வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 12, 2011

நல்லாட்சி மலரட்டும்.

قلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26) آل عمران
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது.
ஆட்சி யாருக்கும் நிலையானது அல்ல. மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வின் அதிகாரத்தை தவிர

وقد روى الحافظ ابن عساكر في ترجمة "إسحاق بن أحمد" من تاريخه عن المأمون الخليفة: أنه رأى في قَصْرٍ ببلاد الروم مكتوبا بالحميرية، فعرب له، فإذا هو: باسم الله ما اختلف الليل والنهار، ولا دارت نجوم السماء في الفلك إلا بنقل النعيم عن مَلِك قد زال سلطانه إلى ملك. ومُلْكُ ذي العرش دائم أبدًا ليس بِفَانٍ ولا بمشترك – إبن كثير
கலீபா மாமூன் ஒரு கோட்டையில் கண்ட வாசகம் :
இரவு பகல் மாறும் போதும், வானில் நட்சத்திரங்கள் சுழலும் போது, ஒரு மன்னரிடமிருந்து அதிகாரம் மற்றொரு மன்னருக்கு கொண்டு செல்லப் படுகிறது. இறைவனது அதிகாரம் மட்டுமே அழியாது கூட்டணி இல்லாது நிலைத்து நிற்கிறது.

ஆட்சியை தீர்மாணிக்கிறவன் அல்லாஹ்
தேர்தலில் வெற்றி பெற்றும் ஆட்சி செய்ய முடியாமல் போன்வர்கள் பலருண்டு. வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தோற்றுப் போனவர் பலருண்டு. எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்தவர்களும் பலருண்டு.

ஒரு முறை சம்பந்தமில்லாமல் தேவகவுடா பிரதமர் ஆனார் சந்திரசேகர் பிரதமரானார் அரசியலில் ஒதுங்கிப் போக இருந்த நரசிம்ம ராவ பிரதமரானார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட சஞ்சய் காந்தி இறந்து போனார் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜீவ் காந்தி பிரதமரானார். தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பாரமால் அரசியலுக்கு வந்தவர். வ்ந்த வேகத்தில் நிதியமைச்சர் ஆனவர், அதே வேகத்தில் பிரதமாரானார்

·         சாதாரண போர் வீரனாக இருந்த நெப்போலியன் பிரஞ்சு மன்னரானார்.

·         கிழக்கிந்திய கம்பெனியின் சாதாரண குமாஸ்தாவாக இருந்த ராபர்ட் கிளைவ் இந்தியாவில் பரங்கியரின் ஆதிக்கத்தை நிறுவி முதல் மேஜர் ஜென்ரல் ஆனார்.

·         கிணற்றில் வீசப்பட்டு சிறையில் வாடிய யூசுப் அலை எகிப்து தேசத்தின் அரசரானார்.

·         சாதாரண குடியான்வர் தாவூத் அலை பாலஸ்தீனத்தின் அரசரானார்.

·         ஒட்டகை மேய்க்கத் தெரியாதவர் என்று தந்தையால் ஏசப்பட்ட உமர் (ரலி) அரபுலகின் சக்ரவர்த்தியானார்.

·         உலகின் கவனத்தை எந்த வகையிலும் கவர்ந்திராத அரபுச் சமூகம் உலகை வென்றெடுத் சமூதாயமாக மாறியது.

·         அதற்கான் அஸ்திவாரத்தை அமைத்த வசன்ம்
قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)
இந்த வசனம் அகழ் யுத்த்தின் போது அருளப்பட்ட்து. அகழ் யுத்த்திற்கான் சூழ்நிலை. முஸ்லிம்களின் கையறு நிலை. எதிரிகளை கண்டு பயந்து நடுங்க் வேண்டிய சூழல்
إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتْ الْأَبْصَارُ وَبَلَغَتْ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَ

ஸல்மான் அல்பார்ஸிக்கு ஒதுக்கப் பட்ட இட்த்தில் உடைக்க முடியாத கல்லை உடைத்த பெருமானார் தனக்கு காட்டப் பட்ட வெற்றியின் அடையாளங்களை சஹாபாக்களுக்குச் சொன்னார்கள்
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَفْرِ الْخَنْدَقِ قَالَ وَعَرَضَ لَنَا صَخْرَةٌ فِي مَكَانٍ مِنْ الخَنْدَقِ لَا تَأْخُذُ فِيهَا الْمَعَاوِلُ قَالَ فَشَكَوْهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَوْفٌ وَأَحْسِبُهُ قَالَ وَضَعَ ثَوْبَهُ ثُمَّ هَبَطَ إِلَى الصَّخْرَةِ فَأَخَذَ الْمِعْوَلَ فَقَالَ بِسْمِ اللَّهِ فَضَرَبَ ضَرْبَةً فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ وَقَالَ اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ الشَّامِ وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ قُصُورَهَا الْحُمْرَ مِنْ مَكَانِي هَذَا ثُمَّ قَالَ بِسْمِ اللَّهِ وَضَرَبَ أُخْرَى فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ فَارِسَ وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ الْمَدَائِنَ وَأُبْصِرُ قَصْرَهَا الْأَبْيَضَ مِنْ مَكَانِي هَذَا ثُمَّ قَالَ بِسْمِ اللَّهِ وَضَرَبَ ضَرْبَةً أُخْرَى فَقَلَعَ بَقِيَّةَ الْحَجَرِ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ الْيَمَنِ وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ أَبْوَابَ صَنْعَاءَ مِنْ مَكَانِي هَذَا

பெருமானரின் எதிர்கால வெற்றிக கனவுகளைக் கண்டு நயவஞ்சகர்கள் கேலி செய்த போது அல்லாஹ் இந்த துஆ வை கற்றுக் கொடுத்தான்.

قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)

அவர்கள் சொன்னது போலவே சஹாபாக்கள் அந்தப் பகுதிகளை வென்றெடுத்தார்கள்.

வரலாற்றுக்கு ஆழமான பல அறிவுறைகளை இந்த வசனம் தருகிறது.

இறைவன் நாடுகிறவர்களுக்கே ஆட்சி அதிகாரம் கிடைக்கிறது. அது  இறைவன் கொடுக்கிற கவுரம்.

அதன் அருமையை புரிந்து மக்களுக்கு  நல்லாட்சியை வழங்குப்வர்கள். கண்ணியமான வாழ்வை பெறுகிறார்கள் வாழும் போதும் மறைந்த பிறகும். வரலாறு அவர்களைப் போற்றும்.

உமைய்யா கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ்மன்னர் ஆனால் நல்லாட்சி வழங்கியவர்

70 லட்சம் கிலோ மீட்டர் – 27 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆட்சிப் பரப்பு
இப்போதைய 41 நாடுகள் அவருடைய் ஆட்சியின் கீழ் இருந்தன. (விக்கீபீடியா Umayyad Caliphate
)

ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரச குடும்பத்தினரை அழைத்து அவர்களிடமிருக்கிற சொத்துக்கள் எப்படி வந்த்து எனக் கணக்கு காட்ட உத்தரவிட்டார். மக்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பொருட்களை யாரிட்மிருந்து எடுக்கப் பட்ட்து என்ற அடையாளம் தெரிந்தால் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கவும்அடையாளம் தெரியாவிட்டால் அரசு கஜானாவில் சேர்த்து விடவும் உத்தரவிட்டார்.

அரச குடும்பத்தினருக்கு சாதாரண குடிமக்களுக்குரிய ஊதியத்தை நிர்ணயித்தார். அதற்குரிய வேலை செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

فلما ولي عمر بن عبد العزيز رحمه الله بدأ   بأهل بيته، فأخذ ما بأيديهم، وسمى أموالهم مظالم ، وهي الأموال الهائلة.. والثروات العظيمة التي تملكها أسرته، وإخوته وحاشيته، وعزم على ردها إلى أصحابها إن عرف أصحابها، أو إلى الخزانة العامة، وأن ينفذ على الجميع قانون " من أين لك هذا "() وبدأ في ذلك بنفسه، فقد كان له عقارات أيام أسلافه من الخلفاء فرأى أنه لم يكن لهم سلطة شرعية عليها ليعطوه إياها وأنها من أملاك الدولة … وأحصى أملاكه فإذا هي كلها من عطايا الخلفاء ولم يجد إلا عيناً في السويداء كان استنبطها من عطائه ـ والعطاء رواتب عامة تعطى للناس جميعاً من بيت المال ـ وتوجه إلى أمراء البيت الأموي فجمعهم وحاول أن يعظهم ويخوفهم الله، وبين لهم أن ليس لهم من الحق في أموال الخزانة العامة أكثر مما للأعرابي في صحرائه، والراعي في جبله .. وأن ما بأيديهم من أموال جمعوها من حرام ليس لهم إنما هو لله، وأرادهم على ردها فأبوا، ودعاهم مرة أخرى إلى وليمة واستعمل أسلوباً آخر من اللين فلم يستجيبوا ، فلما عجزت معهم أساليب اللين عمد إلى الشدة وأعلم أنه كل من كانت له مظلمة أو عدا عليه أحد من هؤلاء فليتقدم بدعواه ، وألف لذلك محكمة خاصة ، وبدأ يجردهم من هذه الثروات التي أخذوها بغير وجهها ويردها إلى أصحابها أو إلى الخزانة العامة

