கேரளாவின் மூத்த
ஆலிம் பெருந்தகையும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆதரவற்றோர் நிலையங்களையும்
உருவாக்கியவருமான ஏபி அபூபக்கர் முஸ்லியார் அவர்கள்: சமீபத்தில்
பெண்கள் தங்களது
வீடுகளுக்கு இருக்க வேண்டும் தேவையற்று பொது வெளிகளில் தலை காட்டக் கூடாது என்று
திருக்குர் ஆன் கூறியிருக்கிறாது என்றார்
சமீபத்தில்
கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை ஒட்டி முஸ்லிம் இளம் பெண்கள் பாட்டுப்பாடி
ஆட்டம் போடும் சில வீடியோக்கள் வெளியாகியதை ஒட்டி முஸ்லிம் பெண்களுக்கு
வழிகாட்டுவதற்காக ஏபி உஸ்தாத் இந்த கருத்தை கூறியிருந்தார்.
இதை கேரள அளவிலும்
தேசிய அளவிலும் ஊடகங்கள் ஊதிப் பெருதாக்கி 21 ம் நூற்றாண்டுக்கு பெருத்தமற்றது
என்றும் இது இஸ்லாமே அல்ல என்றும்
இஸ்லாமின் முதல் பெண்மணி கதீஜா ரலி ஒரு வியாபாரியாக இருந்தார் என்றும் ஆயிஷா ரலி
ஒரு போருக்கு தலைமை தாங்கினார் என்றும் எனவே பெண்களின் சுதந்திரமான
வெளிப்பாட்டுக்கு எந்த தடையும் போடக் கூடாது என்றும் கடந்த ஒரு வார காலமாக கதறிக்
கொண்டிருக்கிறார்கள்.
நாம் இந்த ஜும் ஆ
உரையின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
பெண்கள்
தேவையிருந்தால் வெளியே செல்ல்லாம். இல்லை எனில் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க
வேண்டும். கண்மூடித்தனமாக ஊர் சுற்றக் கூடாது என்பது திருக்குர் ஆனின்
கட்டளையாகும்.
இந்த கருத்தை
எதிர்ப்பவர்கள் குர் ஆனை எதிர்க்கிறார்கள் என்பதே பொருளாகும்.
குர் ஆனை ஒத்துக்
கொள்பவர்கள் இதை ஒத்துக் கொண்டாக வேண்டு.
திருக்குர் ஆன்
பெண்களுக்கு கூறுகிற பிரதான அறிவுரை இது.
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ
الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ
அவர்கள் வீடுகளில் இருக்கட்டும். அறியாமை காலத்து பகட்டோடு வெளியே திரிய வேண்டாம்.
அறியாமை காலத்து பகட்டு என்றால் மார்க்கம் இல்லாத மக்கள் எப்படி
வெளியே சுற்றுகிறார்களோ அது போல சுற்ற வேண்டாம். நமக்கு ஒரு மார்க்கம் இருக்கிறது.
அதன் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வோடு வெளியே அவர்கள் நடந்து கொள்ள
வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.
தப்ஸீர் ச அதி இதை விளக்குகிறார்.
كعادة أهل الجاهلية الأولى، الذين لا علم عندهم
ولا دين
இது மட்டுமல்ல இதற்கு முந்தைய வசனம் கூறுகிறது.
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي
قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا (32)
குழைந்து
பேசாதீர்கள் . வெளிப்பட்டயாக பேசுங்கள் என்பது போன்ற இந்த வழிகாட்டுதல்கள் தீனை
கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிற குடும்பங்களுக்கு மிக அவசியமானதாகும் .
இந்த
வழிகாட்டுதல்கள் அனைத்தும் பெண்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்காக அல்ல; அவர்களை
பாதுகாப்பதற்காகவே சொல்லப் பட்ட உத்தரவுகளாகும்.
பாதுகாப்பு என்பது
வெறும் உடலுக்கு மட்டுமல்ல மானம் மரியாதைக்குமான பாதுகாப்பாகும்.
