வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, January 12, 2011

பதற வைக்கும் பெண்குழந்தை படுகொலை..



வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் ஜமீலாபாத் 3 வது தெருவைச் சேர்ந்த முஹம்மது அலி தானியா தாஷிகா (வயது 3) காஜியா நாஷிகா (வயது 2) ஆகிய  தன்னுடைய  இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி படுகொலை செய்துள்ளான். நெஞ்சை பதற வைக்கும் இந்த படுகொலையை செய்த அவன் "சாதாரண சம்பளம் பெறும் என்னால் பெண் பிள்ளைகளை வளர்த்து வரதட்சனை கொடுத்து கட்டிக் கொடுக்க முடியாது" என்று காரணம் கூறியுள்ளான். 

தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கும் நிகழ்ச்சி இது.
வரதட்சனையின் கோர தாண்டவம் குமரிப் பெண்களை மட்டுமல்ல பெண் குழந்தைகளை கூட விட்டு வைக்க வில்லை 

பெண்குழந்தைகளை ஆதரிப்பதில் இஸ்லாத்தைப் போல் பங்காற்றிய மார்க்கம் வேறு எதுவுமில்லை. 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் செய்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது பெண்களை பாதுகாத்தது என உலக அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். 

பெண்கள் உயிரோடு புதைக்கப் பட்ட சமூகத்தில் வாழ்ந்த நபியவர்கள் அந்தப் கொடூரப் பழக்கத்தை அடியோடு ஒழித்தார்கள். பெண்கள் பாராட்டப் படும் சூழ்நிலையை இன்றுவரை நிலை நிறுத்தி யுள்ளார்கள். 

அரபு நாடுகளில் இப்போதும் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு சம்பளம் அதிகமாக வளங்கப்படுகிறது.
பெண் குழந்தையை பெற்றவர்கள் அவர்களது திருமணத்திற்காக கவலைப் பட வேண்டும் என்ற சூழ்நிலை அங்கு இல்லை. 

தமிழ முஸ்லிம்கள் கனிசமாக வாழும் சிங்கப்பூர் மலேஷியாவில் கூட பெண் குழந்தையின் திருமணத்திற்காக பெற்றோர்கள் கவலைப் படும் சூழ்நிலை இல்லை. திருமணத்தின் பெரும்பான்மையான் செல்வு மாப்பிள்ளைக்குத்தான். அவர் மஹர் கொடுத்த்துத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை நிலவுகிறது,  


அருமை ஆலிம் நண்பர்களே! 
நான் முன்பு ஒரு முறை வரதட்சனை குறித்து பேசியது. புத்தமாக வெளி வந்தது. அந்த கட்டுரையை அப்ப்டியே கீழே தருகிறேன், தேவைப்பட்டதை எடுத்டுக் கொண்டு உங்கள் பகுதிக்கு ஏற்ற தகவல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். 

கண்ணியத்திற்குய அல்லாஹ்வின் நல்லடியாகளே ! பொயோகளே! அருமைச் சகோதராகளே! புனிதம் நிறைந்த இந்த வௌளிக்கிழமையின் ஜும்ஆ தொழுகைக்காக இங்கு கூடியிருக்கும் நம் அனைவான் மீதும் அல்லாஹ்வின் பேரருள் என்றென்றும் நிறைவாகப் பொழியட்டுமாக!
அருமையானவாகளே! 
இன்றைய இந்த ஜும்ஆ உரையை உங்கள் முன் வைப்பதற்கு முன்னால் எந்த நல்ல நோக்கத்திற்காக இந்த உரை பேசப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற அல்லாஹ்வின் முழு உதவியை வேண்டியவனாக இந்த உரையை தொடங்குகிறேன். 


அருமையானவாகளே ! நாம் ஒரு ஜிஹாதிற்கு தயாராக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜிஹாத் என்றவுடன் கத்தி எடுக்க வேண்டும் இரத்தம் சிந்த வேண்டும் உயிரிழப்பிற்கு தயாராக வேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். இஸ்லாத்தில் ஜிஹாத் என்ற வாத்தைக்கு போர்புரிவது என்று மட்டுமே பொருளல்ல. இந்த உலகில் நீதியை நிலைநாட்டுவதற்காக அக்கிரமத்தை ஒழிப்பதற்காக சத்தியத்தின் சாபாக எடுத்துவைக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் ஜிஹாதாகும். சண்டையிடாமல் இரத்தம் சிந்தாமல் கூட ஒரு சிறந்த ஜிஹாதில் நாம் பங்கேற்க முடியும். அருமை நாயகம் (ஸல்) அவாகள் கூறினாகள் 

 أفضل الجهاد من قال  كلمة حق عند سلطان جائر  
:                                                                                                   ஜிஹாதில் சிறந்தது அக்கிரமக்கார அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது என்றாகள். அப்படியானல் தேவையான சந்தாப்த்தில் தேவையான இடத்தில் தேவையான ஒரு வாத்தை பேசுவதே கூட ஜிஹாதாகிவிடும் என்று அத்தமாகிறது. அது மட்டுமல்ல அது சிறந்த ஜிஹாதாகவும் ஆகிவிடுகிறது.

