வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, November 13, 2013

மொஹர்ரம் பண்டிகையும் இஸ்லாமும்

இன்று ஆசூரா நாள். 


பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய நாள் இது.


ஆஷூரா நாளுக்கு மேலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகிறது
·         பூமியில் முதல் முறையாக மழை பெய்த நாள்
·         ஆதம் (அலை) படைக்கப்பட்ட நாள்
·         இஸ்மயீல் (அலை) பிறந்த நாள்
·         யூசுப்  (அலை) சிறையிலிருந்து விடுதலையான நாள்
·         யூனுஸ் (அலை) அவர்களின் துஆ மக்பூல் ஆன நாள்
·         கஃபாவிற்கு புதிய துணி (கிஸ்வா) மாற்றும் நாளாக இந்நாளே இருந்தது. தற்போது அரபா நாளில் மாற்றப்படுகிறது என்றாலும். அரைவாசி திரை தான் அன்று மாற்றப்படுகிறது. முழு திரை ஆசூரா அன்று போடப்படுகிறது.
·         பெருமானார் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) யை நிக்காஹ் செய்த நாள்
·         கியாமத் நா:ள் ஒரு ஆஷூரா தினத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவகள் சொன்னார்கள்.

ஆசூராவிற்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்திற்கு காரணம் மூஸா அலை காப்பாற்றப்பட்டார்கள் என்பதே!

ஆசூரா அன்று என்னென்ன நன்மைகள் நடந்ததோ அதில் மிக உன்னதமான நிகழ்வு இறை நம்பிக்கையாளர்கள் அழிவின் விளிம்பில் ஆச்சரியமாக காப்பாற்றப் பட்டதும் அக்கிரமக்காரர்கள் அழிக்கப்பட்டதுமாகும்.

அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை மக்கள் என்னென்றும் நினைவில் வைக்க வேண்டும். அவனது அருளை தேடவும் - கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முயறி செய்ய வேண்டும். 

அல்லாஹ்வைப் பற்றிய ஆசையோடும் அச்சத்தோடும் நாம் இன்று நோன்பு நோற்றுள்ளோம். 

அல்லாஹ் நமது நோன்பிற்கு உயர்ந்த கூலியை தந்தருள்வானாக! 

ஆசூரா நாளை முஹர்ரம் பண்டிகை என்றும் ஹுசைனாரின் நாளென்றும் நம்ம்மில் சிலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது விசயத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வெண்டும். 

 இந்த நாளை மார்க்கம் சிறப்பித்துச் சொன்னதற்கும்  - முஹ்ர்ரம் பண்டிகை என்ற பெயரில் நடை பெறுகிற கூத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

பெருமானாரின் பேரர் ஹுசைன் ரலி அவர்கள் கர்பலா வில் இதே நாளன்று கொடூரமாக் கொல்லப்பட்டார்கள் என்பது நபி (ஸல்) வபாத்தாகி ஒரு 50 வருடத்திற்குப் பின் நடைபெற்ற ஒரு எதோச்சையான நிகழ்வாகும். ஆசூராவோடு அதை தொடர்பு படுத்துவதும் துக்கம் அனுஷ்டிப்பதும் தவறாகும். 
 
மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பை வாசிக்கவும்
ஊர்வலங்களில்.. இஸ்லாம்.. 
 
 
 


 








3 comments:

  1. ஜஸாகல்லாகஹீ கைரன்....மிக்க நன்றி...அல்லாஹ் நமக்கும் நமது குடும்பத்திற்கும் இறை மண்ணிப்பையும் உடல் ஆரோக்யத்தையும் ....நபி வழி வாழ்கையையும் ....மறுமையில் விசாரனை இல்லாமல் ஜன்னதுல் பிர்தவ்ஸில் தங்குமிடத்தையும் ஆக்குவானாக...ஆமீன்... ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  2. assalamu அலைக்கும் ... ஹழ்ரத் avargalin melana கவனத்திற்கு...
    தங்களின் தகவல்கள் அனைத்தும்ஜும் ஆ virkku மிக மிக பயன் aLithukkonduLLdhu அல்ஹம்துலில்லஹ் ...
    aanal matra நேரங்களில் தங்களின் ப்லொகில் செய்திகள் சேகரிப்பதில்
    தாமதம் ஏற்படுகிறது
    aakaவே anaithu தலைப்புகளும் screenil தெரியும்படி செய்தால் மிக பலனுள்ளதாக அமையும் என்று panivanbudan kettukkolkiren

    வஸ்ஸலாம்
    அபாபீல் alagan ...

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் அல்லாஹ் உங்களின் இல்மில் பரகத் செய்வனக இன்னும் தங்களின் இந்த கித்மத் தொடரா செய்வனகா அமீன்

    ReplyDelete