ஒரு உதாரணத்திற்கு
நாலுக்கு பேருக்கு தெரிகிற மாதிரி பொது இடங்களில் ஆடிப்பாடுகிற பெண்கள் கவனிக்க
வேண்டும். அவர்களை புகைப்படம் எடுக்க பலர் காத்திருக்கிறார்கள். ஆண்கள் ஆடினால்
அது அவ்வளவு எளிதில் கவர்சியாகாது. ஆனால் பெண்கள் சிறிதாக அசைந்தாலே அது
கவர்ச்சியாக அமையும். இந்த கவர்ச்சியின் வெளிப்பாடு ஒரு நேரம் அல்லது ஒரு
நேரத்தில் பிரச்சனை ஆகிவிடுவதுண்டு.
இவ்வளவு தூரம்
நாகரீகமும் சுதந்திரமும் வளர்ந்து விட்ட்தாக சொல்லப்படுகிற காலத்தில் தான் பெண்கள்
பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்திருக்கிறது.
ஆகஸ்ட் 30 ம் தேதி
நம் நாட்டையே உலுக்கிய செய்தி இது
சென்னை
கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஹைஅதுன் நிஸா என்ற 45 வயது பெண்ணை படு கொலை செய்து
சூட்கேஸில் வைத்து அடைத்து ஆக்ரா செல்லும் ரயில் அனுப்பியிருக்கிறார்கள். இத்
தொடர்பாக மாணீக் உத்தின் என்பவர் கைது செய்யப் பட்டிருக்கீறார். அந்த பெண்
ஏமாற்றப்பட்டு தவறான உறவுக்கு ஆட்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இது போல ஒன்றல்ல
இரண்டல்ல பல ஆயிரம் மோசடிகள் பெண்களுக்கு எதிராக அனறாடம் நிகழ்கின்றன.
இந்த ஆபத்துக்கள்
சில நேரங்களில் சாமாணிய ஒரு குற்றவழக்காக மட்டும் கடந்து போய் விடும் சில
நேரங்களில் பெரும் சமூக பதற்றத்துக்கும் ஆளாகும்.
பெண்கள் விவகாரம்
என்பது அப்படித்தான்.
மதீனாவில் பனூ கைன்காஃ என்ற ஒரு யூதக் குழு இருந்த்து. அதில் ஒருவன்
செய்த தவறு அந்த சமூகத்தையே மதீனாவை விட்டு வெளியேற்றியது.
அன்சாரிகளின் ஒரு பெண் அவர்களது
கடைப்பக்கம் வந்த போது அப்பெண்ணை அவன் மான பங்கப்படுத்தினான். அதை கண்டு
ஆத்திரமுற்ற ஒரு முஸ்லிம் அவனை கொலை செய்தார். யூதர்கள் ஒன்று திரண்டு அந்த முஸ்லிமை
கொலை செய்து விட்டார்கள். இதனால் பெரும் சமூகப் பதற்றம் உருவாகியது. இறுதியி அந்த
யூதக் குழுவை மதீனாவை விட்டு வெளியேற்ற வேண்டிதானது.
كان من أمر بني قينقاع أن امرأة من العرب
قدمت بجلب لها فباعته بسوق بني قينقاع وجلست إلى صائغ بها فجعلوا يريدونها على كشف
وجهها فأبت فعمد الصائغ إلى طرف ثوبها فعقده إلى ظهرها فلما قامت انكشفت سوءتها
فضحكوا منها فصاحت، فوثب رجل من المسلمين على الصائغ فقتله، وكان يهودياً فشدت
اليهود على المسلم فقتلوه، فاستصرخ أهل المسلم المسلمين
على اليهود، فغضب المسلمون فوقع الشر بينهم وبين بني قينقاع.
ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து ஒரு சமூகத்திற்கே ஆபத்தாக முடிந்த்து. எனவே பெண்களின் பாதுகாப்பு என்பது சாமாணிய மானதல்ல/ ஒருவர் மட்டுமே சம்பந்தப் பட்ட்தும் அல்ல; சமூகம் சம்பந்தப்பட்டது.
நம்
நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடூர விபத்துக்கள் ஏற்படும் போது மட்டும் தான் பெண்கள்
கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் பாதுகாப்பாக நடந்து கொள்ள
வேண்டும் என்று சிலர் மெதுவாக கருத்துச் சொல்ல
முயல்கிறார்கள்.
