வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 21, 2011

பொய் வெளிச்சத்தில் புனித வெள்ளி


புனித வெள்ளி : திருக்குர்ஆனின் பிரகடணம் ஈஸா மரிக்கவும்மில்லை மறுபடி உயிர்த்தெழவுமில்லை

وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا(156)وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا(157)بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا(158)

இன்றைய நாளை புனித வெள்ளி என்று கிருத்துவர்கள் அனுஷ்டிக்கிறார்கள். அரசு விடுமுறை

ஈஸா (அலை) பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள மற்றுமெரு அறிய வாய்ப்பு இது  

புனித வெள்ளியன்று  ஏசுசிலுவையில் அறையப் பட்டார். மூன்று நாட் கழித்து ஈஸ்டர் சண்டே அன்று உயிர்தெழுந்தார். என்று கிருத்துவர்கள் கூறுகிறர்கள்.

ஒவ்வொரு புனித வெள்ள்யின் போதும் இஸ்லாமின் பிரகடணம் உலகிற்கு சொல்லப் பட வேண்டும்.  

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள்

கிருத்துவர்கள் ஏசு என்று சொல்கிற மனிதரைத்தான் நாம் ஈஸா நபி என்று சொல்கிறோம்.

கிருத்து

ஏசு என்ற சொல்லோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கிருத்து என்ற சொல் மஸீஹ் என்ற வார்த்தையின் இலத்தீன மொழி பெய்ர்ப்பாகும். மஸீஹ் என்ற் வார்த்தையை கிருத்துவர்கள் மோசியா (Messiah) என்கின்றனர். அவர்களது அகராதிப்படி அதற்குயூதர்கள் தாங்கள் எதிர்பார்த்த வருங்கால அரசர் என்பது பொருளாகும். மோசியா என்பது எபிரேயச் சொல்லாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 500 வருடங்களுக்கு ஜெரூஸலத்தில் பிறந்த முன்னதாக வந்த இறைத்தூதரான அவ்ர் யூதர்களுக்கு நபியாக அனுப்ப்ப் பட்டார்.

அன்றைய காலகட்ட்த்தில் ரோமானிய அரசாட்சியின் கீழ் வாழ்ந்த ஜெரூசலமின் யூதர்கள். ஒரு நபியை ஒப்புக் கொண்டு இறைவனுக்கு கட்டுப்படுகிற மனோ நிலையில் இருக்க வில்லை. ஒரு கட்ட்த்தில் நபி என்று வருகிறவர்களை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.  அந்தச் சூழ்நிலையில் ஈஸா அலை தன்னை நபி என்று பிரகடணம் செய்து அதிசயங்கள் பல செய்து காட்டிய போது அவரை கொல்வதற்கு பல வகையிலும் முயன்றார்கள். அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் ஈஸா வை பாதுகாத்து வந்த்தால் அவர்களது திட்டம் எதுவும் பலிக்க வில்லை.

கடைசியில் யூதர்கள் அவரை தேசதுரோகி என்றும் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார் என்றும் ரோமானியர்களிடம் காட்டிக் கொடுத்து அவருக்கு மரண தணடனை கிடைக்க தங்களது சக்தி முழுவதையும் பிரயோகித்தனர்.

தன்னைச் சுற்றி பின்னப் படுகிற சதி வலைகளைப் பற்றி அறிந்த ஈஸா அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினார், எந்த நிலையிலும் அவர் பாதுகாகப் படுவார், எதிரிகள் அவரை நெருங்க முடியாது என அல்லாஹ் வாக்களித்தான். கைது செய்யப் பட்ட அவர் சிலுவையில் அடித்து மரண தண்டனை வழங்கப் படுவதற்கு முன்பாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான். ஈஸா யார் என்பதை உறுதியாக அறிந்திராத அன்னியர்களா ரோமப் படையின் வீர்ர்கள் ஈஸாவை காட்டிக் கொடுத்த மற்றொருவனை பிடித்துச் சென்று கழுவிலேற்றி சிலுவையில் அறைந்து கொன்றனர். அவன் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர் என்று புலம்பிய படியே இறந்து போனான்.

ஈஸா அலை உலக இறுதி நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறங்கி வருவார்.

عن أَبي  هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ   - بخاري 2476  

عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلَابِيِّ قَالَ   ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ فَقَالَ ثُمَّ يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ فَيُدْرِكُهُ عِنْدَ بَابِ لُدٍّ فَيَقْتُلُهُ  - ابوداوود 5233

இறுதி வேதமான குர் ஆனின் போதனைகளை போதிப்பார். தஜ்ஜாலை கொலை செய்வார். அவரது மரணத்திற்குப்பின் முஹம்மது (ஸ்ல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்டிருக்கிற அதே மதீனாவின் மக்பராவில் ஆயிஷா (ரலி)  வீட்டில் நல்லடக்கம் செய்யப் படுவார் என்பது ந்ம்முடைய அழுத்தமான நம்பிக்கையாகும்

இதை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகும். இதை நம்ப மறுத்தால் அல்லது இதற்கு மாற்றமாக நம்பினால் அது ஈமானை பாதிக்கும்.

