வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 05, 2011

ஷஹீத் உஸாமா


وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ

وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ

அல் காயிதா அமைப்பின் தலைவர் உஸாமா பின் லாடன் கொல்லப்பட்டார் என்ற செய்தி பொதுவாக முஸ்லிம்களுக்கு மன் வருத்த்த்தை அளித்துள்ளது.

அதே நேரம் பலத்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இதற்கு முன்பும் பல தடவை உஸாமா இறந்து விட்டார் என்று அமெரிக்கா அறிவித்து உண்டு.

தங்களுடை ஊரில் நாய் குட்டி பிரசவிப்பதை கூட வீடியோ படம் எடுத்து வெளியிடுகிற அமெரிக்கர்கள் உஸாமா விசயத்தில் இருட்டில் கல்லெறிவது போல ஒரு செய்தியை வீசி விட்டு மற்ற ஆதாரங்கள் எதையும் வெளியிட மறுக்கிறார்கள்..

உஸமா கொல்லப் பட்ட்து போன்ற புக்கைப் படம் உண்மையல்ல அது இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து போன ஒரு மனிதரின் பட்த்தோடு மெர்ஜ் செய்து வெளியிடப் பட்டுள்ளது என்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் சொல்லி விட்டார் என்பது மட்டுமே ஒரே ஆதாரமாக இருக்கிறது.

ஒருவேளை உஸாமா பின் லாடன் கொல்லப்பட்டிருந்தால்.

இன்னாலில்லாஹி …

அல்லாஹ்வை நம்பாமல் அமெரிக்காவை நம்பியிருக்கிற முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மட்டும்தான் உஸாமாவின் மரணத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

உஸாமாவின் போராட்ட முறைகளில் நம்க்கு உடன் பாடு இல்லை என்ற போதும் அமெரிக்கவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் எதிரான அவருடை போராட்டகளம் முஸ்லிம்கள் அனைவருக்கும் உடன்பாடானதே! அதனால் அவர் கொல்லப் படுவது முஸ்ளிம்களுக்கு வேதனை அளிக்க்க் கூடியதே!

உஸாமா உயிருக்கு பய்ந்து ஓளிந்து கொண்டிருந்தவர் அல்ல.

வெள்ளை மாளிகைக்கு ஈடாக இல்லாவிட்டாலும் அதற்கு அடுத்த நிலையிலான ஆடம்பர வாழ்க்கை வாழ முடிந்த ஒரு பெரும் பணக்கார்ர் ஒரு சாதாரண பங்களாவில் எந்த வித தகவல் தொடர்பு வசதி களும் இன்றி வாழ்ந்தார் என்பதே அவர் இறப்பிற்கு தயாரானவர் என்பதை காட்டுகிறது.

தன்னால் இன்னும் எவ்வளவு தூரம் அமெரிக்காவை எதிர்க்க முடியுமோ அவ்வளவு தூரம் எதிர்க்க வேண்டும் என்பதே அவரது வாழ்க்கையின் ஒரே நோக்கமாக இருக்க முடியும், அதை அவர் கடைசி வரை செய்துவிட்டார்.

அமெரிக்கா அவருக்கு செய்த அக்கிரம்ங்கள் அனைத்திற்கும், அவர் மீது சுமத்திய குற்றச் சாட்டுகள் அனைத்திற்கும் ஷஹீத என்ற ஒற்றை சொல்லால் முஸ்லிம் உலகம் பதில் அளித்துவிட முடியும்.

முஸ்லிம்களின் இன்றைய போராட்டச் சூழலில் ஒரு உஸாமாவின் இழப்பு முஸ்லிம்களுகு பெரிய இழப்பு அல்ல.. அது போலெவே அது அமெரிக்கர்களுக்கு பெரிய வெற்றியும் அல்ல.

அவரை கொல்வதற்கு 10 வருடங்கள் பிடித்திருக்கிறது. பல கோடிகள் செலவு செய்து பல் நூறு வீர்ர்களை இழந்து பல்லாயிரம் அப்பாவிகளைக் கொன்று கனிசமான ஆயுதங்களை தொலைத்து அமெரிக்கா பெற்ற இந்த வெற்றி எத்தகையது என்பதை இனிவருகிற காலம்தான் தீர்மாணிக்கும்.

இப்போதைக்கு, உஸமா உருவாவதற்கு காரணம் என்ன என்பது மீண்டும் மீண்டும் மீடியாக்கள் பேசின.

முஸ்லிம்களின் புனித நகரங்களில் அமெரிக்கா ஊடுறுவியதே உஸாமா உருவாக காரணம்.


முஸ்லிம்களின் புனித்ப் பகுதிகளிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டு. சொல்வாக்கில்லாத அரபு மன்னர்களின் கூலிப்படையினராக இருந்து கொண்டு முஸ்லிம் நாடுகளை சுரண்டி ஆதிக்கம் செய்யும் போக்கிற்கு அது முடிவு கட்ட வேண்டும்.

அது நிகழாதவரை அமெரிக்காவிற்கு எதிரான் ஜிகாத் என்பது நியாயமானதாகவே கருதப்ப்டும்.

இரட்டை கோபுரத்தகர்ப்பில் கொல்ல்ப்பட்ட மூவாயிரம் பேருக்கு நீதி வழங்கப் பட்டுள்ளதாக கூறும் ஒபாமா அமெரிக்காவினாலும் அதன் ஆதரவினாலும் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பெண்கள் சிறுவர்களுக்கு நீதி வழங்கப் பட வேண்டாமா என்று யோசிக்கட்டும்.

