ரபீஉல ஆகிர் 11, முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பிறந்த நாள.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், மக்களிடம் உலக மோகம் மிகைத்திருந்த காலத்தில் மக்களை பக்தி மார்க்கத்திற்கு அழைத்து மாபெரும் வெற்றி கண்டவர்.
ரபீஉல் ஆகிர் ஒரு இறை நேசர் பெய்ரால நினைவு கூறப்பட்டாலும் பொதுவாக இறைநேசர்களை நினைவு கூறுவதே இதன் நோக்கமாகும்.
முஹ்யித்தீன் மௌலூது ஓதுகிற சபைகளில் பல வலிமார்களின் பெயர்களும் நினைவு படுத்தப் ப்டுவது கவனிக்கத்தக்கது.
இறை நேசர்கள் என்ற சிறந்த பக்திமான்களை நினைவு கூர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறுகளை படிப்பதும் கேட்பதும் நமது ஈமானை பலப்படுத்தும். தக்வாவின் வழிமுறைகளை நம்க்கு அறிமுகப்படுத்தும்
ஒரு இயக்கத்தில் நீண்ட நாட்களாக வீண்விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு நணபர் அதில் விரக்தியும் சலிப்பும் உற்று ஒரு நாள் என்னிடம் கேட்டார்.
தக்வாவை அதிகப்படுத்திக் கொள்ள என்ன வழி?
நான் சொன்னேன் இறைநேசர்களின் வரலாறுகளைப் படியுங்கள்.
அவர் வேறுமாதிரி யோசிப்பதற்கு முன்னால், உடனடியாக நான் மேலும் சொன்னேன் இது அல்லாஹ்வின் வழிகாட்டல்.
தக்வாவிற்கான வழி :
நல்லவர்களுடன் இருத்தல் - நல்லவர்களைப் படித்தல் அவர்களின் இயல்பை பழகுதல்
பயபக்தியுடைய மனிதர்களுடன் பழகுகிற போது அவர்களது வரலாற்றைப் பார்க்கிற போது எது தக்வா என்பது புரியும்
எனக்குத் தெரிந்த ஒரு மனிதர் இருந்தார்:
10 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்து, பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னால் அப்படியே வைத்திருப்பார். 6 மாதம் கழித்துச் சென்று கேட்டால் நாம் கொடுத்த் அதே நோட்டை மேஜை டிராயரிலிருந்து எடுத்துத் தருவார்.
பாக்கியாத்தின் ஒரு உஸ்தாத் பழைய மண் சட்டி ஒன்றில் டாய்லட்டிற்கு தண்ணீர் எடுத்துச் செல்வார். அது மிகவும் பழையதாக இருக்கவே ஒரு மாணவர் தை உடைத்து விட்டு புதிதாக ஒன்றை வாங்கி வைத்தார். ஹஜ்ரத் மிகவும் வருத்தப் பட்டார். என்னுடை மறைக்கவேண்டிய பகுதிகளை அந்த பழையது மட்டுமே பார்த்திருக்கும். இந்த புதியதும் பார்க்க வைத்து விட்டாயே என்றாராம்.
பாக்கியாத்தின் நிறுவனர் அஃலா ஹஜ்ரத் தன் வீட்டிலிருந்து வந்த டீ யில் சர்க்கரை குறைவு என்பதற்காக மதரஸாவிலிருந்து சர்க்கரையை மாணவர் எடுத்துப் போட்டதற்காக தனியாக காசை கட்டினார்.
இது போன்ற செய்திகளை கேள்விப்படும் போது தக்வாவின் அழகும் அளவும் என்ன என்பது புரிகிறது.
நமது வாழ்வில் தக்வாவை எப்படி முறைப்படுத்துவது என்பதை புரிய வைக்கிறது.
இறைநேசர்களை நாம் நினைவு கூறுவதும் இதற்காகவே!
இது சம்பந்தமாக ஏற்கென்வே நான் எழுதியுள்ள அவ்லியாக்களின்.. என்ற கட்டுரையை படிக்க இங்கே அழுத்துங்கள்
அவ்லியாக்களின்...
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய இந்த இணைப்பை பாருங்கள்.
نبذة عن حياة الشيخ عبد القادر الجيلاني وخدماته

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ 9:119
قال القرطبي : وقيل: الصَّادِقِينَ هم الذين استوت ظواهرهم وبواطنهم. قال ابن العربي: وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى فإن هذه الصفة يرتفع بها النفاق في العقيدة والمخالفة في الفعل
இந்த வசனத்தில்
தக்வாவை வலியுறுத்தும் அல்லாஹ் இந்த வசனத்திலேயே அதற்கான வழிமுறையையும் சொல்கிறான்.தக்வாவிற்கான வழி :
நல்லவர்களுடன் இருத்தல் - நல்லவர்களைப் படித்தல் அவர்களின் இயல்பை பழகுதல்
பயபக்தியுடைய மனிதர்களுடன் பழகுகிற போது அவர்களது வரலாற்றைப் பார்க்கிற போது எது தக்வா என்பது புரியும்
எனக்குத் தெரிந்த ஒரு மனிதர் இருந்தார்:
10 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்து, பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னால் அப்படியே வைத்திருப்பார். 6 மாதம் கழித்துச் சென்று கேட்டால் நாம் கொடுத்த் அதே நோட்டை மேஜை டிராயரிலிருந்து எடுத்துத் தருவார்.
பாக்கியாத்தின் ஒரு உஸ்தாத் பழைய மண் சட்டி ஒன்றில் டாய்லட்டிற்கு தண்ணீர் எடுத்துச் செல்வார். அது மிகவும் பழையதாக இருக்கவே ஒரு மாணவர் தை உடைத்து விட்டு புதிதாக ஒன்றை வாங்கி வைத்தார். ஹஜ்ரத் மிகவும் வருத்தப் பட்டார். என்னுடை மறைக்கவேண்டிய பகுதிகளை அந்த பழையது மட்டுமே பார்த்திருக்கும். இந்த புதியதும் பார்க்க வைத்து விட்டாயே என்றாராம்.
பாக்கியாத்தின் நிறுவனர் அஃலா ஹஜ்ரத் தன் வீட்டிலிருந்து வந்த டீ யில் சர்க்கரை குறைவு என்பதற்காக மதரஸாவிலிருந்து சர்க்கரையை மாணவர் எடுத்துப் போட்டதற்காக தனியாக காசை கட்டினார்.
இது போன்ற செய்திகளை கேள்விப்படும் போது தக்வாவின் அழகும் அளவும் என்ன என்பது புரிகிறது.
நமது வாழ்வில் தக்வாவை எப்படி முறைப்படுத்துவது என்பதை புரிய வைக்கிறது.
இறைநேசர்களை நாம் நினைவு கூறுவதும் இதற்காகவே!
இது சம்பந்தமாக ஏற்கென்வே நான் எழுதியுள்ள அவ்லியாக்களின்.. என்ற கட்டுரையை படிக்க இங்கே அழுத்துங்கள்
அவ்லியாக்களின்...
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய இந்த இணைப்பை பாருங்கள்.
نبذة عن حياة الشيخ عبد القادر الجيلاني وخدماته
No comments:
Post a Comment