என்வே தான் புனித வெள்ளி யன்று முஸ்லிம்கள் தங்களது ஈமானிய் அடிப்ப்ட்டையை நினைவு படுத்திக் கொள்ள க்டமைப் பட்டிருக்கிறார்கள்.

புனித வெள்ளியின் கருத்தை திருக்குர் ஆன் அழுத்தமாக மறுக்கிறது.

ஈஸா மரிக்கவில்லை. சிலுவையில் அறையப் படவில்லை. மீண்டும் உயிர்த்தெழவும் இல்லை.

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا(158)
ஈஸாவுக்கு அச்சுறுத்தல் அதிகமான போது அல்லாஹ் ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

மற்ற இறைத்தூதர்களை பூமியின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு குடியேற்றிய அல்லாஹ் ஈஸா பூமியிலிருந்து வானுலகிற்கு ஹிஜ்ரத் செய்ய வைத்தான்.

அவரை காப்பாற்றுவதாக அவருக்கு கொடுத்த வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றினான்.
إِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنْ الَّذِينَ كَفَرُوا

مُتَوَفِّيكَ என்றால் உனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று பொருள்.
தனது இறைவன் தன்னை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான. ஆகவே கவலைப் பட வேண்டாம் என்று ஈஸா தன்னுடைய தோழர்களிடம் கூறீய செய்தி பைபிளில் உள்ளது.

ஈஸா அலை அறிந்து கொள்ள உதவும் ஒரே ஆதரப்பூர்வமான நூல் குர் ஆன் மட்டுமே!

ஈஸாவின் வாழ்வை மூடியிருந்த பல புதிர்களை விடுவித்த ஒரே வேதம் திருக்குர் ஆன் மட்டுமே!

திருக்குர் ஆன் தான் ஈஸாவின் தாயாரை புனிதவதி என்று சான்றளித்த்து.
وَأُمُّهُ صِدِّيقَةٌ
وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنْ الْقَانِتِينَ
ஈஸாவின் பிறப்பு ரக்சியத்தைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொன்ன ஒரே வேதம் குர் ஆன் மட்டுமே!

குர்ஆனில் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் பெயர் 5 இடத்தில் ஈஸாவின் பெயர் 25 இடத்தில் சொல்லப் பட்டுள்ளது

ஆயிஷா கதீஜாவின் (ரலி)  பெயரில் ஒரு அத்தியாயம் இல்லை ஆனால் மர்யம் பெயரில் ஒரு அத்தியாயம், ஈஸாவின் குடும்ப வரலாறு ஆலி இமரான் என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.  

ஈஸா (அலை) அவர்க்ளைப் பற்றி கிருத்துவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருக்குர் ஆன் அவரைப் பற்றியும் அவரது தாயாரப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

திருக்குர் ஆனை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஈஸா நபியின் வரலாற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஈஸா பற்றி கிருத்துவரான மைக்கேல் ஹார்டின் கருத்து
  • ·         ஏசுவின் வாழ்க்கை குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவை ஐயத்திற்கிடமாக உள்ளன.
·         அவருடைய இயற் பெயர் கூட என்னவென்று தெரியவில்லை.
·         அவர் பிறந்த ஆண்டு கூட உறுதியாகத் தெரியவில்லை.
·         கீ.மு ஆறாம் நூற்றாண்டில் அவர் பிறந்திருக்கலாம் என்றுதான் கூறுகின்றனர்.
·         அவர் இறந்த ஆண்டு அவருடைய சீடர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது கூட இன்று நிச்சயமாகத் தெரியவில்லை.
The hundred – micheal H.Hart l   

வெளிப்படையாக கேள்விப்பட்ட்தை வைத்து மாத்திரமே ஈஸா கொல்லப் பட்ட்தாக கிருத்துவர்கள் நம்புகிறார்கள், 

இறைவன் காப்பாற்றுவதாக தனக்கு வாக்களித்திருக்கிறான் என்று அவர் சொன்னதை கிருத்துவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.  

சிலுவையி அறைய்ப் பட்டவன்ஏலி லாம சபக்தானி என் இறைனே என்னை ஏன் கைவிட்டீர் என்று புலம்பியதாக கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நபி இப்படி கூறுவாரா என்று கிருத்துவர்கள் சிந்தித்தும் பார்க்கவில்லை.  

பெரும்பாலான சர்ச்சுகளில் இயேசுவின் உருவச்சிலைக்கு மேல் இந்த வாசகம் எழுதப் பட்டுள்ளது.

கிருத்துவர்கள் இந்த வார்த்தையின் மூலம் ஏசுவை கேவலப்படுத்தவே செய்கிறார்கள்.

நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய் உணமைய அறியாமல், பவுல் அடிகள் என்பவர்  சொன்ன செய்திகளையே உணமை என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலே திருக்குர் ஆன் அவர்களை சத்திய வழிய தவற விட்டோர் الضالين  என்று கூறுகிறது.

அல்லாஹ் எல்லாவகையான வழி கேட்டிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!

1 comment: