வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 21, 2011

அல்லாஹ்வோடு நாம்


பராத் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு  இறங்கி வந்து மக்களின் பாவங்களை மன்னிக்கிறான் என நபிகள நாயகம் (ஸல்) அவர்கள சொன்னார்கள்

عَنْ عَائِشَةَ : قَالَ  النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  : إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ

மன்னிப்பு வழங்க மக்களிடம் அவன் நெருங்கி வருவதையே முதல் வானத்திற்கு ங்கி வருதல் எனும் சொல் குறிக்கிறது. அல்லாஹ் அவனிடம் கையேந்துகிற அனைத்து தரப்பினருக்கும் மிக அதிகமாக மன்னிப்பு வழங்குகிறான என்பது இதன் கருத்தாகும்.

அல்லாஹ் எபோதும் நமக்கு நெருக்கமாகவே இருக்கிறான்.
وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ – الحديد
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

விசேஷ நாட்களில் அந்த நெருக்கம் இன்னும் அதிகரிக்கிறது.
இன்றைய நம்முடைய கேள்வி என்னவென்றால் நாம் அல்லாஹ்வை நெருங்கிச் செல்கிறோமா என்பதே!

அல்லாஹ்வை நாம் நெருங்கினால மட்டுமே அவனுடைய அருட்கொடைகளின் பயனை நாம் அனுபவிக்க முடியும்,

சூரிய வெளிச்சம் எங்கும் வியாபித்திருக்கிறது. ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் செடியை சூரிய வெளிச்சம் படுகிற வண்ணம் வைத்திருந்தால் மட்டுமே அது வளரும்.

தொழுகையில் அல்லாஹ்வுடை ரஹ்மத் நம்மை நோக்கி வருகிறது. நாம் அதை ஏற்கிற நிலையில் இருக்க வேண்டும்

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلَا يَمْسَحْ الْحَصَى فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ

செல்போன் வைத்திருப்பவர் சுவிட்ச் ஆன் செய்திருந்தால் மட்டுமே அதை நோக்கி வருகிற சிகனலை பெற முடியும். அணைத்து வைத்திருந்தால் அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தால் சிக்னல் கிடைப்பதில்லை அது போல

நாம் அல்லாஹ்வுடன் இருக்க வழி.
அல்லாஹ்வை ஞாபகத்தில் வைத்திருப்பது,
நாம் அல்லாஹ்வை அறிந்திருக்கிறோம். சந்தேகமில்லை.(علم (
ஞாபகத்தில் வைத்திருக்கிறோமா  إستحضار)  (

சிறுவனை பறிகொடுத்த தாய் அவன் இறந்து பல நாட்களாகிய பிறனும் அவனுடைய ஞாபகமாக இருக்கிறாள். அவன் நடப்பது போல, சாப்பிடுவது போல, வீட்டிற்குள் வருவது போல, அவன் அம்மா என்று அழைப்பது போலவே உணர்கிறாள். காரணம் அவளுடைய ஞாபகத்திலிருந்து சிறுவன் அகலுவதில்லை.

நம்மிடம் அல்லாஹ்வின் ஞாபகம் இப்படி இருக்குமெனில் 2 பயன்கள்

1) எந்த நிலையிலும் அல்லாஹ்வின் பாதுகாப்புக் கிடைக்கும்.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அப்படி அல்லாஹ்வின் ஞாபகம் இருந்தது.

ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لَأَبْصَرَنَا فَقَالَ مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا البخاري – 3653

 மிக ஆச்சரியமாக அவர்கள் பாதுகாக்கப் பட்டார்கள்.

2)  காரணம் இல்லாமல் அல்லாஹ் ரிஜ்க் தருவான்.
ரிஜ்கின் பொருள் ஆழமானது.

