வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 24, 2011

முட்டாள்கள் தினம் முட்டாள்களுக்கே


 • ·         அடுத்த வெள்ளிக்கிழ்மை ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம்
 • ·         பிரான்ஸ் மக்களிடமிருந்து உலகிற்கு தொற்றிய பழக்கம் இது
 • ·         தங்களது நடைமுறையை பின்பற்றாதவர்களை முட்டாளாக்குவதற்கு
 • ·         ஐரோப்பியர்கள் கையாண்ட வழி முறை இது.
 • ·         பிறகு இது உலகம் முழுவதிலும் பரவியது. யாரையும் விட்டு வைக்கவில்லை
 • ·         அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டது.
 • 'மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்' என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை ஜோக் என்றது நாசா.
 • ·         அதேபோல் 2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத்தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது.
 • ·         1846  ல் இங்கிலாந்தில் ஈவ்னிங் ஸ்டார் பத்ரிகை மார்ச் 31 ம் தேதி அன்று அடுத்த நாள் 1 ம்தேதி ஸ்லிஞ் டவுன் என்ற இட்த்தில் கழுதைப் பந்தையம் ஒன்று நடக்கப் போவதாக எழுதியிருந்த்து. விதவிதமான கழுதைகளை பார்க்கும் ஆவலில் ஏராளமான மக்கள் அங்கு கூடினர். அவர்களைத் தான் அந்தப் பத்ரிகை கழுதைகளாக்கியிருக்கியிருக்கிறது என்பது பிறகுதான் தெரிந்த்து
.
 • ·         நாமும் முட்டாளாக்க் கூடாது பிற்ரை முட்டாளாக்குவதும் கூடாது இது இஸ்லாமின் வழிகாட்டுதல்

வெளிய் கிளம்பும் போது பெருமானாரின் பிரார்த்தனை
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ   - ابوداوود

பிறரை முட்டாளாக்கி மகிழ்வது அறிவுடமை அல்ல.

இதில் இரண்டு தவறுகள் நடக்கின்றன
 • ·         பொய சொல்வது
ஏபரல் பூல் என்பதை அரபியில் كذبة نيسان   ஏப்ரல் பொய் என்கின்றனர்.
 • ·         முறையற்ற வகையில் மகிழ்ச்சியடைவது

பொய் இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விசயம்
فإن الكذب داء عظيم إذ يعد من قبائح الذنوب وفواحش العيوب وقد جُعل من آيات النفاق وعلاماته، ويُعد صاحبه مجانبًا للإيمان، ولقد كان الرسول صلى الله عليه وسلم أبغض الخلق إليه الكذب، فالكذب والإيمان لا يتفقان إلا وأحدهما بحساب الآخر والكذب ريبة ومفسدة على صاحبه.

மகிழ்வதும் மகிழ்ச்சிப்படுத்துவதும் மரியாதையான வழியில் அமைய வேண்டும்
وقد ثبت عنه صلى الله عليه وسلم أنه يمزح ولكنه لا يقول في مزاحه إلا حقًا

நகைச்சுவை எப்படி அமைய வெண்டும்  
وهذا المزاح الذي كان من رسول الله صلى الله عليه وسلم
فيه تطييب لنفس الصحابة،
وتوثيق للمحبة،
وزيادة في الألفة،
وتجديد للنشاط والمثابرة،
قال صلى الله عليه وسلم : "والذي نفسي بيده لو تداومون على ما تكونون عندي من الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم، ولكن يا حنظلة ساعة وساعة" ، ثلاث مرات

இப்படியே  என்னுடன் திக்ரில் இருந்தீர்கள் எனில் மலக்குகள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். ஹன்ழலா! அவ்வப்போது மகிழ்ச்சியாக இருங்கள்

·         ஏப்ரல் பூல் கற்றுத்தருகிற ஒரு பாடமும் உண்டு:
 • முட்டாள் ஆகாமல் முழு விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.  
 • ஆனால்365 நாளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

·         விழிப்புனர்வுடன்  ஏமாறமல் இருப்பது ஈமானிய குண்ம்

நம்மில் 90 விழுக் காட்டிற்கு மேல், ஒவ்வொரு விசயங்களிலும் பிறர் சொல்லைக் கேட்டு ஏமாந்து போகிறோம்.
எந்த விசய்த்திலும் ஒரு முஸ்லிம் ஏமாறக் கூடாது.
5668 عن أبي هريرة رضي اللهم عنهم عن النبي صلى اللهم عليه وسلم أنه قال لا يلدغ المؤمن من جحر واحد   مرتين - البخاري 

குறிப்பாக மார்க்க விசயத்தில்  தவறான ஆசமிகளிடம் ஏமாறக் கூடாது

நணபர் இலட்சக்கணக்கில் வீடு கட்டி திறந்தார். புதிதாக பல் ஆயிரம் செலவழித்து பெயிண்ட் செய்திருந்தார். பச்சை பச்சை அணிந்த ஒரு நபரை திறப்பு விழாவிற்கு அழைத்து வந்தார். அந்த ஆள் கையை சந்தணத்தில் குழைத்து சுவைல் பல இடங்களில் கை அச்சை பதிவு செய்தார்.
பெயிண்டும் வேஸ்ட். நம்பிக்கையும் தவறு.
மார்க்கத்தில் நிகழும் இது போன்ற ஏமாற்றங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாம் எச்சரிக்கை அடைய வேண்டிய இன்னொரு முக்கியப் பேர்வழி ஷைத்தான்.
يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا(120)
நம்மை ஏமாற்றுவதையே இலக்காக கொண்டவன் .
அவனது வலைகளில் விழுந்து விடாமல் விழிப்போடு இருப்பது முஃமினின் வாழ்வில் பிரதான விசயம்.
நமது வாழ்வின் வசதிகள் நம்மை ஏமாற்றி விடக்கூடாது
وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا(34) الكهف

பிறரிடம் ஏமாறாமலும் பி்றரை ஏமாற்றாமலும் அல்லாஹ் வாழவைப்பானாக !

No comments:

Post a Comment