وخضعوا جميعاً وردوا ما كان في أيديهم من الأموال … واكتفوا بمرتباتهم الكثيرة التي كانوا يأخذونها من الخزانة ، ولكن عمر لم يكتف وأمر بقطع هذه الرواتب وإعطائهم عطاء أمثالهم ، وأمرهم بالعمل كما يعمل الناس

அரசராக பொறுப்பேற்ற அந்த கணமே அரச் குடும்பத்தினரிடமிருந்த பொதுச் சொத்துக்கள் பற்றி அவருக்கு கவலை ஏற்பட்ட்து. அன்று இரவு படுக்கைச் செல்வதற்கு முன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் அங்கு வந்தார். அரச் குடும்பத்தாரிடமிருக்கிற சொத்துக்களை என்ன செய்வதாக இருக்கிறீர் என்று கேட்டார். நாளை லுஹருக்குப் பின் அது பற்றி அறிவிக்கப் போகீறேன் என்றார். அது வரை உயிரோடிருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று மகன் கேட்டார். தனகு இப்படி ஒரு மக்ன் வாய்த்தற்காக இறைவனைப் பிரார்த்தித் உமர் பின் அப்துல் அஜீஸ் அப்போதே அரச குடும்பத்தினரின் சொத்துக்களைப் பற்றி அறிவிப்புச் செய்தார்.
اتجه عمرإلى بيته وآوى إلى فراشه، فما كاد يسلم جنبه إلى مضجعه حتى أقبل عليه ابنه عبد الملك وكان عمره آنذاك سبعة عشر عامًا، وقال: ماذا تريد أن تصنع يا أمير المؤمنين؟ فرد عمر: أي بني أريد أن أغفو قليلا، فلم تبق في جسدي طاقة. قال عبد الملك: أتغفو قبل أن ترد المظالم إلى أهلها يا أمير المؤمنين؟ فقال عمر: أي بني إني قد سهرت البارحة في عمك سليمان، وإني إذا حان الظهر صليت في الناس ورددت المظالم إلى أهلها إن شاء الله. فقال عبد الملك: ومن لك يا أمير المؤمنين بأن تعيش إلى الظهر؟! فقام عمر وقبَّل ابنه وضمه إليه، ثم قال: الحمد لله الذي أخرج من صلبي من يعينني على دين
பதவி ஏற்ற  இரண்டாம்  நாளில் அலங்கரிக்கப் பட்ட குதிரைப் பூட்டிய சாரட் வண்டியை அரசின் கருவூலத்திற்கு திருப்பி அனுப்பினார்.

அரச மாட்த்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கருவூலத்திற்கு அனுப்பிவிட்டு சாதாரண பாயை விரித்து அமர்ந்தார். உயர் ரக அரசஆடைகளை கரூவூலத்திற்கு அனுப்பி விட்டு சாதாரண ஆடைகளை அணிந்தார். அரசமாளிகையில் இருந்த பணிப்பெண்களை அவர்களது இட்த்தையும் விசாரித்து திருப்பி அனுப்பினார்,

அரசர்கள தங்களது பணிகளை கவனிக்க சேவர்களை நியமிப்பார்கள்.  உமர்,  தன்னை கண்காணிக்கதான் செய்யும் தவறை சுட்டிக்காட்ட  சேவகரை நியமித்தார். (விக்கீபீடியா இணைய தளம்)

- Rulers usually appoint people to watch over their subjects. I appoint you a watcher over me and my behaviour. If you find me at fault in word or action guide me and stop me from doing it Umar Ibn Abd al-Aziz

உமர் பின் அப்துல் அஜீஸ் சொல்வார்

          وأما الخليفة الخامس عمر بن عبد العزيز يقول: إني تقَّلدت أمر أمة محمد صلى الله عليه وسلم فتفكرتُ في الفقير الجائع والمريض الضائع والعاري المجهود والمظلوم المقهور والغريب المأسور والكبير وذي العيال في أقطار الأرض فعلمتُ أنَّ ربي سيسألني عنهم وأن خصمهم دونهم محمد صلى الله عليه وسلم، فخشيت ألا تثبت لي حجة عند خصومته، فرحمتُ نفسي فبكيت".

நாட்டின் நாலா பாகத்திலுமுள்ள ஏழைகள், பசித்தோர், நோயாளிகள், சிரமப்படுவோர், அநீதியிழைக்கப் பட்ட்வர்கள் ஆக்ரமிப்புக்குள்ளானவர்கள் முத்யோர் குடும்பஸ்தர்கள் ஆகியோரைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். இவர்களது விசயத்தில் இறைவன் என்னை விசாரிப்பான் என்பதை அறிந்திருக்கிறேன். இவர்களுக்காக நாளை முஹம்மது (ஸல்) அவர்கள் வாதிடுவார்களே அப்போது எனக்கெதிராக ஒரு ஆதாரம அவர்களிடம் சிக்கி விடக்கூடாது என்று நான் பயப்படுகிறேன். நான் என் மீதே கழிவிரக்கம் கொண்டு அழுகிறேன்