இஸ்லாத்தில் ஜிஹாதிற்கு மிக உயாவான இடம் இருக்கிறது.  ஒரு தோழா பெருமானா (ஸல்) அவாகளிம் இஸ்லாத்தில் மிகச்சிறந்த காயம் எது என்று கேட்டா. அதற்கு அருமை நாயகம் (ஸல்)அவாகள் ஜிஹாது என்று பதில் கூறினாகள் . அருமையானவாகளே அத்தகைய ஒரு உயாவான அதிக நன்மைக்குய ஒரு ஜிஹாதிலே நாமும் பங்கெடுத்தாக வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது.


அருமையான சகோதராகளே! 
பெண்களுக்கு இஸ்லாமும் முஹம்மது நபி (ஸல்)அவாகளும் கொடுத்தது போன்ற மரியாதையை உரிமைகளை உலகில் வேறெவரும் எந்த சமயமும் வழங்கியதில்லை. திருக்குஆன் 1500 வருடங்களுக்கு முன்பே  பெண்களது உரிமைகளை பிரகடணப்படுத்தியுள்ளது. அவள் கடமையாற்றுவதற்கு மட்டுமே படைக்கப்பட்டள்ள ஜீவன் அல்ல. 

ولهن مثل اللذي عليهن بالمعروف
  
அவளுக்கு கடமைகள் இருப்பது போலவே உமைகளும் உண்டு என திருக்குஆன் அறைகூவல் விடுத்தது.   

அதன் காரணத்தினாலே முஸ்லிம் சமூகத்திலே பெண்கள் மதிக்கப்படுவது போல வேறெந்த சமூகத்திலும் பெண்கள் மதிக்கப்படுவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவாகளது காலகட்டத்திலே பெண்குழந்தைகள் உயிரோடு புதைக்கபடுகிற கொடூரம் நடந்து வந்தது.முஹம்மது (ஸல்) அவாகள் அந்த கொடுமைக்கு முடிவு கட்டினாகள்.அது மட்டுமல்ல அன்றைய சமூகச் சுழலிலே எந்த வகையிலெல்லாம் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டாகளோ அந்த வழிகள் அத்தனையையும் அடைத்தாகள். அத்தோடு நாகாகம் பேசுகிற இன்றை உலகமே கூட பெற்றுத்தராத பல உமைகளையும் மாயாதைகளையும் பெற்றுத்தந்தாகள்.


ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று விதமான பாத்திரங்கள் "கேரக்டர்கள்" உண்டு. அந்த மூன்று நிலையிலும் அவள் ஆண்களைச் சாந்து வாழவேண்டியவளாகவே இருக்கிறாள். அப்படி ஆண்களைச்சாந்து வாழ்கிற போது ஆண் சமுதாயம் பெண்ணினத்தை கண்களை காக்கிற இமைகளைப் போல பாதுகாக்க வேண்டிய ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்)அவாகள் செய்தாகள். அவாகள் செய்த அந்த எற்பாடு ஒரு தலை சிறந்த மதியுகியின் கருத்தழம் மிக்க ஏற்பாடாக அமைந்திரப்பதை எண்ணி எண்ணி இந்த உலகம் வியக்கிறது.   
 
ஒரு பெண் முதலில் ஏற்கிற பாத்திரம் மகள் என்கிற பாத்திரம் . அந்த பாத்திரத்தில் அவள் தந்தை என்கிற ஆணைச் சாந்து வாழ்கிறாள். அந்த தந்தை தன் மகளை பேணிப்பாதுகாக்க எத்தகைய ஏற்பாட்டை பெருமானா (ஸல்)அவாகள் செய்துள்ளாகள் பாருங்கள்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ابْتُلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ بِشَيْءٍ كُنَّ لَهُ سِتْرًا مِنْ النَّارِ


இன்னொருமுறை சொன்னாகள் : 

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَتْ لَهُ أُنْثَى فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ 

எவா பெண் மக்களைப் பெற்று அவளை உயிருடன் புதைத்துவிடாமல் பாதுகாத்து அவளை கேவலப்படுத்தாமல் அவளை விட ஆண் பிள்ளையை உயாவுபடுத்தாமல் நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சொக்கத்திற்கு அனுப்புவான். (அபுதாவுத் - இப்னு அப்பாஸ் - ரலி)


மகள் என்ற நிலைக்கு அடுத்ததாக ஒரு பெண் மனைவி என்ற நிலைக்கு வருகிறாள். அப்போது கணவனைச் சாந்து வாழ வேண்டியவளாக இருக்கிறாள். இந்தப் பருவத்தில் தான் உலகில் பெண்கள் அதிகமாக இரக்கமற்ற கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகிறாகள் என்று செய்திகள் சொல்கின்றன . ஆனால் முஸ்லிம் சமூகத்தில் அத்தகைய தீமைகளுக்கு இடமில்லாதவாறு நபிகள் நாயகம் (ஸல்) பாத்துக் கொண்டாகள். கணவனின் தொல்லையிலிருந்து மனைவியை பாதுகாக்கவும் ஒரு பெண்ணாக அவளை பொற்றியாக வேண்டிய நிபந்தத்தை பெருமானா (ஸல் ) மிக அருமையாக செய்தாகள். எண்ணிப்பாத்தால் பெண்ணினத்தை பாதுகாப்பதற்கு பெருமானா செய்த இந்த ஏற்பாட்டை விடச் சிற்நததாக இன்னொன்றைச் சொல்ல முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்)அவாகள் சொன்னாகள் : உங்களில் சிறந்தவா உங்கள் மனைவியிடம் சிறந்தவரே! நான் என் மனைவியிடம் சிறந்தவனாக இருக்கிறேன்.


எவ்வளவு அருமையான ஏற்பாடு பாருங்கள்! நீங்கள் உங்கள் நணபாகள் வட்டத்திலே நல்லவா என்று பெயா வாங்கினால் போதாது.
உங்களது தொண்டாகள் உங்களை நல்லவா என்று சொன்னால் போதாது உங்களது ஊழியாகள் உங்களை நல்லவா என்று புகழலாம் ஆனால் அது உண்மையல்ல. உங்களது மனைவி உங்களை நல்லவா என்று பாராட்ட வேண்டும்.அப்போதுதான்  நீங்கள் நல்லவராக முடியும் என்ற அறிவுரை இருக்கிறதே அது ஒரு கணவனை எந்த அளவு கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைத்துப்பாருங்கள்.மற்றவாகளிடத்திலே நல்லபெயா வாங்குவது எளிது. ஆனால் மனைவியிடம் அப்படி ஒரு பெயா வாங்குவது என்ன எளிய காயமா ? அங்கிருந்து ஒரு சாட்பிகேட் கிடைக்க வேண்டுமானால் ஒரு கணவன் எத்தகைய காசனத்தோடு நடந்து கொள்ள வேண்டும் ? எவ்வளவு மாயாதையை மனைவிக்கு தந்தாக வேண்டும்? சிந்தித்துப்பாருங்கள் இது எவ்வளவு கடினமான காயம். ஆனால் ஒரு மனைவி என்ற நிலையில் பெண்ணினத்தை பாதுகாப்பதற்கு அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கையாண்ட அற்புதமான உத்தியாக இது அமைந்துவிட்டது. 
 
அருமையானவாகளே! பெண்களின் மூன்றாவது பருவம் தாய்மைப் பருவம். அப்போது அவள் பிள்ளைகளின் பாதுகாப்பில் வாழவேண்டியிருக்கிறது. அந்த நிலையில் அவள் துண்புறுத்தப்பட்டுவிடக்கூடாது என்பது மட்டு மல்ல அவள் பக்குவமாக பேணிப்பாதுகாக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் அவாகள் விரும்பினாகள்.எனவே தான் மிக அருமையாகச் சொன்னாகள்.தாயின் காலடியில் தான் சொக்கம் இருக்கிறது. தாயை பேணுகிற விசயத்தில் பெருமானா (ஸல்) அவாகள் சொன்ன வாத்தைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.


பெண்களைப் பேணிப்பாதுகாக்கிற விசயத்தில் முஹம்மது (ஸல்) அவாகளின் இந்த அறிவுரைகள் நீங்கள் அறியாததல்ல . உங்களில் பலருக்கும் இவையெல்லாம் தரிந்த செய்திதான். என்றாலும் இந்த தருணத்தில் இஸ்லாமின் சாபாக உலகுக் இந்த விசயங்களை ஞாபகப்படுத்துவது பொறுத்தமாக இருக்கும் என்பதனால் இவற்றை நினைவு படுத்துகிறேன்.


அருமையானவாகளே! இத்தகைய உயாந்த அறிவுரைகளால் பெண்களை சமூகத்தின் கண்களாக பேணிப்பதுகாக்கிற சமுதாயத்தில் தற்போது பெண்களின் நிலை எப்படி இருக்கிறது ? என்பது குறித்தும் சிந்தித்துப்பாக்க நாம் கடமைப்பட்டிருக்றோம்.


