يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ
وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ(8)
சமீபத்தில் – அதாவது 2012 பிப்ரவரி 22 ம்
தேதி ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பெக்ராம் விமானப்படை தளத்தில் திருக்குர் ஆனின் பிரதிகள் எரிக்கப் பட்டன என்ற செய்தி உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களை ஆத்திரப் பட
வைத்தது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை தளங்களில் உள்ள பெரிய தளமாகும் இது. இங்கு தாலிபான்கள் அல்காயிதா உறுப்பினர்கள் என்ற குற்றச் சாட்டில் நூற்றுக்கணக்கானோர் சிறை வைக்கப் பட்டுள்ளார்கள். அங்கிருந்த நூலகம் ஒன்றிலிருந்த திருக்குர் ஆன் பிரதிகள் தீவைக்க அனுப்பப் பட்டன.
கமாண்டர் ஜான் ஆலன் இதற்கான காரணம் கூறும் போது அந்நூற்கள் அடிப்படைவாதிகள் தமது கருத்தை பரிமாறிக் கொள்வதறு பயன்பட்ட்தாக கூறினார்.
John R. Allen, commander of ISAF and US forces in
Afghanistan,[5]
said the books were taken from the library that is used by inmates at the
detention facility. He said the religious material was removed from the library
due to the presence of "extremist inscriptions" on them, further
noting "an appearance that these documents were being used to facilitate
extremist communications
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆபாக்னிஸ்தானில் கடும் போராட்டங்கள் நடை பெற்றன. ஆர்ப்பாட்டத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர். 270 பே காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையை சார்ந்த ஒரு வீர்ர் ஆமெரிக்க படை வீர்ர்களை நோக்கி சுட்ட்த்தில் 4 பேர் கொல்லப் பட்டனர். 55 மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜலாலாபாத் விமான நிலையம் தாக்க்கப் பட்டது. அதிலும் பலர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கண்டன்ங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடை பெற்றன.
இதற்கு முன் இரட்டை கோபுரத் தாக்குதலின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்ட சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தைச் சேர்ந்த இவாஞ்சலிஸ்ட் பாதிரியான டெர்ரி ஜோன்ஸ் Terry
Jones செப்டம்பர் 11 ம் தேதி குர் ஆனை எரிக்கப் போவதாக அறிவித்தார்.
கிருத்துவ சமுதாயம் உடை உடுத்துவதிலும் பேச்சு வார்த்தையிலும் நாகரீகம் காட்டினாலும் அது பண்பாட்டிலோ கலாச்சாரத்திலோ நாகரீகமான சமுதாயம் அல்ல. கிருத்துவ மிஷினரி அமைப்புக்களில் பெரும்பாலானவை காசு சம்பாதிப்பதில் குறியானவை. அற்பமான விளம்பர வேட்கை கொண்டவை. என்வே அவர்களிடமிருந்து இத்தகைய நட்வடிக்கைகள் எதிர்பார்க்கப் படக் கூடியதே!
அமெரிக்க அரசும், அமெரிக்க ஊடகங்கள் பலவும் ஏதோ அவர்களெல்லாம் ரொம்ப பண்பானவர்கள் என்பது போல இந்த திட்ட்த்தை தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும் இது பக்குமற்ற செயல் எனவும் விமர்ச்சித்துள்ளனர். இந்த விசயத்தில் உண்மையான அக்கறை அவர்களுக்கு இருந்திருக்கும் என்றால் டெர்ரி ஜோன்ஸை மத நிந்தனை சட்ட்த்தில் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் இரட்டை வேடம் போடுகிற அமெரிக்க அரசோ அவருடன் பேச்சு வார்த்தை நட்த்தி திட்ட்த்தை கைவிடச் செய்த்து.
இந்தப் பரபரப்பிலும் திருக்குரான் தனது வெற்றிக் கொடியை நிலை நாட்டிக் கொண்ட்து. திருக்குர் ஆனின் பிரதிகள் எரிக்கப் படாமல் காப்பாற்றியதில் அல்ல. பைபிளின் பிரதிகள் எரிக்கப் படாமல் காப்பாற்றியதில்.
இது போன்ற உணர்ச்சி மயமான விசயங்களில் ஒரு உடனடி பதிலடியாக ஏராளமான பைபிள்கள் எரிக்கப் பட்டிருக்க வாய்ப்பிருந்த்து, ஆக்ரோஷமான எதிர்ப்பை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அல்லது இந்தோனேஷியாவில் இலவ்சமாக விநியோகிக்கப் படுகிற பைபிள் பிரதிகளை ஒரு சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு வந்து தீ வைத்து விடுவதில் முஸ்லிம்களுக்கு பெரிய சிரம்ம் எதுவும் இருக்கப் போவதில்லை, ஆனால் அப்படி நடைபெற வில்லை. காரணம் அவ்வாறு செய்யக் கூடாதென திருக்குர் ஆன் அவர்களைத் தடுத்துள்ளது.
وَلَا
تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ
عِلْمٍ كَذَلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَى رَبِّهِمْ مَرْجِعُهُمْ
فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ (6:108)
பிற மத்த்தவரின் வழிபாட்டு உரிமைகளை மதிப்பதிலும் அவர்களது கடவுள் நம்பிக்கையை காயப்படுத்தாமல் நடந்து கொள்வதிலும் இஸ்லாத்திற்கு திருக்குர் ஆனுக்கும் நிகராக இன்னொன்றை சொல்ல முடியாது.
இஸ்லாம் கூறும் ஏக தெய்வக் கொள்கைக்கு எதிரானவர்களை விமர்ச்சிப்பதிலும் அவர்களிடம் வாதம் புரிவதிலும் திருக்குரானுக்கும் இஸ்லாமிற்கும் தனித்துவம் மிக்க ஒரு அணுகுமுறை உண்டு.
(உதாரணமாக)
قُلْ إِنْ كَانَتْ لَكُمْ
الدَّارُ الْآخِرَةُ عِنْدَ اللَّهِ خَالِصَةً مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوْا الْمَوْتَ
إِنْ كُنتُمْ صَادِقِينَ
எதிர்ப்பாளர்களின் நியாய உணர்ச்சியை கிளறிவிடுவதும் அவர்களை கேள்வி கேட்பதுமே திருக்குரானிய அணுகு முறையாகும். அவர்களை காயப் படுத்துவது அல்ல. காரணம் திருக்குர் மக்களை தன் வயம் ஈர்ர்க்க முயற்சி செய்கிறதே தவிர அவர்களை கோப்ப்படுத்துவதற்கு அல்ல.
அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் பைபிளின் பிரதிகள் எரிக்கப் படாமல் திருக்குர் ஆன் பாதுகாத்த்து.
டெர்ரி ஜோன்ஸும்
அவரைப் போன்ற கிருத்துவர்களும் திருக்குரானைப் பற்றி அணுஅளவேணும் அறிந்திருப்பாரானல் இத்தகைய தீயதொரு சிந்தனை அவருக்கு ஏற்பட்டிருக்கவே செய்யாது.
இறைத்தூதர் ஏசுவையும் அவரது தாய் மரியாளையும் மதித்து புகந்து பாராட்டியதிலும் அவர்களது வாழ்வின் புனித்த்துவத்தை பிரகடனப் படுத்தியதில் பைப்பிளைவிட அதிகப் பங்கு வகிக்கிறது திருக்குர் ஆன்.
திருக்குரானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயார் பெயரிலோ அல்லது அவரது மனைவியரின் பெயரிலோ அல்லது அன்னார்ர்து அருமைப் புதல்விகளின் பெய்ரிலோ குறிப்பிட்டு எந்த செய்தியும் சொல்லப் படவில்லை, ஆனால் அன்னை மரியாளின் புனித்த்துவத்தை நிரூபிக்கும் வகையில் அவரது பெயர் குரானில் இடம் பெற்றுள்ளது, திருக்குர் ஆனில் கூறப் பட்டுள்ள்ள ஒரே பெண்மணியின் பெயர் மரியாளுடையது தான். மர்யம் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் திருக்குரானில் இடம் பெற்றுள்ளது. ஏசு வின் குடும்பத்தை குறிப்பிடும் வகையில் அவரது பாட்டன் இம்ரானை குறிப்பிட்டு அவரது குடும்பத்தின் வரலாறு இமரானின் குடும்பம் என்ற தலைப்பிலும் ஒரு அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது,
மனிதாபிமானத்தைப் போற்றுவதிலும் திருக்குர் ஆனுக்கு நிகராக இன்னொரு வேதம் இல்லை. ஒரு மனிதனை அநியாயமாக கொலை செய்வது முழுமனித சமூகத்தையும் கொலை செய்வது போல ஒரு உயிரைக் காப்பாற்றுவது முழு மனித சமூகத்தையும் காப்பாற்றுவது போல என்று திருக்குர் ஆன் கூறுகிறது.(5:32)
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ
فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا
أَحْيَا النَّاسَ جَمِيعًا
நீதியில் ஜாதி பார்க்காமால் “ மனிதர்களுக்கிடையே நீதமாக தீர்ப்புச் செய்வீர் (4: 58) எனறே திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ
أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ
أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ
كَانَ سَمِيعًا بَصِيرًا
ஒரு யூதனைக் கொல்வது பத்து பிற ஜாதிக்கார்ர்களை கொல்வது போல என்கிறது யூத நீதி. இதோடு திருக்குரானின் நீதியை ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் டெர்ரி ஜோன்ஸ் இத்தைகைதொரு அவலட்சனமான தொரு சிந்தனைக்கு ஆட்பட்டிருக்க மாட்டார்.
என்ன செய்வது? விதி டெர்ரி ஜோன்ஸை அமெரிக்க
விர்ர்களையும் திருகுர் ஆனை எரிக்கச் சொன்ன இழிவான மனிதர்களின் பட்டியலில் இடம் பெற் வைத்து விட்ட்து,
ஆனால் திருக்குர் ஆனைப் பொறுத்தவரை இத்தகைய எதிர்ப்புக்கள் எதுவும் அதற்கு புதிதல்ல.
குரானின் புரட்சிக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்று சபதமேற்று கையில் உறுவிய வாளோடு வந்த உமர்
(ரலி) குர் ஆனிய வசன்ங்களால் ஈர்க்கப் பட்டு அதன் காவலர்களில் ஒருவரானார் என்பது தான் வரலாறு. அந்த வரலாறு நின்று போன கடிகாரம் அல்ல். இன்றும் உயிர்போடு சுற்றிக் கொண்டிருக்கிற வரலாராகும். இன்றும் பன்னூற்றுக் க்ணக்கானோர் திருக்குர்ஆனைப் படித்து அதன் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு இஸ்லாமிற்குள் நுழைந் கொண்டிருக்கின்றனர்.
சிங்கப் பூருக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு ஆஸ்திரேலிய முதியவர், அங்குள்ள தேசிய நூலகத்தில் ஏதேச்சையாக திருகுரானின் மொழி பெய்ர்பை படித்து விட்டு உடனடியாக இஸ்லாத்தை தழுவினார்
இன்று
முஸ்லிம்களின் வாழ்க்கைப் போங்கு இஸ்லாத்தின் அளவில் மக்களை ஈர்க்கிற சிறப்பை இழந்து விட்ட சூழ்நிலையில் திருக்குர் ஆன் வெற்றிகரமாக மக்களை தன் பக்கம் ஈர்த்துவருகிறது.
தன்னை எதிர்ப்பவர்க்ளை அழிப்பதை அல்ல; ஆட்கொள்வதையே தனது வெற்றியாக திருக்குர் ஆன் சங்கல்பித்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயே எதிர்களை அது எளிதாக வாகை சூடிவிடுகிறது.
திருக்குரானை ஏசிப்பேச்ப்வர்களை கண்டால் அதற்கு எதிராக திட்டமிடுபவ்ர்களை கண்டால் திருக்குரானின் இந்த ஆற்றலை முஸ்லிம்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதுமானது. அவர்கள் நிதானமடையக் கூடும்.
எனவே திருக்குர் ஆனை அல்லது அதன் மரியாதையை காப்பாற்றுவதில் முஸ்லிம்கள் அதிகப் பட்ச உணர்ச்சிகளுக்கு ஆளாகத் தேவையில்லை.
அதற்கு பதிலாக குர் ஆணை தங்களது வாழ்க்கையில் ஏந்திப் பிடிக்க அவர்கள் அதிக அக்க்றை எடுத்துக் கொண்டால் போதுமானது. அது அவர்களை எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கும்.
வங்கதேசத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான மொளலன ஏ.கே பஜ்லுல் ஹக் ஒரு தில்லி ரயில் நிலையத்திலிருந்து ரயிலி புறப்பட்டார். சில மணி நேரங்களில் ரயில் குண்டு வைத்து தகர்கப் பட்ட்து. வங்க மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரத்தில் வங்க வானொலி ஆச்சரியான ஒரு அறிவிப்பை வெள்யிட்ட்து. மௌலானா பஜ்லுல் ஹக் மாலை அசெம்பளி திடலில் பேசுகிறார் என்று கூறியது. மக்கள் பெருமளவில் திரண்டனர். மௌலானா பஜ்லுல் ஹக் மேடையில் தோன்றினார். மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பஜ்லுல் ஹக் பேசினார்.
“என்னைக் கொல்வதற்கா நான் பயணம் செய்த ரயிலைத் தகர்க்க சதிகாரர்கள் திட்ட மிட்டுள்ளனர். தில்லி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி உட்கார்ந்த நான் வழக்கப் படி நான் எடுத்து வருகிற குர் ஆன் ஷரீபை எடுத்து வராதைதை கடைசி நேரத்தில் கவனித்தேன். பயணத்தில் குர் ஆன் ஓதும் பழக்கம் கொண்ட எனக்கு குர் ஆன் ஷரீப் இல்லாமல் பயணம் செய்ய மனம் வரவில்லை. அதனால் கடைசி நேரத்தில் ரயிலிருந்து இறங்கி விட்டேன். அல்லாஹ் என்னை காப்பாற்றினான். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எதிர்களுக்கு ஒன்று சொல்வேன்; அல்லாஹ் நாடினால் தவிர எந்த உயிரையும் யாரும் பறித்து விட முடியாது. முஸ்லிம்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். குர் ஆனை கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள் காப்பாற்ப்படுவீர்கள்.”என்றார்.
குரான் தன்னந்தனியாகவே உலகை வெல்லும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல குர் ஆனை கைகொண்டால் போதுமானது.
உமர் (ரலி) அவர்கள், மக்காவின் ஆளுநராக நாபிஉ பின் அப்தில் ஹாரித் என்பவரை நியமித்திருந்தார். அந்த ஆளுநர் தன்னுடைய ஒரு பிரதான அதிகாரியாக இப்னு ஹபஸீ என்ற நீக்ரோ அடிமையை நியமித்திருந்தார். ஒரு அடிமையை ஏன் பிரதான அதிகாரியாக நியமித்தீர் என்று ஆளுநரைக் உமர் (ரலி) கேட்டார். “அவருக்கு திருக்குர் ஆனைப் பற்றிய ஞானம் நிறைய இருந்த்து. அதனால் தான் அவரை நியமித்தேன்” என்றார் ஆளூநர். தனது இருப்பிட்த்திற்கு திரும்பிய உமர் (ரலி) அவர்கள் தன்னை சுற்றி இருந்த மக்களிடம் இந்த விசயத்தைச் சொல்லி “அல்லாஹ் இந்தக் குர் ஆனின் மூலம் மக்களின் அந்தஸ்தை உயர்த்துகிறான்” என்று சொன்னார். .
குர் ஆன் எரிக்கப் படுவது போன்ற அறிவிப்புக்கள் வெளிவருகிற போது அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் முஸ்லிம்களுக்கு ஒரு மாற்றுப் பார்வையை கற்றுத்தந்திருகிறது. எதிர்ப்பும் ஏளனமும் பெருகுகிற சந்தர்ப்பத்தில் வெற்றிக்கான வாய்ப்பை அவர்கள் தேட வேண்டும்.
இஸ்லாமின் வரலாற்று நாயகர்கள் இஸ்லம் கற்றுக் கொடுத்த இயல்பின் படி வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார்கள்.
காதிஸியா போரின் போது முஸ்லிம்கள் அன்றைய வல்லரசான பாரசீகப் பேரரசின் பெரும் படையை சந்தித்தார்கள். பாரசீக்படைத் தளபதி ருஸ்தும் முஸ்லிகளை பேச்சுவார்த்தக்கு தன் கூடாரத்திற்கு அழைத்தான். ஆடம்பரமான அந்தக் கூடாரத்திற்குள் பஞ்சப் பராரிகளின் தோற்றத்திலிருந்த முஸ்லிம்கள் நுழைந்தார்கள். ருஸ்துமிற்கு சிரிப்பும் ஆத்திரமும் ஒரு சேர வ்ந்த்து. உங்களுக்கு பாரசீகம் வேண்டுமா? இந்தா இங்கே வா! என்று ஒரு நபித்தோழரை அழைத்தான். ஒரு கூடையில் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு இந்தா! இதை எடுத்துக் கொண்டு போ! இல்லை எனில் உங்கள அனைவரையும் காதிஸிய்யாவில் புதைத்துப் போடுவேன். என்று சொல்லி அவர் தலை மீது மண் கூடையை ஏற்றினான்.
தலையில் மண்ணைச் சுமந்த அந்த நபித் தோழர் மகிழ்ச்சியோடு பாரசீகத்தின் வெற்றி கிடைத்து விட்ட்து என்று கூவியபடி அந்த இட்த்திலிருந்து வெளியேறினார். இந்தச் செய்தி பாரசீக மன்ன்னின் சபையை எட்டிய போது அங்கிருந்த ராஜாங்க அதிகாரிகள் அதிக வருத்தமுற்றனர். ருஸ்துமின் செய்கையை பெரிய துர்ச்சகுனமாக கருதினர். அரசனின் மூத்த ஆலோசகர் “ ருஸ்தும் பாரசீகத்தை அரபிகளுக்கு கொடுத்துவிட்டார்” என்று சொன்னார். அந்த சபை ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான அடையாளத்தை உணர்ந்து கொண்ட்து.
முஸ்லிம்களும் தங்களது ப்லவீனமான நிலையிலும் வெற்றிக்கான அறிகுறியை அறீந்து கொண்டனர்.
இந்த ஆழிய பார்வை இன்றயை முஸ்லிம்களுக்கு அதிகம் தேவைப் படுகிறது. ஆத்திரமூட்ட்ப் படுகிற எந்தச் சூழ்நிலையிலும் தங்களது வெற்றிக்கான வாய்ப்புக்களை தேடிக் கொள்ள அவர்கள் பண்படுத்தப் பட்டிருக்கிறார்கள்,
திருக்குர் ஆன் எரிப்பு அறிவிப்பும் அப்படித்தான். ஆத்திரப்படுவதை விட அறிவார்த்தமாக யோசிக்கிற சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது,
இப்போது திருக்குரானுக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் அமெரிக்காவிலேயே அதிகரித்திருக்கிறார்கள். எரிக்கச் சொன்னவனுக்கு எதிராக நிறை ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடை பெற்றன. அவருக்கு ஏராளமான் கண்டன்ங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. இதற்கிடையே நம்முடை கவனத்தை கவர்கிற ஒரு வாசகத்தை ஒரு அமெரிக்கப் பெண்மணி கூறுகிறார்:
Let us know the quraan. What
is it. குர் ஆன் என்ன சொல்கிறது என்ற் அறிந்து கொள்ள வழி விடுங்கள்.
வெற்றிக் கொடு நாட்ட இது போதாதா குர்ஆனுக்கு?
hazarath mika arumayaka irukkirathu
ReplyDeletehazarath mika arumayaka irukkirathu
ReplyDelete