வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 05, 2013

இஸ்லாமிய வரலாற்றில் சாதனையும் சோதனையும் 2

பாபர் பள்ளிவாசல் 1992 ம் ஆண்டு இதே போன்றதொரு டிஸம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது. அல்லாஹ் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இந்தியாவில் கண்ணியத்தையும் வெற்றியை தந்தருள்வானாகா! இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக! அதற்காக உழைக்கிற பாக்கியத்தை நமக்கு வழங்குவானாக! எதிரிகளின் சதித்திட்டங்களை அவர்களை நோக்கியே திருப்பி விடுவானாக்!                                                    ஒரு அரசியல் சூடு மிகுந்த சூழ்நிலையில் இஸ்லாமிய அரசியலின் தொடக்க கால நிகழ்வுகளை நாம் எண்ணிப் பார்ப்போம் நமக்கு அது நல்ல பல வழிகாட்டுதல்களை தரக்கூடும்.                                                                                                                எகிப்திலிருந்து வந்து மதீனாவில் திடீரென குழுமிய கிளர்ர்சியாளர்களால் உஸ்மான் (ரல்) அவர்கள் மிக கொடுமையாக கொல்லப்பட்ட நிலையில் அன்னாருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதே சிரம்மானதாக இருந்த்துஅந்த  கிளர்ச்சிக் குழுவின் ஆதிக்கமும் அடாவடியும் அந்த அளவு மிகைத்திருந்தது. அரசின் கஜானாவையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.
இந்த நெருக்கடியான நிலையில் மக்கா மதீனாவிலிருந்த மூத்த நபித்தோழர்கள்  ஹிஜ்ரி 35 ம் ஆண்டு துல் ஹஜ் பிறை 25 வெள்ளிக்கிழமை  அலி (ரலி) அவர்களை கலீபாவாக தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் அலி ரலி அவர்களின் ஆளுமையில்  மக்கா மதீனா உள்ளிட்ட பகுதிகள் இருந்தனவே  தவிர முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்திலும் இருக்கவில்லை
இஸ்லாமிய கலீபாக்கள் நான்கு பேர் என்று சொல்லப்பட்டாலும் முதல் மூன்று கலீபாக்கள் மட்டுமே முழு  இஸ்லாமிய நிலப்பரப்பையும் ஆட்சி செய்தனர்.
அலி ரலி அவர்களுக்கு சிரியா எகிப்து மண்டலங்கள் கட்டுப்பட்டு வரவில்லை.
சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா ரலி அலி ரலி அவர்களுக்கு பை அத் செய்து தரவில்லை தூரப்பிரதேசங்கள் முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன.
உஸ்மான் ரலி) அவர்களை கொன்றவர்களை முதலில் தண்டனை கொடுங்கள், பிறகு ஆட்சி பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்பது முஆவியா ரலி உள்ளிட்ட சில சஹாபாக்களின் கோரிக்கையாக இருந்த்து,
ஆட்சி இப்போது தான் கிடைத்திருக்கிறது, சற்று நிலை பெற்றவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், முதலில் நீங்கள் பை அத் செய்யுங்கள் என்பது அலி ரலியின் நிலையாக இருந்த்து,
இந்த இரண்டு அரசியல் நிலைப்பாடுகள் உணர்ச்சிமயமான பல போர்களை உண்டு பண்ணியது.  
ஜமல் சிப்பீன் யுத்தங்கள் முஸ்லிம்களின் முதல் ச்கோதரச் சண்டைகளாக நடந்தன. பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இவை எதுவும் தலைவர்களின் முழு விருப்பத்தின் படி நடந்தவை அல்ல. ச்ண்டையை தூண்டிய அரசியல் இடைத்தரகர்களின் தீய முயற்சிகளுக்கு சமுதாயம் பலியான நிகழ்ச்சிகளாகும்.
ஜமல் யுத்த்த்தில் அமைதிக்கான சூழல் உருவான பிறகு அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கல்லெறிதலில் ஈடுபட்டு சண்டையை உருவாக்கினா. சுபைர் தல்ஹா (ரலி) போன்ற பெரும் சஹாபாக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அப்போது அலி (ரலி) யின் மனோ நிலை எப்படி இருந்த்து என்பதை இந்த ஹதீஸ் புலப்படுத்துகிறது,.
 فروى ابن ابي شيبة في مصنفه بسند صحيح عن الحسن بن علي قال: "لقد رأيته - يعني علياً - حين اشتد القتال يلوذ بي ويقول: يا حسن، لوددت أني مت قبل هذا بعشرين حجة أو سنة".
وروى ابن ابي شيبة بإسناده إلى حبيب بن أبي ثابت أن عليّاً قال يوم الجمل : " اللهم ليس هذا أردتُ اللهم ليس هذا أردتُ".
இந்த நிகழ்வுகளை முழுமையாக கூர்ந்து கவனித்தால் தனிப்பட்ட வாழ்விலும் போதுவாழ்விலும் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான பல படிப்பினைகளை நாம் அறிந்து கொள்ளலாம். அந்த் நோக்கத்திற்காக மட்டுமே இந்த நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ளலவும் பேசவும் முற்பட வேண்டும்
இவ்விரு சஹாபாக்க்க்குள் இடைப் புகுந்து கருத்துக் சொல்கிற உரிமையும் தகுதியை முஸ்லிம் சமுதாயத்திற்கு இல்லை. காரணம் இவ்விருவருமே சஹாபாக்கள் நபித்தோழர்கள்,.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ - البخاري  3673
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில்/ உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறைவழியில்) செலவு செய்த ஒரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது. இதை அபூசையீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அலி ரலி அவர்களுக்கும் முஆ வியா ரலி அவர்களுக்கும் நடந்த யுத்தங்கள் தொடர்ந்து உறுதியான முறையில் நடந்திருந்தால் சமுதாயத்திற்கு ஒரு முடிவு கிடைத்திருக்கும்.