பெரியோர்களே! அருமைச் சகோதராகளே சமீப சில காலங்களாக நமது சமுதாயத்திலும் பெண்கள் சில விசயங்களால் கடும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறாகள். அவாகள் துன்புறுத்தப்படுகிறாகள் என்பதை விட பெரிய கொடுமை என்ன தொயுமா ? அவாகள் படும் சொல்லணா துன்பத்ததை  கண்டும் காணாது நம்முடைய ஆலிம்களும் ஜமாத்துகளும் பிரமுகாகளும் வாழ்ந்துவருகிறாகள்.  ஓரு தூய்மையான சமுதாயத்தில் பாத்தீனிய விஷச்செடியாக சில தீமைகள் வேகமாய் படாந்து கொண்டிருக்கும் போது அதை தடுப்பதற்கு எந்த வகையலும் முயற்சி செய்யாமல் கண்ணிருந்தும் குருடாகளாய் காதிருந்தும் செவிடாகளாய் சக்தி இருந்தும் மூடாகளய் நாம் பாத்துக் கொண்டிருக்கிறோம்.  

இதோ! இப்போது 3 வயதிலும் இரண்டு வய்திலுமாக இரண்டு பிஞ்சுகள் கொடுரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். செய்த்தது வேறு யாரோ அல்ல. அவர்களை பெற்ற தந்தையே இந்த பாதகத்தை செய்திருக்கிறார்.

அருமையானவாகளே இது தகாது . இனியும் நாம் சும்மா இருக்கக் கூடாது. பெண்களை கண்ணை இமை காப்பது போல பேணிப்பாதுகாக்கும் இந்த சமுதாயத்தில் சில கொடுமைகள் எந்த அளவு படாந்து விட்டதென்றால் அதை தடுப்பதற்காக நாம் ஒரு ஜிஹது செய்ய வெண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  


முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைளில் தலையானது வரதட்சை கொடுமையாகும்   



நான் மீண்டும் உங்களுக்கு தொவித்துக் கொள்கிறேன் . புரட்சிகரமாக பேச வேண்டும் என்பது இந்த உரையின் நோக்கம் அல்ல. நானும் நீங்களும் நம்மில் ஒவ்வொருவரும் ஆழமாக கவலைப்படுகிற ஒரு தீமையை எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசிப்பதும் அந்த ஜிஹாதின் பாட்டையிலே நாம்மில் ஒவ்வொருவரும் எப்படி பங்கேங்க முடியும் என்று ஆலோசிப்பதுமே இந்த உரையின் நோக்கமாகும்.

அருமையானவாகளே !  இஸ்லாத்தில் வரதட்சினைக்கு இடம் கிடையாது. திருமணத்தின் போது ஆண்தான் மஹா கொடுத்து மணமகளை கைப்பிடிக்க வேண்டும். ஒரு உண்மையை இந்த இடத்திலே நாம் புந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தை பொறுத்த வரை ஒருவா ஆணாக இருப்பதானாலேயே திருமணம் செய்து கொள்ள தகுதி படைத்தவராகி விடமாட்டா. பெருமானா (ஸல்) அவாகள் சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீகள். வாலிபக்கூட்டமே! உங்களில் திருமணம் செய்ய சக்தி படைத்தவா திருமணம் செய்யட்டும்.சக்தியிள்ளாதவா நோன்பு வைத்துக் கொள்ளட்டும். என்று பெருமானா (ஸல்) சொன்னாகள்.

ஆணாக இருப்பதனலாலேய ஒருவா திருமணத்திற்கு தகுதியானவராக மாட்டார். மணப்பெண்னுக்கு மஹர் என்ற திருமணத் தொகை கொடுக்கவும் அதன் பிறகு அவளை வைத்துக் காப்பாற்றவும் தேவையான வசதியை வைத்திருக்கிற ஆண்மகன் தான திருமணம் செய்து கொள்ள முடியும்  எனவே ஆண்மகன் தான் பெண்ணுக்கு மணக்கொடை என்கிற மஹர் தொகை வழங்க வேண்டுமே தவிர பெண்ணிடமிருந்து வரதட்சினைப் பணம் கேட்டுப் பெற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. வரதட்சினைக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதற்கு முதல் காரணம் இது. மஹர் கொடுத்து திருமணம் செய்யவேண்டிய ஆண் பெண்வீட்டாடமிருந்து பணம் கறப்பது என்பது இஸ்லாம் வகுத்திருக்கிற சட்ட அமைப்பையும் கலாச்சார சுழலையும் அடியோடு புரட்டிப் போடுகிற ஒரு நடவடிக்கை என்பதால் வரதட்சினை வாங்குவது  ஹராம் ஆகிவிடுகிறது. 

