الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِي يَاأُوْلِي الْأَلْبَابِ(197) البقرة
ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன,
மாநில அரசின் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்ல விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
· The last date of submission of Hajj application forms through state hajj committee has been extended from April 16 to 25. The decision to extend the date was taken to abide to the condition of submitting a copy of the passport along with the application and many still awaiting for their passports.
முஸ்லிம் மஹல்லாக்கள் தோறும் ஹஜ் விண்ணப் பங்கள் கிடைக்கின்றன ஹஜ் கடமையானவர்கள் காலத்தை ஒத்திப்போடாது ஹஜ்ஜுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.
ஹஜ் என்ற வார்த்தைக்கு மக்கா நகரிலுள்ள கஃபா ஆலயத்திலும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக பயணித்தல் என்பது பொருள்.
ஹஜ் இஸ்லாமின் கட்டாய கடமைகளில் ஒன்று .
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ ثُمَّ قَالَ ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ – مسلم 2380
شروط فرضية الحج
1. الأسلام
2. العقل
3. البلوغ - عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَفَعَتْ امْرَأَةٌ صَبِيًّا لَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلِهَذَا حَجٌّ قَالَ نَعَمْ وَلَكِ أَجْرٌ – مسلم 2378
4. الإستطاعة - ولله علي الناس حج البيت من استطاع إليه سبيلا
عَنْ ابْنِ عُمَرَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ – ترمذي 741
பொருளாதார வசதி இருந்து உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் இன்னொருவர் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ جَاءَتْ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ نَعَمْ
பொருளாரத வசதியற்றவர்கள் ஹஜ் செய்ய முடியவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை.
· பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சட்ட அறிஞர் ஷைகு ஆதம்( ரஹ்) அவர்கள் பாக்கியாத்தின் முதல்வராக இருந்தார். ஹஜ் செய்திருக்கவில்லை. அதைப் பெரிதாக கருதிய பலரும் ஹஜ்ரத்திடம் “ நீங்கள் ஹஜ் செய்யாமல் இருப்பது பொருத்தமல்ல; நாங்கள் வச்தி செய்து தருகிறோம் சென்று வாருங்கள் என்று கூறுவர்.
ஹஜ்ரத் அவர்கள் ஒரே வார்த்தையி பதில் சொல்லி விடுவார்கள் : என் மீது ஹ்ஜ் கடமையாக வில்லை.
அன்னாரது 90 வயதில் சொந்த ஊரில் இருந்த ஒரு வீடு விற்றதில் பணம் வந்த போது தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு ஹஜ் செய்தார்கள்.
ஹஜ்ஜுக்காக சேமித்து வைக்கலாம்
காசி நகரில் பட்டு நெசவு செய்யும் பணியில் நிறைய் முஸ்லிம் இளம் பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களது தறிகளுக்கு முன்னாள் ஒரு உண்டியல் வைத்துள்ளார்கள். அதில் பணம் சேர்க்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஹஜ் செய்து விடுவதற்காக.
ஹஜ் செய்பவர் முதலில் தன் மீது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شُبْرُمَةُ قَالَ قَرِيبٌ لِي قَالَ هَلْ حَجَجْتَ قَطُّ قَالَ لَا قَالَ فَاجْعَلْ هَذِهِ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ 2903
பெண்கள் மஹ்ரமுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும்
இன்றைய சூழலில் ஹஜ் மீதுள்ள மோகத்தின் காரணமாக மஹ்ரமில்லமல் பெண்கள் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். ஹஜ் சர்வீஸ்கார்ர்கள் மஹ்ரமை ஜோடனை செய்கிறார்கள். இது தவிர்க்கப் பட் வேண்டும்.
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ البخاري 1086
ஹஜ் கடமையாகி விட்டால் உடனடியாக நிறைவேற்றி விட வேண்டும்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرَادَ الْحَجَّ فَلْيَتَعَجَّلْ فَإِنَّهُ قَدْ يَمْرَضُ الْمَرِيضُ وَتَضِلُّ الضَّالَّةُ وَتَعْرِضُ الْحَاجَةُ - إبن ماجة 2874
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلُوا إِلَى الْحَجِّ يَعْنِي الْفَرِيضَةَ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ – احمد 2721
ஹஜ்ஜின் சிறப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ - البخاري 26
பெண்களின் ஜிஹாது ஹஜ்
عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ نَرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ أَفَلَا نُجَاهِدُ قَالَ لَا لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ- البخاري 1520
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ – البخاري 1521
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ– البخاري1773
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ - ترمذي 738
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ – النسائي 2578
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ الْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ وَإِنْ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ – إبن ماجة 2883
ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர்.
عن أَبي هُرَيْرَةَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ - النسائي
அல்லா நாடியவர்களுக்கு மட்டுமே இந்த தூதுக்குழ்வில் இடம் கிடைக்கிறது.
· முகலாய மன்னர்களுக்கு ஹஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்க வில்லை
· இப்போதும் பல கோடீஸ்வர்ர்கள் ஹஜ் செய்ய முடியவில்லை
அல்லாஹ்வின் தூதுக்குழுவில் சீக்கிரமாக இணைந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். நாட்களை தள்ளிப்போடுவதால் அந்த பாக்கியம் கிடைக்காமல் போய்விடக் கூடாது
ஹஜ் கடமையை நிறவேற்றாவிட்டால் ?
عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا – ترمذي 740
உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் :
· ஊருக்குள் சிலரை அனுப்பி வைத்து, ஹஜ் க்டமையான பின்னரும் ஹஜ்ஜுக்கு செல்லாமல் யாராவது பின் தங்கியிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள நினைக்கிறேன். ஒருவேளை அப்படி செல்லாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் மீது (காபிர்களிடம் வசூலிக்கப்படுகிற) ஜிஸ்யா வரியை விதிக்க நினைக்கிறேன். ஏனேனெனில் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல – صححه إبن حجر في الكبائر
ஒரு காலத்தில் அதிக சிரமத்தை எடுத்து ஹஜ் செய்ய சிலர் முயற்சி செய்தனர். இஸ்லாம் அதை தேவையில்லை என்றது.
இரண்டு பேருடை தோள் மீது தாங்கலாக ஒருவர் வந்தார்.
عَنْ أَنَسٍ قَالَ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ مَا هَذَا قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ إِلَى بَيْتِ اللَّهِ قَالَ إِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ مُرْهُ فَلْيَرْكَبْ - النسائي 3792
பழங்காலத்து அரபிகள் ஹஜ்ஜுக்கு வரும் போது உணவுப் பொருளை எடுத்துவருவதை பொருத்தமற்றதாக தவக்குலுக்கு எதிரானதாக கருதினர். திருக்குர் ஆன் கூறியது.
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِي يَاأُوْلِي الْأَلْبَاب – البقرة 198ِ
தேவையான சவுகரியங்களை அனுபவித்துக் கொள்ள பெருமானார் (ஸல்) அனுமதித்தர்கள்.
· ஹஜ்ஜில் குர்பானிக்காக கொண்டு வருகிற ஒட்டகத்தில் சவாரி செய்து கொள்ள பெருமானார் அனுமதித்தார்கள்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ لَهُ ارْكَبْهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ قَالَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ ارْكَبْهَا وَيْلَكَ أَوْ وَيْحَكَ - البخاري 2754
ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை ஜரூராக கவனிக்கிற போது தக்வா தான் சிறந்த ஏற்பாடு என்பதை கவனித்தில் கொள்க!
உல்லாசமாக ஹஜ் செய்ய வேண்டும் என்ற மக்களின் ஆசை தான் ஹஜ் சர்வீஸ் காரர்கள் மக்களை கொள்ளையடிப்பதற்கு முக்கிய காரணமாகும்.
ஹஜ் இன்றைய காலத்தில் மிகப பெரிய பணக்கார்ர்களின் கடமையாக மாறி வருகிறது.
ஒரு ஹாஜிக்கு 50 ஆயிரம் ரூபாய இலாபம் என்ற் இலக்கோடு பெரிய ஹஜ் சர்வீஸ்கள் இயங்குவதற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. மக்களின் சுகபோக சிந்தனையும் ஒரு காரணமாகும்.
ஹஜ்ஜில் மக்களோடு மக்களாக இருக்க! தாங்கிக் கொள்ள முடிந்த சிரமங்களை ஏற்றுக் கொள்ளும் மனோ உணர்வை வளர்த்து க் கொள்ளுங்கள்.
ஹஜ் அல்லாஹ்வின் அருளை தேடிச் செல்கிற ஒரு பயணமாகும்.
அது பொருள் வசதி படைத்தவர்கள் மீது கடமை என்றாலும். பொருள் வசதியினால மட்டுமே அந்த பாக்கியத்தை முழுமையாக பெற முடியும் என்று இறுமாந்து இருந்துவிடாமல் فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى என்பதை நினைவில் வைத்து க்கொள்ளுங்கள்.
அது பொருள் வசதி படைத்தவர்கள் மீது கடமை என்றாலும். பொருள் வசதியினால மட்டுமே அந்த பாக்கியத்தை முழுமையாக பெற முடியும் என்று இறுமாந்து இருந்துவிடாமல் فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى என்பதை நினைவில் வைத்து க்கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஒரு முறைக்கு பல முறை ஹஜ் செய்யக்கூடிய வாய்ப்பை தந்தருள் புரிவானாக!
No comments:
Post a Comment