வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 21, 2025

நாய் வளர்ப்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

சமீப சில நாட்களாக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நமது நாட்டின் நீதிமன்றங்கல் தெருநாய்களை கட்டுப்படுத்தி வைப்பது தொடர்பான கடும் உத்த்ரவுகளை கூறிவருகின்றன. சாதாரணமாக தெருக்களில் நடந்து செல்கிற மக்களுக்கு அவை மிகப் பெரும் நிம்மதியை அளித்து வருகிறது.

விலங்கு நல ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் நாய்களை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பெரும் தடையாக இருந்தன. எங்காவது வெறி நாய்கள் கொல்லப்படுமானால் அதை மனிதப் படுகொலைகளை விட பெரிய குற்றமாக சித்தரித்தனர். ஒரு காலத்தில் வெறி நாய்களை விரட்டியோ விஷம் வைத்தோ அழித்த மக்கள் இந்த நாடகத்தனமான ஆர்வலர்களின் செயல்பாட்டால் நாய்களுக்கு இடையூறு செய்ய பயந்தார்கள்.

இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை எங்கும் கூட்டம் கூட்டமாக அதிகரித்தது. அதன் தொல்லையும் அதிகரித்தது. ஏராளமானோர் பாதிப்படைந்தனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 3 லட்சத்து 67 ஆயிரத்து 604 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 பேர் நாய்கடியால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடியால் 4,41,804 பேர் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர். (தினகரன் 13-08.2025)

நம் இந்தியாவில் ஆண்டு தோறும் ஏற்படுகிற உயிரழப்புக்களில் கனிசமானது தெரு நாய்க் கடியால் ஏற்படும் உயிரழப்புகளினால் ஆகும்

அந்த உயிரழப்புகளின் வரலாறு மிக சோகமானது.

கோவையில் கரும்புக்கடை பகுதியில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்தது

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரில் வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒண்ணரை வயது குழந்தையை நாய் கடித்து குதறிய செய்தி நேற்று வெளியானது.

இந்த மாதம் ஆகஸ்ட் 19 ம் தேதி நக்கீரன் பதிரிகையில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்க கூடியது.

சேலம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை அவர் வளர்த்த நாயே கடித்து குதறியது. அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தண்ணீர் குடிக்க முடியாத நிலைக்கு சென்று அவர் உயிரிழந்துள்ளார்.

இதே போன்ற ஒரு நிகழ்வு நேற்றைக்கு முன் தினம் சென்னையிலும் நடந்துள்ளது

சென்னை ஜாபர் கான் பேட்டை பகுதியை சார்ந்த கருணாகரன் என்பவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர் பூங்கொடி என்பவர்  வளர்ந்து வந்த பிட்புல் என்ற வெளிநாட்டு ரக  நாய் கடித்துள்ளது. தடுக்க முயன்ற பூங்கொடியையும் அந்த நாய் கொடூரமாக கடித்துள்ளது. சுற்றி இருந்த  மக்கள் செய்வதறியாமல் தவித்து நாயை அடித்து விரட்டி உள்ளனர். கருணாகரன் உயிரிழந்து விட்டார்.

 பிந்திய இரண்டு நிகழ்வுகளும் வளர்ப்பு நாய்களால் சமீபத்தில் ஏற்பட்டுள்ளவை என்பதை கவனிக்க வேண்டும்.

 ரேபிஸ்.

தமிழ் நாட்டில் இப்படி என்றால் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேர் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ்  தொற்றால் இறக்கின்றனர்

இது உலகில் மிக அதிகமாகும். உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் என்பது மிக கொடூரமானது.

ரேபிஸ் நோயுக்கு ஆளானாவர் நாயை போலவே கடும் ஆக்ரோஷம் கொண்டவராக மாறுவார். தாகம் எடுக்கும் போது தண்ணீர் கொடுத்தால்  தண்ணீரை கண்டு  பயந்து ஓடுவார்கள். இதில் எளிதில் மரணம் சம்பவித்து விடும். ரேபிஸ் என்பதற்கான மருத்துவ விளக்கமே தண்ணீர் பயம் என்பது தான்.

இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தண்ணீர் குடிக்கும் எண்ணம் வந்தாலே கழுத்திலுள்ள தசைகள் இறுகிக் கொள்ளும் அது கடும் வலியை கொடுக்கும் என்கிறது விக்கீபீடியா.

ரேபிஸ் நோயை பற்றிய மற்றொரு அச்சம் தரக் கூடிய செய்தி என்ன வென்றால்

நாய் கடித்த உடன் சில நேரங்களில் அது வெளியே தெரியாது. ஆறு மாதங்கள் கழித்து கூட அதன் அறிகுறிகள் தெரியலாம் என்பதாகும்

அதமட்டுமல்ல பக்கவாதமும் சுய நினைவை இழப்பதும் மரணமும் இதன் அடுத்தடுத்த அரிகுறிகளாகும்.

ரோபிஸ் நோயை பற்றி மருத்துவர்கள் சொல்லும் ஒரு சிறு குறிப்பு அதை பற்றி நாம் ஏன் பயப்பட வேண்டும் என்பதற்கு போதுமானது.

ரேபிஸ் நோய் ஒரு தீவிரமான நோய் மற்றும் அறிகுறிகள் தோன்றிய பின் சிகிச்சை செய்வது மிகவும் கடினம் என்கிறார்கள் மருத்துவர்கள்

உயிரிழப்புகளுக்கு அப்பால் தெரு நாய்களால் ஏற்படும் வேறு வகையான தொல்லைகளும் அதிகம்.

 குழந்தைகளும் பெண்களும் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்

 சிறிய குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் வீடு திரும்புவதற்கும் தெருநாய்களின் தாக்குதலை அதிகம் பயப்பட வெண்டியிருக்கிறது.

 வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள், மற்றும் நடந்து செல்வோர் கடை வீதிகளுக்கு செல்வோர் தீடீர் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

 இருசக்கர வாகன ஓட்டிகள் தெரு நாய் தாக்குதலாலும் நாய்கள் திடீரென குறுக்கே வருவதாலும் பெரும் விபத்துக்களில் சிக்குகின்றனர்.

 இரவு நேரங்களில் தெருக்களில் ராஜாங்கம் செய்யும் நாய்களின் குறைபு சத்த்ததினால் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகின்றனர். உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

பிபிஸி நிறுவனத்திற்கு ராஜேஸ்வரி என்பவர் அளித்த பேட்டி இயல்பானது. விலங்கு நல ஆர்வலர்கள் கூட கவனிக்க வேண்டியது.

தினமும் வழக்கமாகப் பார்த்த நாய் திடீரென ஒருநாள் என்னை கடித்தது. எந்த நாய் இயல்பாக இருக்கிறது, எந்த நாய் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதே கடினமாக உள்ளது. அப்போதிலிருந்து தெரு நாய்களைப் பார்த்தாலே ஒரு பதற்றம் ஏற்படுகிறது. குடியிருப்பு மக்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமெனில் கட்டாயம் தெரு நாய்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்கிறார் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி.

நாடு முழுக்க பரவி வந்த  இந்த விவகாரத்தில் விலங்கு நல ஆர்வலங்களின் போலித்தனமான ஜீவ காருண்ய போராட்ட்த்திற்கு பயந்து பலரும் மெளனமாக இருந்தனர்.

நாட்டின் தலை நகர் தில்லியில் தெருநாய்களின் தொல்லை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தது.

நாட்டின் சாமாணிய குடிமக்களின் அன்றாட வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த இந்த நாய்த் தொல்லை தொடபார்க பலரும் பேச பந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு இதற்கு தீர்வு காண முன் வந்துள்ளது பாராட்டிற்குரியது . சாமாணிய மக்களுக்கு பெரும் நிம்மதியளிக்க கூடியது.

ஆகஸ்ட 11 ம் தேதி உச்சநீதிமன்றம் தில்லியின் தெருக்கலிலிருந்து தெரு நாய்களை அகற்று மாறு உத்தரவிட்டிருந்தார். தெரு நாய்களை பிடிக்க யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தியாவில், ஒவ்வொரு முக்கிய பிரச்சினையும் தவிர்க்க முடியாமல் உச்ச நீதிமன்றத்தில் முடிவெடுக்கிறது. அந்த வகையில் உள்ளூர் நகராட்சி அமைப்புகளால் கவனிக்கப்பட வேண்டிய தெருநாய்கள் பிரச்சினையில் கூட நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை தலையிட்டுள்ளது.