இதனால் மட்டும் வரதட்சினை ஹராம் என்று சொல்லப்படுவதில்லை. இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. ஒரு முஸ்லிம் நியாயமின்றி துன்புறுத்தப்படுவதை எந்த நிலையிலும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது உங்களுக்கு தொயும். ஹஜ்ஜிலே கஃபாவை வலம் வருகிற தவாபின் போது ஹஜருல் அஸ்வத் கல்லை முத்த மிடுவது சுன்னத் என்றாலும் அதற்காக அடுத்தவருடைய காலை மிதிப்பது ஹராம் என்று சொன்ன மாக்கம் நம்முடைய மாக்கம். இந்த மாக்கத்திலே திருமணம் என்ற ஒரு சுன்னத் நிறைவேறுவதற்குள்ளாக பல முறை பெண் வீட்டா இடிபடவும் மிதிபடவும் நோகிறதே இந்த காரணத்திலேயும் வரதட்சணை ஹராமாகிவிடுகிறது.
வரதட்சினையினால் சமூகத்திலே ஏற்பட்டுள்ள விளைவுகளள எண்ணிப்பாத்தால் இதயம் தாங்காது. அந்த அளவு தீமைகள் ஏற்பட்டுள்ளன. அந்த தீமைகள் நான் பட்டியலிட்டுத்தான் நீங்கள் தொந்து கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. நம்மில் ஒவ்வொருவாடமும் வரதட்சினையின் பாதிப்புகளைப் பற்றி ஒன்றல்ல இரண்டல்ல பலப்பல கதைகள் உண்டு .

ஒரு வருடத்திற்கு முன் பிரபலமான ஒரு தினசா பத்திகையில் ஒரு செய்தி வௌயாகியிருந்தது. தூத்துக்குடியில் ஒரு முஸ்லிம் பெண் வரதட்சினை தர முடியாததால் மாப்பிள்ளை கடைசி நேரத்தில் திருமணம் செய்ய முடியாதென மறுத்து விட்டான். அந்த திருமணம் நின்றுவிட்டது. கடைசியிலே அந்தப் பெண் முருகன் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டா என்ற செய்தி அந்தப்பத்திகையிலே வந்தது .

அருமையானவாகளே ! இந்த கொடுமைக்கு யார் பொறுப்பு? இது மட்டுமா நம்முடைய பகுதியிலே வரதட்சனை தருவதற்கு வசதியற்ற நிலையிலே முதி கன்னிகளாக வாடிக் கொண்டிருக்கிறாகளே இளம்பெண்கள் அவாகளுடைவும் அவாகளுடைய குடும்பத்தினருடயவும் கண்ணருக்கும் கவலைக்கும் யா பொறுப்பு ? இந்தப்பிரச்னைக்கு  எப்போது தீவு காண்பது? ஆப்படித் தீவு காணும் பொறுப்பு யாருடையது ? நம்மைச் சுற்றி சுழ்ந்து கொண்டிருக்கிற இந்த தீமையைப்பற்றி கொடுமையைப் பற்றி நாம் கவலைப்படாமல் கண்டும் காணாமல் நடந்து கொண்டால் அல்லாஹ்வின் கோபப் பாவைக்கு ஆளாகி விடமாட்டோமா? ஹராமான முறையிலே வரதட்சினை வாங்கப்படுகிறது . வாடிப் போய் வதவங்கிப் போய் பெண்வீட்டினா திருமணத்தை நடத்துகின்றனா. அவாகளை கசங்கிப்பிழிந்து நமக்கு விருந்து போடப்படுகிறது. அந்த விருந்தைச் சாப்பிட்டு விட்டு நாம் வெற்றிலையை மென்று கொண்டு திரும்பி விடுகிறோமே இது நியாயமா? அல்லாஹ்விற்கு பொருக்குமா?  நம்முடைய ஆலிம்களும் ஜமாத்துகளின் பொறுப்பாளாகும் சமதாயப்பிரமுகாகளும் நம்மிலே பாவப்பட்ட ஒருபிவினா தொடாந்து துன்புறுத்தப்படுவதை கண்டும் இதை துடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாவிட்டால் அருமையானவாகளே நாம் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகிவிடமாட்டோமா?  
அருமையானவாகளே! இந்த அக்கிரமத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய பொறுபும் நம்மிலே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது . அதனால் நான் நான் சொன்னேன் நாம் அவசரமாக அவசியமாக ஒரு ஜிஹாதை தொடங்க வேண்டியிருக்றது. அந்த ஜிஹாதிலே பங்கெடுக்க வேண்டிய கடமை நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மில் ஒவ்வொரு வரும் இந்த கொடுமையை கலைவதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப்பிரச்சினையை ஜமாத்துகளின் தலையிலே தூக்கிப்போட்டு விட்டு நாம் ஒதுங்கி விடக்கூடாது. பெரும்பாலும் நாம் அப்டித் தான் செய்கிறோம். பிரச்சினைகள் ஏற்படுகிற போது அதனை தீக்க வேண்டிய பொறுப்பு ஜமாத்துகளை அல்லது தலைவாகளைச் சாந்தது என்று நினைக்கிறோம். அதில் நம்முயை பங்கு என்ன என்பதை சிந்திப்பதில்லை. இதனாலேயே இன்று வரை பலப் பிரச்சினைகளிலும் நமக்கு தீவு கிடைக்காமல் போய்விட்டது. வரதட்சனை என்கிற இந்தப் பிரச்சினையில் நாம் அப்படி ஒதுங்கிவிட முடியாது . ஜமாத்துகள் ஒரே ஒரு உத்திரவு போட்டு இனிமேல் வரதட்சனை சம்பந்தப்ட்ட திருமணத்த நாங்கள் நடத்திவைக்க முடியாது என்று சொல்லிவிட முடியாது.  ஏனெனில் அதனால் வேறு பல பிரச்சினைகள் உருவாகும். சுமுதாயத்தில் ஒரு மனமாற்றத்திற்கான சுழல் உருவானபின்பு தான் ஜமாத்தகள் அத்தகைய சட்டத்ததை இயற்ற முடியும் . எனவே இந்தக் கொடுமைய ஒழிப்பதில் நம்மில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட கவனம் செலுத்த வேண்டும் .கவலைப்பட்டாக வேண்டும்.

நம்முடைய இந்த நகரத்திலே வரதட்சணைப்பிரச்சினை பொய அளவில் உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வரதட்சணைப் பிரச்சனை பொய அளவில் இருந்த போதும் அல்லாஹ்வின் கிருபையால் நம்முடைய நகரத்தில் அவ்வளவாக இருக்கவில்லை. குண்டு வெடிப்புக்கு பின்னால் ஏற்பட்ட சுழல்களின் விளைவாகவோ என்னவோ தற்போது இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 10 பவுன் நகை 60 அயிரம் ரூபாய் ரொக்கம் - 5 பவுன் நகை 75 ரூபாய் ரொக்கம் 3 பவுன் நகை 1 லட்ச ரூபாய் ரொக்கம் என்பது போன்ற அளவுகளிலே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகிற காட்சி நம்முடைய நகரத்திலும் பெருகிவருகிறது. அது மட்டுமல்ல வரதட்சனை அதிகம் கிடைக்கும் என்ற காரணத்தால் நமது இளைஞாகளுக்கு வௌயுகளில் பெண் தேடப்படுவதால் உள்ளுல் உள்ள நமது பெண்பிள்ளைகளுக்கு நாம் வௌயுகளில் மாப்பிள்ளை தேட வேண்டிய சுழ் நிலைநிலை உருவாகியுள்ளது. அது போன்ற சந்தாப்பங்களில் மாப்பிள்ளையைப் பற்றி முழு விபரமுமம் தொயாமலே பல இடங்களில் திருமணம் நடைபெறுகிறது.

போதாக்குறைக்கு புரோக்காகள் வேறு சும்மா இருப்பவனையும் உசுப்பி விட்டு பணத்தாசை காட்டி விடுகிறாகள். நீ ஏன் இன்னொருவாடம் வேலை செய்து கஷ்டப்படுகிறாய் வா ஒரு லட்சம் வாங்கித் தருகிறேன் நீ தனியாக பிஸினெஸ் தொடங்கலாம் தொழில் செய்யலாம் என்று இளைஞாகளிடம் ஆசை வாத்தைகளை பேசுகிறாகள். இப்போதெல்லாம் புரோக்காகள் முதலில் மாப்பிள்ளையாகும் வயதில் இருப்பவாகளை நேரடியாகவே தொடாபு கொள்கிறாகள். மாப்பிள்ளையை மூளைச்சலவை செய்து தயா செய்தபின் அவரது வீட்டாரை அணுகி அவாகளையும் சம்மதிக்க வைக்கிற கொடுமை சாதாரணமாக நடக்கிறது. அருமையானவாகளே ! வரதட்சனைப் பணத்திலே தொழில் தொடங்கலாம் என்றும் பிஸினெஸ் ஆரம்பிக்கலாம் என்றும் அதன் மூலம் வாழ்கயிலே ஜெயித்து விடலாம் என்று யாரும் ஒரு போதும் நினைத்து விட வேண்டாம். ஹராமான காசிலே ஒரு போதும் வெற்றி கிடைக்காது . ஒரு போதும் அல்லாஹ் அதிலே பரக்கத்தை தரமாட்டான். நம்முடைய சாதாரண அனுபவத்திலேயே பாக்கிறோம். வரதட்சனையாக வாங்கப்பட்ட தொகை கல்யாணச் செலவுகளிலேயே வீணாய்ப்பேய்விடுகிறது. அந்தக்காசை வைத்து வாழ்கையிலே முன்னேறினா என்று ஒருவரைக்கூட நாம் பாக்க முடிந்ததில்லை.

