வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 03, 2011

அரபு நாடுகளில் தொடரும் கிளர்ச்சி


 وَتِلْكَ عَادٌ جَحَدُوا بِآيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ  - هود(59)
அரபு நாடுகளில் தொடச்சியாக கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.

துனிஷியா எகிப்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பஹ்ரைன் லிபியா எமன் ஜோர்டான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் வலுத்துவருகிறது.

அரசியல் ரீதியாக அரபு நாட்டு மக்கள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிவருகிறார்கள்.

மக்கள் விரும்புகிறவர்களே ஆட்சியாளர்களாக வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தின் நடைமுறைகளில் முறையான சட்ட ஒழுங்கும் வெளிப்படையான போக்கும் கையாளப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மக்களின் இந்தப் போக்கு நியாயமானது வரவெற்கத்தக்கது.
இதற்கு உலகம் முழுவதிலுமுள்ள் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்

இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் வேஷத்த்தையும் கயமையையும் அந்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சூதுவாதிலிருந்து அவர்கள் தப்பிக்க வெண்டும். அதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

அமெரிக்காவின் இரட்டை வேட்த்தை பாருங்கள்

பஹ்ரைனில் போராட்டம் நடை பெற்றது. லிபியாவிலும் போராட்டம் நடைபெறுகிறது.

பஹ்ரைனை ஆட்சி செய்யும் அரசு, இராணுவத்தை வைத்து போராட்ட்த்தை அடக்கியது.

போராட்டக்கார்ர்கள் மீது இராணுவத்தை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற இலேசான யோசனையோடு அமெரிக்கா நிறுத்திக் கொண்ட்து.

காரணம். பஹ்ரைனில் அமெரிக்காவின் கப்பற்படைக்கான தளம் இருக்கிறது.பஹ்ரைனின் சகல் சீர்கேடுகளுக்கும் அது ஒரு முக்கியக்காரணம்.

லிபியா விசயத்தில் அமெரிக்கா எப்படிக் குதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

தன் வீட்ட்டுக்கு நுழைந்து விட்ட அழையாத விருந்தாளியை விரட்டுவது போல gadaaffi must go கடாபி வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் .நா சபையில் கூறுகிறார்.

இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு ஆயுத பலம் கொண்டிருக்கிற லிபியாவின் ஆயுத்த்திறனை அழிக்கப் போவதாக அமெரிக்கா கூறிவருகிறது.
இந்தக் குரோத்த்திற்கு காரணம். அரபு நாடுகளில் அமெரிக்காவின் ஏதோச்சதிகாரத்தை மிக நீண்டகாலமாக எதிர்த்துவருகிற நாடு லிபியா.

லிபியா அதிபர் கடாபி தனியொருவராக மிக நீண்டகாலமாக அமெரிக்காவை  தீவிரமாக எதிர்த்துவருகிறார்.

மக்கள் போராட்டம் என்ற போவையை பயன்படுத்தி அமெரிக்கா எரிகிற வீட்டிலிருந்து விறகு பறிக்கப் பார்க்கிறது.

சவூதி போன்ற அரபு நாடுகளில் இதற்கு முன்னாள் நடந்துள்ள பல ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இதே அமெரிக்கா உதவி செய்துள்ளது, அங்குள்ள அரசுகளுக்கு பாதுகாப்பாக தனது கூலிப்படையை அங்கு வைத்துள்ளது.

அமெரிக்காவின் இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் உலகில் அமைதியின்மை தொடரும்.

அமெரிக்காவின் ஆதிக்கத் தீவிரவாதம் தொடரும் வரை உலகில் வேறு எந்த்த் தீவிரவாதமும்  ஓழியாது.

அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு காரணம்.

