வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, March 30, 2011

ஓட்டுப்போடுவது கடமை


ஒட்டுப்போடுவதும் ஒரு கடமை
14 வது சட்டமனறத்திற்காகன் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

இந்தியாவின் மக்களாட்சி அமைப்பு முறை வெற்றிகரமாக செயல்பட்டு வரகிறது.

குறைகள் இருந்தாலும் ஒரு ஏழை தேசம் 50 ஆண்டகளாக தனது குடியரசுத் தத்துவத்தை தொடர்நது பாதுகாத்து வைத்திருக்கிறது

தேர்தல் தனக்கு பிடிக்காதவரை தூக்கி வீசிவிடுகிறார்கள் இந்திய மக்கள்.


சர்வாதிகார ஆட்சியோ ரானுவப்புரட்சியோ இந்த தேசத்தின் மக்களாட்சி தத்தவத்தை மளுங்கடித்து விடவிலைலை

இந்தியத் தேர்தல்கள் குறைப்பிரசவமாக இல்லாமல் நிலையான அரசுகளை தந்ததால் உலகில் மதிக்கத்தக்க  குடியராசாக இந்தியா திகழ்கிறது.

முஸ்லிம் வாக்காளரின் பங்கு அதிகாரத்தை தீர்மாணிக்கும் அளவு முக்கயத்துவம் பெற்றதாகும். முஸ்லிம் வாக்காளர் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அரசியல் தெளிவு பெற்றவராக எப்பொதும் இருந்து வந்திருக்கிறார். இந்தியாவில் நிலையான அரசுகள் அமைவதற்கு முஸ்லிம்களின் அரசியல் தெளிவும் பங்களிப்பும் முக்கியக் காரணங்களாகும்.
இன்றைய அரசியல் மரியாதையான மனிதர்களுக்கு தகுந்ததல்ல என்ற சிந்தனை  பரவியிரக்கிறது.

அரசியல் என்பது பொய், லஞ்சம், சதி மோசடி என்பதன் மறு பெயராக ஆகிவிட்டது.

முன்பெல்லாம் பொது இடங்களில் தொழுநோயாளிகள்; உள்ளே நுழையக்கூடாது என்று எழுதிவைத்திருப்பர்கள். பெருநோய்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட  இப்போது  இங்கு அரசியல் பேசாதீர்கள் என்று எழுதி வைக்கிறார்கள்..

திருட்டுக் குற்றத்திற்காக ஒரு ஆசாமியை சிறையில் அடைத்தார்கள். அங்கேயும் அவன் சும்மா இருக்கவில்லை. சிறைக்கூடத்தின் கம்பிகளையே திருடிவிட்டான். அவனை எந்த செல்லில் போடுவது ஜெயிலர் யோசித்தக் கொண்டிருந்த போது ஒரு அனுபவ சாலி சார் இவனை சட்டசபையில் போடுங்கள் என்று சொன்னாராம்.
இத்தகைய போக்கினால்  அரசியலில் பங்கேற்பதையும் தேர்தலில் நிற்பதை ஓட்டுப் போடுவதையும் சிலர், குறிப்பாக உயர் தட்டு மக்கள் தவிர்க்கிறார்கள்

இதன் விளைவு தவறானது. சமூகத்திறகு தீங்கு விளைவிக்கக் கூடியது.


தேர்தல் புறக்கணிப்பு தவறு

ஆயதம் ஏந்திய குழுக்கள் கூட ஓட்டுப் பாதைiயில் ஒய்யாரமாய் நடைபேடத் தொடங்கியிருக்கிற போது, ஒன்றிரண்டு நிகழ்வுகளைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால் மக்கள் நிம்மதியாகவும் மரியதையுடனும் உரிமைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சிறந்த குடியரசு நாட்டில் கிலாபத்தை உருவாக்குதல் என்ற போர்வையில் தேர்ஹலுக்கு எதிரான பிரச்சாரத்தை சிலர் செய்து வருகிறார்கள்.. இது இளைஞர்களின் முளையிலிருக்கிற அமைதியை கலைத்து கலகப் பேய்பிடிக்ச் செய்கிற நடவடிக்கையே தவிர வேறில்லை.

லா ஹுக்ம இல்லா லில்லாஹ் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது என்ற தொன்மையான வரலாற்று வாசகத்தை சிலர் உரத்து ஒலித்த போதெல்லாம் அது அசத்தியத்தின் கூக்குரலாகத்தான் ஒலித்தது என்பதை இஸ்லாமிய வரலாற்றை ஆழ்ந்து படிக்கிற எவரும் விளங்கிக் கொள்ள முடியும்.

காரிஜிய்யா என்ற கலகப்படையினர் முதன் முதலாக இந்தக் கோஷத்தை எழுப்பிய போது ஹஜ்ரத் (அலி) அவர்கள் வார்ததை நல்ல வார்ததை தான். ஆனால் தீய நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (கலிமது ஹக்கின் உரீத பிஹல் பாதில்) என்று சொன்னார்கள் என வரலாற்று எழுத்தாளர் முஹ்யித்தீன் ஹய்யாத் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதும் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய விசயம் இது. இந்தியா பல்வேறு பட்ட சமய மக்கள் தங்கள் சமய நம்பிக்கை களுடன் மகிழ்சிகரமாக வாழ்ந்த வருகிற தேசம். முன்னேறிய தேசங்களில் பார்க்க முடியாத அமைதியும் மகிழ்சியும் நமது நாட்டில் பாரம்பரியமாக கிடைத்து வருகிறது. இங்குள்ள தேர்தல நடைமுறையை புறக்கணிக்குமாறு யாரேனும் கூறினால் அவர்களை இளைஞர்கள் புறக்கணித்து விட வேண்டும்.

ஓட்டுப்போடுவது மார்க்க கடமை

முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை மட்டுமல்ல சமயக்கடமையுமாகும்.

ஒட்டுப் போடுவதும் நன்மையை பெற்றுத்தருகிற ஒரு இபாதத் ஆகும்.

இஸ்லாமியப்பார்வையில் ஓட்டுப் போடுவது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ அவருடைய திருக்குர் ஆன் விhவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்3 பக்கம் 71 வசன எண் 5.8)

திருக்குர்ஆன் போதிக்கிற شهادة  (சாட்சியமளித்தல்) شفاعة (சான்றளித்தல்) وكالة (ஒப்புவித்தல்) அகிய மூன்று தார்மீகக் கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை என அவர் குறிப்பிடுகிறார்.

கத்தர் பல்கலைகழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல்கர்ழாவியும் தேர்தல் முறையை ஒருவகை பரிந்துறையே என்றும் அது நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.
திருக்குர்ஆன் கூறுகிறது

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا(135)

திருக்குர்ஆன் மேலும் கூறுகிறது

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

5.8 வசனத்தின் பினனணியில் தேர்தலில் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுகிற முஸ்லிம் அதை விளையாட்டாகவோ வியாபாரமாகவோ அலட்சியமாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்று முப்தீ முஹம்மது ஷபீ வலியுறுத்துகிறார் சமூகத்தை ஆளுகிற தகுதி படைத்தவரை தேந்தெடுக்கும் தேர்தல்களின் போது ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் நீதியை நிலைநிறுத்தும் சாட்சியின் நிலைய ஒத்திருக்கிறார். ஒரு வழக்கில் சாட்சி பின்வாங்கிவிட்hலோ அல்லது பிறழ்ந்த விட்டாலோ நீதி நிலை தடுமாறிப் போய்விடுமல்லவா அது போலவே ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் தனது கடமையை நிறைவேற்றாவிட்டால் தவறான மனிதர்களிடம் சமூகத்தை ஒப்புக் கொடுத்த பிழையை செய்தவிட்டவர் ஆவார்.தங்களது தேர்தல் கடமையை(வாஜிபு அல் இன்திகாபி) நிறைவேற்றாத முஸ்லிம்கள் தீயவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிப்பதாகவே அர்த்தம் என்று யூசுப் அல்கர்ழாவி கூறுகிறார்.

பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.மக்கள் அநியாயக்காரனை பார்த்து விட்டு அவன் கையையைப்பிடித்து தடுக்காவிட்டால் அதற்கான தண்டனையை அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தருவான். (திர்மிதி - அபூதாவுத் )



இந்தியா உலகின் சிறந்த மக்களாட்சிக் குடியரசு

அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்; வாக்காளர் பட்டியலில் நம் பெயரை கவனமாக சேர்க்க வேண்டும்;

வாக்காளர் வயது வரம்பை 21 வயதில் இருந்து, பதினெட்டு வயதாக மாற்றி 1989 ல் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனை 16 வயதாக குறைக்கலாமா என்ற விவாதம் எழுந்துள்ள  நிலையில் பெரியவர்கள் வாக்களிக்காமல் இருக்க்க் கூடாது

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஆட்டோவில் சென்றாவது, தவறாமல் ஓட்டுரிமையை செலுத்தி விடுவேன். பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது குற்றம். வாக்குரிமையை விற்க கூடாது. நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் பணத்தை அருகில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அந்த பணத்தை நான் எனது சொந்த செலவுக்கு பயன்படுத்த மாட்டேன். நான் நினைக்கும் வேட்பாளருக்கே ஓட்டு போடுவேன். என்று கூற்கிறார் .பி.பழனிவேல் (57),தேனி:

பனம் வாங்க்க்கூடாது.

ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால், இந்தியாவில் ஜனநாயக முறை அழிந்துவிடும்.





100 சதவீத வாக்குகள் பதிவாகும் வகையில், அனைத்து மக்கள் இயக்கங்களும் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும்.

நாம் ஓட்டுப்போட்டாலும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது. அவனே நல்ல தீய ஆட்சியாளர்களைத்தறுகிறான்.
பெருமானார் கற்றுத்தந்த அருமையான பிரார்த்தனை.

ربنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا


No comments:

Post a Comment