முஸ்லிம் ஓட்டு யாருக்கு?
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
14 வது சட்டமன்றத் தேர்தலை முறையாக நட்த்த தேர்தல் கமிஷன் அரும்பாடுபட்டு வருகிறது.
குறிப்பாக பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கீழ்த்தரமான போக்கை ஒழிப்பதற்கு அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளது.
திருச்சியில் ஒரு பேருந்தின் மேல் . கீறைக் கட்டுக்களைப் போல பணக்கட்டுக்கள் 51/2 கோடி சிக்கியுள்ளது. இதுவரை 30 கோடி.
ஓட்டுக்குப் பணம் என்ற விசயத்தில் தமிழகம் இந்தியாவின் மிக மோசமான முன்னு தாரணமாக மாறி தமிழ்க வாக்களர்களை தலைகுனிய வைத்துள்ளது.
ஒரு சில விசயங்களில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் இந்த கில்லாடி அரசியல்வாதிகளை சமாளிப்பதற்கு இது தேவைதான் என்றே பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டியது ஜனநாயகத்தில் அக்கறையுள்ள அனைவ்ரின் கடமையாகும்.
தேர்தல் கமிஷனுக்கு இஸ்லாம் பல வகையிலும் உதவி செய்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு இஸ்லாம் செய்கிற உதவி என்றும் இதை கருதலாம்.
இஸ்லாமின் பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது “இவர் இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர்” என்று சாட்சி சொல்வதும். பரிந்துரைப்பதும் ஆகும்.
1. சாட்சியை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அது போல ஓட்டளிப்பதும் கடமையாகும்.
தேர்தல் நாளை விடுமுறை நாள் என்று கருதி சும்மா இருந்து விடக்கூடாது. படித்தவர்களும் பண வசதி படைத்தவர்களும் வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.
ஆனந்த விகடன் பத்ரிகையில் முன்னாள் தேர்தல் கமிஷனரின் அருமையான பேட்டி:
“அடுத்த ஐந்து வருட்த்திற்கு அரசியல் நட்த்துவது யார் என்பதை தீர்மாணிக்க சக்தியை நமது விரல் நுக்கும் இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது.
“சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம்.
.”
முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு சரியான ஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்ற நிய்யத்தோடு வரிசையில் நிற்கிற ஒவ்வொரு நிமிடமும் சவாபிற்குரியதாகும்.
إنما الأعمال بالنيات
சும்மா முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு என்ற நிய்யத்தோடு முகம் கழிவினால் சுத்த்த்துடன் நன்மையும் சேர்ந்து கிடைக்கிறது அல்லவா? அது போல!
· சிலர் “என் ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.
· கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.
· நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.
· ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை அரசியல் வாதி புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.
2. சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலி வாங்க்க்க்கூடாதோ அது போல ஓட்டுக்கு காசு பொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.
இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு 200 க்கும் 500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களை விற்றுவருவது.
பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.
ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு.
3. பொய்சாட்சி சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டு போடக்கூடாது என்று பொருளாகும்.
பொய்சாட்சி எப்படி நீதியை தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து விடும்.
4. ஜாதி இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை தேர்வு செய்து விடக்கூடாது.
தங்களுடையவர் என்பதற்காக சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.
وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.
عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ - ابوداوود -4453
அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا
முஸ்லிம்கள் அனைவரும் சகோதர்ர்கள் என்ற கருத்தை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது என்றாலும், நீதி சாட்சியம் ஆகிய விசயங்களில் மதமாச்சரியத்திற்கு இடமளிக்காத சமயம் இஸ்லாம். இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
عن شريح القاضي قال: لما توجه علي بن ابي طالب إلى صفين افتقد درعاً له فلما انقضت الحرب ورجع إلى الكوفة أصاب الدرع في يد يهودي فقال لليهودي الدرع درعي لم أبع ولم أهب فقال اليهودي: درعي وفي يدي فقال نصير إلى القاضي فتقدم علي إلى جنب شريح فقال شريح قل يا أمير المؤمنين فقال: نعم هذه الدرع التي في يد هذا اليهودي درعي لم أبع ولم أهب فقال شريح أيش تقول يا يهودي قال درعي وفي يدي فقال شريح ألك بينة يا أمير المؤمنين قال نعم قنبر والحسن يشهدان أن الدرع درعي فقال شريح شهادة الابن لا تجوز للأب فقال علي رجل من أهل الجنة لا تجوز شهادته سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " الحسن والحسين سيدا شباب أهل الجنة " فقال اليهودي أمير المؤمنين قدمني إلى قاضيه وقاضيه قضى عليه أشهد أن هذا هو الحق وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً رسول الله وإن الدرع درعك.
முஸ்லிம்களின் ஓட்டு
இந்திய அரசிய்லில் முஸ்லிம்கள் இஸ்லாமின் வழி காட்டுதலின் காரணத்தினால் தங்களது மத்த்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ய்ர்ருக்கும் ஓட்டுப்போட்ட்து இல்லை.
நாட்டின் மீது கொண்ட பற்றினால், நாட்டிற்கு நல்லது செய்வார்கள் எனறு சில அரசியல் கட்சிகள் மீது கொண்ட அபிமானத்தினால் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்தார்கள்
(தமிழ் நாட்டில் திமுக இந்தியாவில் காங்கிரஸ்)
உங்களுக்கு ஓட்டுப் போடுவதற்காக என்ன தருவீர்கள் என்று அவர்கள் அரசியல் வாதிகளிடம் டிமாண்ட வைக்கவே இல்லை. இந்தியாவின் சமயச் சார்பின்மைக்கு நம்பிக்கையளிக்கிற கட்சிக்கு அவர்கள் மொத்தமொத்தமாக வாக்களித்தார்கள்.
சமயச் சார்பின்மை என்ற ஒரு கோஷத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அந்தக் கட்சிகள் முஸ்லிம்களின் ஒட்டுக்களை இலகுவாக பறித்துக் கொண்டன. ஆரம்பத்தில் அவர்களது கட்சியில் இருந்த முஸ்லிம்களுக்கு ஆட்சியிலும் நிர்வாகத்திலும் ஓரளவுக்கு வாய்ப்பளித்தார்கள். காலப் போக்கில் அதுவும் குறைந்து போனது.
இப்போது சிறுபான்மை முஸ்லிம் அரசியல் என்பது கேலிக்குரிய விளையாட்டு பொம்மையாக ஆகிவிட்ட்து. எலும்புத்துண்டுகளை தூக்கி வீடுவது போல வீசி முஸ்லிம்களின் மொத்த ஓட்ட்டுக்களை எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் தொகையில் ஏழு சதவீத்திற்கும் அதிகமாக் இருக்கிற முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகபட்சமாக ஒதுக்கும் தொகுதிகள் 2 அல்லது 3 மட்டுமே!
ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேருக்கு 2 சீட்டு மட்டுமே பெற்றுக் கொண்டு சமுதயாத்தின் ஆதரவை அவர்களுக்கு பெற்றுத்தந்தார்கள்.
காலம் கடந்து செல்ல.. கடந்து செல்ல.. ஒரு அரசியல் சக்தியாக தாங்கள இல்லாமல் போனதை முஸ்லிம்கள் தாமதமாக உணர்ந்திருக்கிறார்கள். சமுதாய ரீதியாக மிகவும் பிறபடுத்தப் பட்ட புறக்கணிக்கப் பட்ட சமுதாயமாக தாங்கள் இருப்பதை அறிந்தார்கள்.
அரசுத்துறைகளில் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் பதவிகளில் கூட அவர்கள் முஸ்லிம் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கப் பட்டார்கள். உடல் தேய விசுவாசத்தோடு உழைத்தும் அவர்களுக்குரிய மரியாதை கிடைக்கவில்லை.
நேற்று உருவான ஜாதிய அமைப்புக்கள் கூட்ட்த்தை காட்டி தங்களது ஓட்டு வங்கியை காட்டி 7 10 என தொகுதிகளை பெற்றிருக்கின்றன. நாம் அதிகப் பட்சமாக 3 தொகுதிகளோடு சமாதானம் செய்த்டு கொள்ள வேண்டிய நிர்பந்த்த்திற்கு தள்ளப் பட்டிருக்கிறோம். அரசிய்ல் தலைமைகள் இன்னமும் நமக்குரிய இட்த்தை தர மறுக்கின்றன.
முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு வாய்புள்ள தொகுதிகளில் கூட அவர்களது கட்சியை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாமல் மாற்று வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள் .
ஆக்வே இந்த தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது சமுதாயத்தின் பலம் என்ன எனப்தை காட்ட வேண்டிய நிர்பந்த்த்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அதனால் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே முஸ்லிம்கள் ஓட்டளிக்க வேண்டும்.
சட்ட மனறத்தில் முஸ்லிம் எம் எல் ஏ க்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அவர் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் உருவாகியுள்ளது. அதற்கேற்ப முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.
முஸ்லிக்ள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை அறிவிக்காத கட்சியை கண்டிக்கும் வகையில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஏரேனும் நின்றால் அவருக்கு ஓட்டுப் போட வேண்டும்.
