மது, வட்டி, ஆபாசத்திற்கு எதிராக போராடுவது போல
இணை வைத்தல் என்பது இறைவனுக்கு செய்கிற அநீதியாகும்
திருக்குரானில் சொல்லப் படுகிற ظلم என்ற சொல்லுக்கு شرك என்பதே பிரதான பொருளாகும்.
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمْ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ ( الأنعام 82
عن عبد الله قال لما نزلت هذه الآية "الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم" شق ذلك على الناس فقالوا يا رسول الله أينا لم يظلم نفسه؟ قال إنه ليس الذي تعنون ألم تسمعوا ما قال العبد الصالح "يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم" إنما هو الشرك.
நம்முடைய் வீட்டுக்கு, நம்முடைய காருக்கு இன்னொருருவன் உரிமை கொண்டாடினால் எப்படி கோப்ப்படுவோம்? எப்படி அதை மீட்க முயற்சி செய்வோம்? அல்லாஹ்வுடைய உரிமையில் கைவைப்பதை கண்டும் காணாமல் இருந்து விடுவதா?
சாயிபாபவின் மரனம் – அதற்கு தர்ப்பட்ட் முக்கியத்துவம் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களது கடமையை நினவூட்டுக்கிறது. அவர்களுக்கு எவ்வளவு கடினமான பணி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
சாயிபாபாவின் மரணம் உணர்த்தும் உண்மை
மனிதன் கடவுளாக முடியாது.
எனக்கு மரணமில்லை என்றூம் 94 வயதில் மரணம் என்றும் கூறிய பாபா 85 வயதில் இறந்து போனார்.
சாயிபாவை இழந்து உண்மையிலேயே வாடும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம், இன்னொரு உண்மையையும் யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சாயிபாபாவைப் பற்றி அவரது தகிடுதித்தங்களைப் பற்றி அவரது அவரிடம் ம்குவிந்து கிடக்கிற செல்வத்தைப் பற்றி அவரது ஆசிரமத்தை மூடியிருக்கிற மர்மங்களைப் பற்றி பக்கம் பக்கமாய் வீடுயோ ஆதாரங்களோடு எழுதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தந்திரக்கார்ர் என்றும் ஒரு காலத்தில் பத்ரிக்களி ஏசின.
அவரின் 30 ஆண்டு காலச் சர்ச்சைகள் குறித்தான உண்மைகளைப் பிபிசி தொகுத்து வெளியிட்டது. இவர் மீது பல பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களும். சூழ்ச்சி, வஞ்சகம், கொலைச்செயல், பொருளாதாரக் குற்றங்கள் அவரைச் சூழ்ந்துள்ளன..
2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது.
பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு விலகிக்கொண்டது.
பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு விலகிக்கொண்டது.
அமெரிக்கத் தூதரகம் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதால் தன்னுடைய நாட்டினர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சாய்பாபாவைச் சந்திப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தது
ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும்
சூன் 6,1993 அன்று சாய் பக்தர்களும் ஆசிரமவாசிகளுமான நான்கு இளைஞர்கள் புட்டபர்த்தியில் உள்ள சத்தியசாயி பாபாவின் இல்லத்தினுள் கத்திகளுடன் நுழைந்து கொலை செய்ய முயன்றனர். சத்திய சாயிபாபா தப்பி குரல் எழுப்பினார். தொடர்ந்த எழுந்த கலவரத்தில் அவரது இரு பணியாளர்கள், சமையற்காரரும் ஓட்டுநரும், கொலையுண்டனர். அத்துமீறிய நால்வரும் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து சாயிபாபா இந்தியக் காவல்துறையால் விசாரிக்கப்படவில்லை
அன்று ஏசிய பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று அவரை பெரிய புனித மனிதராக காட்டிக்கொண்டிருக்கின்றன. காரணம். அவரது சேவைகள்.
Medicare - என்ற அவரது நிறுவனம் பல நாடுகளில், பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது
Aquacare எனும் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுதீககரீக்கப்பட்ட குடிநீரை சத்திய சாயி மத்திய அறக்கட்டளை வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர் பிரச்னை சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாதது. ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல கூடிநீர் கிடைத்த்து .
சென்னை மக்களின் தாகத்தை தீர்கக கிருஷ்ணா கால்வ்வாயை சீர் செய்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கியது.
மக்கள் பணி செய்வது சிறந்த கடவுள் பணி என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இந்தச் சாமியார்கள் மக்கள் மக்கள் பணி செய்வதன் பின்னணியை கவனிக்க வேண்டும்.
