கடந்த மே மாதம் 7 ம் தேதி பாகிஸ்தானின் சில இடங்களை இந்தியா தக்கியது. அதை தொடர்ந்து இந்தியாவின் எலைப்பகுதிகளிலும் உள் நாட்டின் பல நிலைகள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
9 தீவிரவாத முகாம்களை அழித்ததாக இந்தியா கூறியது. நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்
கொல்லப்பட்ட்தாக இந்தியா கூறியது இத்தாக்குதலில் 31 அப்பாவிகள் பலியானதாக பாகிஸ்தான்
கூறியது. இரண்டு நாடுகளிலும் பல இடங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியாவின்
ரபேல் ரக விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக பாகிஸ்தான் கூறீயது. பாகிஸ்தானின் சில
வான் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டதாக இந்தியா கூறியது.
இரண்டு நாட்களில் இந்தியா பாகீஸ்தான் இடையேயான் சூழல் ஒரு பெரிய யுத்த்திற்கு
வழி வகுத்துவிடுமோ என்று உலக நாடுகள் பலவும் அஞ்சிக் கொண்டிருந்த சூழலில் திடீரென்
10 ம் தேதி இரண்டு நாடுகளும் போரை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன. அதற்கு
முன்னதாக போர் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார
அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.
சண்டையை தொடர்வது சரியானது அல்ல என்று இரண்டு நாட்டு தலைவர்களும் ராணுவமும்
முடிவு செய்த்ததும் அதற்கு தயாராக இருந்த்தும் வீறாப்பு காட்டாமல் இருந்த்தும் இந்திய
மக்கள் குறீப்பாகவும் உலக மக்கள் பொதுவாகவும் மகிழ்ச்சியடைய வேண்டிய செய்திகளாகும்.
போர் நின்று விட்ட்து. அதனுடைய நெருக்கடிகள் அகன்று விட்டன பிறகு ஏன் யுத்தத்தை
பற்றி பேச வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான் தற்போதைய
போர் மூன்று நாட்களில் முடிவடைந்ததது சாதாரண நிகழ்வலல்; அதன் முக்கியத்துவம்
உணரப்பட வேண்டும்.
போரில் என்ன நடந்தது என்று பேசுவதோ யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று
பேசுவதோ தேவையற்றதாகும் , பெரும்பாலும் உண்மைக்கு எதிரான கருத்துக்களே அதில் அதிகம்
வெளிப்படும். இந்தியாவில் நாம் வென்று விட்டதாக கொண்டாட்டங்கள் நடை பெறுகின்றன. பாகிஸ்தானில்
அவர்கள் வென்று விட்டதாக கொண்டாடுகிறார்கள்.
இரண்டு நாட்டு ராணுவ பொறூப்பாளர்களும் கூடுமான அளவுக்கு பொறுப்புணர்வோடு நடந்து
கொண்டிருக்கிறார்கள். அதிக பட்ச வெறுப்புணர்வை வெளிப்படுத்திக் கொள்ள முயலவில்லை. அது
பாராட்டிற்குரியது.
இந்திய ராணுவ அதிகாரிகளிடம் பதிரிகையாளர்கள் ஒரு இடத்தின் பெயரை சொல்லி அங்குள்ள
அணு முகாம்களை அழித்து விட்டீர்களாமே என்று கேள்வி கேட்க அப்படியா அங்கு அணு கேந்திரம்
இருக்கிறதா? நீங்கள் புதிதாக தகவல் சொன்னதற்கு நன்றி. நாம் அப்படி எதையும் செய்யவில்லை
என்று இந்த யுத்தத்தில் மானாவாரியாக பொய்யை
பரப்பிக் கொண்டிருந்த மீடியாக்களின் முகத்தில் கரியை பூசினார்.
பாகிஸ்தானின் ராணுவ பேச்சாளரிடம் அங்குள்ள செய்தியாளர் ஒருவர் நீங்கள் பிடித்து
வைத்திருக்கிற இந்திய விமானியை இந்தியாவிடம் எப்போது ஒப்படைப்பீர்கள் என்று கேட்க அவரோ
மிக சகஜமாக பாகிஸ்தானிடம் எந்த இந்திய விமானியும் சிக்கவில்லை என்று தெளிவுடப் உறுதியாக
அறிவித்தார். அதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது என்று கூறியிருந்தால் வெறும் வாயில்
அவல் மெல்லுபவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பொய்யை பரப்ப வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இந்த யுத்திற்கு கூர் தீட்ட ஊடக அளவில் என்ன வகையான வெறியூட்டல்கள் நடை பெற்றதோ
அவற்றை எல்லாம் பொசுக் கென்று அணைத்து விடும் வகையில் இரண்டு நாட்டு இராணுவத் தலைமைகளும்
நடந்து கொண்டன.
அவர்கள் நன்றிக்குரியவர்கள்.
இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர சிந்தித்த அனைத்து தலைவர்களுக்கும் அல்லாஹ்
சிறப்பாக நற்கூலியை வழங்குவானாக!
போரில் வீரமரணம் அடைந்த நம் வீர்ர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுடைய குடும்பங்களும்
பிரார்த்தனைகளுக்குரியவர்கள்.
போரில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் போதிய ஆறுதலையும்
தேறுதலையும் தந்தருள்வானாக!
அமைதியின் நன்மைகளை சிந்தித்து பார்ப்போம்.
1. இரண்டு தரப்பிலும் ராணுவத்தினரும் அப்பாவி மக்களும் பலியாவது
நின்றுள்ளது. உலகிற்கு பெரிதும் நிம்மதி அளித்த செய்தி இது. காரணம் இரண்டு நாடுகளும் நிறைய
ஆயுதங்களை வைத்திருக்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் அருகருகே இருக்கின்றன.
அவை குறி வைப்க்கபடுமானால் நிலை என்னவாகும் என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது. அல்ஹமது
லில்லாஹ் பலி எண்ணிக்கை பெருகி விடுவதற்குள் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையிலான போரை இதுவரை நிறுத்த முடியவில்லை
2022 பிப்ரவரி 24 ம் தேதி தொடங்கிய போர் உலகின் பெரும் வல்லரசுகள் சமாதான முயற்சியில்
இறங்கிய போதும் இதுவரை முடியவில்லை. இந்த சண்டையில் சமீபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கியை
பிபிசி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. ஒண்ண்ரை இலட்சத்திலிருந்து இரண்டே கால் லட்சம்
வரை ரஷ்ய வீர்ர்கள் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது பிபிச். உக்ரன்
தரப்பில் இதை விட அதிக எண்ணிக்கையில் இராணுவமும் மக்களும் பலியாகிவிட்டனர்.
அந்த யுத்த்த்தின் பாதிப்பு உலக நாடுகள் முழுக்க பரவியிருக்கிறது.
ஏராளமான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
உலகம் முழுக்க கோதுமை மற்றும் சமையல் எண்ணையின் விலை உயர்ந்திருக்கிறது.
அந்த வகையில் பார்க்கப் போனால் இந்த யுத்தம் உலகின் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்திதிருக்கிறது
என்று சொல்ல்லாம்
மூன்று ஆண்டுகளை கடந்து சர்வதேச அமைதி முயற்சியை கடந்து ஏராளாமான
சேதங்களை ஏற்படுத்தி வருகிற யுத்தம் எப்போது முடிவடையும் என்று தெரியாமல் தொடர்ந்து
கொண்டிருக்கிற போது இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு அனு ஆயுத சக்திகளின் யுத்தம் மூன்று
நாட்களில் முடிவடைந்திருக்கிறது. இது சாமாணிய விசயம் அல்ல;
நாம் நம்மையும் உலகையும் பெருமளவில் பாதித்து விடும் என்று
அஞ்சிய யுத்தத்தை கண்ணியமாகவே முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். இரண்டு தரப்பிலுமான
உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இறு நூறுக்கும் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை .
ஒரு மனித உயிர் பலியாவதை தடுப்பதும் ஒட்ட மனித சமூகத்திற்கு
உயிரூட்டுகிற் செயல் என குர் ஆன் பாராட்டுகிறது.
எனவே இந்த சண்டை நிறுத்த ஒப்புக் கொண்டவர்கள் இரு நாட்டு மக்களை மட்டும் பாதுகாக்க
வில்லை. முழு மனித குலத்தையும் பாதுகாத்திருக்கிறார்கள்.
சமாதானத்திற்கு முன்னின்றவர்கள்
மிகப் பெரும் நன்மையாளர்கள்
عن أبي الدرداء رضي الله عنه قال قال صلى الله عليه
وسلم : "أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ
وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ؟» قَالُوا: بَلَى، يَا رَسُولَ اللَّهِ قَالَ:
«إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ الْحَالِقَةُ"-
الترمذي
ஆனால்
அதை விட பொருத்தமாக இரண்டு நாட்டு ராணுவ தலைமையும் போரை தொடர விரும்பவில்லை. போர் தொட்ர்ந்தால்
அதிக பலி ஏற்படுவதை இரு தரப்பிலும் தவிர்க்க முடியாது என்பதால் போரை உடனடியாக நிறுத்தி
விடுவது என்ற முடிவோடுதான் போருக்கு இறங்கினார்கள். அதனாலேயே சட்டென்று போர் முடிவுக்கு வந்து விட்டது என்கிறார்கள்.
