வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 12, 2012

அஜ்மீர் அரசியல்



இஸ்லாமிய வரலாற்றில் இத்தனை அதிகமான அளவில் இஸ்லாத்தைப் பரப்பிய ஒரு பெரியாரை காண்பது அரிது
(இஸ்லாமிய கலைக் களஞ்சியம்- MRM  அப்துர் ரஹீம்.)

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ(62)  يونس
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنْ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ سَيَرْحَمُهُمْ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ(71) التوبة

عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَغْبَطَ أَوْلِيَائِي عِنْدِي لَمُؤْمِنٌ خَفِيفُ الْحَاذِ ذُو حَظٍّ مِنْ الصَّلَاةِ أَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ وَأَطَاعَهُ فِي السِّرِّ وَكَانَ غَامِضًا فِي النَّاسِ لَا يُشَارُ إِلَيْهِ بِالْأَصَابِعِ وَكَانَ رِزْقُهُ كَفَافًا فَصَبَرَ عَلَى ذَلِكَ ثُمَّ نَقَرَ بِيَدِهِ فَقَالَ عُجِّلَتْ مَنِيَّتُهُ قَلَّتْ بَوَاكِيهِ قَلَّ تُرَاثُهُ – ترمذي 2269

عَنْ بْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْلَةً حِينَ فَرَغَ مِنْ صَلَاتِهِ  اللَّهُمَّ اجْعَلْنَا هَادِينَ مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ سِلْمًا لِأَوْلِيَائِكَ وَعَدُوًّا لِأَعْدَائِكَ نُحِبُّ بِحُبِّكَ مَنْ أَحَبَّكَ وَنُعَادِي بِعَدَاوَتِكَ مَنْ خَالَفَكَ – ترمذي 3341

சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி திடீர் விஜயமாக அஜ்மீர் வந்து சென்றார். அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஸ்தி (ரஹ்) அவர்களின் தர்ஹாவில் ஜியாரத் செயத அவர் சுமார் 5 கோடி ரூபாயை தர்ஹாவிற்கு வழங்குவதாக அறிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான கோப தாபங்கள் நிலவிவரும் சூழ்நிலையில் ஒரு சூபியின் தர்ஹாவிற்கு ர்தாரி வந்து சென்றது, கடும் கோடை வெயிலின் உக்கிரத்திற்கு நடுவே ஒரு தென்றல் வீசிச் சென்றது போல  பிரச்சினைகளின் சூட்டை சற்று தணித்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

அஜ்மீர் தர்ஹாவிற்கு அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆழமானது, தொன்மையானது.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் தர்ஹாக்களைப் பற்றிய அதிருப்தி உணர்வு பரவலாக உருவாக்கப் பட்டுள்ளது.

தர்ஹாக்களின் மேலுள்ள கோபத்தில் ஒருபிரிவினர் இத் தர்ஹாக்களில் அடக்கமாகியுள்ள பெரியோர்களின் மார்க்கச் சாதனைகளையும் இறை பக்தியையும் கூட கவனிக்க மறுக்கிறார்கள்.

ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். இத்தகைய நல்லடியார்களின் வரலாறுகளையும், வாழக்கை முறைகளையும் எண்ணிப் பார்க்கிற போதுதான் நமது தக்வாவிற்கான ஆதார வழிகாட்டுதலகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்னொரு அம்சத்தையும் நாம் மறந்து விடுகிறோம். தீனின் வளர்ச்சியில் மிகப் பிரம்மாண்ட சாதனைகளை படைத்த அந்த நல்லவர்களுக்கு நன்றி செலுத்தவும் துஆ செய்யவும் கூட நாம் மறந்து விடுகிறோம்.

தர்ஹாக்களில் நடை பெறுகிற மார்க்கத்திற்கு முரணான செயல்கள் கண்டிப்பிற்குரியதாக இருக்கலாம். சொந்த தேவைகளுக்கு பணம் சம்பாதிப்பதற்காக தர்ஹாக்களைப் பயன்படுத்துகிறவர்கள் கணடனத்திற்குரியவர்களாக இருக்கலாம் ஆனால், தர்ஹாக்களில் அடக்கமாகி இருப்ப்பவர்கள் நம் கவனத்திற்குரியவர்கள். ஒவ்வொரு ஊரிலும் அவர்களது ஈமானிய வாழ்வும் இஸ்லாமிய பற்றும் போதனைகளும் சமுதாயத்திற்கு அவசியமானவை.

தர்ஹாக்களில் அடக்கம் பெற்றுள்ளவர்கள் வாழ்ந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருந்தார்கள் மறைந்த பிறகும் பயன் தருபவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பலனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது  புத்திசாலி சமூகத்தின் கடமையாகும்.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல அரசியல் தலைவர்கள் அஜ்மீர் தர்ஹாவிற்கு ஜியாரத் வந்து சென்றுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானிய அரசியல் தலைவர்கள் பர்வேஸ் முஷர்ரப், பெனாசிர் பூட்டோ, ஜியாவுல் ஹக் போன்ற தலைவர்கல் அஜ்மீருக்கு வருகிற போதெல்லாம் அரசியல் அரங்கில் ஒரு தென்றல் தழுவுவது  உண்டு.

அரசியலிலும் சமூக அரங்கிலும் அஜ்மீரில் அடக்கமாகியுள்ள காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி (ரஹ்) அவர்களின் ஈர்ப்பு எல்லை கடந்த்து.

அன்னார் இந்தியாவில் வாழ்ந்த இறை நேசர்களில் தனிச் சிறப்புப் பெற்றவர் ஆவார். குத்புல் ஹிந்த என்று அழைக்கப் பட்டார்.

யாரெல்லாம் இறைநேசர்கள் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

இறை நேசர்கள் அல்லாஹ்வின் போர்வைக்குள் இருக்கிறார்கள், அவர்களை அல்லாஹ்வே அறிவான் என இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதுண்டு.

இறைநேசர்களின் மார்க்கப் பணியும் சமுதாயச் சேவையுமே பல சந்தர்ப் பங்களில் மக்களுக்கு அவர்களில் சிலரை அடையாளம் காட்டியுள்ளது.

ஏர்வாடி இபுறாகீம் ஷஹீத் வலியாகட்டும் , நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகமாட்டும் தங்களது சமுதாய்ப் பணிகளின் காரணமாகவே மக்களால் அடையாளம் காணப்பட்டார்கள்.

அஜ்மீரில் அடக்கமாகியுள்ள காஜா முஈனுத்தின் சிஸ்தி (ரஹ்) அவர்களும் அன்னாரது  மார்க்க சமுதாயப் பணிகள் காரணமாகவே இந்த மரியாதையை ப் பெற்றுள்ளார்கள்.

அவரது வரலாற்றை அறிந்து  கொள்வது  பல் வகையில் நல்லது.

 அன்றைய தெற்கு ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதியாகவும் இன்றைய ஈரானின் ஒரு பகுதியாகவும் இருக்கிற் சீஸ்தான் என்ற ஊரில் சையத் கியாசுத்தீன் அஹ்மது என்பவரின் மகனாஜ ஹிஜ்ரி 430 ரஜப் 14 வெள்ளிக்கிழமை பிறந்தார்.   ஹுசைன் (ரலி ) வமிசத்தில் வந்தவர்.
حضرة الخواجا معين الدين الجشتي و يعرف كذلك بغريب نواز الذي يعني مغيث الفقراء او معطي الفقراء

هو اشهر الاولياء في شمال آسيا و و مزاره اكثر المزارات زيارة في الهند و يزار من قبل المسلمين و غيرهم كالهندوس، و لد قدس الله سره في سيستان شمال شرق إيران
تاريخ الولادة : 536هـ-1141 م
تاريخ الوفاة : 661هـ-1230 م
ولد في عائلة فارسية و توفي والداه و هو في الخامسة عشرة من عمره و خلال طفولته كان مختلفا عن الاخرين فقد شغل و قته بالعبادة و الرياضة الروحية
.
9 வயதில் ஹிப்ளு.
சிறுவயதில் அன்னையின் மரணம். 15 வயதில் தந்தையின் மரணம்.

தந்தையின் சொத்தாக தண்ணீர் இறைக்கும் காற்றாடியுடன் கூடிய ஒரு தோட்டம் அவருக்கு சொத்தாக கிடைத்த்து.

ஒரு நாள் அவரது தோட்ட்த்திற்கு இபுறாகீம் தந்தூஸி என்ற ஞானி வந்தார். இவர் அவருக்கு பழங்களை எடுத்து முன்வைத்தார். அவர் ஒரு எள்ளுருண்டையை கொடுத்தார். அதை உண்ட்தும் இவரது மனப்போக்கில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது.

