வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 03, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்புஇந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக 2011லிருந்து தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிநடை பெறுகிறது

இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள், அலைபேசி, தொலைபேசி போன்ற விவரங்களும் பெறப்படுகிறது.

இதன் மூலம் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களை அடையாளம் காணும் பணி இணைந்தே செய்யப்படுவது தெரிகிறது. சாதிய, பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும் அந்த படிவத்தில் தங்களை பதிவு செய்வோர் பேசும் மொழி, அதாவது அவர்களின் தாய்மொழி என்ன என்பது பதிவு செய்யப்படவில்லை என்று குறை சொல்லப் பட்டாலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மிக நீண்ட காலத்திற்கு பிறகு எடுக்கப் படுவதால ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இது அவசியமான தாக அமைந்துள்ளது. .

கணக்கெடுப்பு விளக்கமும் வரலாறும்

ஆரம்ப காலத்தில்  ஒரு நாட்டில் அல்லது நகரத்தில் உள்ள மக்கள் தொகை பிறப்பு இறப்பு விகிதம் கண்க்கெடுக்கப் பட்டது. அதனால் கணக்கெடுப்பு என்பது ஆங்கிலத்தில் Statistics என்று சொல்லப்படுகிறது  இது   state என்ற சொல்லிருந்து வந்ததாகும். ஆனால்  இன்றைய காலத்தில் கணக்கெடுப்பு என்பது அனைத்து துறைகளிலும் பெருகி விட்டது. ஒரு துணிக்கடை தீபாவளிக்கு வருகிறவர்கள் ரம்ஜானுக்கு வருகிறவர்கள் என கணக்கெடுக்கிறது.

அரசுகளும் இப்போது பல நோக்கில் அமைந்த கணக்கெடுப்புக்களை நடத்துகின்றன.

குடிமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை கிரோக்க த்த்துவ அறிஞரான பிளாட்டோ அவருடை குடியரசு என்ற நூலிலும் அரிஸ்டாடில் அவருடை அரசியல் என்ற நூலிலும் குறிப்பிட்டிருந்தார். வரலாற்றுக்கு வரையறை வகுத்த பேராசான் இப்னு கல்தூன் கணக்கெடுப்பிற்கான சில வழிமுறைகளை வகுத்துக் கூறினார். இவை அறிவியல் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. அதாவது எண்ணிக்கைகள் கணக்கிடப்பட்டன என்றாலும் அதை வைத்து ஆய்வுகளோ ஆய்வு முடிவுகளோ வெளியிடப்படவில்லை

இஸ்லாத்தின் தொடக்கம் தொட்டே முஸ்லிம்கள் கணக்கெடுப்பில் ஆர்வம் காட்டினர். தங்களது கால்நடைகள் வியாபாரப் பொருட்கள் பற்றிய கணக்கெடுப்பு ஜகாத் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு தேவைப் பட்டது.

ஹிஜ்ரி 20 ம் ஆண்டு – 640 – உமர் (ரலி) காலத்தில் அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அலக்ஸாண்டரிய்யா (இஸ்கந்தரிய்யா) வை கைப் பற்றிய போது அங்குள்ள மக்களை தொகை பற்றி கணக்கெடுப்பு நடத்தினார். 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு வாழ்ந்தனர். (துரூஸுத்தாரீஹில் இஸ்லாமி பாக 2 பக் 35)


ஹிஜ்ரி 260 ல் மறைந்த அறிஞர் கிந்தி இத்துறையில் முன்னுதாரனம் மிக்க பணியாற்றினார்.

17 ம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புக்கள் தொடங்கின.1601 ல் காஸர் நியூமேன் என்பவர் இறந்தவர்களை பற்றிய கணக்கெடுப்பை நடத்தி சராசரி ஆயுள் குறித்த ஆய்வை வெள்யிட்டார்.

18 ம் நூற்றாண்டில் பல துறைகளிலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட போது கணக்கெடுப்புத்துறையிலும் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அறிஞர் Laplace  1749 -1827) இத்துறையில் தனிச்சிறப்புமிக்க பல முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தினார். இன்று புள்ளியல் என்பது தனி துறையாக உருவாகி பல் வேறு பட்ட தகவல்களை பெற உதவுகிறது.

இன்று புள்ளியல் ஆய்வு கணக்கெடுப்பு என்பது பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் ஒரு துறையாகிவிட்டது. புகை பிடிப்பதற்கும் கேன்சருக்கும் தொடர்பு உண்டா என்று ஒரு கேள்வி வரும் எனில் அதற்கு புள்ளியல் பதில் தருகிறது. தொலைக்காட்சி பார்ப்பதால மன அழுத்தம் ஏற்படுகிறதா இல்லையா என்ற கேள்விக்கு புள்ளியல் பதில் தருகிறது.

1974 ம் ஆண்டை ஐநா மன்றம் கணெக்கெடுப்பு ஆண்டாக அறிவித்த போது நாடுகள் தங்களது மக்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை திரட்டி புள்ளியல் ஆய்வுகளை மேற்கொண்டன.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய வரலாறு

1824-ம் ஆண்டில் அலகாபாத் நகரிலும், 1827-ம் ஆண்டில் பனாரஸ் நகரிலும், 1830-ம் ஆண்டில் டாக்காவிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதி காரப்பூர்வமாக 1860-ம் ஆண்டில் தொடங்கி 1871 வரை ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு  ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப்பட்டது.
1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
விடுதலைப் போராட்டம், நாடு பிரிவினை, மதக்கலவரம், நிலநடுக்கம் ஆகிய காலங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த முடியாத பகுதிகளில், இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை கணிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படப்போவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.
உலகிலேயே அதிக மக்களை ஒரே புள்ளி விவரப்பட்டியலுக்குள் கொண்டு வர செய்யப்படும் மாபெரும் முயற்சியாகும் இது.
நேரடியாக கணினி வழியே பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் நம் சகோதர சகோதரிகள் கவனமாக இருந்து அனைத்து தகவல்களும் முறையாக பதிவேற்றம் செய்ய அரசாங்க அதிகாரிகள் வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
·         நமது உரிமைகளை முறையாக பெற்றிடவும் வீட்டில் இருக்கும் அனைவரின் பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும், அவர்கள் வெளியூரில் இருந்தாலும் வெளிநாட்டிலும் இருந்தாலும் சரியே. அவர்களின் பெயர்களை அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
·          
சாதியும் இஸ்லாமும்

மனிதர்கள் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப் பட்டிருந்தாலும் அவர்களை பல குழுக்களாக இனங்களாக பிரித்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான், இது அவர்களை அடையாளம் கான உதவும் என்பது திருக்குர் ஆனின் கருத்தாகும்

يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

குடும்ப ரீதியான, வாழுமிட ரீதியான அடையாளங்களை இஸ்லாம் எதிர்க்க வில்லை.
சஹாபாக்களில் அவஸ் கஜ்ரஜ் அடையாளம் முஹாஜிர் (مهاجر) அன்சார் (أنصار) அடையாளம் அஷ்அரி ( اشعري ) சகபி ((بنو ثقيف    அடையாளங்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

யுத்தங்களின் போது தனி தனி தலைவர்களை நியமித்தார்கள் தனித்தனியான கொடிகளை கொடுத்தார்கள்
غزوة احد
·        واستعمل على المدينة «ابن أم مكتوم» رضي الله عنه، وعقد ثلاثة ألوية، لواء للأوس وجعله بيد أسيد بن حضير.، ولواء للخزرج وجعله بيد الحباب بن المنذر.، ولواء المهاجرين وجعله بيد عليّ بن أبي طالب رضي الله عنهم

இது அடையாளத்திற்காகவும் போட்டி போடும் குழுமனபான்மையும் தந்த்து.

பெறுமை அடித்துக் கொள்ள குழு அடையாளத்தை பயன் படுத்துவதை மார்க்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَفْتَخِرُونَ بِآبَائِهِمْ الَّذِينَ مَاتُوا إِنَّمَا هُمْ فَحْمُ جَهَنَّمَ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنْ الْجُعَلِ الَّذِي يُدَهْدِهُ الْخِرَاءَ بِأَنْفِهِ إِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ إِنَّمَا هُوَ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ النَّاسُ كُلُّهُمْ بَنُو آدَمَ وَآدَمُ خُلِقَ مِنْ تُرَابٍ – ترمذي 3890
இந்த நபி மொழியில் பெற்றோரை கொண்டு பெறுமை அடிப்பவர்களை பெருமானார் (ஸல்) மிக கடுமையாக விமர்சித்துள்ளார்கள். அத்தகையோரை மலத்தை சுற்றி அலையும் வண்டுகள் என்றும் அந்த முன்னோரை மலம் என்றும் அதைப் பற்றி  பெருமை அடிப்பது அந்த மலத்தை மூக்கால் உருட்டிச் செல்வது என்றும் இகழ்ந்துள்ளார்கள்
)والحاصل أنه صلى الله عليه وسلم شبه المفتخرين بآبائهم الذين ماتوا في الجاهلية بالجعل , وآباءهم المفتخر بهم بالعذرة , ونفس افتخارهم بهم بالدهدهة بالأنف ,(

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ فَتْحِ مَكَّةَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَتَعَاظُمَهَا بِآبَائِهَا فَالنَّاسُ رَجُلَانِ بَرٌّ تَقِيٌّ كَرِيمٌ عَلَى اللَّهِ وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللَّهِ وَالنَّاسُ بَنُو آدَمَ وَخَلَقَ اللَّهُ آدَمَ مِنْ تُرَابٍ قَالَ اللَّهُ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ - - ترمذي -3193

முஸ்லிம்களைப் பெருத்தவரை குழுப் பெயர்களையும் இனப் பெயர்களை அடையாளத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர அகந்தைக்கு பயன் படுத்திக் கொள்ளக் கூடாது. ஏற்றத் தாழ்வு காட்டக் கூடாது. ( இப்போது சிலர் அப்படி செய்கிறார்கள் அவர்கள் இஸ்லாமின் அவாவிற்கு எதிரானவர்களாகும்.)

கருப்பியின் மகனே என்று பிலால் ரலி அழைத்த உயர் குலத்தவரான அபூதர் (ரலி) அவர்களை பெருமானார் கடிந்து கொண்டார்கள்
إنك إمرأ فيك جاهلية

பெருமானார் (ஸல்) அவர்கள் அரபு நாட்டின் உயர் குடும்பமான தன்னுடைய  குடும்பத்தில் ஒருவராக எங்கோ பிறந்த சல்மானுல்  பார்ஸி (ரலி) அவர்களை சேர்ர்த்துக் கொண்டார்கள்.  

மரியாதைக்குரியது செயல் தான் என்பதை உணர்த்தினார்கள்

பெருமானாரின் அற்புதமான பொன்மொழியை மற்ந்து விடக் கூடாது.
من يبطأ به عمله لم يسرع به نسبه
எவ்னை அவனது செயல் பின்னுக்குத் தள்ளி விடுகிறதோ அவனை அவனது குடும்ப்ப் பெறுமை முன்னுக்கு கொண்டு வராது

இந்தியாவில் நடைமுறையில் இருக்கிற ஜாதியம் இஸ்லாத்தில் இல்லை.  முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜாதிய வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் எங்கும் பார்க்கப் படுவதில்லை. பார்க்க கூடாது. இந்தப் பெயர்கள் சில குறிப்பிட்ட பேச்சு வழக்கு கலாச்சாரங்களின் அடையாளமாகத்தான் இருக்கின்றன. அப்படி ஒரு அடையாளம் இருப்பதில் தவறில்லை.

அந்த வகையில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அவர்களது பாரம்பரிய வசிப்பிடங்கள் தொழில்கள் பேச்சு மொழிகள் தொடர்பான சில பெயர்கள் இருக்கின்றன.

தற்போது சாதிவாரியான கணக்கெடுப்பின் போது அந்தப் பெயர்களை அடையாளத்திற்கு பயன்படுத்துவதில் தவறில்லை.

ஒரு முக்கிய வேண்டுகோள்
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்

1)
ஷேக்,
2)
சையது,
3)
தக்னி முஸ்லிம்
4)
அன்சார்,
5)
தூதுகோலா
6)
லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
7)
மாப்பிள்ளா

என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும். இது தவிர வேறு பெயர்களை சொல்ல வேண்டாம்

உங்களது சாதி என்று கேட்கப்படும் போது சாதியா அது என்ன? என்று என்று விழிக்கிற நிலையில் தான் இந்திய முஸ்லிம் இளைய சமுதாயம் இருக்கிறது. இது அல்லாஹ்வின் கிருபையே! என்னும் உங்களது சாதி என்று கேட்கும் போது சாதி எல்லாம் இல்லை என்று சொல்லி விடாமல் லெப்பை அல்லது தக்னி என்ற சொற்களை மட்டும் பயன்படுத்துங்கள் தேவையற்ற உட்பிரிவுகள் பயன்படுத்த வேண்டாம்.  

பெயர்களை சரியாக திருத்தமான உச்சரிப்புடன் சொல்லுங்கள். பட்டப் பெயர்களை அல்லது செல்லப் பெய்ர்களைச் சொல்லாதீர்கள். பெண்கள் ஒரு தாளில் சரியாக எழுதி வைத்திருந்து கணக்கெடுப்பாளர்கள் வரும் போது அதை காட்டலாம். 

தோராயமாக வயதை சொல்லாமல் சரியான வயதை சொல்லுங்கள். 

அதே போல வருமானத்த்தை பற்றிய தகவல்களை வழங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்கு குறைவாக இருப்ப்வர்களுக்குத்தான் அரசின் ஏழைகளுக்குரிய சலுகைகள் கிடைக்கும்.  தற்போது அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீத இடம் ஏழைகளுக்கு ஒதுக்கப் படவேண்டும் என உத்தரவிடப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment