வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Tuesday, June 28, 2011

மிஃராஜ் - உம்மத்தின் பொறுப்பு என்ன?


மனித வரலாறு ஆச்சரியங்களும் சாதனைகளும் மிகுந்தது. அதில் மிக அற்புதமானது மிஃராஜ்.நிகர் சொல்ல முடியாதது.

மிஃராஜ் எதற்காக ?
لنريه من آياتنا
எதுவெல்லாம் மறைவானதோ அவற்றில் பிரதானமானவை அனைத்தையும் பெருமானாருக்கு அல்லாஹ் காட்டினான்.
கியாமத்திற்கு பிறகு நடப்பவை அனைத்தும் பெருமானாருக்கு காட்டப்பட்ட்து.

·         மரணித்தவர்களை சந்தித்தல்
·         சொர்க்கம் நரகம்
·         லவ்ஹ் கலம்
·         அல்லாஹ்


من عجائب ما رأى الرسول في المعراج وحصل له:


1.     مالك خازن النار: ولم يضحك في وجه رسول الله.فسأل جبريل لماذا لم يرهُ ضاحكاً إليه كغيره . فقال: إن مالكاً لم يضحك منذ خلقه الله تعالى ، ولو ضحك لأحد لضحك إليك

2.     البيت المعمور : وهو بيت مشرف في السماء السابعة وهو لأهل السماء كالكعبة لأهل الأرض ، كل يوم يدخُلُهُ سبعون ألف ملكٍ يصلون فيه ثم يخرجون ولا يعودون أبداً .

3.     سدرة المنتهى : وهي شجرة عظيمة بها من الحسن ما لا يصفه أحد من خلق الله ، يغشاها فَراشٌ من ذهب ، وأصلها في  في السماء السابعة .rالسماء السادسة وتصل إلى السابعة ، ورءاها رسول الله

4.     الجنة : وهي فوق السموات السبع فيها ما لا عينٌ رأت ولا أذنٌ سَمِعَتْ ولا خَطَرَ على قلب بشر مما أعدّه الله للمسلمين الأتقياء خاصة ، ولغيرهم ممن يدخل الجنة نعيم يشتركون فيه معهم

5.     العرش : وهو أعظم المخلوقات ، وحوله ملائكة لا يعلم عددهم إلا الله . وله قوائم كقوائم السرير يحمله أربعة من أعظم الملائكة ، ويوم القيامة يكونون ثمانية .

6.     وصوله إلى مستوى يسمع فيه صريف الأقلام :انفرد رسول الله عن جبريل بعد سدرة المنتهى حتى وصل إلى مستوى يسمع فيه صريف الأقلام التي تنسخ بها الملائكة في صحفها من اللوح المحفوظ .


7.     سماعه كلام الله تعالى الذاتي الأزلي الأبدي الذي لا يشبه كلام البشر. 

8.     رؤيته لله عزّ وجلّ  بعينه .


நபிகள் நாயகம் (ஸல்) தனிநாபரக இவற்றை பார்த்தார்கள் என்றால் மொத்த மனித சமூகமும் இவற்றை கண்ட்து போலத்தான்.

பெருமானார் அவ்வளவு நம்பிக்கையானவர்.

நம்பிக்கையான ஒரு வரை சரக்கு வாங்க அனுப்பி வைத்து விட்டு முதலாளி சொல்லுவார்.
எங்களுடைய ஆள் வருகிறார். அவர் சரக்கை பார்த்தால் போதுமானது. நாங்க பார்க்கனும்னு அவசியமில்லே .. அவர் பார்த்தா நாங்க பார்த்த மாதிரிதான்.

பெருமானார் பார்த்த்து முஸ்லிம் உலகம் பார்த்த்தாக மட்டும் அர்த்தமாகாது. முழு மனித சமூகமும் பார்த்த்தாகவே கருதப் படவேண்டும்.

அந்த அளவு பெருமானாரின் இந்த அதிசயப் பயணம் முஸ்லிம் அல்லாத காபிர்களுக்கு நிரூபிக்கப் பட்ட்து.

மிஃராஜை காபிர்களுக்கு நிரூபித்த ஆதாரங்கள்,

நபிமார்களின் தோற்றங்களை பற்றிய குறிப்புக்ள்

فلما رجع رسول الله -صلى الله عليه وسلم- من رحلته الميمونة أخبر قومه بذلك، فقال لهم في مجلس حضره المطعم بن عدي، وعمرو بن هشام والوليد بن المغيرة، فقال: فنشر لي رهط من الأنبياء منهم إبراهيم، وموسى وعيسى، وصليت بهم وكلمتهم.

فقال عمرو بن هشام كالمستهزئ به: صفهم لي، فقال: (أما عيسى، ففوق الربعة، ودون الطول عريض الصدر، ظاهر الدم، جعد أشعر تعلوه صُهْبَة، كأنه عروة بن مسعود الثقفي. أما موسى فضخم آدم طوال، كأنه من رجال شنوءة، متراكب الأسنان، مقلص الشفة، خارج اللثة، عابس، وأما إبراهيم فوالله إنه لأشبه الناس بي، خَلقاً وخُلقاً.பைத்துல் முகத்தஸின் அடையாளங்கள்

فقالوا: يا محمد! فصف لنا بيت المقدس، قال: (دخلت ليلاً وخرجت منه ليلاً) فأتاه جبريل بصورته في جناحه، فجعل يقول: (باب منه كذا، في موضع كذا، وباب منه كذا، في موضع كذا.


இரவு நேரத்தில் அதுவும் அமாவாசை (27ம் நாலின் இருட்டு வேளையில்) ஒரு முறை மட்டுமே பார்த்த பைத்துல் முகத்தஸின் அடையாளங்களை பெருமானார் அடுக்கடுக்காக சொன்னார்கள்.
                 
عن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: «لما كذبني قريش قمت في الحجر فجلا الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه».

வழியில் சந்தித்த பயணிகள் 3 குழுவினரைப் பற்றி பெருமானார் சொன்னார்கள்.

ثم سألوه عن عيرهم، فقال لهم: (أتيت على عير بني فلان بالروحاء، قد أضلوا ناقة لهم، فانطلقوا في طلبها، فانتهيت إلى رحالهم ليس بها منهم أحد، وإذا قدح ماء فشربت منه، فاسألوهم عن ذلك قالوا: هذه والإله آية:

ثم انتهيت إلى عير بني فلان، فنفرت مني الإبل، وبرك منها جمل أحمر، عليه جُوالِق مخطط ببياض، لا أدري أكسر البعير، أم لا، فاسألوهم عن ذلك) قالوا: هذه والإله آية

ثم انتهيت إلى عير بني فلان في التنعيم، يقدمها جمل أورق، وها هي تطلع عليكم من الثَّنِيَّة)،

இதில் மக்காவிற்கு அருகில் உள்ள தன்ஈம் என்ற இட்த்தில் சந்தித்த குழுவினர். மறுநாள் பெருமானாரை சந்தித்த்தை உறுதிப்படுத்தினர்.

மக்காவின் மக்களால் மறுக்க முடியாத ஆதாரங்கள் இவை. ஆனாலும்
فقال الوليد بن المغيرة: ساحر، فانطلقوا فنظروا، فوجدوا الأمر كما قال، فرموه بالسحر، وقالوا: صدق الوليد بن المغيرة فيما قال

பைத்துல் முகத்தஸின் கதவு – ஹிர்கலின் சபையில் ஒரு சாட்சியம்.

(முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்களின் மஆரிபுல் குர் ஆனில் மிஃராஜ் வசனத்தின் தப்ஸீரில் இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)

ஹிர்கல் பெருமானாரைப் பற்றி அபூசுயானிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது மக்கா வாசிகளால் பெருமானாரைப் பற்றி அதிருப்தி ஏற்படுத்துவது போல எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு விசயத்தை மட்டும் போட்டு வைத்தார்கள். அவர் ஒரு இரவில் எங்களது மக்காவிலிருந்து இங்கு வந்து விட்டு திரும்பினார் என்கிறார் என்றார்கள்.

அப்போது அங்கிருந்த பைத்துல் முகத்தஸின் தலைமை பாதிரி ஒரு அற்புத சாட்சியம் அளித்தார்.

ஒரு நாள் இரவு பைத்துல் முகத்தஸின் கதவை தன்னால் பூட்ட முடியாமல் போனதையும், தச்சர்களை அழைத்து வந்து காட்டிய போதும் அதற்கான காரணம் புரியாததையும். அதனால் அவர் அப்படியே பூட்டாமல் கதவை விட்டுச் சென்றதையும், அடுத்த நாள சாதாரணமாக் அக்கதவுகள் பூட்டிக் கொண்டதையும். அந்த அதிசயத்தை கண்டு நேற்றிரவு ஒரு நபிக்காக இந்த கதவு திறந்து வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தான் கருதியதைய்ம் அது இப்போதுதான் உறுதிப் படுகிறது என்றும் சான்றளித்தார்.

அல்லாஹவை, அவனது ஆற்றலை, அவனது மறவுலகத்தை பற்றிய செய்திகள் மிஃராஜின் வாயிலாக பெருமானாருக்கு தெளிவாக நிறைவாக காட்டப்பட்டது.

அந்த பயணம் சந்தேக்கத்திற்கு இடமில்லாதவாறு மக்கள அனைவருக்கும் நிரூபிக்கவும் பாட்ட்து.

இனி அல்லாஹ்வை, மறுமையை, சொர்க்கம் நரகத்தை, நன்மைக்கான் கூலியை, தீமைக்கான தண்டனையை மறுப்பதற்கான எந்த காரணமும் மனிதர்களிடம் இல்லை என்பதை மிஃராஜ் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டுகிறது.

பெருமானார் கண்ட அதிசயங்களை தனக்கு நேர்ந்த அனுப்வங்களாக எடுத்துக் கொள்ள முழு மனித சமூகமும் இஸ்லாமிய சமூகமும் எடுத்துக் கொள்ள க்டமைப் பட்டிருக்கிறது.  


الله قادر مطلق   - என்பதற்கு அற்புதமன மறக்க முடியாத உதாரணம் இது. முஸ்லிம்கள் இதைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் மீதான ஈமானை தவக்குலை உறுதிப்படுத்தி தங்களது வாழவை செம்மைப் படுத்திக் கொள்ள வெண்டும்

மிஃராஜ் பெருமானாருக்கு மார்க்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்கிற பாதையில்  மனவலிவையும் உற்சாகத்தையும் த்ந்த்து. அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற சிரம்ங்களையும் எதிர்களின் நிலையையும் இலேசாக கருத வைத்த்து.

كانت هذه الرحلة العظيمة، تربية ربانية ، وأصبح -صلى الله عليه وسلم- يرى الأرض كلها، بما فيها من مخلوقات، نقطة صغيرة في ذلك الكون الفسيح، ثم ما مقام كفار مكة في هذه النقطة؟ إنهم لا يمثلون إلا جزءاً يسيراً جداً من هذا الكون


மிஃராஜ்  முஃமின்களுக்கு
·         ஈமானை பலப்படுத்திக் கொள்ள
·         இபாத்த்தை பலப்படுத்திக் கொள்ள
·         குணங்களை சீர்படுத்திக் கொள்ள
பயன் பட்ட்து . இனியும் பயன்பட வேண்டும்.

தற்கால மிஃராஜு நினைவு நிகழ்ச்சிகளின் போது. நாம் பைத்துக் முகத்தஸூடனான நமது உறவையும் கடமையையும் நினைத்துப் பார்க்க மறக்க்க் கூடாது.

பைத்துல் முகத்தஸ் இஸ்லாமின் புனித தளங்களில் ஒன்று.

ففي الصحيحين عن النبي : (( لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجدي ((
وهو أولى القبلتين، فقد كان النبي صلى الله عليه وسلم يصلي إليه في بداية فرض الصلاة، ثم أمر بالتحول إلى الكعبة.

பெருமானாரின் மிஃராஜுக்கான வாசல் அது.

இன்று அது முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு யூதர்களிடம் ஒப்படைக்கப்
பட்டிருக்க்கிறது.

பைத்துல் முகத்தஸை மீட்பதில் முஸ்லிம்கள் தங்களது கடமையை உணர வேண்டும். அல்லாஹ்விட்த்தில் துஆ செய்ய வேண்டும். இது பற்றி கவலையில்லாமல் யூதர்களோடு கைகுலுக்கிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை உதற வேண்டும். பைத்துல் முகத்தஸை மீட்பதற்காக போராடிக் கொண்டிருப்போருக்கு உதவ வேண்டு,

அல்லாஹ் கிருபை செய்வானாக!

பைத்துல் முகத்தஸ் பிரச்சினை பற்றிய விபரங்களுக்கு சம்நிலைச் சமுதாயம் மாத இதழில்  வெளியான 
கைவிடப்பட்ட காஸா
பாலஸ்தீனில் பதற்றம் 
கட்டுரைகளை வாசிக்கலாம்.

4 comments:

  1. maulana azees bagavi your inormation very uss ull by sadikqul ameen siraji malaysia

    ReplyDelete
  2. Hazrat. Super bayan usfull

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்,. மௌலானா மேலே இருக்கும் ஹதீஸ்களுக்கு தமிழாக்கம் இணைக்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்குமே... மற்றப்படி அருமை மௌலானா உங்களது இந்த பதிவு...,

    ReplyDelete