மர்ய்ம அம்மையாருக்கு அல்லாஹ் ரிஜ்க் அளித்த்து போல

மர்யம் அம்மையாரின் வாழ்வின் இரண்டு தருணங்கள்
அவரிடம் ஆச்சரியமான வகையில் உணவு இருப்பதை ஜக்ரியா (அலை) பார்த்தார்கள். اني لك هذا  அவர் கேட்க هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ  என மர்யம் அம்மையார் பதிலளித்தார்.

அதே மர்யம் அம்மையாரிடம் ஜிபரயீல் (அலை) உங்களுக்கு ஒரு குழந்தையை தரப்போகிறான் என்ற போது அவர் கேட்டார்
أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ

இரண்டு நிலைகளிலும் காணப்பட்ட வித்தியாசத்திற்கு காரணம்  முதல் நிலையில் அவர் தனிமையில் அல்லாஹ்வின் நினைவில் இருந்தார். இரண்டாவது நிலையில் மக்களோடு கலந்துறவாடிக் கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் நினைவு குறைந்திருந்த்து என இஸ்லாமிய அறிஞர் துல்பிகார் சாஹிப் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ்வின் நினைவில் இருக்கிற போது எதற்கும் எப்போதும் அல்லாஹ் இருக்கிறான் என்ற தைரியமும் நம்பிக்கையும் கூடவே இருக்கும்.  காரண காரியங்களைத் தாண்டி அவனது உதவியும் கிடைக்கும்.

ஒருநணபர் இன்ஞினியரிங்க கவுன்சிலிங்கில் உட்கார்ந்திருந்தார். ஒருகுறிப்பிட்ட கல்லூரியில் அரது பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட படிப்பை எதிர்பார்த்திருந்தார். அவரது வரிசை எண் 300 க்கு மேல் இருநது. கல்லூரியிலோ 3 சீட்டுக்கள் தான் இருந்தன. கவுன்சிலிங்க் தொடங்கியதில் இடங்கள் வேகவ்கமாக  தீர்ந்து கொண்டிருந்தன. நணபர் பதற்றத்தில் இருந்தார். ஒரு கட்ட்த்தில் அவருக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வந்த்த்து ஹஸ்புனல்லாஹ் திக்ரில் ஈடுபட்டார். என்ன ஆச்சரியம் அவருக்குரிய வரிசை வந்த போது எதிர்பார்த்த கல்லூரியில் 3 இடங்களும் அப்படியே இருந்தன. அன்றைய தினம் அந்தக் கல்லூரிக்கான முதல் இடம் அவருக்கு கிடைத்த்து.

அல்லாஹ்வை சாதாரணமாக நினைக்கிற போதே இப்படி உதவி கிடைக்குமென்றால் சதா நினைத்துக் கொண்டிருந்தால் எத்தகைய உதவி கிடைக்கும்?

அல்லாஹ்வை நினைப்பதால் குறைந்த பட்சம் பதற்றம் குறைந்து மன அழுத்தம் குறைகிறது. நிதானமாகவும் நிம்மதியாகவு காரியங்களை எதிர்க் கொள்ள முடிகிறது,

அல்லாஹ்வை ஞாபகத்தில் வைத்திருக்கும் வழி முறைகள்

தனிமையில் அவனை நினைவு கூர்வது
படைப்புக்களின் பலகீனத்தை எண்ணிப் பார்ப்பது.
சலனமற்ற சிந்தனையுடனும், உள்ளத்தூய்மையுடன் திக்ருகளை அதிகப் படுத்திக் கொண்டிருப்பது.

உலகியல் லாபங்களை எதிர்பார்க்காமல் அல்லாஹ்வின் சக்தியை அஞ்சியும், அவனது கருணையில் ஆசை கொண்டும் நடந்து கொள்வது.

புனித மிக்க ரமலானை எதிர்க் கொள்கிற இந்த புண்ணிய நேரங்களில் நம்மை நெருங்கி வருகிற அல்லாஹ்வை நாம் நெருங்கிச் செல்வதற்கு முயற்சிப்போம்.
 





  

No comments:

Post a Comment