உண்மையில் இது ஒரு ஆச்சரியமான தலையீடாகும். உச்சநீதிமன்றம் இவ்வளவு வலுவாக பேசியிருக்காவிட்டால் இப்படி சொல்வது ஒரு பாவம் என்பது போல இந்தியாவில் உள்ள உயர்தர வர்க்கம் சித்தரித்திருக்கும்.

இப்போதும் கூட மீடியாக்களில் இது ஒரு பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மேதமை நீதிபதிகளுக்கும் இந்திய பொதுமக்களுக்கும் நாய்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை நினைவூட்டுவது பொருத்தமானது.

உலகில் நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிக தொன்மையானது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 400 வருடங்களுக்கு முந்தை குகைத் தோழர்களின் வரலாற்றை பேசுகிற திருக்குர்ஆன் தங்களது மார்க்கத்திற்காக ஊரை விட்டு வெளியே சென்ற இளைஞர்களுடன் ஒரு நாயும் இணைந்திருந்தது   என்று குர்ஆன் சொல்கிறது.

 وَكَلْبُهُم بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ ۚ

அவர்களது நாய் முற்றத்தில் காலை விரித்து படுத்திருந்த்து என்ற இந்த சொல்லாடலில் அந்த நாய் குர் ஆனில் இடம் பெற்று விட்டது.

 

இந்த செய்திக்குப் பின்னே பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் பிரதானமானது

நாயுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு தொன்மையாது.

நாய் வெறுக்கப்படுகிற ஒரு பிராணி அல்ல

நாய் ஐன் நஜீஸ் அல்லஅதாவது நாய் மேலே உரசினாலே அது நஜீஸ் அல்ல; அதனுடைய எச்சில் தான் நஜீஸ் என்பது ஹனபீ மதஹபின் சட்டமாகும். ஆனால் ஷாபி மத்ஹபில் நாய் ஐன் நஜிஸ் என்ற சட்டம் இருக்கிறது.

நாய் வீடுகளுக்குள்ளே அனுமதிக்கப் படக் கூடாது.

நாய் பாதுகாப்பிற்காக வெளியே நிறுத்தபடுவது ஏற்புடையது.

நாய் மீது கருணை

உயிர்ப் பிராணிகளை வளர்த்து வோர் அதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு முஹம்ம்து நபி (ஸல்) அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

அதே அடிப்படையில் நாயாக இருந்தாலும் அதன் பசிக்கும் தாகத்திற்கும் பொறுப்பேற்க பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

 أن رجلا رأى كلبا يأكل الثرى من العطش، فأخذ الرجل خفه فجعل يغرف له به حتى أرواه، فشكر الله له فأدخله الجنة

நாய் மீது கருணை காட்டுவது ஏற்புடையது

அதே நேரம் நாயை செல்லப்பிராணியாக வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது ஏற்புடையது அல்ல என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

நாய் செல்லப்பிராணியா ? 

இன்று வீட்டுக்குள் வைத்து  நாய் வளர்ப்பது என்பது மற்ற சமூகங்களில் மிக சாதாரணமான ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. நாயிக்காக தனி படுக்கை அறை கட்டிக் கொடுத்தவர்களும் ஏஸி அமைத்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்காக தனி வேலையாள் வைத்துக் கொள்பவர்களும் உண்டு.

சிலர் கல்யாணம் கூட செய்து கொள்வதில்லை நாயை சிறந்த கம்பானியன் துணையாக கருதுகிறார்கள்.

இவ்வாறு நாயை செல்லப்பிராணியாக வீட்டுக்குள் வைத்து வளர்க்க் கூடாது என்று முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

இது உலகை இன்றும் வியக்க வைக்கிற செய்தியாகும். நாயை வெறுக்க வில்லை. அதே நேரம் நாய் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது.

சொந்த குழந்தைகளை கூட வளர்க்க விரும்பாத மேற்கத்திய உலகம் நாயை பாத்ரூமுக்கு அழைத்து செல்வதில் அதிக அக்கறை காட்டுகிறது. ஒரு எதார்தத்தில் அவர்கள் எதார்த்த வாழ்வை தொலைத்து விட்டு ஆகாயத்தில் கோட்டை கட்டுகிற போலியானவர்கள் ஆகும். நாயை குழந்தை அளவுக்கு கவனிக்குக் கொள்ள வேண்டியதில்லை என்ற கருத்தோட்டமே அவர்களின் நாய் மீதான  பாசத்திற்கு காரணமாகும்.  

வெளிநாடுகளை பெறுத்து நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களின் நாய் பற்றிய  கருத்தும் இதன் அடிப்பட்டயில் முஸ்லிம் சமூகம் வாழ்வதும்  அதிக ஆச்சரியப்படுத்தும் செய்திகளாகும்.

ஒரு அறிஞன் ஆச்சரியப்படுகிறான்.

இதென்ன ஒரு நபர் நாயை வெறுத்தார் என்பதற்காக ஒரு சமூகமே அதை ஒதுக்கி வைத்திருக்கிறதே என்று

அது தான் உண்மை. முஸ்லிம் சமூதாயம் நாயை செல்ல பிராணியாக வளர்ப்பதில்லை. வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்களில் நாயுக்கு என்று ஒரு தனி ஏரியா இருக்கிறது என்றால் புருணை போன்ற முஸ்லிம் நாடுகளில் பூனைக்கு என்று ஒரு தனி ஏரியா இருக்கிறது.

கொச்சிக்கு அருகில் இருக்கிற  லட்சத்தீவில  மக்களை அழைக்கிற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சொல்வார்கள்.  இந்த தீவில் நீங்கள் நிம்மதியாக எங்கும் உலாவலாம் ஏனெனில் இங்கு நாய்கள் கிடையாது.  

முஹம்மது நபியின் சொல் 14 நூற்றாண்டுகளை கடந்தும் செல்வாக்கு செலுத்து செய்திகளில் ஒன்று இது.   

قال رسول الله -صلى الله عليه وسلم-: (لَا تَدْخُلُ المَلَائِكَةُ بَيْتًا فيه كَلْبٌ ولَا صُورَةٌ

ن مَيمونةَ رَضِيَ اللهُ عنها((أنَّ رسولَ الله صلَّى اللهُ عليه وسلَّم أصبح يومًا واجمًا، فقالت ميمونةُ: يا رسولَ الله، لقدِ استنكرتُ هيئتَكَ منذُ اليوم! قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: إنَّ جِبريلَ كان وَعَدني أنْ يلقاني اللَّيلةَ فلمْ يَلْقَني، أمَ واللهِ  ما أخلَفَني، قال: فظلَّ رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم يَومَه ذلك على ذلك، ثم وقَع في نفْسِه جِرْوُ كَلبٍ تحت فُسطاطٍ لنا، فأمَر به فأُخرِج، ثمَّ أَخَذ بِيَدِه ماءً فنَضَحَ مكانَه، فلمَّا أمسى لقِيَه جبريلُ، فقال له: قد كنتَ وعَدتَني أنْ تلقاني البارحةَ، قال: أجَلْ، ولكنَّا لا ندخُل بيتًا فيه كلبٌ ولا صُورةٌ

ஜிப்ரயீல் அலை தான் உள்ளே வரவில்லை என்ற சொல்லுக்குப் பின்னால் நாய்களை வீட்டிற்குள் வைத்துக் கொள்ள எந்த முஸ்லிம் சம்மதிப்பார் ?

நாய் ஏன் அனுமதிக்கப்பட வில்லை?

அதன் எச்சில் மிக ஆபத்தானது. அது எந்த நேரத்தில் கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.

عن أبي هُريرةَ رَضِيَ اللهُ عنه قال: قال رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم((طُهورُ إناءِ أحَدِكم إذا وَلَغ فيه الكَلبُ: أنْ يَغسِلَه سَبْعَ مرَّاتٍ، أُولاهُنَّ بالتُّرابِ

நாய்க்கடியால் ஏற்படுகிற ரேபிஸ் நோய் தொற்றின் ஆபத்து பற்றி நாம் பார்த்தோம்.

ரேபிஸ் நோய் நாயின் எச்சில் வழியாகவே  பரவுகிறது.

நாய்க்கடியின் எச்சியில் இருக்கிற பாக்டீரியாக்களை மண்ணால் மட்டுமே சுத்தப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறர்கள்

பாதுகாப்பிற்காக வீட்டிற்கு வெளியே நாய்களை வைத்துக் கொள்வது அனுமதிக்கப் பட்டது அந்த நேரத்திலும் இந்த கட்டுப்பாடு கவனிக்கப் பட வேண்டும்.

பாதுகாப்பற்று நாய் வளர்த்தால் நன்மை குறையும்

கால் நடை பாதுகாப்பதற்காகவோ வேட்டைக்காகவோ வளர்க்கப்படுகிற நாய்களை தவிர மற்ற நாய்களை வைத்திருந்தால் நன்மை குறையும்/

قال رسول الله -صلى الله عليه وسلم-: (أَيُّما أهْلِ دارٍ اتَّخَذُوا كَلْبًا، إلَّا كَلْبَ ماشِيَةٍ، أوْ كَلْبَ صائِدٍ، نَقَصَ مِن عَمَلِهِمْ كُلَّ يَومٍ قِيراطانِ
இந்த நபி மொழி பயிற்று விக்கப் பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களில் ஆர்வம் காட்டக் கூடாது என்ற செய்தியை சொல்கிறது.

நாய் மக்களை போலவே இந்த உலகில் வாழும் ஒரு இனம் என்பதை ஒப்புக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மிகச்சரியான எச்சரிக்கைகளை செய்தார்கள்.

قال رسول الله -صلى الله عليه وسلم-: (لولا أن الكلابَ أمةٌ من الأممِ لأمرتُ بقتلِها، فاقتلوا منها الأسودَ البهيمَ، وأيُّما قومٍ اتخذوا كلبًا ليس بكلبِ حرثٍ ، أو صيدٍ ، أو ماشيةٍ ، فإنه ينقصُ من أجرهِ كلَّ يومٍ قيراطٌ

கருப்பு காட்டு நாய்கள் என்பது பாதுகாப்பற்ற நாய்களை குறிக்கிறது.

பாதுகாப்பற்ற நாய்கள் ஆபத்தை விளைவிக்க கூடியவை. அவைகள்

அழிக்கப்பட வேண்டும்.

في "صحيح مسلم" عن عبد الله بن مسعود -رضي الله عنه- قال كان رسول الله -صلى الله عليه وسلم- يأمر بقتل الكلاب، فننبعث في المدينة وأطرافها، فلا ندع كلباً إلا قتلناه، حتى إنا لنقتل كلب المُرَيَّة -تصغير امرأة- من أهل البادية يتبعها.

மக்களை அச்சுறுத்தும் நாய்களை விலங்குள் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பது  மனிதர்களுக்கு செய்யும் அநீதியாகும்.

 சென்னை மாநகராட்சி இந்த வகையில் நாய் வளர்ப்போர் நாய்களுக்கு முகமூடி அணிந்து தான் வெளியே விட வேண்டும் . இல்லை எனில் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருப்பது  இந்த வகையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு நல்ல முதல் நடவடிக்கை ஆகும். 

 பொறுப்பாக பேணிப்பாதுகாக்க ஆளில்லாத நாய்களை முகாம்களில் அடைத்து வைப்பதே சரியானது. இல்ல்ல எனில் அவற்றை அழித்து விடுவது முறையானது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய்களை பற்றி கூறிய கருத்துக்கள் நாய் என்ற இனத்திற்கு எதிரானது அல்ல; அதன் மீதான கருணைக்கு எதிரானது அல்ல; மிக மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தக் நாய்களிடமிருந்து மனித சமூகத்தை பாதுகாப்பதற்கானது.

 ஆயிரத்து நானுறு ஆண்டுகளுக்குப் பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் கிடைக்கிற ஆலோசனைகளை உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலகின் உன்னத வழிகாட்டியான முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளை நாய்களை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்ன அறிவுரையை நாம் உலகிற்கு மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வோ.

நமது பகுதிகளில் தெருநாய்கள் பாத்காப்பற்று  வலம் வருவதை தடுப்பதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம். அது பெருமானாரின் வழிகாட்டுதலை பின்பற்றியதாக அமைகிற அதே நேரத்தில் நமக்கு பாதுகாப்பானதாகவும் அமையும்

  பெருமானாரின் பிறந்த நாள் நெருங்குகிறது என்றும் வழிகாட்டுகிற நம் தலைவரை எங்கும் நாம் நினைவு கூர்வோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாகQ

 

 

 

 

 

No comments:

Post a Comment