தந்திரமாக மக்களை ஏமாற்றுவது, அதன் மூலம் முறைகேடாக திரளும் பண்ம். சட்ட மீறல்கள். கொலை கற்பழிப்புக்கள் என ஒவ்வொரு சாமியாருக்குப் பின்னாலும் பல குற்றச் சாட்டுக்கள் உண்டு.
சாமியார்களிடம் சக்தி இருக்கிறதோ இல்லையே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அதனால் சட்ட்த்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் ஆசிரம்ங்களை காவல் துறையும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அணுகாமல் இருப்பதற்கான கேடயமாகவே இந்தச் சாமியார்கள் மக்கள் சேவை என்ற ஆயுத்த்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஐ ஏ எஸ படித்த அதிகாரிகள் ,நீதிபதிகள் உடந்தையாக இருந்து திட்டம் வகுந்த்துக் கொடுக்கின்றனர்.
சாயிபாபா உட்பட இன்று வளர்ந்து வந்திருக்கிற மாதா அமிர்தானந்த மாயி மேல்மருவத்தூர் அம்மா பால் தினகரன் போன்ற பலரும் இந்த திட்ட்த்தின் படியே சமூக சேவர்களாக வலம் வருகின்றனர்.
இந்த்ச சாமியார்கள் அரசாங்கத்தையும் மக்க்ளையும் ஏமாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்களிடம் ஏமாந்து போகிற கோடிக்கணகான மக்க்ளை குறித்து தான் அதிகம் கவலைப் பட வேண்டியிருக்கிறது. அவர்கள் அப்பாவிகள். கல்மிஷமற்றவர்கள். அவர்களை மீட்டெடுப்பதும் அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதும் உண்மையான ஆன்மீக வாதிகளின் கடமையாகும்.
சாயிபாபா மரணமடைந்துள்ள இந்த நேரம்தான் அவரின் கோடானு கோடி பக்தர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமான நேரம் .
சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அத்தனை நோய்களும் நிகழ்வுகளும் பாபாவை தொந் திரவு பண்ணின.
அவ்ருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive Care Unit)வைத்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்ட்து. இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் மருத்துவர்கள் அறிக்கைகளைக் கொடுத்தனர். பக்தர்களும் மருத் துவமனையின் வெளியில் கூடி காப்பாற்றுங்கள்! சாயிபாபாவைக் காப்பாற்றுங் கள்! என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். வெளி நாட்டு மருத்துவ நிபுணர் களை ஏன் அழைக்கவில்லை என்று குமுறினர்
அவ்ருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive Care Unit)வைத்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்ட்து. இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் மருத்துவர்கள் அறிக்கைகளைக் கொடுத்தனர். பக்தர்களும் மருத் துவமனையின் வெளியில் கூடி காப்பாற்றுங்கள்! சாயிபாபாவைக் காப்பாற்றுங் கள்! என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். வெளி நாட்டு மருத்துவ நிபுணர் களை ஏன் அழைக்கவில்லை என்று குமுறினர்
சாயிபாபாவின் ஆசி தீராத நோய்களை யெல்லாம் தீர்த்து வைக்கும் வெளிநாடுகளில் உள்ள நோயாளிகளைக்கூட, நேரில் பார்த்து ஆசீர்வாதம் செய்யாமலேயே குணப் படுத்தும் தெய்வீகத் தன்மை அவருக்கு என்று பத்ரிகைகள் எல்லாம் ஏற்றிப் போற்றியதுண்டே - அவை எல்லாம் உண்மைதானா என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.
மற்றவர்களுக்கு ஏற்படும் புற்று நோயைக்கூட தன் பார்வையால் குணப்படுத்துவ தாகக் கூறும் பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா? செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாமா? என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வேண்டாமா?
பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு ஏற்பட்ட குடலிறக்க நோய்க்குக் கோவாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சண்டே இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியனார் .சில வருடங்களுக்கு முன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. சாயிபாபாவை சிலர் கொலை செய்ய முயன்ற போது அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட துண்டு.
மற்றவர்களுக்கு ஏற்படும் புற்று நோயைக்கூட தன் பார்வையால் குணப்படுத்துவ தாகக் கூறும் பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா? செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாமா? என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வேண்டாமா?
பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு ஏற்பட்ட குடலிறக்க நோய்க்குக் கோவாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சண்டே இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியனார் .சில வருடங்களுக்கு முன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. சாயிபாபாவை சிலர் கொலை செய்ய முயன்ற போது அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட துண்டு.
அவர் சில வித்தை களைக் (Magic) கற்று வைத்துக் கொண்டு, அவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கியவர் என்பதை மட்டுமே நிஜம். அவர் கடவுள் அல்ல. இதை பக்தர்கள் சிந்தித்து உணரவேண்டும்
கடவுள் யார் என்று யோசிப்பதற்குரிய சில வழிகளை திருக்குர் ஆன் கூறுகிறது.
· படைத்தன்
· உல்கம் இருக்கும் வரை அதை முழுவதுமாக நிர்வகிப்பன்
· மனிதனுக்குண்டான குறைகளுக்கு அப்பாற்பட்டவன்.
إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
உலகை படைத்து அதன் அனுவிலும் அனுவான நடைமுறைகளில் தனது நிர்வாகத்தை செலுத்துபுவனே ரப்பு என்று இந்த வசனம் தெளிவு படுத்துகிறது.
ரப்பு என்ற படைத்து நிர்வகிப்பவன் என்று பொருள் . கடவுளின் இலக்கணம் அது.
அதனால் தான் திருக்குர் ஆனும் முஸ்லிம்களும் அதை அதிகமாக பயன்படுத்து கிறார்கள்.
கடவுள் மனிதனுக்குரிய குறைகளிலிருந்து அப்பாற்பட்டவன் என்பதை ஆயத்துல் குர்ஸீ விளக்குகிறது.
لا يأخذه سنة ولا نوم
குறி சொல்பவர்களை கடவுளாக்கிவிடும் இய்ல்பு பாமரத்தனமானது. படித்தவர்கள் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் ஐ ஏ எஸ் கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி நம்புகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமானது. திருக்குர் ஆன் அடிக்கடி சுட்டிக் காட்டும் செய்தி
وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن
தங்களது சமய நம்பிக்கையை விளையாட்டக கருத்தும் மக்களை குர் ஆன் பல் இட்த்திலும் கண்டிக்கிறது.
الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمْ الْحَيَاةُ الدُّنْيَا
ஒரு தனிமனிதன் இறைவனை எப்படி தேடுவது என்பதற்கு நபி இபுறாகிம்ம் ஒரு உதாரணம். இபுறாகீம் நபி தியாகத்திற்க்கு மட்டுமே முன்னுதாரனம் அல்ல.
தூய தெளிந்த சிந்தனைக்கும் – சரியான க்டவுளைத் தேடும் உண்மையான் ஆன்மீகத்திற்கும் அவர் ஒரு முன்னோடி
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ(76)فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنْ الْقَوْمِ الضَّالِّينَ(77)فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَاقَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ(78)إِنِّي وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ(79)وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِي فِي اللَّهِ وَقَدْ هَدَانِي وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ(80)وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(81)الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمْ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ(82)وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ(83)
ஆச்சரியமான மனித ஆற்றலைப் பார்க்கும் மக்கள் அது இறைவனின் அருள் என்று நினைக்க் வேண்டுமே தவிர அந்த மனிதனை இறைவன் என்று கருதக் கூடாது. ஆனால் இந்த விபத்து வேதம் கொடுக்கப் பட்ட மக்களிலேயே கூட நிகழ்ந்திருக்கிறது.
யூதர்கள் உஸைரையும் கிருத்துவர்கள் ஈஸாவை இறவனின் மக்ன் என்றும் பேசினர்.
அதிக மன்ன சக்தியும் அறிவாற்றலையும் கொண்ட ஒரு மனிதனை இரண்டு இதயம் கொண்ட்வர் என்று சிலர் போற்றினர்.அதை கூட குர் ஆன் மறுத்துரைத்த்து.
مَا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ
தனி மனிதர்களின் ஆற்றலுக்காக அவர்களை அதிகப் படியாக புகழ்வது இந்த தீய எல்லையில் கொண்டு வந்து விடுகிறது.
சாயிபாபாவின் மரணம் முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்க! அதே நேரம் அவர்க்ளது கடமையைப் பற்றிய நினைவூட்டலுமாகும்.
முஸ்லிம்கள் தனிமனித வழிபாட்டுக்கு ஆளாக கூடாது. அதை மற்ற்வர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி ஷிர்க்கை அகற்ற பாடுபட வேண்டும்.
No comments:
Post a Comment