வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 01, 2012

கருத்து வேறுபாடுகள்



மார்க் சட்டங்கள் விசயத்தில் இமாம்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காரணம் என்ன என்ற  கேள்வி சிலர்களுக்கு வருகிறது.
இதற்கான பதில் சற்று அக்கறையோடு கவனிக்கத் தகுந்தது. அக்கறையும் கவனமும் ஏன் தேவைப் படுகிறது என்றால் திடீரென முளைத்த அக்கறையில் ஒரு பாஸ்ட் புட் கலாச்சாரத் தின் வேகத்தோடு பலரும் இந்தக் கேள்வியை அனுகியதனால் தான் புள்ளை புடிக்கிறவர்களுக்கு அது வசதியாகிவிட்டது. அந்த விபத்து தொடரக்கூடாது என்றால் கொஞ்சம் நிதானம் அவசியம்.
நாம் ஒரு சூர அல்பகராவை ஒரு மணி நேரத்தில் ஓதி முடித்து விடுகிறோம். உமர் (ரலி) அவர்களோ நான் பகரா அத்தியாயத்தை பயில் ஏழு ஆண்டுகள் பிடித்தது என்கிறார்கள். இந்த நிதானம் மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிக அவசியமாக தேவை. 
இமாம் களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்பாட்டை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால்  இஸ்லாத்தின் அழகையும் இஸ்லாமினுடைய மூலங்களின் அமைப்பையும் அறிந்து கொள்ள முடியாது. பிறகு குயுக்திக் காரர்களின் வலையில் விழ வேண்டியதாகிவிடும்.
இமாம் களுக்கிடையே எற்பட்ட கருத்து வேறுபடுகள் குறித்து அவசரப் பட்டு மாற்றுக் கருத்துக் கொண்ட இளைஞர்கள் பலரும் அக்கருத்து வேறுபாடுகளை விமர்ச்சிக்கும் அளவு தங்களது தகுதியை வளர்த்துக் கொண்டபிறகு தான் அவ்வாறு விமர்சித்தார்களா என்பதை யோசித்துப் பார்த்தால் அவர்கள எப்படி குருடர்களாகவ்ம் செவிடர்களாகவும் தங்களது தவறான வழிகாட்டியிடம் விழுந்து விட்டார்கள் என்ற உண்மை புரியும்  
இமாம்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட இரண்டு பிரதான காரணங்கள் உண்டு  ஒன்று   இஸ்லாமிய சமயத்தின் மூலங்களான குரான் மற்றும் ஹதீஸின் அமைப்பு. இரண்டாவது   மனிதர்களிடம் இயற்கையாக உள்ள சிந்தனை வேறுபாடு.
மூலங்களின் அமைப்பும் சிந்தனை வேறுபாடும்  திருக்குரானோ ஹதீஸோ சட்டங்களை பட்டியலிட்டு பேசுகிற வெறும் சட்ட நூற்கல் அல்ல. அதைத் தாண்டி மனிதர்களை நெறிப்படுத்துகிற விரிந்த நோக்கங்களை கொண்டவை. எனவே சில சட்டங்களை அறுதியிட்டு உறுதியாக தௌவுபடுத்திய போதும்   பல சட்டங்களை கோடிட்டுக் காட்டி மனிதர்களது சிந்தனைத் திறனுக்கு
வழி கொடுத்துச் சென்றன.

மனிதர்களுக்கான ஒரு வழிகாட்டு நூல் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு முதலாளி அறிவுமிக்க தன்னுடைய பணியாளரிடம் சென்னைக்குப் போய் இந்த வேலையை முடித்து விட்டுவா என்று சொல்லி யனுப்புகிற போது தேவையான தகவல்களை மட்டுமே கூறுவார். இங்கிருந்து ரலிலைப் பிடி இந்த மாதிரி உட்காரு இன்ன இடத்தில் இறங்கு  இன்னதைச் சாப்பிடு இப்படித் தேடு என்றெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படிச் சொல்லிக் கொடுத்தால் பணியாளர் கொஞ்சம் பழுதானவர் என்றாகிவிடும். என்வே அறிவுமிக்க மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த திருக்குரானும் நபிமொழிகளும் சிந்தித்து தீர்வு காண்பதற்கேற்ற வகையில் அமைந்திருக்கின்றன. அபப்டிச் சிந்திக்கிற போது நேர்மையாளர்களிடம் அது கருத்து வேறு பாட்டை உண்டு பண்ணினால் அக்கருத்து வேறுபாடு அவர்களின் நேர்மை அறிவுத்திறன் இறையச்சத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத் தகுந்ததே! ஒரு கடையின் கதவு பாதி இறக்கிவிடப் பட்டிருந்தது. அதைப் பார்க்கிற இருவர் இரண்டுவிதமாக சொல்ல வாய்ப்பு உண்டு.  ஒரு நபர் கதவு பாதி மூடியிருக்கிறது என்பார். இன்னொருவர் கதவு பாதி திறந்திருக்கிறது என்பார். இவிவிரண்டு வார்த்தைகளுக்குமிடையே வார்த்தை வித்தியாசம் மட்டும் இல்லை. சிந்தனை வித்தியாசமும் இருக்கிறது  முதலாமவர் சிந்தனையில் இருந்திருகிறார். அதனால் அவருக்கு கதவு பாதி மூடியிருப்பதாக தோன்றுகிறது. இரண்டாமவர் கடை மூடப் பட்டிருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்திருகிறார்.  அதனால் அவருக்கு கதவு பாதி திறந்திருப்பதாக தோன்றுகிறது. இந்தக் கருத்தில் இரண்டையும் சந்தர்ப் பத்திற்கு தகுந்த படி ஏற்றுக் கொள்ளூம். அது போலவே இமாம்களின் கருத்து வேற்பாடுகள் அவர்களது தகுதியின் அடிப்படையிலும் மூலத்தின் அமைப்பின் அடிப்படையிலும் கவனிக்கப் படும் போது அதில் ஆட்சேபனைக்கோ அதிருப்திக்கோ இடம் இருக்காது. மூலங்களில் அமைப்பு குறித்தும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிற விதம் குறித்தும் விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு கணவன் இறந்து விட்டால் அவனது மனைவி இன்னொரு திருமணம் செய்வதற்கு எத்தனை நாள் காத்திருக்க (இத்தா) வேண்டும் என்று சொல்லுகிற திருக்குரானிய வசனம் நான்கு மாதம் பத்து நாட்கள் (2 234) என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறது. என்வே இந்த விசயத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் தலாக் மூலம் விவாகரத்து செய்யப் பட்ட பெண்மணி   இன்னொரு திருமணம் செய்வதற்கு எத்தனை நாள் காத்திருக்க (இத்தா) வேண்டும் என்று சொல்லுகிற திருக்குரானிய வசனம் முன்று குரூஃ காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறது. இதிலுள்ள  குரூஃ எனும் சொல் மாதவிடாய் என்றும் மாதவிடாயுக்கு பிந்திய சுத்தம் என்றும் இருவேறு பட்ட பொரூளை கொண்ட சொல்லாகும். இந்த இடத்தில் நபிமொழியின் வழிகாட்டுதல் ஒரு கருத்தை உறுதிப் படுத்தாத போது  அறிஞர்களிடையே கருத்து வேறு ஏற்பட்டது. இமாம் ஷாபி மாதவிடாயுக்கு பிந்தைய சுத்தம் என்று கருத்துச் சொன்னார்கள். இமாம் அபூஹனீபா மாதவிடாய் என்று கருத்துச் சொன்னார்கள். இந்தக் கருத்து வேற்பாடு வேணுமென்றே நீ இப்படிச் சொன்னால் நான் அப்படிச் சொல்வேன் என்ற வகையில் ஏற்பட்டதல்ல. இமாம் அபூஹனீபா இர்க்கிலுள்ள  கூபா நகரில் இருந்து தனது கருத்தை ஹிஜ்ரீ 150 முன்னாள் சொன்னார்கள் இமாம் ஷாபி மக்காவில் இருந்து கொண்டு ஹிஜ்ரீ 150 க்குப்பின்னால் தனது கருத்தை சொன்னார்கள். குரானிய வசன அமைப்பு இரண்டு கருத்துக்கும் இடமளிப்பதால் இரண்டையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இமாம்களின் பரிசுத்த இறையச்சம் மிகுந்த வாழ்வும் தௌந்த சிந்தனைப் போக்கும் இவ்விரண்டு கருத்துக்களையும் மக்கள் ஏற்கும்படி செய்தன. இவ்விரண்டில் எதைச் செயல் படுத்தினாலும் அது இஸ்லாத்தின் அங்கீகாரத்திக்குரியதே என்ற முடிவுக்கும் பிந்நளைய அறிஞ்ர்கள் வந்தார்கள். இஸ்லாமிய மூலங்களின் இத்தகைய அமைப்பு முறைகளைப் பற்றி ஆய்ந்த பெரும் அறிஞர்கள்   மக்களுக்கு விரிந்த பல தரப்பட்ட் வசதியை ஏற்படுத்தித் தருவதற்காகவே அல்லாஹ்  இவ்வாறு அமைத்துள்ளான்  அதுதான் அல்லாஹ்வின் விருப்பம் போலும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். அதற் கேற்பவே இக்கருத்து வேற்பாடுகள இஸ்லாமிய சிந்தனைச் செல்வத்தின் கனத்தையும் மதிப்பையும் கூட்டியதே அல்லாமல். மக்களிடையே துவேஷத்தையோ பிளவையோ ஏற்படுத்தவில்லை இமாம்களின் கருத்துவேற்பாடுகள் ஏற்கத்தககவையே என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் அவர்களது தோழர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை பெருமானார் ஏற்றுக் கொண்ட பல நிகழ்வுகளும் சான்றாக அமைகின்றன. மதீனாவின் புற நகரில் வசித்த பனூகுறைழா யூதர்கள் ஒரு பொரும் சதி செய்து முஸ்லிம்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிய போது அவர்களது கோட்டைய முற்றுகையிட திடீரென முடிவெடுக்கப் பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் யாவரும் பனூகுறைழாவில் சென்றே அஸரை தொழுங்கள் என்றார்கள். பலர் பனூகுறைழாவினரை நோக்கி விரைந்தார்கள். சிலர் நடுவழியிலேயே அஸரை தொழுதார்கள். சீக்கிரமாக புறப்பட  வேண்டும் என்பதே பெருமானாரின் நோக்கம். என்வே சீக்கிரம் புறப்பட்ட பிறகு நடுவழியில் அஸர் தொழுவதில் தவறில்லை என்பது அவர்களது சிந்தனை. அதனால் அவர்கள் நடுவழியிலேயே அஸரை தொழுதார்கள். இதைப் பற்றி பெருமானார்(ஸல்) அவர்களிடம் கூறப் பட்டபோது அவர்கள் அவர்களை கண்டிக்கவில்லை ( புகாரி) இது போலவே மாறுபட்ட இரண்டு கருத்துக்களை பெருமானார் (ஸள்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு இன்னொரு செய்தியை நபித்தோழர் அபூஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இரண்டு நபித்தோழர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்தது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. இருவரும் தயம்மம் செய்து தொழுதார்கள். சற்று நேரத்தில் தண்ணீர் கிடைத்தது. இருவரில் ஒருவர் ஒழு செய்து மீண்டும் அந்தத் தொழுகையை தொழுதார். மற்றவர் அவ்வாறு தொழவில்லை. இருவரும் பெருமானாரிடம் வந்து நடந்ததை கூறினார்கள். இரண்டாவது முறை தொழாத தோழரிடம் நீர் சுன்னத்தை சரியாக கடைபிடித்து விட்டீர். உமக்கு அது போதும் என்று சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டாவது தடவையும் தொழுத தோழரிடம் உமக்கு இரண்டு கூலி உண்டு என்றார்கள். நபித்தோழர்களிம் கருத்து வெறுபாடு தோன்றும் போது அது இறையச்சம் சார்ந்ததாக்வும் இயல்பானதாக்வும் அமைந்த போது பெருமானார் (ஸல்) அவர்கள் இருசாரருக்கும் அங்கீகாரத்ததை வழங்கியுள்ளார்கள். பத்ரு யுத்தத்தின் போது கிடைத்த கைதிகள் விசயத்தில் சஹாபாக்கள் கருத்து வேற்பாடுகொண்டனர். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் கருத்தை எடுத்துக் கொண்டு பணயத்தொகை பெற்றுக் கொண்டு கைதிகளை விடுதலை செய்தார்கள் .அது விசயம் முடிந்த பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களின் கருத்துக்கு நேர் எதிரான உமர் (ரலி) அவர்களின் கருத்திற்கு ஏற்ப கைதிகள் விட்டு வைக்கப் பட்டிருக்கக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக அல்லாஹ் வசனத்தை அருளினான். மிக ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டிய இந்த விசயத்தில்  கருத்து வேற்பாடுகள் ஏற்படுவது இயற்கையானது என்பதும். அக்கருத்து வேற்பாடுகள் இறையச்சத்தின் பாற் பட்டதாகவும் நேர்மையானதாக்வும் இருக்கும் பட்சத்தில் ஒன்றுகொன்று முரணாண கருத்துக்கள் கூட ஏற்கப்பட வேண்டும் என்பதும் மிகத்தௌவாக சொல்லப் பட்டிருக்கிறது. உமர் (ரலி) சிரிய நாட்டுக்கு பயணமான போது  போகிற வழியில் அங்கு காலரா நோய்பரவி இருப்பதாக செய்த்கிடைத்தது. மேற்கொண்டு என்ன செய்வது என்று அவர்கள் ஆலோசனை செய்வதற்காக  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்து முஹாஜிர் சஹபாக்களில் மூத்தவர்களை ஒன்று கூட்டுமாறு உத்தரவிட்டார்கள். அவர்களிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள். அங்கே இரண்டு கருத்து உருவானது. ஒருசாரார் நாம் எண்ணி வந்த காரியத்திற்காக தொடர்ந்து செல்வோம் என்றனர். மற்றொருசாரரோ  இல்லை உங்களோடு பெருமானாரின் தோழர்கள் நிறைய வந்திருக்கிறார்கள் அவர்களை கொண்டு போய் நோயில் தள்ளிவிட வேண்டாம் என்றார்கள். ஒரு முடிவு கிடைக்கவில்லை. அடுத்ததாக அன்சாரிப் பெரியவர்களை அழைத்து உமர் (ரலி) ஆலோசன செய்தார்கள்  அவர்களும் இவ்வாறே இரண்டு கருத்துக்களை கூறினர். அப்போதும் முடிவு கிடைக்கவில்லை. மூண்றாவதாக குறைஷி குலத்துப் பெரியவர்களை மட்டும் அழைத்து ஆலோசனை செய்தார்கள் .நாம் திரும்பி விடலாம் என்று அவர்கள் ஆலோசனை சொன்னார்கள் அந்த அலோசனையை ஏற்று அவர்கள் புறப்படத் தயாரான போது சிரியாவின் அப்போதைய ஆளுனரான அபூஉபைதா உமர் (ரலி) அவர்களிடம் இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்பிப் போகிறீர்களே! அல்லாஹ்வின் விதியிடமிருந்து தப்பி ஒடப் போகிறீர்களா? ( அ பிர்ரன் மின் கத்ரில்லாஹ் ) என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியை நோக்கி ஒடுகிறோம் என்றார்கள். அந்த சமயத்தில் அங்கு வந்த சேர்ந்தா அப்துர் ரஹ்மான பின் அவ்ப் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்  ஒரு ஊரில் பெரு நோய்த்தொற்று இருந்தால் உள்ளே இருப்பவர்கள் வௌயே செல்ல வேண்டாம். வௌயிலிருந்து யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்கள  என்றார்கள் . உமர் (ரலி) அவர்கள் இதை கேட்டு தனது முடிவு அல்லாஹ்விம் தூதருடைய வார்த்தைக்கு பொருத்தமாக அமைந்து விட்டதை எண்ணி மகிழ்சியடைந்தார்கள்  உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடைபெற்றை இந்நிகழ்ச்சி பெருமானாருடைய ஒரு பொன்மொழி கவனத்திற்கு வருவதற்கு முன்னாள் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட கருத்து வேற்பாட்டையும் அந்த கருத்து வேற்பாட்டின் ஒரு கட்டத்தில் அபூஉபைதா (ரலி) அவர்கள் சற்று கடுமையாகவே கேள்விகேட்டதை உமர் (ரலி) அதை அங்கீகரித்து அவர்களுக்கு பதிலளித்ததையும் வௌச்சப் படுத்துகிறது. கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை. அது நன்மை பயக்கக் கூடியதும் கூட. தகுந்த காரணத்தோடு  நல்லோர்களிடமிருந்து இறையச்சம் சார்ந்து அது வௌப்படுமென்றால் அது முரண்பட்டதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் படும் என்ற உண்மையை இது இன்னொரு கோணத்தில் புரிய வைக்கிறது.  இமாம்களின் கருத்துவேற்பாடுகள் ஏற்கத்தககவையே என்பதற்கு மற்றொரு பலமான ஆதாரம் இவ்விமாம்களின் வழியை பின்பற்றியோர் தமது சிந்தனையாளருக்கு மதிப்பளித்தது போலவே பிற சிந்தனையாளருக்கும் மதிப்பளித்தார்கள். இமாம் ஷாபி என்கிற போது ஹனபீகள் துஆ செய்வதும் இமாம் அபூஹனீபா என்கிற் போது ஷாபிகள் துஆ செய்வதும் வாடிக்கையாக முஸ்லிம் சமுதாயம் வழக்கத்தில் பார்க்கிற ஒரு விசயம். இத்தகைய ஒரு அங்கீகாரத்தையும் செல்வாக்கையும் முஸ்லிம் சமூகத்தில் எற்பட்ட வேறு எந்தப் பிளவிலும் காணமுடியாது. என்வே இமாம்களின் இந்த கருத்து வேற்பாடுகளுடனும் சிந்தனை ப்பிரிவுகளுடனும் வேறு எதையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அது பொருந்தாது. ஆகையால் முஸ்லிம் சமுதாயம் இமாம் களுக்கிடையே ஏற்பட்ட் கருத்து வேற்பாட்டினை இஸ்லாமிய மூலங்களின் அமைப்பு  மனித சிந்தனையின் பல்வேறு வண்னங்களின் சிறப்பு ஆகிய கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். அத்தோடு அம் மனிதப் புனிதர்களின் இறையச்சம்  மார்க்கத்தின் மீதான அக்கறை  பேணுதலான வாழ்க்கை  தீட்சண்யமிகுந்த சிந்தனை ஆகிய உயர் பண்புகளின் அடிப்படையில் ஏற்கப் பழக வேண்டும். அவர்களால் இஸ்லாம் இன்னும் எளிமைப்படுத்தி தரப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.  மத்ஹபுகளின் சட்ட நூற்களை தொகுத்தவ்ர்கள் கூட சாமாணயமானவர்கள் அல்ல  சில அரை வேக்காடுகள் கருதுவது போல அவர்கள் எள்ளி நகையாடுதலுக்கு உரியவர்கள் அல்ல  தமது வாழ்நாளிலோ அதற்கு பின்னரோ சமகால மக்களால் பெரிதும் மதிக்கப் பட்டவர்களாகவே அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.  இவர்களுடைய தானைத் தலைவர்கள் எத்தகைய கீழ்த்தர்மான விமர்ச்சனத்துக்கு அவர்ர்களைச் சார்ந்தவர்களால் உள்ளாக்கப் பட்டார்களோ அது போன்ற எந்த சிறு குற்றச் சாட்டிற்கும் ஆளாகதவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . 
கருத்து வேறுபாடுகள் ஏற்கத் தக்கவை. ஆனால் கருத்து முரண்பாடு என்பது அடியோடு வெறுக்கத்தக்கது. இன்றைய தவ்ஹீதிகள் அத்தனை பேரும் கருத்து முரன்பாட்டு நோய் பிடித்தவர்களே! அவர்கள் யாரோடும் எப்போதும் உடன்பட்டு விடமாட்டார்கள்  அவர்கள் சமுதாயத்தை வெறிப்படுத்துவார்களே தவிர நெறிப் படுத்த மாட்டார்கள். அவர்களது ஆய்வுகளும் தீர்வுகளும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவர்களது விருப்பத்திற் கேற்றபடி குரானுக்கும் ஹதீஸுக்கும் விளக்கம் கொடுப்பார்கள்  அது அவர்களது ஆட்களாலேயே அம்பலப்படுத்தப் படும்  மறுமையில் மனிதனுக்கு எதிராக அவனது கை கால்களே சாட்சி சொல்லும் என்பதற்கு முன்னோட்டமாக இவர்களது  வலது கரமாகவும் இடது கரமாகவும் இருந்தவர்களே இவர்களுக்கு எதிராக சாட்சி சொல்கிறார்கள். காதுகள் கூசுமளவு அந்தக் குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. இவர்கள் வளர்ச்சியை அடைவதை விட அதிகமாக தேய்ந்து கொண்டே போவார்கள். வரலாற்றுக் காலந்தொட்டு இஸ்லாம் சந்த்தித்த கொள்கை முகமூடியணிந்த கொள்ளைக்காரர்களை போலவே இவர்களும் பிளவு பட்டுக் கொண்டே செல்கிறார்கள். ஒரு தவ்ஹீத்(?)குரூப்பின்  பள்ளிவாசல் என்ற கட்டிடத்தில் இன்னொரு தவ்ஹீத் குரூப்பைச் சார்ந்தவர் தொழுக நிற்கிறார் அவ்ருக்கு முன்னால் ஒருவர் உட்கார்ந்து கொண்டு தொழவிடாமல் தடுக்கிறார். இவர் அவரை தள்ளிவிட்டு தொழுகிறார். இது வீடியோ காட்சியாக உலகெங்கும் காட்டப் படுகிறது. இதை எல்லாம் பார்த்த பிறகும் குழப்பாவாதிகள் யார் என்பதை அடையாளம் காண முடியாதவர்கள் கண்ணிருந்தும்.. காதிருந்தும்.. இதயமிருந்தும்.. 

1 comment:

  1. மிக்க பயனுள்ள ஒரு பதிவு அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் நற்கூலிகளை வழங்குவானாக!!!

    ReplyDelete