வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 21, 2013

அஹ்லுல் பைத் நபியின் குடும்பம்


وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا(33)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குள்ள் தனிச்சிறப்புக்களில் ஒன்று அவர்களுடைய பெயர் சொல்லப்படுகிற இடங்களில் அவருடையை குடும்பத்தாரும் வாழ்த்தப்படுவார்கள்.

பெருமானார் (ஸ்ல) அவர்களுடைய குடும்பத்த்ரை வாழ்த்துவதும் கண்ணியப்படுத்துவதும் முஸ்லிம்களின் கடமையாகும்.

தன் மீது எப்படி சலவாத்து வாழ்த்துச் சொல்வது என்பதை விவரித்த நபி (ஸல்) அவர்கள். இவ்வாறு சொல்லித்தந்தார்கள்.

இறைவா! முஹம்மதின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீது அருட்செய்வாயாக! இபுறாகீமின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் அருட்செய்த்து போல. முஹம்மதின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் பாக்கியங்களை பொழிவாயாக! இபுறாகீமின் மீதும் அவருடைய குடும்பத்தின்ர் மீது பொழிந்த்து போல!

அலா ஆலிஹிஎன்ற வார்த்தைக்கு அவருடைய குடும்பத்தார் என்று பொருள்,

ஷாபி மதஹபில் அதிகாலை பஜ்ரு தொழுகையின் போது ஓதப்படுகிற குனூத்தில் பெருமானாரின் மீது சலாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்க வேண்டும் என்பது போல பெருமானாரின் குடும்பத்தினர் மீது சலவாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்கவேண்டும் என்று சட்டம் சொல்லப் பட்டிருக்கிறது.

பெருமானாரின் குடும்பத்தை நேசிப்பது அவர்கள் விச்யத்தில் நல்லெண்ணம் கொள்வது நிபாக்கிலிருந்து காப்பாற்றும் என்று தஹாவி கூறுகிறார்,

ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).
- متن العقيدة الطحاوية

பெருமானாரின் குடும்பத்தார் விச்யத்தில் அலட்சியம் காட்டுவது நிபாக்காகி விடும்.

பெருமானாரின் குடும்பம் எது?

நபிகள் நாயகத்தின் முப்பாட்டனார் ஹாஷிமுடைய வாரிசுகளில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் குடும்பம் என்று கருதப்படுவர். இதன்படி அப்பாஸ் (ரலி) அபூதாலிபின் மகன்களான அலீ ஜாபர் உகைல் ஆகியோரும் நபியின் குடும்பத்தினர்களாக கருதப்படுவார்கள்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாத்தின் கருத்தின் படி பின்வருவோர் அனைவரும் பெருமானாரின் குடும்பத்தினராக கருதப் படுவர்.
·         நபி (ஸல்)
·         அவர்களுடைய குழந்தைகள்
·         அவர்களுடைய மனைவியர்
·         பெருமானாருடைய பாட்டனார் ஹாசிம் குடும்பத்தைச் சார்ந்த
·         அப்பஸ் பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள்
·         அகீல் பின் அபீதாலிபின் வாரிசுகள்
·         ஜஃபர் பின் அபீதாலிபின் வாரிசுகள்
·         அலீ பின் அபீதாலிபின் வாரிசுகள்
·         ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள்
·         அபூலஹ்பு பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள்
·         இவ்ர்களின் வாரிசுகளில் இன்று வரையுள்ள உறுப்பினர்கள்.
·         சல்மான் பார்ஸி (ரல்)

இவர்களில் சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்த்த்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர்.  அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியக நின்றார்.  மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்சல்மான எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர் என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

குலப் பெருமை கோலோச்சிக் கொண்டிருந்த அன்றைய அரபகத்தின் சூழலில் ஒரு அன்னியரை தம்மவராக்கிக் கொண்ட பெருமானாரின் பெருந்தன்மை புரட்சிகரமானது. குலப்பெருமையின் ஆணிவேரையே அசைத்துப் போட்ட்து.


நபியின் குடும்பம் பற்றி ஒரு நபிமொழி இப்படி வருகிறது.

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719

நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான உமர் பின் அபீசலமா கூறுகிறார்;
““நபியின் குடும்பத்தினரான் உங்களை சுத்தப்படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான் என்ற திருக்குர் ஆனின் வசனம் நபியவர்கள் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்ட்து. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி(ரல்) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு இறைவா!இவர்களே என் குடும்பத்தினர் இவர்களைவிட்டு அசுத்த்த்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள்.  அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ உனது அந்தஸ்தான இட்த்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719

இந்நபி மொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறது.மருமகன் அலி (ரலி) யை அணைத்துக் கொண்டிருந்த்தால அந்த இட்த்டில் உம்முசலமாவை பெருமானார் (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். 

அதனால் பெருமானாரின் மனைவியரும் பெருமானாரின் குடும்பத்தினர்களே என்பது தான் அஹ்லுஸ்ஸூன்னத் வலஜமாஆவின் கருத்தாகும். இது சம்பந்தப்பட்ட திருக்குர் ஆனிய வசனம் (அஹ்ஸாப் 33 )  நபியின் மனைவிமார்மக்ளுக்கான உத்தவுடன் தொடங்குகிறது. எனவே பெருமானாரின் குடும்பம் என்பதில் அவர்களுடைய மனைவியரும் அடங்குவர்.

பெருமானாரின் குடும்பத்தின் மரியாதை என்பது சலுகைகளுக்காக அல்ல தியாகத்திற்காக கட்டுப்பாடுகளுக்காக. 

இன்றைய உலகியல் நடைமுறையிக் தலைவரின் குடும்பம் என்றால் அது சலுகைகளை அனுபவிப்பதற்கு உல்லாசமாக வாழ்வதற்குமான அடையாளம் என்பது தான் உலகின் வழக்கம், ஆனால் முஹம்மது ஸ்ல்) அவர்களின் குடும்பம் என்பது அவர்களுக்கு சலுகையாக இல்லாமல் அதிகப்படியான கட்டுப்பாடுகளையே அக்குடும்பத்திற்கு கொடுத்த்து.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது மக்ள பாத்திமாவை நோக்கி மகளே! நீ எனது மகள் என்பதால் தப்பித்துக் கொள்ள முடியாது என எச்சரித்துள்ளார்கள். 

சாமாண்ய முஸ்லிமுக்கு என்னென்ன சமயக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளனவோ, அவை பெருமானாரின் குடும்பத்தை சார்ந்தவருக்கும் உண்டு. இதில் எந்தச் சலுகையும் அவருக்கு இல்லை. தொழுகை போன்ற கடமையான வழிபாடுகளிலும், திருமணம் போன்ற சுன்னத்துகளிலும், குற்றவியல் சட்டங்களிலும் சாமாண்ய முஸ்லிமுக்கும் நாயகத்தின் குடும்பத்திற்கும் எந்த வேறூபாடும் கிடையாது.
ஒரு முறை திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்மணிக்காக பரிந்து பேசிக் கொண்டு உஸாமா எனும் நபித்தோழர் நாயகத்திடம் வந்த போது, அவரை கடுமையாக எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவருக்கு உரிய தண்டனை த்ருவேன் என்று சொன்னது யாராலும் மறக்க முடியாத உலகப் புகழ் பெற்ற வாசகமாகும்.

தனது மகள் பாத்திமாவின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட அவர்கள் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல தயங்கவில்லை. இதன் மூலம் சமுதாயத்திற்கு எத்த்கைய பெரும் வழிகாட்டுதல் கிடைக்கிறது பாருங்கள்!   

தலைவரின் குடும்பம் என்ற சொல்லை அதிக செல்வாக்குடைய குடும்பம் என்ற அர்த்த்தில் தான் நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இஸ்லாமிய வழக்கில் நபியின் குடும்பம் என்ற் சொல்லோ அதிக கட்டுப்பாடுடையவர்கள் என்ற அர்த்த்த்தையே கொண்டிருக்கிறது.

இறைத்தூதர்களின் குடும்பத்தினர் சம்யத்திற்காக அதிக சிரமத்தை தாங்கிக் கொள்ப்வர்களாக இருந்தார்கள். அது தான் அவர்களுக்கு விசேஷமாக கிடைத்த வாழ்க்கை.

பெருமானாரின் குடும்பத்தாரின் சிறப்புக்கள்

மனிதக் குடும்பங்களில் சிறந்த பரிசுத்தமான குடும்பம்قال رسول الله -صلى الله عليه وسلم-: (إن الله اصطفى كنانة من ولد إسماعيل، واصطفى قريشاً من كنانة، واصطفاني من بني هاشم- رواه مسلم (2276)

தர்மப் பெருளை  சாப்பிடக் கூடாது
قال-صلى الله عليه وسلم-: (إن هذه الصدقات إنما هي أوساخ الناس، وإنها لا تحل لمحمد، ولا لآل محمد


என்னே ஆச்சரியமான சிறப்பு பாருங்கள்!
தலைவரின் குடும்பம் என்றால் வகை தொகை இல்லாமல் சாப்பிடலாம்.


இன்று, சீக்கிரமாக பெருமளவில் பிரம்மாண்டமாக காசு சம்பாதிக்கிற எளிய வழியாக சமயம் ஆகிவிட்ட்து. மில்லிய்ன்ராவது பள்ளிக் கூடம் தொடங்குங்க்கள்; மல்டி மில்லியனராவதற்கு சாமியாராகி விடுங்கள் என்று சொல்லப்படுமளவு சமயத் தொண்டு என்பது இன்று பொருளாதார மயமாகிவிட்ட்து. ஆனால் உணமையான சமயச் சான்ரோர்களான இறைத்தூதர்களின் இயல்பும் எதார்த்தமும் தர்மப் பொருளையும் தங்களது குடும்பத்தை விட்டு தள்ளிவைப்பதாகவே இருந்த்து.

தலைவரின் குடும்பத்தின்ர் அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பெருமளவில் காசு பணம் சம்பாதித்து விடுவதை வரலாற்றுக் கால்ந்தொட்டு இன்று வரை

நாம் பார்த்து வருகிறோம். முஹம்மது (ஸல்) அவர்களோ தம்து குடும்ப்த்தினர் எவரும் தர்மப் பொருட்களை தொடக்கூடாது என்று தடை செய்தார்கள்.

ஒரு முறை சதகாவாக நபிகள் நாயகத்தின் வீட்டு முற்றத்தில் வைக்கப் பட்டிருந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நாயகத்தின் பேரர் ஹசன் (ரல்) அவர்கள் எடுத்து வாயில் போட்டு விட்டார். இதைப் பார்த்த நபியவர்கள் வேகமாகாக வந்து அவரை அதை துப்பும் படி செய்தார்கள்.

அதே போல தனது சொத்துக்களுக்கு யாருக்கும் வார்சுரிமையாக் கிடைக்காது என்றும். தான் விட்டுச் செல்கிற சொத்துக் கள் முஸ்லிம்களின் பொது தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தப் பட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்)  உத்தரவிட்டார்கள். (அவர் தனக்கென பெரிதாக சொத்து எதையும் சேர்க்கவில்லையும் அவரது குடும்பம் பசியிலும் பட்டினியிலும் வாடியபடிதான் பல காலம் வாழ்ந்த்து என்பதும் வேறு விசயம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ  - البخاري -3096

   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசு) பஙகாக பெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்கு சேரவேண்டிய வாழ்க்கைச் செலவு என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தருமமேயாகும்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ – البخاري

அஹ்லு பைத்துகள் அமைதியின் சின்னங்கள்
·       بقاؤهم أمان للأمة واقتفاؤهم نجاة لها
عن زيد بن أرقم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم خطب فحمد الله وأثنى عليه ثم قال: (أَما بعد أَلا أيها الناس فإنما أَنا بشر يوشك أن يأتيني رسول ربي فأجيب وأنا تارك فيكم ثقلين أَولهما كتاب الله فيه الهدى والنور فخذوا بكتاب الله وتمسكوا به فحث على كتاب الله ورغب فيه ثم قال وأهل بيتي) وفي لفظ: (كتاب الله هو حبل الله المتين من اتبعه كان على الهدى ومن تركه كان على الضلالة) رواه مسلم.
எனக்கும் மரண தூதர் வருவார். எனக்குப் பின் கிதாபையும் எனது குடும்பத்தினரையும் பற்றிக் கொள்ளுங்கள்

அறுவறுப்பான நடத்தையிலிருந்து பெரும்பாலும்  பாதுகாக்கப் படுவார்கள். அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பான.

الطهارة تارة تكون من الأعيان النجسة، وتارة من الأعمال الخبيثة، وتارة من الأعمال المانعة،
فمن الأول قوله تعالى: ﴿ وَثِيَابَكَ فَطَهِّرْ ﴾ المدثر:4 على أحد الأقوال.     
ومن الثاني قوله تعالى: ﴿ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا ﴾ الأحزاب:33.
ومن الثالث قوله تعالى: ﴿ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا ﴾ المائدة:
6.

நபியின் குடும்பத்தார் விச்யத்தில் - சமுதாயத்தின் கடமை என்ன?

عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ –بخاري – 3713
அபூபக்கர் (ரலி) கூறினார்:
நபியின் குடும்பத்தார் விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

முஹ்ம்மது (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் விசயத்தில் எச்சரிக்கையாக நட்ந்து கொள்வதன் மூலம் பெருமானரின் உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தொல்லை தந்து விடாதீர்கள். தீங்கிழைத்து விடாதீர்கள். என்பது இந்த வாசக்த்தின் கருத்து என புகாரியின் விரிவுரையாளர் இபுனு ஹஜர் கூறுகிறார்.
والمراقبة للشيء المحافظة عليه , يقول احفظوه فيهم فلا تؤذوهم ولا تسيئوا إليهم . فتح
சலவாத் சொல்ல வேண்டும்.
يـا أهل بيت رســـول الله حُبكـــم     
 فـرضٌ مــن الله فـي القـرآنِ أنزله
يكـفيكم مــن عظـيم الفخـــر أنكم   
 مـن لـم يصــل عليكم لا صلاة لـه

நேசித்த்ல்

பெருமானாரின் குடும்பத்தினரை நேசிப்பது இரண்டாவது கடமையாகும். ஒருவரை நேசிப்பதன் முழு அடையாளம் அவரது குடும்பத்தை நேசிப்பதன் மூலமே நிறைவ்டைகிறது.

யாராவது ஒருவர் இன்னொரு ச்கோதர்ரைச் சுட்டிக் காட்டி எனக்கு அவரை நல்லா புடிக்கும். ஆனல் அவரது குடும்பத்தை பிடிக்காது என்று சொன்னால் அது முழுமையான பற்றல்ல

சமுதாயம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு தனிப்பட்ட பாடம் இது. ஒருவரை நாம் நேசிப்பதன் முழு அடையாளம் அவரைச் சார்ந்த அவரது குடும்பத்தினரையும் நேசிப்பதாகும். அப்போதுதான் நாம் யாரை நேசிக்கிறமோ அவர் நம்மை முழுமையாக நேசிப்பார். இல்லை என்றால் இரயில் சிநேகம் போல் அது அழுத்தமற்ற நட்பாகத்தான் இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் அனைவர் விசயத்திலும் இது பொருந்தும்.

அந்த வகையில் நபியை நேசிப்பது போல அவரது குடும்பத்தினரை நேசிக்க நாம பழகவும் முயலவும் வேண்டும். நபியின் குடும்பத்தினர் ஒருவர் உறுதியாக அடையாளம் காணபடுகிற பட்சத்தில் அவர் மீதும் நாம் நேசம் கொள்ள வேண்டும். அதுவே நாம் நபியை நேசிப்பதன் சரியான அடையாளமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِي إبن ماجة
எனது பேரர் ஹசன் ஹுசைன் (ரலி) ஆகியோரை நேசிப்பவர் என்னை நேசிக்கிறார். அவ்விருவரை கோபிக்கிறவர் என்னையே கோபிக்கிறார்.