கொலை கொள்ளை மோசடி ஆட்கடத்தல் போன்ற குற்ற வழக்கில் ஈடுபட்ட கிரிமினல்களை
முஸ்லிம் புறக்கணிக்க வேண்டும். அவர் முஸ்லிம் வேட்பாளராக இருந்தாலும் சரி.
2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 77 பேர் பல்வேறு கிரிமினல் வழக்குகளை சந்தித்தவர்கலாவர்.
முஸ்லிம் சமுதாயத்தின் பெய்ரைச் சொல்லிக் கொண்டு சமுதாயத்தின் மரியாதையை குலைக்கிற வகையில் சுய நல அரசியலில் ஈடுபட்டுள்ள தகுதியற்ற போலி தலைவர்களையும் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியக் நட்த்த விரும்புகிறவர்கள் பொதுவான கட்சி தொடங்கட்டும். அரசியல் செய்யட்டும். ஆனால் முஸ்லிம் சம்தாயத்தின் பெய்ரைச் சொல்லிக் கொண்டு லெட்டர் பேட் கட்சி நட்த்துபவர்களை சமுதாயம் அடையாளம் கண்டு அவர்களை துடைத்தெறிய வேண்டும்.
முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேர் நேருக்கு நேர் போட்டியிடுகிற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கட்டும்.
ஒட்டுக்கள் பிரிந்து மற்றொருவர் வெற்றி பெற்று இந்த தொகுதி முஸ்லிம் தொகுதி அல்ல என்ற சூழ்நிலையை தயை கூர்ந்து ஒருவாக்கி விட வேண்டாம்.
குறிப்பாக பாளையங்க் கோட்டை தொகுதியில் ஒரு முஸ்லிம் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் வாக்களிக்கட்டும். முஸ்லிம் ஓட்டைப் பிரிப்பவர்களுக்கு அவர்கள் துணை போக வேண்டாம்.
கோவையில் ஒரு மாநகராட்சி வார்டு முஸ்லிகள் திட்டமாக வெற்றி பெறும் வார்டாக இருந்த்து. ஒரு தடவை இரண்டு மூன்று முஸ்லிம்கள் போட்டியிட்ட்தில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தன. அங்கு போட்டியிட்ட தாழ்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் எளிதாக் வெற்றி பெற்றார். அதனால் என்ன ஆயிற்று தெரியுமா? அது தாழ்தப் பட்டோருக்காக ஒதுக்கப் பட்ட தொகுதியாகி விட்ட்து. இந்திய அரசியல் சாசனப்படி ஒரு தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவர் வெற்றி பெற்றால் அது மூன்று தேர்தல்களுக்கு தாழ்த்தப் பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாக ஆகிவிடும். இனி முஸ்லிம்கள் ஒன்று பட்டாலும் கூட அந்த தொகுதியில் போட்டியிட முடியாது என்ற சூழ்நிலை ஏறபட்டு விட்ட்து. இவ்வாறு தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் வேலையை சமுதாயம் செய்துவிடக்கூடாது.
முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்காத தொகுதிகளில் இந்தியாவின் சமயச் சார்பின்மைக்கும் தமிழகத்தின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தொகுதியின் மேம்பாட்டிற்கும் யார் உதவு வார் என்று யோசித்து முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.
மந்தை தனமாக இல்லாமல் சிந்தித்து வாக்களித்தால், யாருக்கு வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு தான்.
அரபியில் تحري தஹர்ரீ என்ற ஒரு சொல் உண்டு. தேடித்தெரிதல் என்பது அதன் பொருள்.
ஒரு புது ஊருக்கு செல்பவர் யோசிக்காமல் கொள்ளாமல் ஏதாவது ஒரு திசையைப் பார்த்து தொழுவிட்டார்ர். பின்னர் கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டும்.
அதே நபர் விசாரித்து அல்லது தேடிப்பார்த்து ஒரு திசையைப் நோக்கி தொழுதார். பிறகு அவருக்கு கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டியதில்லை என்று இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.
إذا شك ولا يتحري – أن صلوته علي الفساد وإذا شك وتحري ان الصلوة علي الجواز ولو تبين الخطأء- حاشية القدوري
சிந்தித்து ஒன்றை நல்லதென் உணர்ந்து செயல்படுவதற்கும் சிந்திக்காமல் செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
முஸ்லிம் வாக்களர் சிந்தித்து வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு நன்மையாய் அமையும். அவருக்கும் நன்மையை தேடித்தரும். மீண்டும் அல்லாஹிவ்டம் கேட்போம்.
ربنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا
மேலதிக தகவல்களுக்கு இந்த மாத ச்மநிலைச் சமுதாயம் இதழில் மாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் கட்டுரையை வாசிக்கவும்.
கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment