வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 28, 2013

இஸ்லாமிய அரசியலில் - சாதனையும் வேதனையும்



வரலாறு 
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمْ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ(142)

நபி (ஸல்) அவர்கள் வபாத்திற்குபிறகு அவர்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அபூபக்கர் (ரலி) அவர்கள் அடுத்த ஆட்சித்தலைவராக சஹாபாக்களால் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அவர்கள் தேர்வு செய்யப்பட்ட அந்த இடம் இப்போதும் சகீபே பனீ சாயிதா என்ற பெயரில் ஒரு சிறு தோட்டமாக மஸ்ஜிதுன்ன பவிக்கு அருகே பராமரிக்கப்பட்டு வருகிறது. அற்புதமான ஒரு நிகழ்சியில்ஒரு சில விவாதங்களுக்குப் பின் நாட்டு நலன் சமூக நன்மை எல்லா வித்தத்திலும் எடுத்துச் சொல்லப்பட்ட சூழலில் இஸ்லாமிய அரசின் முதல் கலீபாதேர்வு செய்யப்பட்டார்கள். இந்த தீனும் சமுதாயமும் காப்ப்பற்றப் பட்ட புனித தளம் அது.
அபூபக்கர் (ரலி) ஆட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்ட விதம்
பெருமானார் (ஸல்) அவர்கள வபாத்தாகி அடக்கம் நடைபெறுவதற்கு முன்னாள். மதீனாவின் அன்சரிகள் கஜ்ரஜ்களின் தலைவரான  ச்ஃது பின் உபாதா ரலியின் பாரபரியத்தோட்ட்த்தில் குழுமி அடுத்த ஆட்சித்தலைவராக அவரை தேர்ந்தெடுக்கிற முடிவில் இருந்தார்கள் .
இந்தச் செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு கிடைத்தது. உடனே அபூபக்கர் அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோரை அழைத்துக் கொண்டு அங்கு விரைந்தார்.
மதீனாவை தங்களுடைய ஊராக மாத்திரமே கருதிக் கொண்டிருந்த அன்சாரிகளிடம் இப்போது மதீனா ஒரு பெரிய அரசின் தலைநகராக இருப்பதை உணர்த்தும்  வகையில் அரபிகள் குறைஷியர்களுக்குத் தான் கட்டுப்பாடுவார்கள் என்ற எதார்த்த்த்தை எடுத்துச் சொன்னார். பெருமனா (ஸல்)) அவர்களின் அறிவுரைகள் அங்கு நினைவு கூறப்பட்டது.
قريش ولاة الناس في الخير والشر إلى يوم القيامة).(الترمذي)

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (الناس تبع لقريش في هذا الشأن مسلمهم تبع لمسلمهم وكافرهم تبع لكافرهم
அப்போது அங்கிருந்தோர்களில் ஒரு சிலர் எங்களில் ஒருவர் உங்களில் ஒருவர் என்று கோஷமெழுப்பினார்கள். எனினும் அதுவே பெரிய பிர்ச்சினைகளுக்குகரணமாகிவிடும் என்பதனை உணர்ந்த ஆபூபக்க (ரலி) உமர் அல்லது அபூஉபதா (ரல்) அகியோரின் பெயர்களை முன் மொழிந்தார்கள். இதனை மறுத்த உமர் (ரலி) அவர்கள் உடனடியாக அபூபக்கர் ரலி அவர்களின் கையை பிடித்து அவருக்கு  பை அத் செய்து கொடுத்தார்கள். மக்களும் திரண்டு பை அத் செய்தனர்.
وعندما اجتمعَ الأنصار في سقيفة بني ساعدة بعد وفاة الرسول ليبايعوا سعد بن عبادة خليفة من بعده، سمع عمر بن الخطاب بذلك، فذهبَ على الفور إلى أبي بكر الصديق وهو في منزل الرَّسول، وبلغه الخبر، وانضمَّ إليهما أبو عبيدة بن الجراح فساروا معاً إلى السقيفة. وقال أبو بكر عندما دخل: "ما هذا؟"، فأجابوه "منّا أمير ومنكم أمير"، فقال: "منّا الأمراء ومنكم الوزراء". ثم عرض عليهم أحد مرافقيه ليُصبَح الخليفة فقال: "لقد رضيتُ لكم أحد هذين الرجلين - عُمَر وأبي عبيدة أمين هذه الأمة-" غير أن أحد الأنصار قال بصوتٍ عال: "أنا جُذَيلها المحنك وعُذَيْقُها المرجَّب، منّا أمير ومنكم أمير"، فتعالت الأصوات واللغط، واختلف الناس فيمن سيكون الخليفة حتى قام عمر وقال: "أيّكم يطيب نفساً أن يخلُف قَدَمَين قدّمهما النبي Mohamed peace be upon him.svg؟"،  ثمَّ قال لأبي بكر "ابسط يدك لأبايعك"، فبايعه عمر بن الخطاب،[65] وتبعه الناس فبايعوه.
அபூபக்கர் (ரலி) 2 ½ வருடம் ஆட்சி செய்தார்கள்
அபூபக்கர் ரலி முஸ்லிம் உம்மத்துக்கு செய்த நன்மைகள் ஏராளம். அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தூர நோக்குச் சிந்தனயும் துணிச்சலும் மிக்க ஒரூ உபகாரம் தனக்குப் பின் உமர் ரலி அவர்களை ஆட்சிப் பொறுப்பாளராக நியமித்ததாகும்
عندما اشتدَّ على أبي بكر مرض موته، جمع كبار الصحابة وقال لهم: "إنَّه قد نزل بي ما قد ترون، ولا أظنني إلا ميِّتاً، وقد أطلق الله أيمانكم من بيعتي، وحلّ َعنكم عقدي، وردَّ عليكم أمركم، فأمِّروا عليكم من أحببتم، فإنكم إن أمَّرتم في حياة مني كان أجدر ألا تختلفوا بعدي". فأخذ الصحابة الذين جمعهم يتعفَّفون، فيرى كل منهم في الآخر قدرة أكبر على تولي مسؤولية الخلافة، فعادوا إلى أبي بكر وقالوا له طالبين مساعدته باختيار الخليفة: "أرنا يا خليفة رسول الله رأيك"، قال: "فأمهلوني حتى أنظر لله ولدينه ولعباده".[80]
وبعد فترة من التفكير استدعى أبو بكر الصحابي عبد الرحمن بن عوف وقال له: "أخبرني عن عمر؟"، فأجابه: "إنه أفضل من رأيك إلا أنّ فيه غلظة"، فقال أبو بكر: "ذلك لأنه يراني رفيقاً، ولو أفضي الأمر إليه لتركَ كثيراً ممَّا هو عليه، وقد رمَّقتُهُ فكنتُ إذا غضبتُ على رجل أراني الرضا عنه، وإذا لنتُ له أراني الشدّة عليه".[81] ثم دعا عثمان بن عفّان، وقاله له كذاك: "أخبرني عن عمر"، فقال: "سريرته خير من علانيّته، وليس فينا مثله"، فقال أبو بكر للاثنين: "لا تذكرا ممَّا قلتُ لكما شيئاً، ولو تركته ما عدوتُ عثمان، والخيرة له أن لا يلي من أموركم شيئاً، ولوددتُ أنّي كنتُ من أموركم خلواً وكنتُ فيمن مضى من سلفكم".[82]
ثم جاء طلحة بن عبيد الله إلى أبي بكر وقال له غاضباً: "استخلفتَ على النّاس عمر وقد رأيتَ ما يلقى الناس منه وأنتَ معه، وكيف به إذا خلا بهم وأنت لاقٍ ربّك فسائلك عن رعيّتك!"،[81] فقال أبو بكر: "أجلسوني" فأجلسوه، ثم أجابه: "أبالله تخوّفني! إذا لقيتُ ربي فسألني قلتُ: استخلفت على أهلك خير أهلك".[59]
وبعد ذلك استدعى أبو بكر عثمان بن عفان مجدداً، فقال له: "اكتب: بسم الله الرحمن الرحيم، هذا ما عهِدَ أبو بكر بن أبي قحافة إلى المسلمين، أمّا بعد..." لكن أغميَ عليه في تلك اللحظة قبل أن يكمل كلامه، فكتب عثمان: "أمَّا بعد فإني قد استخلفتُ عليكم عمر بن الخطّاب ولم آلكم خيراً". وعندما استيقظ أبو بكر من إغماءته قال لعثمان: "اقرأ عليّ"، فقرأ عثمان، وعندما انتهى كبَّر أبو بكر وقال: "أراك خِفتَ أن يختلف الناس إن مُتُّ في غشيتي؟"، قال: "نعم"، فقال: "جزاك الله خيراً عن الإسلام وأهله".[82]

ஹிஜிரி 13 ஜமாதில் ஆகிர் 22 ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். உன்னதமானஅகில உலகிற்கும் முன்னுதாரமானஅந்த ஆட்சியில் 22 ½ இலட்சம் சதுர மைல்களுக்கு இஸ்லாம் பரவியது.
وفي عهده بلغ الإسلام مبلغًا عظيمًا، وتوسع نطاق الدولة الإسلامية حتى شمل كامل العراق ومصر وليبيا والشام وفارس وخراسان وشرق الأناضول وجنوب أرمينية وسجستان، وهو الذي أدخل القدس تحت حكم المسلمين لأول مرة وهي ثالث أقدس المدن في الإسلام،
இராக்கில் தொடங்கி, லிபியா,எகிப்து ,சிரியா, பாரசீகம், குராசன் பாலஸ்தீன்ஆசியா மைனரின் கிழக்குப்பகுதி நாடுகள்  என்று தொடர்ந்து ரஷயாவின் ஓரத்திலிருக்கிற  ஆர்மீனியா வரை இஸ்லாத்தை கொண்டு சென்றார்கள்.
வெற்றி கொள்ளப்பட்ட தூரப்பகுதிகளிலிருக்கிற மாநிலங்களுக்கு தேர்ந்தெடுத்த தகுதியான நபர்களை கவர்னர்களாக நியமித்தார்கள். 
சிரியாவிற்கு முஆவியா ரலி அவர்க்ளை கவர்னராக நியமித்த்தார்கள்.
கவர்னர்களை மிக எச்சரிகையாக கண்காணித்தார்கள்ஒரு புகார் வருமெனில் உடனடியாக மதீனாவிற்கு அழைத்து விசாரித்தர்கள்.
சஃது ரலி தொழுகையில்  பெரிய சூராக்களை ஓதுகிறார் என்று ஒரு புகார் வந்த்து உடனே அவரை அழைத்து விசாரித்தார்கள்
உமர் (ரலி) அவர்களை அபூ லுஃலுஆ பைரோஸ் என்ற வஞ்சகன் கத்தியால் குத்தினான்ஹிஜ்ரி 23 துல்ஹஜ் 26 புதன்கிழமை  
طعنه أبو لؤلؤة فيروز الفارسي بخنجر ذات نصلين ست طعنات، وهو يُصلي الفجر بالناس، وكان ذلك يوم الأربعاء 26 ذي الحجة سنة 23 هـ، الموافقة لسنة 644 م، ثم حُمل إلى منزله والدم يسيل من جرحه وذلك قبل طلوع الشمس. وحاول المسلمون القبض على القاتل فطعن ثلاثة عشر رجلاً مات منهم ستة، فلما رأى عبد الرحمن بن عوف ذلك ألقى رداءًا كان معه على أبي لؤلؤة فتعثر مكانه وشعر أنه مأخوذ لا محالة فطعن نفسه منتحرًا. وبذلك دفن أبو لؤلؤة فيروز الفارسي، أخبار المؤامرة والدوافع إليها، فاختلفت الروايات حسب ما يستنتجه المؤرخون
உமர் (ரலி) உயிர் மூன்று நாட்கள் ஊசலாடிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அடுத்த ஆட்சியாளரை தேர்தெடுப்பதற்கு அபூ உபைதா இல்லையே சாலிம் மவ்லா அபூஹுதைபா இல்லையே என்று வறுத்தப்பட்டார்.
உங்களது மகன் அப்துல்லாஹ்வை தேர்ந்தெடுங்களேன் என்று மக்கள் சொன்ன போது மறுத்துவிட்டார்.
இறுதியில் ஆறுபேர்  கொண்ட ஓரு குழுவை நியமித்து அதில் ஒருவரை தேர்வு செய்யுமாறு பணித்தார். மிக கவனமான அற்புதமான ஏற்பாடுகளை செய்தார்.
وكان عمر يفكر في البداية في أبو عبيدة بن الجراح أو سالم مولى أبي حذيفة ولكنهما توفيا قبله وقال: «لو كان أبو عبيدة بن الجراح حيًا استخلفته، فإن سألني ربي قلت: "سمعت نبيك يقول: أنه أمين هذه الأمة"، ولو كان سالم مولى أبي حُذيفة حيا استخلفته، فإن سألني ربي قلت: "سمعت نبيك يقول: أن سالمًا شديد الحب لله،
فقال له أحد المسلمين: "استخلف ابنك عبد الله". فقال: «قاتلك الله، والله ما أردت الله بذلك، ويحك لا إرب لنا في أموركم، ما حمدتها لنفسي فأرغبها لواحد من أهل بيتي، إن كان خيرًا فقد أصبنا منه، وإن كان شرًا فحسب آل عمر أن يُحاسب منهم رجلٌ واحد ويُسأل عن أمر أمة محمد. لقد أجهدت نفسي وحرمت أهلي، وإن نجوت لا عليَّ ولا لي، فإني إذا لسعيد
بناءً على هذا أوصى عمر أن يكون الأمر شورى بعده في ستة ممن توفي النبي محمد وهو عنهم راضٍ وهم: عثمان بن عفان، علي بن أبي طالب، طلحة بن عبيد الله، الزبير بن العوام، عبد الرحمن بن عوف، وسعد بن أبي وقاص. ورفض تسمية أحدهم بنفسه
ولم يذكر عمر بن الخطاب في الشورى، سعيد بن زيد بن عمرو بن نفيل، رغم أنه أحد العشرة المشهود لهم بالجنة، وذلك لكونه ابن عمه. كما أمر بحضور ابنه عبد الله مع أهل الشورى ليشير بالنصح دون أن يكون له من الأمر شيءًا، ثم أوصى صهيب بن سنان أن يصلي بالمسلمين ثلاثة أيام حتى تنقضي الشورى.
 مات عمر بن الخطاب بعد ثلاثة أيام من طعنه، ودُفن يوم الأحد أول محرم سنة 24 هـ، إلى جانب أبي بكر الصديق والنبي محمد، وكان عمره خمسًا وستين سنة.
اجتمع أهل الشورى في بيت المسور بن مخرمة، ثم انحصر الأمر بين ثلاثة بعد أن فوّض الزبير ما يستحقه إلى علي، وفوّض سعد ما له إلى عبد الرحمن، وترك طلحة حقه إلى عثمان. ثم انخلع عبد الرحمن بن عوف ليختار بين اثنين: علي وعثمان،
 فأخذ يستشير المسلمين سرًا وجهرًا، فرادى ومثنى ومجتمعين، مدة ثلاثة أيام بلياليها. ثم اجتمع المسلمون في المسجد، ووقف عبد الرحمن بن عوف تحت المنبر
وبايع عثمان بن عفان ثم بايعه علي بن أبي طالب والمسلمون في 3 محرم سنة 24 هـ، الموافقة لسنة

ஆறுபேர் குழுவிலிருந்து உஸ்மான் ரலி) ஹ்ஜிரி 24 முஹர்ரம் 3 ம் நாளில்  தேர்ந்தெடுக்கப்பட்டார்
உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் இஸ்லாம் இன்னும் விரிவாக பரவியது. துருக்கி ஆப்ரிக்காவின் பல நாடுகள் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் இஸ்லாம் பரவியது
من أهم أعمال عثمان فتح مرو وتركيا وإفريقية وقبرص.
உஸ்மான் (ரலி) அவர்கள் நீண்ட தூரங்களில் இருக்கிற மாநிலங்களில் தன்னுடைய உறவினர்கள் சிலரை கவர்ணர்களாக நியமித்தார். தன்மீதுள்ள பற்றின் காரண்மாக அவர்கள் நேர்மையாகவும் நியாயமாகும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் சிலர் அதற்கேற்ப நடந்து கொள்ளவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் பெருந்தன்மையை தவறாக  பயன்படுத்திக் கொண்டனர். மக்களுக்கு அநீதி இழைக்க ஆரம்பித்தனர்.
இவர்களில் முக்கியமானவர் எகிப்தின் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின் அபீஸரஹ்.
எகிப்து மக்களில் ஒரு குழுவினர் மதீனாவிற்கு அப்துல்லாஹ்வை மாற்றக் கோரினர். ஆரம்பத்தில் மறுத்த உஸ்மான் ரலி பெரும் சஹாபாக்கள் வற்புறுத்தவே அவரை மாற்றிவிட்டு முஹம்மது பின் அபீப்க்கரை ஆட்சியாளராக நியமித்து ஒரு  கடித்த்தை அந்தக் குழுவினரிடம் கொடுத்தனுப்பினார்
ஆனால் அதற்குள் விதி வேறு வகையில் வேலை செய்தது. உஸ்மான் ரலி யின் தனி உதவியாளராக  இருந்த (இவரும் உஸ்மான் ரலியின் உறவினர். ) மர்வான் பின் ஹகம்எகிப்திலிருத தன்னுடைய உறவினரான் கவர்னர் அப்துல்லாஹ் பின் அபீஸரஹுக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதி அதில் எகிப்தை நோக்கி வந்து கொண்டிருக்கிற முஹம்மதையும் அவரது குழுவினரையும் கொலை செய்துவிடுமாறு எழுதி அதில் உஸ்மான் ரலி யின் மோதிர முத்தியை பதித்து ஒரு ஒற்றனிடம் கொடுத்தனுப்பினார்.
இந்தக் கடித விவரம் முஹம்மது பின் அபீபக்கர்(ரலி) யுடன் சென்ற குழுவினருக்கு தெரிந்த்து. உண்மை தெரியாத  அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது அதிக கோபத்துடன் மதீனாவிற்கு திரும்பினர். மேலும் பலர்  மதீனாவில் திரண்டனர்.
அந்தக் குழுவினர் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு மர்வான் பின் ஹகம் மீது நடவடிக்கை கோரினர்.
சுமார் 40 நாட்கள் அவர் வீடு முற்றுகை இடப்பட்டிருந்தது. பள்ளிவாசலுக்குள் வந்து தொழவும் பக்கத்திலிருக்க கிணற்றில் தண்ணீர் அருந்தவும் கூட கலகக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் பெருந்துன்பமும் துயரமும் நிகழ்ந்த காலகட்டம் அது.
عن ثمامة بن جزء القشيري. قال: شهدت الدار يوم أصيب عثمان، فاطلع عليه اطلاعه فقال: ادعوا لي صاحبيكم اللذين ألباكم علي، فدعيا له، فقال: أنشدكما الله، تعلمان أن رسول الله لما قدم المدينة ضاق المسجد بأهله، فقال: « من يشتري هذه البقعة من خالص ماله فيكون فيها كالمسلمين، وله خير منها في الجنة »؟ فاشتريتها من خالص مالي فجعلتها بين المسلمين، وأنتم تمنعوني أن أصلي فيه ركعتين.
ثم قال: أنشدكم الله أتعلمون أن رسول الله لما قدم المدينة لم يكن فيها بئر يستعذب منه إلا بئر رومة.
فقال رسول الله : « من يشتريها من خالص ماله، فيكون دلوه فيها كدلاء المسلمين وله خير منها في الجنة »؟
فاشتريتها من خالص مالي، وأنتم تمنعوني أن أشرب منها.
கலீபாக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தனி பாதுகாவலர்களை வைத்துக் கொள்ளாத்தால் மிகப்பெரும் கலீபாவின் விட்டை சில் நுறுபேர் கடுமையாக முற்றுகியிட்டிருந்தனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைது விடமுடியாத் படி அலி ரலி போன்ற பெரிய சஹாபாக்கள் தங்களது மகன்களை வீட்டு வாசலில் காவலுக்கு நிறுத்தியிருந்தனர்.
அதையும் மீறி இரண்டு பேர் சுவரேறிக் குதித்து வீட்டிற்கு உள்ளே சென்று குர் ஆன் ஒதிக்கொண்டிருந்த உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்து விட்டனர்.
ثار قتيرة وسودان بن حُمران والغافقي لعنهم اللَّه فضربه الغافقي بحديدة معه، وضرب المصحف برجله، فاستدار المصحف فاستقر بين يديه، وسالت عليه الدماء‏.‏ وجاء سودان بن حمران ليضربه، فانكبت عليه زوجة عثمان نائلة، واتقت السيف بيدها، فتغمدها ونفح أصابعها‏.‏ فأطن أصابع يدها، فغمز أوراكها، وقال‏:‏ إنها لكبيرة العجيزة‏.‏ وضرب عثمان فقتله،
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக இருந்த  உஸ்மான் (ரலி) கோபம் கொண்ட ஒரு சிறு கும்பலின் ஆத்திரத்திற்கு பலயாகி நின்றதும் அதை தடுக்கச் சக்தியற்றவர்களாக பெரிய சஹாபாக்கள் இருந்ததும் வரலாற்றில் நிகழ்ந்த பெரும் கொடுமையாகும்.
அந்தக் கும்பலின் ஆதிக்கம் எந்த அளவு கடுமையாக இருந்த்து என்றால் உஸ்மான் ரலி அவர்களை ஜன்னத்துல் பகீஇல் நல்லடக்க்ம் செய்யக் கூட அவர்கள் அனும்திக்க வில்லை இரவோடு இரவாக அவர்கள் ஜன்னத்துல் பகீஇற்கு வெளியே இரசியாமாக தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப் பட்டார்கள்.
பிற்காலத்தில் ஜன்னத்துல் பகீ கபரஸ்தானின் எல்லை விரிவாக்கப்பட்டு உஸ்மான் ரலி அவர்களுடைய கப்ரும் பகீ இன் எல்லைக்குள் சேர்க்கப்பட்டது.
அருமை நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய ஒப்பற்ற உன்னதமான சமுதாயத்தில் பெருமானாருக்கு 25 வருடத்திற்குப் பிறகு நடந்த - எப்போது படித்தாலும் இதயத்தைப் பதற வைக்கிற நிகழ்வு இது.
பெருமானாரால் பல வழிகளில் பாராட்டப் பெற்றவர் –
அவருடைய உயர் பண்புகளால் பெருமானார் தன்னுடைய இரண்டு மகள்களை அவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள் – அதனால் துன்னூரைன் என்ற பாராட்டிற்குரியவர்.
தபூக் யுத்தத்தின் போது அவர் செய்த பேருதவிகளால் –( தேவையான பணத்தில் மூன்றில் ஒரு பங்கை கொடுத்தார் ) இனி உஸ்மான் என்ன செய்தாலும் பாதகமில்லைஎன்று பெருமானாரால் பாராட்டப்பட்டவருக்கா இந்த நிலை?
மனதை நொருங்கச் செய்கிற இந்தக் கேள்விக்கான பதில் மிக எதார்த்தமானது.
அரசியலில் இது நடக்கக் கூடியதே! இதைவிடக் கொடுமையாகவும் அரசியல் விளையாடும்.
ஷஹாதத்தின் அந்தஸ்தை இந்தப் பெருமக்களுக்கு தரவேண்டு என அல்லாஹ் நினைத்திருக்கிறான் என்று தான் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும்.   
அரசியல் என்பது எப்போதுமே அமைதி தவழக் கூடியதாக இருக்க முடியாது. சில நேரங்களில் அல்ல. பல நேரங்களில் இப்படித்தான் நடக்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற புதிதில் காந்திஜி சுட்டுக் கொள்ளப்பட்ட போது எப்படி ஒரு அதிர்ச்சி இந்திய மக்களுக்கு ஏற்பட்டது? அவர் என் இப்படிக் கொள்ளப்பட்டார்?
அமெரிக்க மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அழகான ஜனாதிபதி ஜான் எப் கென்னடி ஐம்பது வருடங்களுக்கு முன்னாள் அதிர்ச்சிகரமாக கொல்லப்பட்டார். (கடந்த வாரம் அவர் கொல்லப்பட்ட 50 வது நினைவு தினத்தை அமெரிக்க மக்கள் பெரும் திரளாக கூடி நினைவு கூர்ந்தனர்) அமைதிக்கு பெயர்பெற்ற இந்தியாவில் இந்திரா காந்தி சொந்த பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.  ஏன் இப்படி நடக்கிறது?
பதில் எளிதானது தான், அரசியலில்  துக்ககரமாக இருந்தாலும் இது  எதிர்பார்க்கப் படக்கூடியதே!
உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட்திலிருந்து இஸ்லாம் அரசியல் உலகில் புயல் வீசத்தொடங்கியது. அந்தப் புயல் தான் சுமார் இருபத்தைந்து வருடங்களாக சுழன்று கர்பலாவில் ஓய்ந்தது.  இந்தப் புயலில் தான் இஸ்லாமின் தூய் வரலாற்றில் பல கொள்கை குழப்ப வாதிகளை உருவாக்கியது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரத்தில் அந்தப் புயலின் பாதையில் நடந்த கோரத் தாண்டவங்களைப் பார்ப்போம்.
இப்போதைக்கு இந்த மூன்று விசயங்களை ஞாபகத்தில் வைப்போம்
1.   பெருமானார் (ஸல்) அவர்களின் வபாத்திற்கு பிறகு பரஸ்பர ஆலோசனையின் படி அபூபக்கர் சித்தீக் ரலி கலீபாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டரை வருடம் ஆட்சி செய்தாகள். (ஹிஜ்ரி 11 ரபீஉல் அவ்வல் 12 லிரூந்து ஹிஜ்ரி 13 ஜமாதில் ஆகில்ர் 22 வரை.)
2.   அவர் வபாத்தாகும் போது உமர் (ரலி) அவகளை அடுத்த ஆட்சியாளராக அறிவித்தார். முஸ்லிம்கள் அதை ஏற்றுக் கொண்டனர். பத்து ஆண்டுகாலம் அவரது சிறப்பான ஆட்சி நீடித்தது. ஹிஜ்ரி 13 ஜமாதில் ஆகில்ர் 22 லிருந்து ஹிஜ்ரி 23 துல் ஹஜ் 28 வரை)
3.   உமர் (ரலி) நியமித்த அலோசனைக்குழு உஸ்மான் ரலி அவர்களை அடுத்த கலீபாக தேர்ந்தெடுத்தது. அவர் 12 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். ஹிஜ்ரி 24 முஹர்ரம் 3 ம் பிறையிலிருந்து   ஹிஜ்ரி 35 துல்ஹஜ் 25 வரை.
உஸ்மான் ரலி கொல்லப்பட்ட பிறகு இஸ்லமிய அரசியலில் புயல் வீசத்தொடங்கியது.



No comments:

Post a Comment