மக்கள் விரும்பாத ஆட்சியாளர்கள் 
இஸ்லாம் இதை எதிர்கிறது. ஒரு மக்கள் கூட்ட்த்திற்கு தலைமை ஏற்பவர் அவர்கலின் திருப்திக்குரியவராக இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
n  மக்கள் விரும்பாதவர் இமாமத் செய்ய முடியாது.

عَنْ الْحَسَنِ قَال سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةً رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلٌ سَمِعَ حَيَّ عَلَى الْفَلَاحِ ثُمَّ لَمْ يُجِبْ -  ترمذي
அரபு நாடுகலின் ஆட்சியாளர்கள் பலரும் மக்களிடமிருந்து அதிகாரத்தையும் ஆட்சியையும் பறித்துக் கொண்டவர்கள்.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ لَا تَسْأَلْ الْإِمَارَةَ فَإِنَّكَ إِنْ أُعْطِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا وَإِنْ أُعْطِيتَهَا عَنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا -  بخاري

பத்வி மோகம் கொண்டு அலைவதை இந்நபி மொழி வன்மையாக கண்டிக்கிறது.

அத்தைகையோருக்கு பதவி ஒரு சுமையாகி விடும் என்ற எச்சரிக்கை நூற்றுக்கு நூறு சத்தியமாகும்.

என்றாவது ஒரு நாள் அவர்கள் கடுமையான் சிக்கலில் சிக்குவார்கள். குறைந்த பட்சம் நிம்மதியாக அவர்களால் உறங்க முடியாது.

221/2 லட்சம் சதுர மைல்களை ஆதிக்கத்தில் வைத்திருந்த உமர் (ரல்) அவர்கள் மதீனா பள்ளிவாசலில் வெறுந்தரையில் படுத்து நிம்மதியாக உறங்க முடிந்த்து என்றால் அதற்கு காரணம் அவர் பதவியை விரும்பவில்லை என்பதே

அவர் பதவியை விரும்பி இருந்தால் முதலிலேயே கலீபாவாக ஆகி இருக்கலாம். ஏனென்ன்றால் அவரைத்தான் அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீபா பதவிக்கு முன்மொழிந்தார்.

மக்கள் நலனை கவனிக்காமல் இருத்தல்
مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ بِحَدِيثٍ لَوْلَا أَنِّي فِي الْمَوْتِ لَمْ أُحَدِّثْكَ بِهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمْ الْجَنَّةَ

عَنْ خَيْثَمَةَ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو إِذْ جَاءَهُ قَهْرَمَانٌ لَهُ فَدَخَلَ فَقَالَ أَعْطَيْتَ الرَّقِيقَ قُوتَهُمْ قَالَ لَا قَالَ فَانْطَلِقْ فَأَعْطِهِمْ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يَحْبِسَ عَمَّنْ يَمْلِكُ قُوتَهُ
( قهرمان ) وهو الخازن القائم بحوائج الإنسان , وهو بمعنى الوكيل , وهو بلسان الفرس

அரபு நாட்டு மன்னர்கள் பலர் அமெரிக்க ஆதர்வோடு தங்களை மட்டுமே வளர்த்துக் கொண்டனர்.
.
துனீஷியாவில் புரட்சி வெடிக்க்க் காரணம் வேலை வாய்ப்பில்லாத ஒரு இளைஞன் கோபத்தில் தற்கொலை செய்து கொண்ட்து.

அடக்குமுறையை கட்டவிழ்த்து விடல் - எதிப்பாளர்கலை கொன்றொழித்தார்கள்

பெருமானார் (ஸல்) அவர்கள் மிக்க்கடும் சொற்களையும் பொறுத்துக் கொண்டார்கள்
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا فِي الْقِسْمَةِ فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنْ الْإِبِلِ وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ فَقَالَ رَجُلٌ وَاللَّهِ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللَّهِ قَالَ فَقُلْتُ وَاللَّهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ قَالَ فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ ثُمَّ قَالَ فَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ يَعْدِلْ اللَّهُ وَرَسُولُهُ قَالَ ثُمَّ قَالَ يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ قَالَ قُلْتُ لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًامسلم 1759

போலீஸின் அராஜகத்தை படம் பிடித்து இண்டெனெட்டில் வெளியிட்ட ஒரு காலித் ஜைத் என்ற இளைஞனை பொதுமக்கள் பலர் பார்க்க போலீஸ் கடுமையாக சித்த்ரவதை செய்து கொன்றதே எகிப்தில் புரட்சி வெடிக்க காரணம்.