இது மாதிரியான
கருத்துக்களை சொல்லி எதுக்கு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என
பலர் பேசா மடந்தைகளாக இருக்கிறார்கள்.
இஸ்லாம் எந்தச்
சூழலிலிம் தன்னுடை கருத்தை உறுதியாக தெரிவித்து விடுகிறது.
ஏபீ அபூபக்கர் மூஸ்லியார் அந்த வகையில் தான் தேவையான நேரத்தில் மிக அவசியமான கருத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் அவருடைய கருத்தல்ல 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருக்குர் ஆனின் கருத்தாகும்.
பெண்கள்
மக்கா மதீனா போன்ற தனி மரியாதைக்குரிய புனித தலங்கலில் அல்லாது மற்ற பள்ளிவாசல்களுக்கு
கூட வர தேவையில்லை என்று இதன் காரணமாகவே இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
பெண்கள்
பர்தா முறைக்கு உட்பட வேண்டும்
பர்தா, பெண்
தொல்லைக்கு ஆளாவதை தடுக்கும் ஏற்பாடே தவிர அடக்கியாள்வதின் அடையாளம் அல்ல. இதை
பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பர்தா பெண்களை
பாதுகாப்பான சூழலில் இருக்கச் சொல்கிறது.
பர்தா என்பது
பெண்கள் தாங்களாவே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில்
கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவதாகும்.
பர்தா என்பது புர்கா
போடுவது மாத்திரமல்ல. பர்தாவின் முதல் தரம் அந்நிய ஆண்களின் முன் தேவையில்லாமல்
வெளிப்படாமல் இருப்பதாகும்.
ஜைனப் அம்மையாரை
திருமணம் முடித்த பெருமானார் தோழர்களுக்கு வலீமா விருந்து கொடுத்தார்கள். அந்தச்
சிறிய அறையில் ஒரு புறம் ஜைனப் அம்மையார் உட்கார்ந்திருக்க மறுபுறம் தோழர்கள்
உட்கார்ந்திருந்தனர். அது ஜைனப் அம்மையாருக்கு கூச்சத்தை அளித்தது.
அப்போது அங்கு வந்த உமர் (ரலி) அவர்கள் يأتيك البر
والفاجر
உங்களிடம் நல்லவர்களும் வருகிறார்கள்
தீயவர்களும் வருகிறார்கள் ஏன் நீங்கள் ஒரு பர்தாவை இடையில் போட்டுக் கொள்ளக்
கூடாது என்று கேட்டார்கள்
அப்போது தான்
பர்தாவை கடமையாக்கிய வசனம் அருளப்பட்ட்து.
يَاأَيُّهَا
النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ
عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا
يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
பெண்கள் அந்நிய
ஆடவர் அனைவரின் பார்வையிலிருந்தும் தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் அதுவே முதல்
தர பர்தா.
உமர் ரலி
பெருமானாரின் காலத்தில் சொல்கிறார்கள்/ يأتيك البر
والفاجر
என்று அப்படியானால் இன்றைய சூழலில் அந்நிய ஆணகள் அனைவரையும் அயோக்கியர்களாக பார்க்க பெண்கள்
பழகிக் கொண்டால் தான் ஓரளவு அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
அந்நிய ஆண்களுடன்
தக்க துணையின்றி பழகுதல் ஊர்சுற்றுதல் உறவாடுதல் உறையாடுதல் அனைத்தும் பெண்களுக்கு
ஆபத்தை ஏற்படுத்தும். அல்லது சிரமத்தை கொடுக்கும்.
ஆணகளுடன் பழகும்
போதெல்லாம் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறதா என்று கேட்கலாம். அது புயல் வரும் போதெல்லாம்
சேதம் ஏற்பட்டு விடுகிறதா என்பதை போன்றது.
சிக்கிக் கொண்டால்
சீரழிந்து விடுவோம்.
பர்தாவின் வசனம்
பர்தாவின் நோக்கத்தை அற்புதமாக புலப்படுத்துகிறது.
ذَلِكَ
أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
1. பெண்கள்
அடையாளம் காணப்படக்கூடாது
2. தொல்லைக்கு
ஆளாகாக் கூடாது.
(முஸ்லிம்களாகிய நாம், நமது
வீட்டுப் பெண்களுக்கு பர்தாவின் நோக்கத்தை முதலில் விளக்க வேண்டும். முஸ்லிம்
பெண்கள் பலரும் பர்தாவை வெறும் கலாச்சார அடையாளமாக நினைக்கிறார்கள். அதனால் தான்
பர்தா அணிந்து கொண்டே ஆண்களை ஈர்ப்பது போல அலங்காரம் செய்து கொள்கிறார்கள். அன்னிய
ஆண்களிடம கொஞ்சலாக பேசுகிறார்கள். தேவையில்லாம அரட்டை அடிக்கிறார்கள்.)
பெண்களுக்கு புரிய
வைக்கப் பட வேண்டியவை
பெண்களின் உடலும்
தோற்றமும் கவர்ச்சியானது,
அதே நேரத்தில் தாக்குதலை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு அல்லது
எதிர் தாக்குதல் தொடுக்குமளவுக்கு பலமற்றது. இது எதார்த்தம்.
இந்த எதார்த்தம்
பெண்களுக்கு முறையாக புரிய வைக்கப் பட வேண்டும்.
சுய
பாதுகாப்பிற்கும் சுய மரியாதைக்கும் இடையே ஒரு த்த்தளிப்பில் இன்றைய மகளிர்
சமுதாயம் இருக்கிறது.
நிறையப் படித்து
விட்டால்…
அதிகாரம் மிக்க பதவியில் உட்கார்ந்து விட்டால்..அதிகம்
சம்பாதித்துவிட்டால் உடலின் பலமும் கூடிவிடுமா என்ன?
இன்றைய பெண்கள் இந்த
இட்த்தில் தான் ஏமாந்து போகிறார்கள். ஆணுக்கு நிகராக படிப்பதும் ஆணுக்கு நிகராக
சம்பாதிப்பதும் மரியாதையை பெற்றுத்தரலாம். ஒரு ஆபத்தை தவிர்க்கவோ, எதிர்கொள்ள்வோ
தேவையான அல்லது தப்பிக்க தேவையான உடல் பலத்தை அது கொடுத்து விடுமா? அதுவே
பாதுகாப்பாக மாறிவிடுமா?
இது பற்றிய தெளிவான
சிந்தனைக்கு பெண்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
உடல் ரீதியான பலவீனத்தை
ஒத்துக்கொள்வது அவமானமல்ல. கேவலமல்ல என்பதையும் பெண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இருப்பதை ஏற்ற்க்
கொண்டுதானே ஆகவேண்டும்.
நிலாவுக்கு சுய
வெளிச்சம் இல்லை என்பதனால் அது கேவலமாகி விடுமா?
ஆண் உடல் பலம்
பொருந்தியவனாக இருக்கிறான் என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல.
உடல் பலம்
பெருமைக்குரியதாக இருந்தால் யானையும் சிங்கமும் அல்லவா அதிக பெருமைக்குரியவை
எனவே உடல் ரீதியான
வித்தியாசங்களின் எதார்த்த்தை இன்றைய பெண்களை புரிந்து கொள்ளச் செய்வதே நாகரீக
உலகத்தின் முன் இன்றுள்ள சவாலாகும்.
இதைப் பற்றி பேசத்
தொடங்கினாலே பிற்போக்குவாதி ஆணாதிக்க பேர்வழி என்ற பழிச் சொற்களும் வசவுகளும்
வருவதை எல்லாம் தாங்கிக் கொண்டாவது இந்த உண்மைகளை மகளிர் சமுதாயம் புரியுமாறு
செய்ய வேண்டும்.
ஆண்
பெண் சமத்துவம்
அதே போல சமத்துவம் என்ற சொல் பெண் சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. ஆண்களானாலும்
பெண்களானாலும் எல்லோரும் எல்லா இட்த்திலும் சம்மாகி விட முடியாது என்பது தான்
சத்தியம்.
மேனேஜரும் பியூனும்
சம்மாகிவிட முடியுமா?
