வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 10, 2025

அமைதிக்காக உழைப்பது எப்படி ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நேற்று முன் தினம் பிரேரணை செய்திருக்கிறார்.  

இதற்கு முன் இதே போன்ற ஒரு பிரேரணையை பாகிஸ்தானின் தலைமை ராணுவ அதிகாரி அஜீம் முனீர் தெரிவித்திருந்தார் .

இரண்டாம் முறை அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து அமெரிக்க அதிபர் என்ன செய்து வருகிறார்?

தன்னுடைய சொந்த நாட்டு மக்க்ளுக்கு அவர் அமைதியை தர வில்லை.

அமெரிக்காவில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பல இலட்சம் மக்களை விசா முறைகேடு என்ற பெயரை சொல்லி நாட்டைவிட்டு கைதிகளைப் போல வெளியேற்றி அந்த நாடுகளின் சம்மத்த்தை பெறாமலே அந்நாடுகளில் கொண்டு போய் கொட்டி வருகிறார்.

தன்னை எதிர்ப்பவர்களை நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் சட்ட விரோத குடியேறிகள் என்ற குற்றச் சாட்டில் அவர்களை தன்னால் அமெரிக்காவை விட்டே வெளியேற்ற முடியும் என்று ஒரு நாலாந்தர ரவுடியை போல மிரட்டுகிறார். அவரது மிரட்டலுக்கு ஆளானவர்கள் சாமாணியர்கள் அல்ல; உலகின் செல்வாக்கு மிக்க அமெரிக்க தொழிலதிபர் எலான் மாஸ்க் அவர்களும், நியூயார்க் நகர மேயர் பதவிக்காக ஜன்நாயக கட்சி சார்பில் அறிவிக்கப் பட்டிருக்கிற ஜஹ்ரான் மம்தானி போன்றோர் அடங்குவர்

.நீதிக்காக போராடுவதில் சளைக்காமல் ஈடுபடுகிற அமெரிக்க பல்கலை கழக மாணவர்களை கொடூரமாக அச்சுறுத்துகிறார். அவர்களுடைய விசாக்களை கேன்ஸல் செய்கிறார். குடியுரிமையை கூட ரத்து செய்ய முடியும் என்று அச்சுறுத்துகிறார்

அண்டை நாடுகளுக்கு அவர் அமைதியை தர வில்லை.

சுயா தீனம் பெற்ற தனி நாடான கனடாவை தன்னோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மெக்ஸிகோவோடு தொடர்ந்து அவர் பகைமை பாராட்டி வருகிறார். இவ்விரண்டும் அமெரிக்காவின் பக்கத்து நாடுகளாகும்.

தூரத்திலிருப்பவர்களையும் அவர் நிம்மதியாக இருக்க் விடவில்லை

உலக நாடுகள் பலவற்றையும் வியாபாரத்தின் பெயரால் பகிரங்கமாக ஒரு தாதாவை போல அச்சுறுத்தி வருகிறார். இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது.

காஸா மக்கள் காஸாவை காலி செய்து விட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். அங்கு ஒரு சுற்றுலா நகரை தான் உருவாக்கப் போவதாக கூறுகிறார். 

அணு உடன்படிக்கைக்கு இரண்டு வாரம் ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு  திடீரென் மிக பயங்கரகமான் ஆயுதங்களில் ஈரானை தாக்குகிறார்.

எல்லாவற்றிற்கும் சிகரம வைத்தார் போல இஸ்ரேல், காஸாவில் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அதற்கு பலமான ஆதரவாளவாக இருந்து வருகிறார்.

அமெரிக்க இஸ்ரேல் சார்பில் காஸா மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் கூடியிருந்த மக்களில் 78 பேரை சமீபத்தில் இஸ்ரேல் சுட்டுக் கொன்றுள்ளது.  

இத்தனை அம்சங்களில் உலகை அச்சுறுத்துகிற காரியங்களிலேயே கவனமாக இருக்கிற அமெரிக்க அதிபருக்கு கூச்ச நாச்சமில்லாமல் அமைதிக்கான பரிசை வழங்க இஸ்ரேல் பரிந்துரைக்கிறது. பாகிஸ்தானின் ஜெனரல் பரிந்துரைக்கிறார்.

பரிந்துரைக்கிற இருவரும் எப்படிப் பட்டவர்கள் என்பது உலகிற்கு தெரியும்

ஒருவர் போர்க் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டவர்.