ஆட்சிப் பொறுப்பை தங்களுக்கு தரப்பட்ட குடும்பச் சொத்தாக நினைக்கமல் தங்களிடம் ஒப்படைக்கப் பட்ட பொறுப்பாக நினைத்தவர்களை மக்கள் வாழும் காலமெல்லாம் வாழ்த்தினார்கள், அவர்கள் மறைந்த பிறகும் நினைவு கூறுகிறார்கள்,

இதுதான் கவுரவமான வாழ்க்கை.
تعز   என்ற வார்த்தையில் இஜ்ஜத்திற்கு பாதுகாப்பான வாழ்வு  என்று விரிவுரையாளர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

இப்படி ஆட்சி செய்கிற ஆட்சியாளர்கள் பாதுகாப்பன வாழ்வை பெறுவார்கள்,

ஆட்சி ஒரு அருட்கொடை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்காதவர்களிடமிருந்து அது பறிக்கப் பட்டும் அதுவே இழிவு. இழிவு என்பது பாதுகாப்பு பறிக்கப் படுதலாகும் என்று விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள்.
அன்று  முதல இன்று வரை தவறான ஆட்சியாளர்களுக்கு இதுவே நடந்த்து,

இன்றைய ஆட்சியாளர்கள் பலரும் படோபடமாக ஆட்சி செய்த போதும் இறுதியில் இழிவை சந்திப்பதற்கு அவர்களது இத்தகைய செயலபாடுகளே காரணமாகும்.

ஆதிக்க மோகமும் பணப்பித்தும் கொண்டவர்கள் இறுதியில் இழிவையே சந்திப்பார்கள். வரலாறு அவர்களை தூற்றும் அவர்கள் எவ்வளவு திறமையாளர்களாக வெற்றியாளர்களாக இருந்தாலும்

فقال صلى الله عليه وسلم: "تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَعَبْدُ الدِّرْهَمِ وَعَبْدُ الْخَمِيصَةِ، إِنْ أُعْطِىَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ سَخِطَ، تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ" (البخاري 2887
பொற்காசின் அடிமையும் வெள்ளி காசின் அடிமையும் கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான் செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபம் அடைவான் அவன் துர்பாக்கியவான் ஆகட்டும் அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்து விட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்.

فَقَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ -  البخاري7151 
மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத ஆட்சியாளருக்கு எச்சரிக்கை

 فَقَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمْ الْجَنَّةَ-  مسلم -205


நல்ல ஆட்சியை பெறுவதில் மக்களின் பங்கும் முக்கியமானது
தங்களுக்கு நேர்மையான சுத்தமான ஆட்சி வேண்டும் என்றும் மக்கள் விரும்ப வேண்டும், எப்படியாவது ஆண்டு விட்டு போகட்டும். அல்லது நமக்கு வேண்டியது நடந்தால் சரி என்ற மனோ நிலையில் மக்கள் இருந்தால் ஆட்சியும் அப்படியே இருக்கும்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
كما تكونون يؤمر عليكم
  
மக்கள் இலஞ்ச இலாவண்யத்தை விரும்பாதவர்களாக, சட்டத்தை மதிப்ப்வர்களாக, நீதியை போற்றுப்வர்களாக இருந்தால் ஆட்சியாளர்களும் அதற்கேற்ப அமைவார்கள்.

மக்கள் பொறுப்பற்றவர்களாக, சட்ட்த்தை வளைப்பவர்களாக, ஒரு பக்க சார்பாளர்களாக இருந்தால் ஆட்சியாளர்களும் அப்படியே அமைவர்.

இன்றுள்ள சூழலில் ஓரளவுக்கு நேர்மையேடு, மக்களின் அடிப்படைத்த் தேவைகளை நிறைவேற்றுகிறவர்களாக, நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பவர்களாக, மக்கள் அனைவரிடம் சம் நீதியை பராமரிப்பவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசை நிறைவேற அல்லாஹ் கிருபை செய்யட்டும்.

புதிய ஆட்சியாளர்களுக்கு நல்ல சிந்தனையையும் நேரிய செயல் முறைகளையும் குடிம்க்களின் மீதான் உண்மையான் அக்கறையையும் அல்லாஹ் வழங்கட்டும். 

ஊழல், மதமாச்சரியம், வன்முறை, நீதி நிதித்துறை முறைகேடுகளிலிருந்து அல்லாஹ் நாட்டையும்ம் நாட்டு மக்களையும் பாதுகாக்கட்டும்.    

1 comment:

  1. Anonymous5:10 AM

    Assalamu alaikkum."NALLATCHI MALARATTUM"Bayan very very super.jazakallah.by,m.hadhees,tuty.

    ReplyDelete