அது தானே நாகரீகம்.

அமெரிக்கா தன்க்க்கு சார்பாக நீதியை வளைக்கிறது.

ஒரு அமெரிக்கர் பாகிஸ்தானில் சிலரை சுட்டுக் கொன்றார். பாகிஸ்தானிய அரசு கைது செய்த அவ்ரை விடுதலை செய்து விரைவாக தன் நாட்டுக்கு அழைத்துக் கொண்ட்து அமெரிக்கா.

உஸாமாவின் நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு அவரைப் பற்றிய முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அமெரிக்கா சொன்னதைத் தவிர.

உஸ்மாவின் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்புடையதல்ல.. இஸ்லாமின் ஆதரவுச் சகதிகளை ஒன்று திரட்டப் பாடுபடாமல் சில ஆயுதங்களும் பண பலமும் ஒரு பாதுகாப்பான இட வசதியும் இருக்கிறது என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் என்று பிரகடணப் படுத்தி செய்லப் பட்ட்து முஸ்லிம் உலகத்தை சங்கட்த்தில் தள்ளியதே தவிர தீர்வு எதையும் தரவில்லை.

ஒரு சரியான அரசியல் சமூக களத்தை தேர்வு செய்யாமல் ஜிஹாத் என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப் படுவதற்கு அவர் காரணமாகி விட்டார்.

அவரது அர்ப்பணிப்புகள் பெரியது. ஆனால் அர்த்தமுள்ளதா என்பது பெரும் கேள்விக்குரியாகும்.

எகிப்து மக்கள் தங்களது பிடிக்காத ஆட்சியாளரை ஒதுக்குவதற்கு உஸாமாவின் வழி முறையை தவிர்த்து விட்டு சாத்தியமான வழி முறைகளை கையாண்டு வெற்றிகண்ட்தை உஸாமாவும் அவரது கூட்டாளிகளும் கவனிக்க் வில்லை,

உஸாமாவின் ஜிகாத் எதிர்களை காயப் படுத்தியதை விட முஸ்லிம்களையே அதிகம் காயப் படுத்தியது.

ஒரு நல்ல தலைமையின் இலக்கணம் அவரது நடவடிக்கை சமுதாயத்தை சிக்கலில் சிக்க வைக்க்க்கூடாது.

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْلَا حَدَاثَةُ عَهْدِ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْكَعْبَةَ وَلَجَعَلْتُهَا عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ فَإِنَّ قُرَيْشًا حِينَ بَنَتْ الْبَيْتَ اسْتَقْصَرَتْ وَلَجَعَلْتُ لَهَا خَلْفًا مسلم – 2367

கஃபா வை இடித்து பெரிதாக கட்ட விரும்பிய போதும் அதை செய்யாத பெருமானாரின் முன்னுதாரத்னத்தை

ஒரு சரியான தளமும் களமும் அமையும் வரை பெருமானார் காத்திருந்தார்கள். எதிர்களின் கொடூரமான தாக்குதல்களை தாங்கிக் கொண்டார்கள். அதன் பின்னாள் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் மாபெரும் வெற்றிக்கான தளங்களாக அமைந்தன.

எதிரிகளைச் சந்திப்பதற்கான சரியான வழி முறை மாறிக் கொண்டே இருக்கும். இன்றை வழி முறை என்னவெனபதை அவர் யோசித்தாரா என்று தெரியவில்லை.

இஸ்லாமின் எதிரிகளின் இன்றுள்ள் மிகப் பெரிய பலம். ஊடகம். அதற்கு உஸாமாவின் மரணச் செய்தி ஒன்றே உதாரணம்

உஸாமாவைக் கொன்றதை விட அதை அமெரிக்கா செய்தியாக்கியவிதமே அதன் பெரு வெற்றிக்குரிய காரணமாகும்.

அமெரிக்கா அதிபர் அறிவிப்பை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தின் மூளை முடுக்கில் இருக்கும் பாமரன் கூட ஒப்புக்கொள்கிற செய்தியாகி இருக்கிறது என்றால் இன்றைய் போர்க்களம் எது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதற்கான தயாரிப்புக்களில் ஈடுப்ட வேண்டும்.


அமெரிக்காவிற்கும் உலக நாடுகளின் பல அரசுகளுகும் எதிராக விக்கி லீக்ஸ் இணைய தளம் எத்தைய போரைத் தொடுத்திருக்கிறது என்பதை முஸ்லிம்கள் தவனத்தில் கொள்ள வேண்டும்



துப்பாக்கிகளின் காலாத்தில் கத்தியோடு போராடுவது காலத்திற்கேற்ப இயங்கிய்தாகாது. நம்மை நமது அர்ப்பணிப்புக்களையும் மீறி பின்னடைய வைத்து விடும்.

• இனியாவது தீவிரவாத்த்திற்கு எதிரானது என்ற பெயரில் நட்த்தும் கொடூர கூத்தை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை வழங்கட்டும்.

• அல்லாஹ் உஸாமாவுக்கு தகுந்த கூலியை தந்தருளட்டும்.

• முஸ்லிம்கள் காலம் அறிந்து செய்லபட வேண்டும்.

No comments:

Post a Comment