இன்னொருவர், வல்லரசுகளுக்கும் பண்க்கார நாடுகளுக்கும்  அடிமையாகி தன்னுடைய நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிராக இருப்பவர் என்று குற்றம் சாட்டப்படுபவர்.

உலகம் எத்தகைய விநோதங்களையும் விபரீதங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். ?

இன்று உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவது குறித்த பேச்சுக்கள் பெரிதாக நடக்கின்றன. ஒவ்வொரு பெரிய நகரத்திலும் அமைதிக் குழுக்கள் ஏற்படுத்தப் படுகின்றன.

மனித வாழ்வில் அமைதிதான் பிரதானமானது என்பதை திருக்குர் ஆனின் பல வசனங்களும் உணர்த்துகின்றன.

 மக்காவை உருவாக்கிய இபுறாஹீம் நபியின் பிராதான பிரார்த்தனை

  وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

ஊருக்குள் குழப்பம் செய்வதை கொலையை விட பெரிய குற்றம் என்றது திருக்குர் ஆன்

 وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ

 இந்த உலகில் அமைதிக்காக உழைப்பது எப்படி என்பதை மிக தெளிவாகவும் சுத்தமாகவும் சொல்லிக் கொடுத்தவர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவார்கள்/\.

அவர்கள் வாழ்ந்த காலம் சிக்கலான ஒரு காலமாக இருந்தது. நீதி கருணை ஆகிய பண்புகள் செல்லாக் காசுகளாக ஆகியிருந்தன. உயர் குலத்திலும் அதிகாரத்திலும்  இருப்பவர்கள் எதை தீர்மாணிக்கிறார்களோ அதுவே நீதியாகவும் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. 

வருடத்தில் நான்கு மாதங்களை அல்லாஹ் போர் நிறுத்த காலம் என்று தொன்மை காலத்திலிர்ந்தே அறிவித்திருந்தான். அது ரஜப் துல் கஃதா துல் ஹஜ் முஹ்ர்ரம் என்பதும் ஏற்கெனவே தீர்மாணிக்கப் பட்டிருந்தது. ஆனால் மக்காவின் மக்கள் தங்களது தேவை களுக்கு ஏற்ப புனித மாதங்களை மாற்றிக் கொள்பவர்களாக இருந்தார்கள். ரஜப் மாதத்தில் யாரையாவது தாக்க வேண்டும் என்று தீர்மாணிப்பார்கள் என்றால் அந்த ஆண்டு ஷஃபான் மாதத்தை புனித மாதம் என்று அறிவித்து ரஜபில் எல்லை மீறுவார்கள்.

திருக்குர் ஆன் இதை கண்டித்தது.

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ

تعني أن تأخير الأشهر الحرم التي حرمها الله تعالى، أو تبديلها، هو زيادة في الكفر والضلالهذا الفعل كان يقوم به بعض العرب في الجاهلية، حيث كانوا يحلون شهراً حراماً ويحرمون شهراً حلالاً

ஒரு சமூகத்தின்  மன நிலை  எப்படி இருந்த்து என்று இது காட்டுகிறது.

அதாவது நீதி என்பது அவர்களது இஷ்டப்படியானதாக இருந்தது. நியாயப்படியானதாக இருக்க வில்லை.

இந்த சூழ்நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த சமூகங்களுக்கு இடையே ஒரு சராசரி அமைதியை அல்ல; பேர் அமைதியை நிலை நாட்டினார்கள்.

தன்னுடைய சொந்த ஊரில் மட்டுமல்ல;அக்கம் பக்கத்திலும் தூரப் பிரதேசங்களிலும் அமைதியை நிலை நாட்டினார்கள்.

அமைதிக்கான பெருமானாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும்

  நபித்துவத்திற்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே  அமைதிக்கான பணியியில் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய 20 வது வயதில்   حلف الفضول

என்ற உறுதி மொழி இயக்கத்தில் பங்கேற்றார்கள்.

கீபி 590 ம் ஆண்டு குறைஷிகளின் பிரதான குடும்பங்களான பனூ ஹாஷிம் பனூ தமீம் பனூ ஜுஹ்ரா ஆகிய மூன்று குடும்பத்தினரில் சிலர் ஒருங்கிணைந்து மக்காவில் இனி யாரும் அநீதிக்கு ஆளாக்கப்படக் கூடாது என்றும் ஒருவே ஒருவருக்கு அநீதி இழைக்கப் பட்டால் அதற்கு தாம் நியாயம் பெற்றுத்தரப்போவதாகவும் உறுதி ஏற்றிருந்த ஒரு இயக்கமே ஹில்புல் புலூல் இயக்கமாகும்.

توافق عليه بنو هاشم وبنو تيم وبنو زهرة حيث تعاهدوا فيه على أن: (لا يظلم أحد في مكة إلا ردوا ظلامته). وقد شهد النبي محمد هذا الحلف قبل بعثته وله من العمر 20 سنة

இளைஞர்களுக்கான ஒரு பெரும் வழிகாட்டுதல் இது.

மக்காவில் பதிலடியில் கவனம் செலுத்தாமை

நபி (ஸல்) அவர்கள் நபியான பிறகு மக்காவின் எதிரிகள் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு துன்பங்களை கொடுத்த போதும் நபி (ஸல்) அவர்கள் திருப்பி தாக்குவது குறித்து சிந்திக்க கூட இல்லை. பொறுமையாக அவற்றை சகித்துக் கொண்டார்கள்.

அமைதியை பற்றியே சிந்தித்தார்கள்.

கப்பாப் ரலி என்ற நபித்தோழர் எதிரிகள் அடித்ததால் முதுகில் ஏற்பட்ட  பிளவோடு வந்து இன்னும் எவ்வளவு காலம் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டார்?

அப்போது பெருமானார் (ஸல்)  வார்த்தைகள் மிகவும் புகழ் பெற்றவை அதில் அமைதிக்கான தேடல் எந்த அளவு இருந்த்து என்பதை புரிந்து கொள்ளலாம்.

شكى خباب إلى النبي ـ صلى الله عليه وسلم ـ ، فقال: ( شكونا إلى رسول الله ـ صلى الله عليه و سلم ـ وهو متوسد بردة له في ظل الكعبة، قلنا له: ألا تستنصر لنا؟ ألا تدعو الله لنا ؟، قال ـ صلى الله عليه وسلم ـ: كان الرجل فيمن قبلكم، يحفر له في الأرض فيجعل فيه، فيجاء بالمنشار فيوضع على رأسه، فيشق باثنتين وما يصده ذلك عن دينه، ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب، وما يصده ذلك عن دينه، والله ليتمن هذا الأمر، حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله أو الذئب على غنمه، ولكنكم تستعجلون ) ( البخاري )

  எதிரிகளை திருப்பி தாக்கி விடக் கூடிய வலிமை படைத்த பலர் முஸ்லிம்களிடம் இருந்தார்கள். அலி , ஹம்ஸா , உமர், ஜுபை ரலி என்று அந்த பட்டியல் நீளும். ஆயினும் அவ்வாறு பதிலடி தர பெருமானார் ஒரு கண்ணசைவில் கூட தூண்டிவிடவில்லை.

ஒரு சின்ன பிரச்சனைக்கே சண்டைக்கு வலிந்து காத்துக்க் கொண்டிருக்கிற சமுதாயமாக இன்றைய மக்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

மக்கள் பெருமானாரின் இந்த நடவடிக்கையை மிக ஆழமாக கவனிக்க வேண்டும்.

ஊருக்குள் எங்காவது ஒரு தீய சக்தி சின்னதாக ஒரு கலவர நெருப்பை பற்ற வைக்கலாம். அதில் சிலருடைய உரிமைகளும் மரியாதையும் பாதிக்கப் படலாம். அத்தக்கய சந்தர்ப்பத்தில் அதே வகையிலான பதிலடி நடவடிக்கையை விட  ஊரின் பொது அமைதியை பற்றி சிந்திப்பதே பெருமானாரின் வழி முறையாகும்.

மதீனாவில் ஒப்பந்தங்களில் கவனம் செலுத்திய நபி (ஸல்)

மதீனா போர்க்கோளம் பூண்டு நிற்க வேண்டுமா ? அல்லது அமைதி வழியில் செல்ல வேண்டுமா என்பதை தீர்மாணிக்கிற அதிகாரம் பெருமானாரிடம் வந்தது. அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதிக்கான வழிகளையே தேர்ந்தெடுத்தார்கள். சொந்த ஊரில் பல்வேறு இன்னல்களை சந்தித்து அகதியாக இன்னொரு ஊருக்கு வந்த நிலையிலும் பெருமானாரின் நடவடிக்கைகள் ஒரு experience personality முதிர்ந்த அனுபவசாலியின் நடவடிக்கைகளாக வெளிப்பட்டன.