எது
எப்படி இருந்தாலும். அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
2. இரண்டு தரப்பிலும் பதற்றம் முடிவுக்கு வந்து விட்டது. பதற்ற சூழ்நிலையில் இரு நாட்டு மக்களுக்கு இடையேயும் கொஞ்சம் கூட பொருத்தமற்ற போர் வெறியை ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக பரப்பி வந்தன. போனுக்கு முன்னாள் உட்கார்ந்து தொட்ச்சியாக பேசத் தெரிந்த பலரும் சாணக்கியர்களாக மாறிவிட்டிருந்தன. கண்ணால் பார்த்தபடி வர்ணிப்பது போல போர் செய்திகளை சொல்லி மக்களை சூடாக்கிக் கொண்டிருந்தனர்.
எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு அவலட்சமான
சூழல் தொடர்ந்து கொண்டிருந்தது.
இத்தகைய பதற்ற மூட்டல்கள் சாமானியமானவை அல்ல்; அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடும்.
அல்லாஹ் பாதுகாத்தான் உண்மை குற்றவாளிகளை அடையாளப்படுத்தினான்.
3. நாட்டின் சகஜ நிலை திரும்பி இருக்கிறது.
விமான நிலையங்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. காஷ்மீர் உள்ளீட்ட சில வட மாநிலங்களிலிருந்து
திட்டமிட்டிருந்த பல ஹஜ் விமானங்கள் புறப்படவில்லை. இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது.
எத்தனையோ பேருடைய பயண திட்டங்களுக்கு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இந்ந யுத்தத்தின்
போது விமான நிலையங்கள் பலவும் மூடப்பட்டிருப்பதை உலக அளவில் பெரிய கவலைக்குரிய விசயமாக
பேசப்பட்டது. யுத்த்தின் முதல் நடவடிக்கையாக மின்சார தடை பெட்ரோல் டீஸல் பற்றாக்குறை
பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதார இழப்புகள் என பலவற்றை குறித்தும் அச்சத்தை மக்கள்
பறிமாறிக் கொண்டனர்.
உக்ரன் நாடு ரஷ்யாவுடனான போரில் வெல்ல வேண்டும் என்பதற்காக தன்னுடைய நாட்டின்
இயற்கை வளங்களை அமெரிக்காவிற்கு தாரை வார்த்திருக்கிறது.
ஒரு யுத்தம் ஒரு நாட்டின் மானம் மரியாதைக்கும் செல்வ செழிப்பிற்கும் எவ்வளவு பேரிழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு இது ஒரு உதாரணம் .
இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரிட்டனை வெற்றி பெற வைத்தவர் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். ஆனால் அதற்கடுத்த உடனடியாக நடந்த தேர்தலில் அவர் தோற்றுப் போனார். ஏனெனில் போர் காலங்களில் பிரிட்டிஷ்ம் மக்களுக்கு தேவையான மண்ணென்னை கிடைக்க வில்லை. பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது அதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். யுத்தம் முடிந்து அதில் வெற்றி பெற்ற பிறகும் கூட மக்கள் அதை மறக்கவில்லை. அவ்வளவு தூரம் அது அதிக சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது.
நம்முடைய நாட்டில் இந்த போரின் போது சில இடங்களில் மின்சாரம் இருக்கவில்லை.
சில விமான நிலையங்கள் மூடப்பட்டதே பெரிய சோதன்னயாக இருந்தது எனில் போர் தொடர்ந்திருந்தால்
நிலமை என்னவாகி இருக்கும். சிந்திக்கவே அச்சமாக இருக்கிறது.
இந்த சமாதானம் அந்த அச்சத்தை போக்கி சகஜ நிலையை திரும்ப வைத்திருக்கிறது.
அல்ஹம்து லில்லாஹ்.
இனி போருக்குப் பிந்தைய மரியாதையை இரண்டு நாடுகளும் சம அளவில் கடைபிடிக்க வேண்டும்.
போர் நிறுத்ததிதிற்குப் பின் அவமரியாதைகளோ அநீதிகளோ தொடருமானால் மீண்டும் ஒரு சண்டை பிறகும் என்பதுதான் எதார்த்தம். முதல் உலக யுத்த்திற்கு பின் ஜெர்மனி இழிவுபடுத்தப் பட்டது. அது தான் இரண்டாம் உலக யுத்த்திற்கு காரணமாக அமைந்த்து.
போர் நேரத்தில் பல வகையான கடுமைகளும் வெளிப்பட்டிருக்கலாம். போரின் தீமையை உணர்ந்து
போர் வேண்டாம் என்று நாமே முடிவு செய்து விட்ட பிறகு பரஸ்பரம் நல்லெண்ண நடவடிக்கைகளை
தொடர வேண்டும். இதில் அதிகப் படியான பெருந்தன்மையை காட்டுகிறவரகளே வரலாற்றில் இடம்
பிடித்திருக்கிறார்கள்.
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கு பிறகு கஃபாவின் வாசலில்
நின்று கொண்டு மக்காவின் மக்களை பார்த்து இது
பழி வாங்கும் நாள் அல்ல; நீங்கள் அனைவரும் சுதந்திரப் பறவைகளே என்றார்கள்.
ரோமர்களுக்கு
இரண்டு தலை நகரங்கள் இருந்தன. கோடை காலத்தில் இஸ்தான்பூலும் குளிர்காலத்தில் அந்தாக்கியாவும்
தலை நகரங்களாக இருந்தன. ஹிஜ்ரீ 15 ம் ஆண்டு ஒரு குளிர்காலத்தில் முஸ்லிம்கள் காலித் ரலி அவர்களின் தலைமையில் டமாஸ்களை
நோக்கி நகர்ந்து பெரும் வெற்றியை பெற்றனர். டமாஸ்கஸ் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யர்மூக் யுத்தத்தில் காலித் ரலி அவர்கள் ரோமர்களை தோற்கடித்தார்.
அவர்களது படைத்தளபதியை கொன்றனர். இந்த சண்டையில் ரோம சக்ரவர்த்தி ஹிர்கலின் மகன் டமாஸ்கஸீன்
கவர்ணர் தூமா முஸ்லிம்களிடம் கைதியாக சிக்கினார். அவர் கைதிகளில் ஒருவராக அடைபட்டுக்
கிடக்கிறார் என்ற செய்தி காலித் ரலி அவரக்ளுக்கு கிடைத்தது. உடனே அவரை விடுதலை செய்து
400 முஸ்லிம் வீர்ர்களுடன் அந்தாக்கியாவின் எல்லைக்கு காலித் ரலி அனுப்பி வைத்தார்.
இதை கண்டு கண்ணீர் விட்ட ஹிர்கல் கூறினார். இத்தகை பண்பு இவர்களிடம் தொடருமானால் இவர்கள்
நான் இப்போது நிற்கிற அந்தாக்கியாவையும் கைப்பற்றுவார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இரு
நாட்டு தலைவர்களும் இந்த பெருந்தன்மையை கடைபிடித்து அண்டை நாடுகளாக சகோதரத்து உணர்வுடன்
வாழ வேண்டும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
நம்மில்
ஒவ்வொருவரும் நமது குடும்பத்தில் சமூகத்தில் சமதானத்திற்கான வழிவகை கடைபிடித்தால் அதில்
பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் நிச்சயமாக நன்மைகள் நிறையும். நமது பெருமை உயரும்.
அல்லாஹ் ஹிதாயத்தை தந்தருள்வானாக!
10 ம் வகுப்பு 12 ம் வகுப்புக்களுக்கான
தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறப்பான மதிப்பென் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அல்லாஹ் இந்த மாணவ கண்மணிகளுக்கும்
மேலும் சிறந்த பயன்மிக்க கல்வியை வழங்குவானாக! அவர்களது கல்வித் தேடலை இலேசாக்கி வைப்பானாக!
மாணவர்கள் தமது கேங்க்
(பள்ளி நண்பர்களின் குழுக்) களின் தீர்மாணம் என்ற அளவில் அடுத்த துறைகளை தேர்வு செய்ய
வேண்டாம். தத்தமது ஆர்வம் சக்தி அடிப்படையில் துறைகளை தேர்வு செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தமது கவுரவத்தை
பிள்ளைகள் மீது திணிக்க வேண்டாம். கல்வி ஒரு பரிசுத்தமான இறையருளாகும்.
ஆராய்ச்சி – மருத்துவ
துணை படிப்புக்கள். மொழி வளம் சார்ந்த படிப்புகள், ஆட்சிப்பணிக்கு உதவியாக அமையும்
கல்விகள் ஆகியவற்றில் நன்கு கவனம் செலுத்துவது நல்ல
ஆர்வக் கோளாறில் போதிய
கல்வி வசதியற்ற கல்விக்கூடங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களின் பாதுகாப்பை
பிரதானமாக கவனிக்க வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நமது
புதிய தலைமுறையினருக்கு பண்பும் பக்குவமும் வெற்றியும் நிறைந்த கல்வியை தந்தருள்வானாக
No comments:
Post a Comment