உள்ளாசமாக ஆட்சியில் இருக்கும் அரபு ஆட்சியாளர்கள் பலரும் நாட்டில் அதிகாரிகள் எப்படி நடக்கிறார்கள் என்பதை கவனிப்பதில்லை
உமர் (ரல்) அவர்களின் மாபெரிய சிறப்புக்கு காரணம் தான் நியமிக்கும் அதிகாரிகள் கவர்னர்கள் விசயத்தில் அவர் மிகவும் கண்காணிப்புச் செய்த்தே! ஒரு தவறை கண்டறிந்தால் யாராராக இருந்தாலும் கண்டிக்க தவறவில்லை.

உரிமைகள் சலுகைகள் கேட்ப்வர்கள் மீது அடக்கு முறை கூடாது. புரியவைக்கப்படனும்

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنْ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ

அதிகாரிகள் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். கணக்குக் காட்டவேண்டும்.
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَسْدِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ يُدْعَى ابْنَ اللُّتْبِيَّةِ فَلَمَّا جَاءَ حَاسَبَهُبخاري 1500

مَعْقِلَ بْنَ يَسَارٍ - سَمِعْتُُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ َقَالَ مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ
 غَاشٌّ : : மோசடி செய்பவன்

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

அரபு நாட்டு ஆட்சியாளர்களின் அளவு கடந்த ஆடம்பரம்-
ஆட்சியாளர்களிடம் மார்க்கம் மருந்துக்கும் இல்லை.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُ الْمَرِيضَ وَيُشَيِّعُ الْجِنَازَةَ وَيُجِيبُ دَعْوَةَ الْمَمْلُوكِ وَيَرْكَبُ الْحِمَارَ وَكَانَ يَوْمَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ عَلَى حِمَارٍ وَيَوْمَ خَيْبَرَ عَلَى حِمَارٍ مَخْطُومٍ بِرَسَنٍ مِنْ لِيفٍ وَتَحْتَهُ إِكَافٌ مِنْ لِيفٍ

மக்களிடமும் ஒரு பக்குவம் தேவை : மேற்குலக நாடுகளின் துண்டுதலுக்கு பணிந்து சிறு குறைகளை பெரிது படுத்தி இருக்கிற ஆட்சியாளர்களை விரட்டி விட்டு இன்னும் மோசமான ஆட்சியை அவர்கள் பெற்று விடக்கூடாது.

عن عوف بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلون عليهم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم قيل يا رسول الله أفلا ننابذهم بالسيف فقال لا ما أقاموا فيكم الصلاة وإذا رأيتم من ولاتكم شيئا تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يدا من طاعة   مسلم
   
அல்லாஹ் அதிகாரச் சிக்கலிலிருந்து அரபு நாட்டு முஸ்லிம்களை மீட்பானாக்! அம்மக்களுக்கு இறைய்ச்சமும் கருணையு முள்ள ஆட்சியாளர்களை த்ந்தருள்வானாக ! குருமதியாளர்களின்காபிர்களின் சதித்திட்ட்த்திலிருந்து இஸ்லாமிய உலகை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
ربنا لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا و لا يرحمنا

2 comments:

  1. Anonymous6:40 AM

    very good Article... Alhamdulillaah.. Majority of Muslim people having same thoughts like you.. Of course we are one ummah.

    ReplyDelete
  2. Anonymous11:29 AM

    which movement this is?

    ReplyDelete