திருக்குர் ஆன் ஆண்
பெண் சுய மரியாதையை பேசுகிறது
وَلَهُنَّ
مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
النساء شقائق
الرجال
அதே நேரத்தில் எல்லா
இட்த்திலும் வித்திலும் சமத்துவம் என்ற பேச்சை இஸ்லாம் ஏற்கவில்லை. காரணம் அது
பொருந்தாது என்பதுதான்.
சொத்து பங்கீடு
விச்யத்தில் அத்தாவுக்கும் அம்மாவுக்கும் ஆறில் ஒன்று 1/6 என்று
சம அம அளவில் பங்கு கொடுத்த இஸ்லாம், மகனுக்கும் மகளுக்கு
பங்கீடு செய்கிற போது ஆணுக்கு இரண்டு பங்கு என்கிறது.
எல்லா இட்ததிலும்
ஒரே மாதிரி சமத்துவம் பார்ப்பது பொருந்தாது என்பதால் தான் இந்தச் சட்டம்.
வணக்க வழிபாடுகளில், குடும்ப
சமூக விவகாரங்களில் பலவற்றில் ஆண்களுக்கு சம்மான மரியாதை பெண்ணுக்கு உண்டு. அதே
நேரத்தில் பாதுகாப்பு பொருளாதார கடமைகளில் ஆண்களின் கை உயர்ந்தே இருக்கிறது.
காரணம் இவற்றில் உடல் வலிவும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் துணிச்சல் குணமும்
சம்பந்தப் பட்டிருக்கிறது.
இந்த விசயத்தில்
பெண்களின் இயறகையான் அம்சத்தை கருத்தில் கொண்டு நியதிகளை சொன்னால் மட்டுமே அது காரிய
சாத்தியமும் எதார்த்தமும் ஆகும்.
செயற்கை
சமத்துவத்தின் பாதிப்பு
எல்லா வகையிலும்
ஆணுக்குப் பெண் சமம் தான் என்று கற்பித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில்
தான் பெண்கள் அதிகம் பாதிப்புக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள் என்பதே இன்றைய
ஆய்வுகள் காட்டுகிற உண்மை.
அமெரிக்காவில்
ஒவ்வொரு நான்கு நிமிட்த்திற்கும் ஒரு பெண் கணவன் அல்லது காதலனால் அடிபட்டு
இறக்கிறாள்.
காரணம் என்ன
தெரியுமா கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வருகிற போது உனக்கு நான் இளைத்தவள்
அல்ல என்ற எண்ணம் பெண்ணை அதிகம் பேசவும் ஏசவும் வைக்கிறது. அது ஒரு எல்லையை
தாண்டுகிற போது ஆண் தனது உடல் பலத்தை காட்டி விடுகிறான்.
பிறகு இருவரும்
கோர்ட் படி ஏறுகிறார்கள். அல்லது பிரிந்து விடுகிறார்கள்.
மேற்கத்திய உலகில்
சொந்தக் குடும்பத்துக்கு உழைத்துப் போடும்படி பெண் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
வேலைக்குப் போ! பணம்
கொண்டுவா! குழந்தைகளை பராமரிப்போம் என்கிறான் ஆண்.
இன்றையை மேற்குலக
சமுதாயம் தனது சொந்த மனைவிக்கு செல்வழிப்பதை சுமையாக க்ருதுகிறது என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன
செயற்கை சமத்துவம்
ஆண்கள் பெண்களை விஷமத்தனமாக ஆபாசமாக அனுபவிப்பதற்கு த்தான் வழி செய்திருக்கிறது.
இதை சுதந்திரம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். அது தான் பெரிய பேதமை.
இப்போது ஏபி அபூபக்கர் உஸ்தாத்
பெண்களுக்கு திருக்குர் ஆன் சொன்ன அறிவுரையை எடுத்துச் சொன்னதை விமர்சிக்கிற
பலரும் சமத்துவம் என்ற பழம் கஞ்சியை தான்
ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது 21 ம் நூற்றாண்டு என்று அடிக்கடி சொல்கிறார்கள்.
19 ம் நூற்றாண்டிலேயே இத்தகைய சிந்தனை போக்கு பெருகி விட்டதை நாம் பார்த்து
வருகிறோம். நூற்றாண்டுகள் கடக்க கடக்க – வெளிப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க
பெண்களுக்கான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதே தவிர குறையவில்லை.
கேரளம் போன்ற மாநிலங்களில் உனக்கு நான்
என்ன கட்டுப்படுவது நான் படித்திருக்கிறேன் எனக்கு வேலை கிடைக்கும் என்ற சிந்தனை
கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் பெருகியதன் விளைவு அங்கு பெண்கள்
குடும்பத்திலிருந்து வெளியேறி தனியே சம்பாதிக்க செல்வதும் குடும்பங்கள் சீர்
குலைவதும் தவறான தொடர்புகளும் பெருகி இருக்கின்றன என்கிறார்கள் சமூக
செயல்பாட்டாளர்கள்.
இந்த போக்கு எங்கு தொடர்ந்தாலும் அங்கு
இதற்கேற்ற ஆபத்துக்கள் தொடரத்தான் செய்யும்
எனவே பெண்கள் அவசியத்திற்கு வெளியே செலல்லாம்.
قول النبي ﷺ لعائشة رضي الله عنها: "إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ
تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ" (رواه البخاري).
கல்வி கற்க, கற்றுக் கொடுக்க , வேலை செய்ய . தேவைகளை பெற பெண்கள் வெளியே செல்ல இஸ்லாம் தடை சொல்ல வில்லை.
அந்த வெளியேறுதல் தபர்ருஜல் ஜாஹிலிய்யா வாக இருக்க கூடாது.
அதாவது நமக்கு ஒரு மார்க்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதன் படி வெளியேறுவதாக இருக்க வேண்டும்.
அவசியமின்றி
பெண்கள் வெளியே சுற்றுவதும் அப்படி சுற்றுகிற போது அடக்கமான நடைமுறைகளை பேணாமல் போவதும்
பெண்களை கவர்ச்சிப் பொருளாக்கும் அது அவர்களுக்கு ஆபத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.
இது
திருக்குர் ஆனின் விருப்பத்திற்கு எதிரானதாகும்.
இன்றைய
நவீன யுகத்திற்கும் இது பொருந்தும்.
நீங்கள்
எவ்வளவு பெரிய பொறூப்பில் இருந்தாலும் சரி.
ஒரு
முஸ்லிம் பைலட் பெண்மணி தன்னுடைய புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த
புகைப்படம் சில நாட்களில் பெண்களை விபச்சாரத்திற்கு ஏலம் எடுக்கிற இணைய தளத்தில் இடம்
பெற்றது.
இத்தகைய
விபத்துக்கள் தமக்கு ஏற்பட வேண்டுமா என்பதை ஒவ்வொரு முஸ்லிம் சகோதரியும் உணர வேண்டும்
முஸ்லிம் சகோதரர்கள் தமது குடும்ப பெண்களுக்க் ஊணர்த்த வேண்டும்.
பெண்களின்
கட்டுப்பாடற்ற வெளிப்பாடுகளுக்கு ஆண்களும் மிக முக்கிய காரணமாகும்.
அவர்கள்
தூண்டுவதும் அனுமதிப்பதுமே பெண்களை நமது மரபுகளை மீறி நடக்க தூண்டுகிறது.
அவரக்ள்
தமது குடும்பத்திற்கு சரியான அறிவுரைகள் தறுவார்கள் எனில் நிச்சயம் நிலமை மாறும் .
பெண்
குழந்தைகளை வைத்திருக்கிற ஒவ்வொரு பெற்றோரும் இன்றை காலச் சூழ்நிலைக்கேற்ப இஸ்லாமின்
நடைமுறைகளையும் அதன் நியாயங்களையும் புரிய வைக்க வேண்டும்.
கல்லூரிகளுக்கு
அனுப்புகிற போது அல்லது வேலைக்கு அனுப்புகிற போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற
வழிகாட்டுதல் வழங்கப்படாவிட்டால அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படா விட்டால் பின்னர்
இஸ்லாமிய வாழ்வு என்ற வார்த்தை நமக்கு அந்நியமாகி விடும்
அல்லாஹ்
பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment