வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 27, 2012

முஸ்லிம் பயனுள்ள மனிதர்


முஸ்லிம் ஒரு பயனுள்ள மனிதர்.
அந்தப் பயன் எந்த அளவு உயர்வானது என்பதற்கு பெருமானார் சொன்ன உதாரணம். பேரீத்த மரம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ فَحَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ هِيَ النَّخْلَةُ

வெள்ளிரிப் பிஞ்சுமுத்தினால் பயனில்லை
பாவக்காய்- பழுத்தால் நல்லதில்லை
மாம்பழம் பழம்காய்ந்து போனால் உதவாது.

பேரீத்த மரம்  எல்லா நிலையிலும் வகையிலும் பயன்.
பிஞ்சு, காய், பழம் மரம் மட்டை

بركة المسلم عامة في جميع الأحوال , ونفعه مستمر له ولغيره حتى بعد موته
وشبه النخلة بالمسلم في كثرة خيرها , ودوام ظلها , وطيب ثمرها , ووجوده على الدوام , فإنه من حين يطلع ثمرها لا يزال يؤكل منه حتى ييبس , وبعد أن ييبس يتخذ منه منافع كثيرة , ومن خشبها وورقها وأغصانها , فيستعمل جذوعا وحطبا وعصيا ومخاصر وحصرا وحبالا وأواني وغير ذلك , ثم آخر شيء منها نواها , وينتفع به علفا للإبل

பேரீத்தம் பழத்தின் கொட்டை ஒட்டகைகளுக்கு உணவாக பயன்படுகிறது.

முஸ்லிம் அந்த அளவு பயனுள்ளவராக இருக்க வேண்டும் என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

அதனாலாயே எந்த சிறு நல்லகாரியத்தையும் அலட்சியமாக விட்டு விடக்கூடாது என்று சமுதாயத்திற்கு பழக்கப் படுத்தினார்கள்.

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحْقِرَنَّ أَحَدُكُمْ شَيْئًا مِنْ الْمَعْرُوفِ وَإِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ أَخَاهُ بِوَجْهٍ طَلِيقٍ وَإِنْ اشْتَرَيْتَ لَحْمًا أَوْ طَبَخْتَ قِدْرًا فَأَكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ -  ترمذي 1756 

சாலையில் கிடக்கும் சிறு இடையூறை அகற்றுவது ஈமானின் ஒரு அம்சமாக சொல்லப்பட்டது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ-  مسلم- 51  

இந்த நபி மொழியின் தாக்கம் அலாதியானது. முஸ்லிம் சமுதாயத்தைப் பக்குவப்படுத்தியதிலும் நாகரீகப்படுத்தியதிலும் மிகப் பெரிய பங்கு வகித்தது.

சாலையில் வாழைப்பழத்தோல் ஒன்று கிடக்கிறது என்றால் அதைப் பார்த்துக்கொண்டே நகர்ந்து விட ஒரு முஸ்லிமை அவருடைய மனசாட்சி விடாது.

இதில் இன்னொரு முக்கிய அம்சம்.
முஸ்லிம் வாழைப்பழத்தோலை சாலையில் போட மாட்டார்.

எவ்வளவு உன்னதமான தனி மனிதக் கோட்பாட்டை பெருமானார் பழக்கப் படுத்தினார்கள்.

முந்தைய முஸ்லிம்கள் நன்மைகான வழிகளை தேடித்தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள்.  சிரியாவைச் சார்ந்த தாபிஃ ஹஸ்ஸான் பின் அதிய்யாவைப் பாருங்கள்.  

عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعُونَ خَصْلَةً أَعْلَاهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلَامِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِمَاطَةِ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَنَحْوِهِ فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً

இப்படித்தேடித்தேடி நனமை செய்த்துதான் முஸ்லிம்களின் வரலாறு.

சிலுவை யுத்தங்களின் போது முஸ்லிம் நாடுகளை ஆக்ரமித்து அக்கிரமம் செய்த கிருத்துவர்களிடம் சுல்தான சலாஹுத்தீன் அய்யூபி நடந்து கொண்ட விதம். தமது சொந்தக்கார கிருத்துவர்களை விட இந்த முஸ்லிமே மேல் என்று கிருத்துவ உலகம் திரும்பி வந்த்து.

பாலஸ்தீனிலிருந்து  பத்திரமாக வெளியே கிருத்துவர்களுக்கு அனுமதியளித்தார்.
கிருத்துவர்கள் தமது தோல்வியை ஒப்புக் கொண்டதின் அடையாளமாக வெறும் 10 திர்ஹம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என உத்தரவிட்ட அவர். அவர்களில் பல்லாயிரம் பேருக்கான பணத்தை தானே கட்டினார். தன்னைச் சார்ந்தவர்களைக் கட்டச் சொன்னார்.
நடக்க இயலாதவர்களுக்கு கழுதைகளை வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டார்.

பாலஸ்தீனிலிருந்து கிளம்பிய கிருத்துவர்களுக்கு திரிபோலியிலிருந்த கிருத்துவர்கள் அடைக்கலம் தரவில்லை. கோட்டைக் கதவுகளை மூடிக் கொண்டார்கள். பசியோடும் பட்டினியோடும் குழந்தைகளோடும் பெண்களோடும் வந்தவர்களை கேட்டைக்கு வெளியே பரிதவிக்க விட்டார்கள்.
பலர் இறந்து போனார்கள். மீதமிருந்தவர்கள் சுல்தான் சலாஹுத்தீனிடமே செல்வோம் என்று திரும்பி வந்தார்கள். அவர்களுக்கென்றே ஒரு உரை தயார் செய்து கொடுத்தார் அய்யூபி.

இது முஸ்லிம் சமுதாயத்தை முஹம்மது நபி பக்குவப்படுத்திய விதம்,

கிருத்துவ ஐரோப்பிய உலகம் இன்று வரை ஏன் இப்போதும் கூட நெகிழ்ச்சியாக நினைவு கூறுகிற செய்தி இது.  

இப்படித்தான் முஸ்லிம் சமுதாயம் பக்குவப்படுத்தப் பட்டிருந்த்து. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்கள் தங்களது உன்னதமான இயல்புகளால் உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் பலவீனங்களில் ஒரு முக்கிய அம்சம்.

மனித சமூகத்திற்கு நன்மையாக அமைகிற காரியங்களை பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்கிற இயல்பு குறைந்து விட்டது. ஏன் இல்லாமலே போய்விட்ட்து என்று கூட சொல்ல்லாம்.

அன்னதானம் செய்கிற முஸ்லிம்களைக் காணோம். நேர்மையாக நடந்து கொள்கிற முஸ்லிம்களை காணோம். இரக்கப்படுகிற, இனிமையாகப் பேசுகிற, உபகாரம் செய்கிற, உண்மையாக வாழ்கிற முஸ்லிம்களை காணோம்.  

ஒரு சில நல்ல காரியங்களைச் செய்தாலும் அதில் தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கம் அல்லது அமைப்புக்கு பெயர் தேடித்தருவதற்காக செய்கிறார்கள்.

பிரதிபலனை எதிர்பாராமல் எல்லோருக்கும் பொதுவான நல்ல காரியங்களில் உழைக்க முஸ்லிம்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.

فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين(25)


اجر ما سقيت لنا    என்ற வார்த்தையை மூஸா (அலை) விருமவில்லை என்று தப்ஸீர்கள் காட்டுகின்றன. ஏதாவது வேலை கிடைக்கும் என்று தான் அந்தப் பெண் மணீக்குப் பின்னால் சென்றார்கள்.

அந்த இயல்புதான் நிராதவராக இருந்த அவருக்கு அப்போதும் அதற்குப் பின்னரும் பெரும் வெற்றியை தந்தது.

அல்லாஹ் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்வதற்குரிய ஒரு வாய்ப்பை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்.

நமக்கு மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கிறோமே தவிர நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதில்லை.

பள்ளி வாசலுக்கு சென்று  நான் பேன் போடக்கூடாதா? என்று சண்டை போடுகிற நாம், மின்சாரத்திற்கு எவ்வளவு கொடுத்திருப்போம் என்று யோசிப்பதில்லை.

அப்துல்லாபின் ஜைத் வழியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு பாங்கு கிடைத்த்து. அந்த நன்மைக்கு கிடைத்து பலன் என்ன தெரியுமா யார் பாங்கு சொன்னாலும் அப்துல்லாபின் ஜைத் இகாமத் சொல்லலாம்.

பயனுற வாழ்வதற்கான பலன் இது,

நான் ஒரு பயனுள்ள முஸ்லிம் என்று வாழ உறுதியேற்போம்.


No comments:

Post a Comment