சிப்பீன் யுத்த்தின் முடிவில் முஆவியா ரலி ன் படைகள் தோற்றுப் போக இருந்த தருணத்தில் அப்படையின் வீர்ர்கள் வாளுக்குப் பதிலாக குர் ஆனை கையில் ஏந்தி சண்டைக்கு வந்தனர். இது தந்திரம் இதை ஏற்க வேண்டாம் தொடர்ந்து போரிடுங்கள் என தீட்சண்யமாக (அலி) அவர்கல் சொன்னதை அவருடைய படையிலிருந்தே ஒரு சாராரா ஏற்கவில்லை, அவர்கள் அலி ரலியின்  படையிலிருந்து வெளியேறினர். அதனால் அவர்கள் ஹாரிஜிகள் (வெளியேரியோர்) என அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்காக பல புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டனர். தங்களை தூய முஸ்லிம்கள் என்றும் சஹாபாக்கள் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை மார்க்கமற்றவர்கள் என்றும் கருதினர், இஸ்லாத்தில் உருவான முதல் கொள்கைப் பிரிவு காரிஜிய்யாக்கள்.

அரசியலின் தலைமைப் பீட்த்திலிருக்க சஹாபாக்களை ஒரே நாளில் சுபுஹ் தொழுகைக்கு வரும் போது கொல்வது என்று காரிஜிய்யாக்கள் திட்டம்  தீட்டினர், இரகசியாமாக செயல்பட்டனர்.

தங்களைச் சுற்றி பாதுகாவலர்களையோ மெய்க்காவலர்களையோ வைத்துக் கொள்ளாத சஹபாக்கள் இந்தச் சதித்திட்டங்களை அறிந்திருக்கவில்லை

ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் மட்டும் அவர்களது திட்ட்த்திற்கு பலியாகி ஷஹீதானார்கள்.

சஹாபாக்கள் இரண்டு அணியாக இருந்த நிலையில் அவ்விருவரில் யாராவது ஒருவரின் அணியில் மக்கள் சார்ந்திருந்தால் பிரச்சினை இரு தீர்வுக்கு வந்திருக்க்ம். ஒரு புதிய அணி உருவான போது அது பிரச்சினை வேறு வடிவத்திற்கு மாற்றி கொள்கை குழப்ப வாதிகள் உருவாக காரணமாயிற்று,

சஹாபாக்களுக்கு எதிராக ஒரு தான் தோன்றிக் கூட்டம் தங்களை தூயவர்கள் என்று சொல்ல்கிக் கொண்டு உருவான  அதே நேரத்தில் அலியின் சார்பாள்ர்கள் என்ற கோஷத்தோடு அலி ரலி அவர்களுக்கு சம்மதமில்லாத ஒரு கூட்டம் உருவாயிற்று அவர்கள் தான் ஷியாக்கள். காரிஜிய்யாக்கள் அன்றைக்கு அரசியலிருந்த சஹாபாக்களை பொதுவாக இழிபடுத்தி ஒரு அமைப்பாக மாறினார்கள் என்றால் இவர்கள் (ரலி) அலி அவர்களை மட்டும் நல்லவராக்கி மற்ற சஹாபாக்களை தீயவர்களாக்கி அரசிய்லில் குழு சேர்க்க முயன்றனர்,

அலி ரலி அவர்கள் 4 ஆண்டுகள் 9 மாதம் அவர் ஆட்சி செய்தார்.

அதன் பிறகு அலி (ரலிமகன் ஹஸன் (ரலி அவர்களுக்கு மக்கா மதீனா உள்ளிட்ட பகுதி மக்கள் பைஅத்  சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள்.

அப்போதும் சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்களுடன் பிரச்சினை தொடர்ந்த்து,


முஸ்லிம்கள் தங்களுக்குள்  சண்டையிட்டுக்  கொள்வதை  விரும்பாத ஹஸன் (ரலி)  அவர்கள்  அதிகாரத்தை  திறமை மிக்க முஆவியா (ரலிஅவர்களுக்கு விட்டுக் கொடுத்தார்.

வரலாறு ஹஸன் (ரலி) அவர்களை வானளாவப் புகழ்கிறது. நபிகள் நாயம் (ஸல்) அவர்களைப் போல தோற்றம் கொண்டிருந்த அவர் குணத்திலும் பெருமானார் (ஸல்) அவர்களைப் போல மிகவும் எதார்த்த்தை உணர்ந்து செயல்படக்கூடியவராக மிக அற்புதமான மனிதராக ஹஸன் (ரலி)அவர்கள் திகழ்கிறார்.

அப்படி விட்டுக்க் கொடுக்க முன்வந்த ஹஸன் (ரலிஅவர்கள்  தான்  விரும்பிய  ஷரத்துக்களை எழுதிக்  கொள்வதற்காக  முஆவியா (ரலிவெற்றுத்  தாளில் கையெழுத்திட்டு வழங்கினார் என்பதும் கவனிக்க வேண்டிய வரலாறாகும்,

வெகு தூரத்திற்குப் பரந்து பட்ட ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தகுதிவாய்ந்த அரசியல்வாதியக்வே முஆவியா ரலி அவர்களின் செயல்பாடு இருந்த்து.

முஆவியா (ரலி) தன்னுடை மரணத்திற்குப் பிறகு ஆட்சியைஹஸன் (ரலி) அவர்களிடம் தருவதாக ஒப்புக் கொண்டார்.

ஹஸன் (ரலி) 6 மாதம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

وبعد وفاة عليّ بويع لابنه الحسن بالخلافة في العراق، لكن ما لبث الحسن أن تنازل لمعاوية تجنباً لإراقة دماء المسلمين في حرب داخلية، ، وكان الذين بايعوا الحسن 40000 أو نحو ذلك من أهل العراق لكنه رأى أن الحرب الداخلية تضعف المسلمين إذ قتل كثير من كبار الصحابة في موقعة الجمل وصفين بسبب النزاع على الخلافة، وأخيراً قتل أبوه غدراً فآثر اجتناب الحرب بأن ترك الأمر لمعاوية بعد أن اشترط عليه شروطاً قبل بعضها ورفض البعض الآخر وانتقل إلى المدينة تاركاً كل عداء،
اشترط الحسن على معاوية أن تكون له الخلافة بعده

சில காலம் கடந்த நிலையில்இஸ்லாம்  பெருமளவில் வளர்ச்சியுற்ற  சூழலில்  முஆவியா (ரலிவிடம் அவரது  மகன் யஜீதை  அடுத்த  ஆட்சியாளராக  நியமிக்குமாறு  ஆலோசனை கூறினார் முகீரது பின் ஷுஅபா (ரலி)

இஸ்லாமிய அரசிய்லில் மன்னராட்சிக்கான முதல் வித்து அப்போது தான்  விதைக்க்ப பட்டது

அந்த பேச்சின் நோக்கமும் அரசியல் ரீதியாக சரிகாணப்படுவதாகவே அமைந்த்து,
ஏனெனில் அப்போது இஸ்லாமியப் பேர்ரசு டமாஸ்கஸை  தலைமையாகக்  கொண்டு  வெகுதூரத்திற்கு  பரவி  இருந்தது

முஆவியா (ரலி) பெருமானாருக்கு வஹி எழுதுபவ்ராகஇருந்தவர். முகீரா ஹுதைபிய்யாவின் போது பெருமானார்(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தவர்களில்ஒருவர்.

இவர்களில் எவரையும் குறை கூறலாகாது. அரசியல் என்பதுஇப்படித்தான் சூழ்ச்சித் திறன் நிறைந்த்து.

அரசியலில் பயன்படுத்தப்படும்  டிப்ளமஸி  என்றவார்த்தைக்கு சூழ்ச்சித் திறன என்பது பொருள்.

இதில் யார் வெளியே தெரியாதவாறு காரியம் ஆற்றுகிறாறோஅவர் சிறந்த அரசியல் வாதி ஆகிறார். சூழ்ச்சித் திறன்இல்லாதவர்கள் பெரிய ஆட்சியாளர்களாக இருக்க முடியாது.

முஆவியாவுக்குப் பிறகு அவரது மகன் யஜீத் (ரலி) ஆட்சிப்பொறூப்பேற்றார்.

இதை ஏற்காத ஏராளமான மக்கள் பழைய தலைநகரானகூபாவிலிருந்து இராக்கின் மற்ற பகுதியிலிருந்தும் ஹுசைன்(ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதினர். ஹுசைன் (ரலி அவர்கள்முன்வந்தால் தாங்கள் அவருடன் சேர்ந்து போராடுவதாககூறினர்.  சுமார் 12 ஆயிரம் கடிதங்கள் வந்தன.

فاجأ معاوية بن أبي سفيان الأمة الإسلامية بتعيين ابنه يزيد بن معاوية للخلافة من بعده مخالفا الصلح الذي عقده مع الحسن بن علي، وبدأ في أخذ البيعة له في حياته ترغيبا وترهيبا، في سائر الأقطار الإسلامية، ولم يعارضه سوى أهل الحجاز، وتركزت المعارضة في الحسين بن علي، وعبد الله بن عمر، وعبد الله بن الزبير .وضع الإمام الحسين نصب عينيه نصيحة أبيه علي بن أبي طالب عندما أوصاه والإمام الحسن قبل وفاته قائلاً: «أوصيكما بتقوى الله ولا تطلبا الدنيا وإن طلبتكما ولا تأسفا على شيء منها زوي عنكما افعلا الخير وكونا للظالم خصماً وللمظلوم عوناً»

 توفي معاوية بن أبي سفيان سنة 60 هـ، وخلفه ابنه يزيد؛ فبعث يزيد إلى واليه بالمدينة لأخذ البيعة من الحسين الذي رفض أن يبايع "يزيد" كما رفض- من قبل- تعيينه وليًا للعهد في خلافة أبيه معاوية، وغادر من المدينة إلى مكة لحج بيت الله الحرام، فأرسل إليه يزيد بأنّه سيقتله إن لم يبايع حتى ولو كان متعلّقا بأستار الكعبة.فاضطر الامام الحسين  لقطع حجّته وتحويلها إلى عمرة فقط وخرج ومعه أهل بيته وأكثر إخوته وأطفاله من مكة قاصدا الكوفة بعدما أرسل له الآلاف من أهلها الرسائل بأن أقدم فليس لنا والعادل وإنا بحاجة إلى إمام نأتم به.

 فسار ومعه نفر قليل من أهله وصحبه ولم يعبأ برأي من نصحه بالعدول عن المسير، فلما علم يزيد بذلك ولَّى عبيد الله بن زياد على الكوفة وعزل النعمان بن بشير إذ قيل عنه إنه ضعيف وعيّن ابن زياد عمر بن سعد قائداً على جيش يبلغ عدده 4000 لمحاربة الحسين، فحاربه في كربلاء وهي قرية على بُعد 25 ميلاً من شمال غربي الكوفة

وكانت قوات الحسين تتألف من 32 فارسا و 40 راجلا وأعطى رايته أخاه العباس بن علي وقبل أن تبدأ المعركة لجأ جيش ابن زياد إلى منع الماء عن الامام الحسين وأهل بيته و صحبه، فلبثوا أياماً يعانون العطش في جو صحراوي شديد الحرارة.

فقتل الحسين في هذه المعركة بعد أن جرح جراحات كثيرة وقتل من كان معه وأرسل رأسه إلى يزيد بدمشق



பெருமானார் (ஸ்ல) அவர்களது பேரர் ஹுசைன் (ரலி)அவர்கள் கொல்லப் பட்ட்து  மிகவும் துக்க கரமானது.சோகமயமானது.

ஆனால் அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்தான்.அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களின் கொல்லப் பட்டதில்கடும் துயரமடைந்த போதும், தீனின் முன்னோடிகளுக்குஎதிராக திரும்பவில்லை. இதை ஒரு அரசியல் சோகம் என்றஅளவில் எடுத்துக் கொண்டனர். அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இது போல ஏராளமானதுய்ரச் சம்பவங்கள் உள்ளன. சுமைய்யா (ரலி) அம்மார் (ரலி)ஹம்ஸா (ரலி) போன்றவர்களுக்கு ஏற்பட்ட சோகமும் இதுபோன்றதே!

கர்பலாவில் இமாம் ஹிசைன் (ரலி) கொல்லப் பட்டதுகுடியரசுக்கான - மக்களாட்சிக்கான போராட்ட்த்தில் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் எந்த அளவு ஈடுபாடு  காட்டவேண்டும் என்பதற்கு முன்னுதாரணாமாகிவிட்டது.


تركت واقعة كربلاء تأثيرا بليغا على أفكار بني الإنسان حتى غير المسلمين منهم. فعظمة الثورة وذروة التضحية، والصفات الأخرى التي يتحلى بها الحسين وأنصاره أدّت إلى عرض الكثير من الآراء حول هذه الثورة الملحمية
قال غاندي، زعيم الهند :
لقد طالعت حياة الإمام الحسين، شهيد الإسلام الكبير، ودققت النظر في صفحات كربلاء واتضح لي أن الهند إذا أرادت إحراز النصر، فلا بد لها من اقتفاء سيرة الإمام الحسين.

இந்தியா சுதந்திரம் மடைய விரும்பினார் ஹுசைன் (ரலி)அவர்களின் வரலாறு போதும் என்றார் காந்தி .

பிரபல அமெரிக்க வரலாற்றாசிரியர்  வாஷிங்டன் இர்விங் சொன்னார்;
இமாம் ஹிசைன் விரும்பி இருந்தால் சரணடைந்து எளிதாகதப்பித்திருக்கலாம். ஆனால்


பனூ உமய்யா குடும்ப ஆட்சிக்கு இஸ்லாம் கட்டுப்பட்டுவதிலிருந்து காப்பதற்காக எந்த துயரத்தையும் தாங்கிக்கொள்ள் அவர் தயாரானார். கர்பலாவின் மணற்பரப்பில்ஹுசைன் (ரலி) அவர்களின் உடல் சரிந்தாலும். அவரதுஆன்மா இன்னும் எஞ்சியிருக்கிறது,                                                                                                                                      அதே நேரத்தில் இந்த அரசியல் நிகழ்வை பயன்படுத்தி சமயச்சைகளை ஷியாக்கள் உருவாக்கினார்கள். அவர்கள்து அரசியலே அவர்களுக்கும் மார்கக்மாக மாறிவிட்டது. அரசியல் தேவைகளுக்காக மார்க்கத்திற்கு முரணான பல் வேறு காரியங்களையும் அவர்கள் செய்யத் தொடங்கி கடையிசில் இஸ்லாத்தின் எதார்த்தமான போக்கிலிருந்து முற்றிலுமாக அவர்கள் அன்னியப்பட்டு விட்டனர். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை பொதுவாக அல்லாஹ் பாதுகாத்தான்,ஹுசைன் ரலி அவர்களின் இறப்ப் வருந்ததிற்குரிய என்றாலும் அது அரசியல் ரீதியிலானது என்பது அவர்கள் தெளிவடைந்தனர், இந்த வரலாற்றை தெளிவாக புரிந்து கொள்வது முஸ்லிம் தலைமுறையின் கடமையாகும்.

No comments:

Post a Comment