வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 24, 2011

இன்றைய சூழலில் கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய பெருமானாரின் பண்புகள்

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
முஸ்லிம் சமுதாயம் கேலிக்குரிய மரியாதையற்ற சமுதாயமாக மாறிவிட்ட்தற்கு முக்கிய காரணம்பெருமானாரின் வழி முறைகளை பின்பற்ற தவறியதே!

அன்று கந்தல் துணி உடுத்திருந்த பரதேசிகளைப் பார்த்து உலக்ம பயந்து பணிந்த்து காரணம் அவர்கள் பெருமானாரின் வழிமுறைகளை பின்பற்றினார்கள்.

காதிஸிய்யா யுத்தம் மற்றொரு பத்ருப்போர் என்று சொல்லத்தக்க அளவு முக்கியமான யுத்தம். அதன் வெற்றி பாரசீக சாம்ராஜ்யத்தை வீழ்த்தியது.

முஸ்லிம்கள் சில ஆயிரம் பேர்எதிரிகளோ  இலட்சக்கணக்கில்.
பாரசீக தளபதி ருஸ்துமுக்கு முஸ்லிம்களின் தைரியத்திற்கான காரணம் தெரியவில்லை.

முஸ்லிம் படையை வேவு பார்க்க ஆள் அனுப்பினான். முஸ்லிம்கள் பதற்ற மடைந்து ஆயுதங்களை தயார் செய்வதற்கு பதிலாக நிம்மதியாக தொழுது கொண்டும் குர் ஆன் ஓதிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்த்து. ருஸ்துமின் பயம் அதிகரித்த்து. பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்தான்.

ஆடம்பரமான அவனது கூடரத்திற்குள் அழுக்கான கிழிந்த  ஆடைகளோடு முஸ்லிம்கள் சென்றார்கள்.
அனைவருக்கும் உணவு வழங்கப் பட்ட்து ஒரு சஹாபி கீழே விழுந்த பருக்கையை எடுத்து சுத்தம் செய்து விட்டு சாப்பிட்டார். உடன் இருந்த மற்றவர்கள் பெரிய மனிதனின் சபையில் இதென்ன சிறுபிள்ளைத்தனம் என்பது போல முறைத்த்தார்கள். அவர் சொன்னார்.
ءاترك سنة رسول الله لهولاء الحمقاء؟

எந்த ஒரு சிறு வழிகாட்டுதலை இஹ்லாஸாக பின்பற்றினாலும் வாழ்வில் உன்னத நிலைக்கு உய்ரலாம்

இமாம் அஹ்மது பின் ஹன்பல் அவர்கள் தனக்கு கிடைத்த அந்தஸ்திற்கு சொல்லுகிற போது ஒரு சுன்னத்தை பின்பற்றியதே காரணம் என்றார்கள்.

சிறுவனாக இருந்த போது குளிக்கச் சென்றார். – ஆடைகளை கலைந்தார். அன்று உஸ்தாது சொன்ன ஹதீஸ் ஞாபகத்திற்கு வந்த்து.

عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلْ الْحَمَّامَ بِغَيْرِ إِزَارٍ -  الترمذي

அன்றிலிருந்து வேட்டி கட்டாமல் குளிப்பதில்லை

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் வழி முறைகளும் எந்த ஒன்றும் கைவிட்த்தக்கது அல்ல.

இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமாக கைகொள்ள வேண்டிய சில வற்றை இங்கு கூறுகிறேன்.
இன்றைய முஸ்லிம்களின் பண்பாட்டுச் சூழல் மேம்பட அது உதவும். அவை மட்டுமல்ல பின் பற்றுவதற்கு எளியவை.

சூதுவாது வஞ்சம் இல்லாத மனது.

நபியின் ஒரு சுன்னத்தையாவது பின்பற்ற்வேண்டும்  என்று நினைப்பவர்களுக்கு இதோ அற்புதமான ஒரு வழிகாட்டி!
மனதை சுத்தமாக வைத்துக் கொள்வது பெருமானாரின் குணம் :

عن أَنَس رضي الله عنه قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَافْعَلْ ثُمَّ قَالَ لِي يَا بُنَيَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ (ترمذي

நபி ஸல் மூன்று சந்தர்ப்பங்களில்  ஒரு சஹாபியை சுட்டிக்காட்டி இவர் சொர்க்க வாசி என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் கூறுகிறார். நான் அவரை வேறுபார்த்தேன். அவர் விசேசமான அமல் எதுவும் செய்ய வில்லை அவரிடமே காரண்ம் கேட்டேன். அவர் சொன்னார்:

مَا هُوَ إِلا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لا أَجِدُ فِي نَفْسِي عَلَى أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا وَلا أَحْسُدُهُ عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ : فَهَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لا لا نُطِيْقُ (نسائc

இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பிற்றைப் பற்றிய நல்லெண்ணத்திற்குத்தான் பெரும் பஞ்சம்.

நல்லதை கூட கெட்ட்தாக பார்க்கும் இயல்பு பெருகிவிட்ட்து.
ஒரு ஆள் உதவி செய்ய முன்வந்தால் எல்லாம் உள்நோக்கத்தோடு தான் செய்யப் படுகிறது என்று எண்ணுகிறார்கள்
முஹம்மது (ஸல்) அவர்களோ தீய எண்ணம் கொண்டவர்களின் நடவடிக்கையை கூட சரிகாண முயன்றார்கள்
அபூஜஹ்லின் மனைவி உம்மு ஜமீல் பெருமானாரின் பெய்ரையே உருக்குலைத்து
  فمذمما عصينا  என்று பாடினாள். தோழர்கள் அதிக வருத்தமுற்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் சொன்ன்னார்க்ள்: அல்லாஹ் என் பெயரை எப்படிக் காப்பாற்றினான் பாருங்கள் இவள் முதம்மைத்தானே குறை சொன்னாள். நானோ முஹம்மது அல்லவா?

தாமஸ் கார்லைல் பெருமானாரைப் பாராட்டுகிறார்.
எந்த இப்னு உம்மி மக்தூம் விசயத்தில் அவர் கண்டிக்கப்பட்டாரோ. அவரை இரண்டு முறை மதீனாவுக்கு பொறுப்பாளாராக ஆக்கினார்.

وقد قام الرسول الكريم بتولية عبد الله بن أم مكتوم على المدينة مرتين أثناء غيابه عنها ( في الغزوات والحروب ليقيم الصلاة بها ) . هكذا كان الإخلاص والعرفان 

பெருமானாரின் இன்னொரு பண்பு அசிங்கமாக நடந்து கொள்ளாதவர்

பெருமானார் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவராக இருந்த்தில்லை.

கடிந்து கடுகடுவென்று பேசுப வரில்லை.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا - البخاري

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّابًا وَلَا فَحَّاشًا وَلَا لَعَّانًا كَانَ يَقُولُ لِأَحَدِنَا عِنْدَ الْمَعْتِبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ البخاري

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى الْمَسْجِدِ فَبَالَ فَصَاحَ بِهِ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتْرُكُوهُ فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ أَمَرَ بِدَلْوٍ فَصُبَّ عَلَيْهِ

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ ثُمَّ نَزَلَ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ نُودِيَ بِالصَّلَاةِ فَصَلَّى بِالنَّاسِ فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلَاتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ فِي الْقَوْمِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ فِي الْقَوْمِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَابَتْنِي جَنَابَةٌ وَلَا مَاءَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكَ بِالصَّعِيدِ فَإِنَّهُ يَكْفِيكَ – الدارمي

தியவர்களும் தீயவர்களிடம் நடந்து கொள்ளும் முறைய்ம்.

حَدَّثَتْنِي عَائِشَةُ أَنَّ رَجُلًا اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ائْذَنُوا لَهُ فَلَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ أَوْ بِئْسَ رَجُلُ الْعَشِيرَةِ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ أَلَانَ لَهُ الْقَوْلَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ لَهُ الَّذِي قُلْتَ ثُمَّ أَلَنْتَ لَهُ الْقَوْلَ قَالَ يَا عَائِشَةُ إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ وَدَعَهُ أَوْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ - مسلم

நபி வழி நபி வழி மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அமைப்புக்கள் இயக்கங்களின் பேச்சு வழக்கு எப்படி இருக்கிறது.

முஸ்லிம் சமூகம் மிகவும் தரக்குறைவாக பார்க்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
டிவியில் காசு கொடுத்து நேரம் வாங்கித் திட்டுகிறார்கள்.

நாம் நம்மது உள்ளத்தை இல்லத்தை நபி வழி சுத்தப் படுத்தினால் நிச்சயமாக இரு உலகிலும் உய்ரமுடியும்.

No comments:

Post a Comment