، بعد هذه الحادثة تخلص من حديقته وجميع ممتلكاته ، ووزع الأموال على الفقراء ، ورفض الدنيا ، وذهب لـ " بُخارى " لطلب العلم !
ஹிஜ்ரி 560 ல் சூபி ஞானி காஜா உஸ்மான் ஹாரூனியை சந்தித்து ஜிஸ்திய்யா தரீக்காவில் பைஅத் பெற்றார். அவருடன் 20 ஆண்டுகள் இருந்தார்.

பக்தாதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, ஷஹாபுத்தீன் சுஹரவர்தி அவர்களையும் சந்தித்தார்.

ஹஜ் பயண்ம் – பெருமானார் (ஸல்) அவர்களது ஜியாரத்திற்கு சென்ற போது,
அவரது சலாமிற்கு பெருமானார் (ஸ்ல்) அவர்கள் பதில் சலாம் சொல்வதை செவியேற்றார்.

இந்தியாவிற்கு சென்று மக்களுக்கு வழிகாட்டும் படி அவருக்கு பெருமானார் (ஸல் அவர்கள் தனக்குச் சொல்வதாக உணர்ந்தார்.

அங்கிருந்து லாஹுர் பிறகு முல்தான் சென்று விட்டு இறுதியாக தில்லி வழியாக் அஜ்மீர் வந்து சேர்ந்தார். ஏராளமானோர் அவர் மூலம் இஸ்லாமைத் தழுவினர்

رحلة طلبه :
زار في هذه الفترة بخارى و سمرقند و تعلم على كبار العلماء في ذلك العصر و زار جميع المراكز الاسلامية و في هذه الفترة اخذ الطريق عن الخواجا عثمان هاروني و سافرا معا لبلدان الشرق الاوسط كمكة و المدينة
.

الرحلة الهندية
:

قرر الشيخ ان يحول وجهته الى الهند بسبب رؤية سيد الوجود صلى الله عليه و على اله و صحبه و سلم يأمره بذلك فذهب للهند و نزل لاهور و بعد فترة وجيزة نزل الى اجمير و فيها استقر و احبه الناس فيها و تقبلوه و كثر أتباع
ه.

تعاليمه :

كان يامر بخدمة الناس و يامر اتباعه ان يكون كرمهم جاري كالنهر و ان تكون عاطفتهم كالشمس و ضيافتهم كالارض و اعظمها الامور عنده هو ازالة هموم الاخرين و حملها عنهم و اطعام الجائع و اعانة الضعفاء و تقبل و احترام الاختلافات الدينية و المذهبية
.
காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களின் மூலம் தொன்னூறு லட்சம் பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக வரலாற்றாசிரியர் ஆர்னால்டு கூறுகிறார்.

வட இந்தியாவில் இன்று கனிசமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் எனில் அதில்  காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களின் பங்கு பிரதானமானது.

இஸ்லாமிய வரலாற்றில் இத்தனை அதிகமான அளவில் இஸ்லாத்தைப் பரப்பிய ஒரு பெரியாரை காண்பது அரிது (இஸ்லாமிய கலைக் களஞ்சியம்- MRM  அப்துர் ரஹீம்.

கரீப் நவாஸ்  ஏழைகளின் துயர் துடைப்பவர்
தில்லியில் உள்ள தனது நிலம் அபகரிக்கப் பட்ட்தாக ஒரு ஏழை முறையிட்டார். அவருடன் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி புறப்பட்டார். தில்லியில் அப்போதைய ஆட்சியாளரான இல்துமிஷை சந்தித்து முறியிட்டை பெற்றுக் கொடுத்தார். இல்துமிஷ் அன்னாரின் மீது அதிக அன்பு கொண்டவர் . அவரும் மற்றவர்களும் நீங்கள் வந்திருக்க வேண்டியதில்லையே ! எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தால் போதுமே என்றனர். கஜா நாயகம் சொன்னார். இதற்கான நன்மை நான் விட்டு விட விரும்பவில்லை.

சதி எதிரான் போராட்டம்
அன்றைய இராஜஸ்தானில் கணவிரின் சிதையில் மனைவி விழும் சதி நடைமுறையில் இருந்த்து. ஒரு இளவரசன் இறந்த போது அவனது மனைவி சதிக் கு உடன் பட வில்லை. அந்த பெண்ணை காஜா நாயகம் திருமண செய்து கொண்டார்

இவரது செல்வாக்கு வளர்வதை அஜ்மீரின் அரசன் பிருத்வி சௌகான் விரும்பவில்லை. நாட்டை விட்டு வெளியேறு மாறு கூறினார்.

“நான் இவரை உயிரோடு முஸ்லிம் படைகளிடம் ஒப்படைத்து விட்டேன்  என்று காஜா நாயகம் கூறீனார்.

சில நாட்களில் ஷஹாபுத்தீன் கோரி படை எடுத்து வந்து பிருந்விராஜை தோற்கடித்து தில்லியை கைப்பற்றினார்.

அவர் அஜ்மீர் வந்து காஜா நாயகத்தை சந்தித்து சென்றார். அவரைப் போல குத்புதீன் ஐபெக் – இல்துமிஷ் ஆகியோரும் காஜா நாயகத்திற்கு அதிக மரியாதை கொடுத்தனர்.

அக்பர் – பல் முறை இங்கு வந்து சென்றுள்ளார். அவரது மகன் ஜஹாங்கீர் இங்கு வந்தால் காலில் செருப்பு அணியாமல் பக்கீர் போல நடந்து செல்வார். ஷாஜஹானும் ஒளரங்கசீப்பும் ஜியாரத்திற்காக இங்கு பல முறை வந்து சென்றுள்ளனர்.   

ஆங்கில் ஆட்சி அமைந்த பிறகு கவர்னர்கள் பலரும் இங்கு வந்து சென்றுள்ளனர்.

1902 ல் கர்சன் பிரபு அஜ்மீருக்கு வந்தார். அப்போது “ இந்தியாவில் இந்த அடக்கவிடம் ஜாதி மத பேதமின்றி பேரரசு புரிகிறது என்று எழுதினார்.   

இந்த வகையில் காஜா நாயகத்தின் அரசியல் செல்வாக்கும் அஜ்மீரின் அரசியல் முக்கியத்துவமும் அப்போதிருந்தே பிரதானமடையத் தொடங்கியது. இன்று வரை அந்த முக்கியத்துவம் குறைந்த பாடில்லை.

இந்திய மக்களும்  உலக முழுவதிலுமுள்ள பிரபலங்களும் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அங்கு வந்து  செல்கின்றனர். அது ஒரு சடங்கு சம்பிரதாயமான வருகை அல்ல.
அன்னாரது அடிப்படை வழிகாட்டுதல்கள்

1-طاعة المرشد
2-قطع علائق العالم المادي
3-البعد عن السلط الدنيوية
4-المداومة على الصلاة و الصيام
5-خدمة البشر
6-احترام كل الطرق الصوفية
7-التوكل على الخالق لا الخلق
8-اخفاء الكرامات

மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்கா பாடுபட்டு மக்களின் உயர்வில் அக்கறை கொண்ட்தே கரீப் நவாஸ் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களின் பக்திமார்க்கமாகும்.  

யாருடைய காசையோ எடுத்து தர்ம்ம் செய்தவ்ரல்ல. அரசர்கள் அவரை நாடி வந்த போதும், பட்டோபடங்களை விரும்பாது ஏழைகளோடு வாழ்ந்தவர் அவர்.

ஆதாரமாக இருந்த சொந்த தோட்ட்த்தை தானம் செய்தவர் அவர், ஒரு ஏழைக்காக தில்லி வரை பயணம் செய்தவர் அவர்,

தற்போது ஆர்ப்பாட்டமாக ஜியாரத்திற்கு வருகிறவர்கள், கோடிக்கணக்கில் நன்கொடை வழங்குபவர்கள் காஜாமுஈனுத்தின் ஜிஸ்தி அவர்களின் அடிப்படை கோட்பாடுகளிலும் நடைமுறைகளிலும் கவன செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இன்னும் கோடிக்கணக்கில் மக்கள் இஸ்லாத்தை அறீயாதவர்களாக இருக்கிறார்கள். காஜா முஈனுத்தீன் ஜிஸ்தியின் வழியில் அவர்களுக்கு தீனை எடுத்து வைப்பது நமது கடமை.
.  

5 comments:

  1. Arbutham niraintha ajmeer naayakathin varalaatrai neenkal ezhuthiya vithamum arbutham

    ReplyDelete
  2. VERY USEFUL INFORMATION ABOUT KHAJ AJMEER NAGHAM (R.A.) MAY ALMIGHTY SHOWER HIS BLESSING UPON YOU AND YOUR FAMILY! MOREOVER, HE GRAND YOU LONG LIFE AND SOUND HEALTH!! AMEEN. FORM HANEEF JAMALI MALAYSIA.

    ReplyDelete
  3. VERY USEFUL INFORMATION ABOUT KHAJA AJMEER R.A. MAY ALLAH GRAND YOU LONG LIFE AND SOUND HEALTH! AMEEN!! FROM HANEEF JAMALI MALAYSIA.

    ReplyDelete