வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 22, 2012

ஆசூரா

ஆஷூரா பற்றிய ஒரு பார்வைக்கு இக்கட்டுரையை வாசிக்கவும். இந்த வாரத்திற்கான புதிய தகவல் இன்ஷா அல்லாஹ் விரைவில்.

மூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.

மூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த 6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.

கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற செய்தியாகும்.

இறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.

மேலதிக தகவல்களுக்கு கீழே சொடுக்கி வாசிக்கவும்
ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

No comments:

Post a Comment