்.
நம்பகத்தன்மை
எந்த நிலையிலும் தவறவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் அது ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும்
எந்த உயரத்தை தரும் என்பதற்கும் அது மீறப்படுவதை எந்த அளவில் மக்கள் கவலைப்பட வேண்டும்
என்பதற்கு இது ஒரு உருக்கமான எடுத்துக் காட்டாகும்.
அல்லாஹ்விடம்
ஒவ்வொரு
முஃமினும் அவரது நம்பகத்தன்மையை முதலில் அல்லாஹ்விடம் வெளிப்படுத்த வேண்டும்.
நாம்
அல்லாஹ்வை ரப்பு என்று நாம் உலகிற்கு வருவதற்கு முன்பே ஒப்புக் கொண்டிருக்கிறோம்.
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ
ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا
بَلَىٰ
அல்லாஹ்வை
ரப்பு என்று ஒப்புக் கொண்ட பிறகு அதற்கேற்ற நம்பகத் தன்மையுடன் நாம் எப்போதும் நடந்து
கொள்ள வேண்டும்
அந்த
உடன்படிக்கையிலிருந்து நாம் கூடுமானவரை தவறி விடக் கூடாது என்று உறுதி ஏற்றுக் கொள்வோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அல்லாஹ்வின்
உடன்படிக்கையில் தவறினால் வேறு எதிலும் நாம் நம்பக தன்மையோடு செயல்பட முடியாது. அல்லாஹ்
பாதுகாப்பானாக!
திருக்குர்
ஆன் இதை அறிவுறுத்துகிறது.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا
أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ (27
وقال السدي : إذا خانوا الله والرسول ، فقد خانوا أماناتهم
அல்லாஹ்
கொடுத்திருக்கிற கண் காது, கை கால்கள், இதயம் உணர்வுகள் காசு பணம் அதிகாரம் ஆடை போன்ற
அனைத்தும் அவனுடைய அடிமைகளாக செயல்பட வேண்டியவை. அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது.
நமது
காரை ஓட்டிச் செல்ல நமது டிரைவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதில் நம் விருப்பத்திற்கு
மாறாக செயல்பட அவருக்கு அதிகாரம் இல்லை அல்லவா
அல்லாஹ்வின்
முன்னிலையில் ஒப்புக் கொண்ட அடிமைத்தனத்திற்கு எதிராக நாம் செயல்பட நினைக்கும் போது இதை எண்ணிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த
நம்பகத்தன்மையை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
நினைவில் கொள்ள வேண்டும்.
அப்துல்லாஹ்
பின் மஸ்வூத் ரலி அவர்கள் சொன்ன மேல் குறிப்பிட்ட ஹதீஸி தொடர்ந்து கூறுகிறார்கள் .
ثمَّ قال : الصَّلاةُ أمانةٌ، والوضوءُ أمانةٌ، والوزنُ أمانةٌ،
والكيلُ أمانةٌ وأشياءٌ عدَّدها، وأشدُّ ذلك الودائعُ.
அப்படி
கடைபிடிக்கிற போது கிடைக்க கூடிய லாபம் என்ன ?
திருக்குர்
ஆன் கூறுகிறது.
يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ
وَالْمُؤْمِنَاتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِم
بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ
فِيهَا ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (12)
எப்போதும்
ஒரு ஒளி நமக்கு முன்னே இருந்து வழிகாட்டும். குறைந்த நேரத்தில் நிறைய அமல்களை செய்ய
வைக்கும்.
ஒரு
70 வயது முதியவர் ஒரு நாளில் தான் எழுபது தவாபுகள் செய்ததாக குறிப்பெழுதி வைத்திருக்கிறார்.
அப்படியானானால் சுமார் 490 சுற்றுகள். 140 ரகாஅத்துகள்.
இது
அப்துகளுக்கு அல்லாஹ் தருகிற வாய்ப்பாகும்.
நம்பகத்தன்மையை
கடைபிடிக்காதவர்களுக்கான தண்டனையை அல்லாஹ் பல வகைகளில் கூறுகிறான்.
அவர்களுடைய
அவையவங்கள்
صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ
அவர்களுடைய
உணவு
إِنَّ
شَجَرَتَ الزَّقُّومِ (43) طَعَامُ
الْأَثِيمِ (44
அவர்களுடைய
ஆடை
سرابيلهم من قطران
அவர்களுடை இருப்பிடங்கள்
وَإِذَا أُلْقُوا
مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا
அடியார்களிடம்
அல்லாஹ்விடம்
நம்பகத் தன்மையை பேண வெண்டும் மக்களிடமும் நம்பக தன்மையை பேண வேண்டும்.
அமானிதம்
என்ற வார்த்தைக்கு மக்கள் விளங்கி வைத்திருக்கிற பொருள் ஒருவர் நம்மிடம் ஒரு பொருளை கொடுத்து வைத்தால் அதை
முறைப்படி திருப்பி கொடுத்து விட வேண்டும் என்பதாகும்.
இஸ்லாமிய
அமானிதத்தின் பொருள் அதுவல்ல மற்ற மக்கள் நம் மீது என்ன நம்பிக்கை வைக்கிறார்களோ அந்த
நம்பிக்கையை நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.
ஒரு
மகன்
ஒரு
கணவன
ஒரு
ஆசிரியர்
ஒரு
மருத்துவர்
ஒரு
வக்கீல்
ஒரு
இஞ்சினியர்
ஒரு
தொழிலாளி
ஒரு
பொறுப்புதாரி
ஒரு
அதிகாரி
என
நம்மில் ஒவ்விருவரும் அவர் மீதான நம்பிக்கையை நம்மால் முடிந்த வரை பாதுகாக்க வேண்டும்.
அப்படி
பாதுக்காக வெண்டும் என்ற உணார்வோடு வாழ வேண்டும்.
தற்காலத்தில்
அதுதான் மிகப் பெரிய பஞ்சமாக உருவெடுத்துள்ளது. எவரையும் நம்ப முடியவில்லை என்பது நாம்
வாழும் உலகின் மிகப் பெரும் சோதனையாக உருவெடுத்துள்ளது.
நபி
(ஸல்) அவர்கள் சொன்னார்கள் . உங்களிடம் ஒரு வர் ஆலோசனை கேட்டால் அது கூட நம்பகத்திற்காக
ஒரு காரியம் தான். அது பற்றி மற்றவரக்ளிடம் பேசக் கூடாது என்றார்கள்.
المستشار مؤتمن
குர்
ஆன் எச்சரிக்கிறது.
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ (1
இது மதீனாவில் வைத்து பெருமானாருக்கு இறங்கிய முதல் வசனம் என்கிறார் அப்துல்லாஹ் பின் அப்பஸ் ரலி
وعن ابن عباس أيضا قال : هي : أول سورة نزلت على رسول الله -
صلى الله عليه وسلم - ساعة نزل المدينة
இந்த வசனம் அளவுகளில் மோசடி செய்வதை பற்றி மட்டுமல்ல மக்களின் நம்பிக்கைய நஷ்டப்படுத்துகிறவர் அனைவருக்கும்
பெருந்தும்
அல்லாஹ்
நமது ஈமானை பாதுகாத்துக் கொள்ள நம்மை நம்பிக்கையாளர்களாக ஆக்கியருள்வானாக ! அந்த உணர்வை
எப்போதும் தந்தருள்வானான
No comments:
Post a Comment