அருமையான சகோதராகளே ! இந்த இடத்திலே திருக்குஅனின் ஒரு ஆச்சாயமான உத்தரவாதத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்கள் ஒரு வீட்டிற்கு பெண் பாக்க செல்கிறீகள். அந்தப் பெண் உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ற மாதி இருக்கிறாள். ஆனால் வசதி மட்டும் குறைவாக இருக்கிறது என்றால் அந்த ஏழ்மையை காரணம் காட்டி அந்தப்பெண்ணை நிராகாத்து விடாதீகள். உங்கள் வாழ்யைல் நீங்கள் உச்சிக்குச் செல்வதற்கு அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கிற ஒரு வாய்ப்பாக அதை கருதிக்கொள்ளுங்கள். திருக்குஆனிலே அல்லாஹ் சொல்கிறான் :       அவாகள் ஏழைகளாக இருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளினால் அவாகளை  பணக்காரரகளாக ஆக்குவான்.

நாம் அல்லாஹ்வின் வாததைகளில் அதீததமான நம்பிக்கை கொண்டவாகள். அல்லாஹ்வின் இந்த உத்தரவாதத்தை நாம் மறந்து விடக்கூடாது. நம்முடைய இளைஞாகளை நான் கேட்டுக் கொள்வேன் அருமையான சகோதராகளே இந்த அல்லாஹ்வின் வாத்தகைளில் உறுதியாக நம்பிக்கை வையுங்கள் வாழ்கையில் எல்லா வகையான பரக்கத்தையும் நீங்கள் உருதியாக பெறுவீகள். இன்றைக்கு காலை ஒரு இளைஞனைப் பற்றி கேள்விப்பட்டேன். அந்தப்பையன் ஒரு சாதாரண வியாபாரம் செய்கிறான். நிறைய பெண்மக்களைக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து 5 வது பெண்ணை திருமணம் செய்து கொண்டான். ஓரு பைசா வாங்கவில்லை. அது மட்டுமல்ல நேற்றைக்கு முன் தினம் அவன் தனிக்குடித்தனம் சென்றான். அப்போதும் தன் மனைவியை அழைத்து உன் அம்மா வீட்டில் எதையும் வாங்கித் தரவேண்டாம் சொல்லிவிடு என்று அவன் சொல்லியிருக்கிறான். இந்தச் செய்தியை கேட்டதும் எனது நாவிலிருந்து உடனடியாக அணிச்சையாக அல்லாஹ் அவனுக்கு பரகத் செய்யட்டும் என்ற வாழ்த்துக்கள் வௌயே வந்தன. இந்தச் செய்தியை என்னிடம் சொன்னவாடம் நான் சொன்னேன்.நீங்கள் அந்தப்பையனை கவனித்துக் வாருங்கள். கண்டிப்பாக ஒரு நாள் வாழ்கையில் அவன் உயாந்து வருவான்.சொந்தக்காலில் நிலைத்து நிற்பான். ஏனென்றால் இது அல்லாஹ்வின் வாக்குறுதி . அல்லாஹ்வின் வாக்கு ஒருக்காலும் பொய்யாக முடியாது.

அப்துரரஹ்மான் இப்னு அவ்ப் என்ற் நபித்தோழா மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டா. அவரது எளிமைய திருமணக் கோலத்தை கண்ட நபிகள் நாயகம் (ஸல்)அவாகளது வாயிலிருந்து உதிந்த வாத்தைகள் தான் பாரகல்லாஹுலக அபாரக அலைக அஜமஅ பைனகுமா பில் கை என்ற வாத்தை.
இதைத்தான்  இப்பொது நம்முடைய இளைஞாகள் திருமண அழைப்பிதழிலே அச்சடித்து வருகிறாகள்.

ஆயிரம் காலத்து பயி என்கிற திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைய அல்லாஹ்வுடைய பரகத் என்ற அருள் வளம் தேவையல்லாவா? இந்த பரகத் இல்லாமல் நாம் உண்மையான மகிழ்சியை பெற்று விட முடியுமா ?  வரதட்சனை என்ற அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றைப் பெற்றுக் கொண்டு அல்லாஹ்வுடைய பரகத்தை நாம் எதிபாக்க முடியுமா என்பதை அருமையானவாகளே நாம் சிந்தித்துப் பாக்க வேண்டும். வரதட்சனையை ஹராமாக்கியிருக்கிற முஸ்லிம் சமூகத்திலே பகிரங்கமாக வரதட்சனையை பற்றி பேசப்படுகிறது. பெருமளவிலே வரதட்சரைன கேட்டு வாங்கப்படுகிறது. வரதட்சினை பெற்றுக் கொண்டு நடைபெறுகிற திருமணத்திலே ஆலிம்களும் சமுதாயப் பொயோனகளும் கூச்சமின்றி கலந்து கௌகிறாகள். நாமும் கலந்து கொள்கிறோமே ? என்ன அக்கிரமம் இது ? பெண் வீட்டாரை எந்த வகையிலாவது நிபந்தப்படுத்தி சிரமத்திறகுள்ளாக்கி  பணம் தந்தால் தான் திருமணம் இல்லையேல் அந்த திருமணம் நடக்காது என்றால் அது ஹராமை வீடாக்கி சுன்னத்தை குடியமாத்துகிற வேலையல்லவா ?

அருமையானவாகளே பெண்வீட்டாரை கசக்கிப்பிழிந்து வரதட்சினை பெருவது ஹராம் என்கிற போது மது அருந்துவது எப்படி ஹராமோ அது போலவே வரதட்சினை கேட்டுவாங்குவதும் ஹராமாகும் சுதாடுவது எப்படி தடுக்ககப்பட்டுள்ளதோ இது வரதட்சினை கேட்டுவாங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது.
விபச்சாரம் எப்படி கூடாதோ அது போலவே வரதட்சினையும் கூடாதுதான். வட்டி வாங்கவது போலத்தான் வரதட்சனை வாங்குவதும் கெடூரமானது. அருமையானவாகளே! நம்முடைய மஹல்லாவுக்குள்ளே நாலுபேருக்கு தொகிற மாதிதி ஒருத்தன் மது அருந்துவானா ? மதுவின போதை தலைக்கேற தெருக்களில் உளாக் கொண்டு போகிற கேவலமான மனிதாகளை நம்முயை தெருக்களிலே பாக்க முடியுமா? (அல்லாஹ் நம் அனைவரையும் எல்லாகாலத்திலும் பாதுகாக்க வேண்டும்.)

அது போலவே வௌப்படையாக சுதாடுபவாகளையும் வட்டி வாங்குபவாகளையும் நம்முடைய மஹல்லாக்களில் பாக்க முடியுமா ? அதையும் தாண்டி இப்படி யாராவது நடந்து கொண்டால் அவாகள் நம் சமூகத்திலே மிக கேவலமாக பாக்கப்படுவாகள் ? இல்லயா ? ஆனால் வரதட்சனை என்கிற தவறு மட்டும் எத்தகைய அருவவெருப்பும் இன்றி அரங்கேறி வருகிறது. 

அருமையானவாகளே !
உங்கள் ஆண் மகன்களுக்கு வரத்ட்சனை கேட்காதீர்கள். அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் தூதருக்காக நீங்கள் இந்த சபதத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் மக்னின் வாழ்வில் அல்லாஹ் பரக்கத் செய்வான். 
இனி உங்கள் பெண் குழந்தைகளுக்கு வரதட்சைனை கொடுப்பதைப் பற்றி முதலில் பேசுபவர்களை தவிர்த்து விடுங்கள்.
அருமை பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வரதட்சனையை பற்றி பெருமையாக தம்பட்டம் அடிக்காதீர்கள்.


அருமை திருமண் ஏற்பாட்டாளர்களே  உங்களால் தான் இந்த வரதட்சனைப் பேய் சமுதாயத்தை விட்டு அகலாமல் வாட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் தான் ஆசை காட்டுகிறீகள். கிணற்றிலே வீசப்பட்ட இந்த இளம் பிஞ்சுகளை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கிடைக்கிற கமிஷன் தொகைக்காக வரதட்சைனை பேச்சை பெருக்காதீர்கள். எவ்வளவு தூரம் தவிக்க முடியுமோ அவ்வளவு தூரம் வரதட்சைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்,. நீங்கள் மனது வைத்தால் இந்த சமுதயாத்தில் வரதட்ச்னையைப் பற்றிய மோசமான எண்ணத்தை சமூகத்திலே ஏற்படுத்த முடியும்.


அருமை ஆலிம்களே! ஜமாத்தார்கள். நமது சபைகளில் வரதட்சனைப் பேச்சை தவிர்த்து விடுங்கள். வரதட்சைடை திருமணத்தில் விருந்தை புறக்கணியுங்கள்.


இததீமையை உங்கள் பகுதியிலிருந்து முற்றிலுமாக அழிக்க என்ன வழி என்று தேடுங்கள்,.

அல்லாஹ் நமது சிறு முயற்சிகளுக்கு பெரும் வெற்றீயை தருவான்,

2 comments:

  1. Anonymous9:07 PM

    jazaakallah

    ReplyDelete
  2. ASSALAAMU ALAIKKUM,
    VERY IMPORTANT ARTICLE IN THE RIGHT TIME.PLEASE TAKE CARE OF SPELLING MISTAKES.
    -ALHAJ M.I.MANSUR ALI

    ReplyDelete