 முதலில் மக்கத்து அகதிகளையும் (முஹாஜிர்) மதீனாவின் சொந்த ஊர் மக்களையும் சகோதரத்து பந்தத்தில் இணைத்தார்கள்.

 இந்த சகோதரத்துவம் ஒரு அறிவிப்பின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டது.   

 وثيقة المدينة (أو صحيفة المدينة) التي كتبها النبي محمد صلى الله عليه وسلم لتنظيم العلاقة بين المهاجرين والأنصار في المدينة المنورة

 هـذا كتاب من محمد النبي بين المؤمنين والمسلمين من قريش و أهليثرب ومن تبعهم فلحق بهم وجاهد معهم. - أنهم أمة واحدة.

அது இன்று வரை உலக சகோதரத்துவத்திற்கு ஒரு முன் மாதிரியான எடுத்துக்காட்டாக திகழ்கிறஹ்டு.

நாம் ஒரே சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்து ஊர் மக்களிடையே ஏறபடுத்த வேண்டியது ஒவ்வொரு தலைமையின் முக்கிய கடமையாகும்.  

 அடுத்த்தாக பெருமானார் (ஸல்) பல்வேறு குழுக்களுடன் நல்லிணக்கதிற்கனான ஒப்பந்தங்களில் அவர்கள் ஈடுபாடு காட்டினார்கள்

யூதர்களோடு அவர்கள் எப்படி நடந்து கொள்ள விரும்பினார்கள் என்பதை பெருமானாரின் அறிக்கை காட்டுகிறது .

பனூ அப்வுகளைச் சார்ந்த யூதர்கள் முஸ்லிம்களோடு வாழும் ஒரு சமூகத்தவர் ஆவார்கள். பரஸ்பரம் அறிவுரைகளை வழங்கி நன்மை செய்து கொள்ள வேண்டும். ஒருவர் பாதிப்புக்குள்ளானானால் மற்றவர் உதவ வேண்டும் என பெருமானார் (ஸல் எழுதிக் கொடுத்தார்கள்.

وَأَنْ يَهُودَ بَنِي عَونِي أُمَّةٌ . امَّةٌ مَعَ الْمُؤْمِنِينَ وَأَنَّ بَيْنَهُمْ نَصْحاً و نَصِيحَةٌ وَ بَرًّا دُونَ أَثْمٍ وَأَنَّ النَّصْرَ لِلْمَظْلُومِ

 மதீனாவின் சாஸனம் என்றழைக்கப்படுகிற இந்த சிறப்பு மிகு உடன்படிக்கையில் 52 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன .அவற்றில் 25 முஸ்லிம்களுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்கானது 27 மற்ற சமூகங்களுக்கு இடையே நல்லுறவை பேணுதலுக்கானது.

மதீனாவிற்கு வெளியே

அமைதியை பராமரிக்கும் பெருமானாரின் திட்டம் மதீனாவிற்கு வெளியேயும் நீண்டது.

ஹிஜ்ரீ முதல் வருட்த்திலேயே மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் இருந்த வத்தான் பகுதியில் வசித்த பனு ஹம்ஸா க்களோடு நல்லிணக்க உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

ஹிஜ்ரீ 2ம் வருடத்தில்  بواط   

புவாத சமூகத்தவரோடு  உடனபடிக்கை செய்து கொண்டார்கள்.

சண்டைகளில் சமாதான மோகம் 

 பெருமானார் (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் பல சண்டைகளை ஈடுபட நேர்ந்தது என்பது வாஸ்த்தவம் தான் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அவர் மீது தொடுக்கப் பட்டவை ஆகும். பலது சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கானது ஆகும்.

மிக நியாயமாக வரலாற்றை வாசிக்கிற எவரும் இதை புரிந்ந்து கொள்ள முடியும்

பத்று யுத்ததில் கைதியாக கிடைத்த 70 பேரை விடுதலை செய்வது என பெருமானார் (ஸல் ) முடிவு செய்தார்கள். அவர்களில் சிலரால் பணம் கொடுக்க முடியாத போது 10 மதீனா குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று அறிவித்தார்கள்

உஹது யுத்த்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் கடுமையாக தாக்கப் பட்டார்கள். அதற்கு காரணமான எதிரிகளை சபிக்குமாறு சிலர் கேட்டுக் கொண்ட போது “நான் சாபமாக அல்ல; வரமாக அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்கள்

قِيلَ: يا رَسُولَ اللهِ، ادْعُ علَى المُشْرِكِينَ قالَ: إنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وإنَّما بُعِثْتُ رَحْمَةً.

الراويأبو هريرة | المحدثمسلم

 ஹுதைபிய்யாவில்

பெருமானாரின் வரலாற்றில் அமைதிக்கான திட்டங்கள் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதற்கு ஒரு முக்கிய எடுத்துக் காட்டு ஹுதைபிய்யா உடன்படிக்க்கயாகும்.

இந்த ஆண்டு உம்ரா செய்யக் கூடாது. திரும்பிச் சென்று விட வேண்டும். அடுத்த ஆண்டு 3 நாட்கள் அனுமதிக்கப்படும்.

எங்களது மக்கத்து ஆட்கள் உங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விட வேண்டும் உங்களது ஆட்கள் இங்கு வந்தால்  திருப்பி அனுப்ப மாட்டோம்.

இனி 10 வருட்த்திற்கு சண்டை கூடாது

என்ற நிபந்தனைகள் அனைத்துக்கும் பெருமானார் (ஸல்)அவர்கள் கட்டுப்பட்டார்கள்.

அதில் அல்லாஹ் பெருமானாருக்கு மாபெரும் வெற்றியை வைத்திருந்தான்.

திருக்குர் ஆன் அப்போது கூறியது.

إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا 

 மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது

 மக்காவை வெற்றி கொள்ளூம் பயணத்தின் போது மக்கா மக்களின் இதயங்களை கொதிப்படைய வைக்கும் வேலை எதையும் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்ய வில்லை.

 மக்காவுக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அமைதிக்கான அறிவிப்பை செய்தார்கள்.

 தமது வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர்களுக்கு அடைக்கலம்  என்றார்கள்.

 மதீனாவின் ஒரு படைத்தளபதியான ஸஃது பின் உபாதா ரலி அவர்கள் மக்காவிற்குள் நுழையும் போது: இன்று சண்டை நாள் குறைஷிகள் இழிவு படுத்தப்படும் நாள் என்று கவி பாடினார். இதை அறிந்த பெருமானார் (ஸல்_) அவர்கள் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த கொடியை திருப்பி எடுத்துக் கொண்டு அவருடைய பொறுப்பை அவருடைய மகன் கைஸ் பின் சஃது ரலி அவர்களிடம் கொடுத்து விட்டு. இன்று கருணை வெளிப்படும் நாள். குறைஷிகள் மதிப்புறும் நாள் என்று சொன்னார்கள்.  .

 اليوم يوم المرحمة. اليوم يوم تعظم فيه الكعبة، اليوم يوم أعز الله فيه قريشاً

 மக்கா வெற்றியின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கா மக்களின் இதயங்களை கொதிக்க செய்யும் Heart Burning எதையும் செய்யவில்லை. அவர்கள் நிம்மதி அடையச் செய்யும் cool down வேலைகளையே செய்தார்கள்.

 இறுதியில் அவர்கள் அனைவரையும் மன்னித்தார்கள்

 மக்கா வெற்றிக்கு பிறகு பெருமானாருக்கு ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு நடை பெற்ற ஹுனைன் யுத்த்தில் பெருமானாருக்கு ஏராளமான கைதிகள் கிடைத்தார்கள். பெருமானாருக்கு பால் கொடுத்த ஹலீமா சஃதிய்யா அம்மாவின் மகள் வந்து கேட்டுக் கொண்ட போது அவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்தார்கள்.

 உலக வரலாற்றில் சண்டைகள் ஒரு தொடர் கதையானது எப்போது என்று தேடிப் பார்த்தீர்களானால் ஒரு காரியத்தை நிச்ச்யமாக உணர்வீர்கள்.

தோற்றுப் போனாவர்கள் இழிவு படுத்தப் பட்டிருப்பார்கள்

 முதல் யுத்த்தில் தோற்றுப் போன ஜெர்மனியை உலக நாடுகள் இழிவு படுத்தின. அது தான் இரண்டாம் உலக யுத்ததிற்கு காரணமாக அமைந்தது

 இந்த வகையில் யோசித்துப் பார்க்கிற போது பொருமானார் (ஸல்) அவர்களது நடவடிக்கை அரபுலகின் அமைதியை பேணுவதற்கு எந்த வகையில் உதவியது என்பதை புரிந்து கொள்ளலாம்.

  நபி (ஸல்) அவர்கள் நேரடி எதிர்களோடு மட்டுமல்ல்; மறைமுக துரோகிகளாக இருந்த முன்பாபிக்களிடம் நடந்து கொண்ட விதம் கூட அவர்களது அமைதி திட்டத்திற்கான சிறப்பான நடவடிக்கைகளாகவே இருந்தன. யார்  இப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்கு மிக நெருக்கமான தோழர்களிடம் கூட அவர்களை பற்றி கூற வில்லை. வெளிப்படையாக அவர்களுக்கு தர வேண்டிய மரியாதையை கொடுத்தார்கள்.

 அரபு நாட்டுக்க் வெளியே அகில உலகுக்கும்

 நபி (ஸல்_ அவர்கள் தனது வெற்றியின் நிறைவில் – ஹஜ்ஜத்துல் விதாவின் போது வெளியிட்ட ஒரு அறிவிப்பு அதிக சிறப்பிற்குரியது. சர்வதேச அமைதியை நிலைநாட்டுவதில் மதிப்பு மிக்கது

 மக்கள் ஒவ்வொருவரின் உயிருக்கும் உடமைகளுக்கும் மட்டுமல்ல மானத்திற்கும் மரியாதைக்கும் கூட உத்தரவாதம் கொடுத்தார்கள் /   

 

وعنْ أَبي بكْرةَ t أنَّ رسُول اللَّه ﷺ قَالَ في خُطْبتِهِ يوْم النَّحر بِمنىً في حجَّةِ الودَاعِإنَّ دِماءَكُم، وأمْوالَكم وأعْراضَكُم حرامٌ عَلَيْكُم كَحُرْمة يومِكُم هَذَا، في شهرِكُمْ هَذَا، في بلَدِكُم هَذَا، ألا هَلْ بلَّغْت متفقٌ عَلَيهِ.

 தற்காலத்தில் அமைதிக்காக உழைக்கிறோம் என்று சொல்லி மக்களின் உயிரையும் உணர்வையும் பறிக்கிற வேலைகளில் தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்.

மிக வேடிக்கையாகவும் முரண்பாடாகவும் இருக்கிறது.

இன்றய ஒரு செய்தியை பாருங்கள்

ஆன் லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்த நடிகள் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடர்ந்திருக்கிறது

என்ன விந்தை பாருங்கள்?

அரசு தான் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்கிறது. அரசு தான் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்கிறது. அரசு நினைத்தால் ஒரு நிமிட்த்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து  விடலாம். முத்தலாக்கிற்கு மூன்று வருடம் தண்டனை கொடுத்தவர்கள் இதற்கு குறைந்த்து 30 வருடமாவாது தண்டனை வழங்கலாம். ஆனால் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கிற வேலையை அரசுகள் செய்கின்றன,

இது ஆத்மார்த்தமான பணியல்ல

 இது போல முன்னுக்குப் பின் முரணான வேடிக்கையான விகாரமான செயல்கள் அமைதியை பேணும் நடவடிக்கையில் ஒரு போதும் உதவாது. 

அமைதிக்காக உழைப்பது என்பது நமது சிந்தனை முழுவதிலும் ஆட்கொண்டிருக்க வேண்டும்.

 நீதி நிலைக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும்

பழி வாங்குதல் உணர்வு தலை தூக்க கூடாது

 மன்னிக்கவும் பிறரை மதிக்கவும் தெரிய வேண்டும்.

 வெறுப்பு வன்மம் வெளிப்படுகிற சொற்களுக்கோ செயல்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது. அப்படி வெளிப்படும் எனில் அது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

நன்மைக்காக பணிந்து போகவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக வேண்டும்  

அச்சுறுத்தல் மிரட்டல் வழி வகைகளை கையாளக் கூடாது.  

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைதியை நிலை நாட்ட கையாண்ட வழிகளாகும்.

 நமது வாழ்வில் நாம் இந்த பண்புகளை கடைபிடிப்போம். 

உலகத் தலைவர்களுக்கு அல்லாஹ் இந்த பண்புகளை வழங்கி நேர்வழிப்படுத்துவானாக

No comments:

Post a Comment