உமர் (ரலி) காட்டிய நேசம்
وقال عمر للعباس-رضي الله عنهما-:(والله، لإسلامك يوم أسلمت كان أحب إليَّ من إسلام الخطاب لو أسلم؛ لأن إسلامَك كان أحبَّ إلى رسول الله من إسلام الخطاب)..
நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விசய்மாக நபித்தோழர்கள் கருதினார்கள்

؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-
தீது நினைப்பதும் தொல்லை தரவும் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை பழிப்பதோ, இவர்களெலாம் என்ன வாரிசுகள் என்று இழிவாகப் பேசவோ, வேறு வகைகளில் அவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்ளவோ கூடாது.  
அவர்களிடம் ஏதேனும் ஒரு குறை தென்பட்டால் பெருமானாரின் குடும்பம் என்பதை தொடர்பு படுத்தியோ சுட்டிக்காட்டியோ பேசிவிடக்கூடாது. இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியது ஈமானிய பண்பு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்:
நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த்தும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும் என்றார்கள் (இப்னுமாஜா)

عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة

பெருமானாரின் குடும்பத்தாரை மதிப்பதும் நேசிப்பதும் ஈமானிய குணம், அவர்களை அலட்சியப் படுத்துவதும் துன்புறுத்துவம் ஈமானிற்கு எதிரான குணம் என்பதை நினைவில் கொள்கிற அதே நேரத்தில் பெருமானாரின் குடும்பத்தின் மீதான நேசம் என்ற பெயரில் இஸ்லாமின் வரையறைகளை தாண்டிச் சென்று விடக்கூடாது என்பதை மற்ந்து விடலாகாது.

தனது மகன் இபுறாகீம் (ரலி) தீடீரென இறந்த போது பெருமானார் அதிகம் கவலைப் பட்டார்கள். துயரம் தாளாது அழுதார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட்து. பெருமனாரின் மீது அலாதியான நேசம் கொண்ட சில நபித்தோழர்கள். பெருமானாரின் குழந்தை இறந்த்தற்காக சூரியன் துக்கம் அனுஷ்டிக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். தோழர்களின் இந்த நம்பிக்கையை கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் தனது சொந்த துக்கத்தை பொருட்படுத்தாமல் தோழர்களை ஒன்று கூட்டி யாருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை.  அது இறைவனது வல்லமைக்கான சான்றுகளில் ஒன்று என்று தெரிவித்தார்கள்.

ஒரு அரசியல் தலைவராக மக்களின் அனுதாபத்தை லாபமாக்கிக் கொள்ள நினைக்காமல் ஒரு சம்யத்தின் தலைவராக மக்களின் நம்பிக்கையை சுத்தப் படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மீதான அன்பை,அல்லது தனது குடும்பத்தினர் மீதான அன்பை வெளிப்படுத்துவதில் சமுதாயம் எல்லை கடந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்!

அஹ்லுபைத்துக்கள் விச்யத்தில் முக்கியமான இரண்டு வழிகாட்டுதல்கள் கவனிக்கப்பட வேண்டியவை

1.   நபியின் குடும்பத்தவர்கள்  நேசத்திற்குரியவர்கள் மரியாதைக்குரியவர்கள்  எனினும் எல்லா வித்த்திலும் அவர்கள் சிறந்தவர்கள் என்ற அர்த்தம் அல்ல.. நபித்தோழர்களில் சிலரை பெருமானார் (ஸல்)  அவர்கள் பொதுவாக சிறப்பித்துக் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்  நபியின் குடும்பத்தவர்களை விடச் சிறந்தவர்கள் ஆவார்கள். அபூபக்கர் உமர் உஸ்மான (ரலி) பெருமானாரின் மனைவியருள் தனிச்சிறப்பு வாய்ந்த்வர்கள் பொதுவாக சிறந்தவர்கள் ஆவார்கள்.

இதை அஹ்லு பைத்துக்கள் புரிந்து மரியாதை செய்தனர்

உமர் ரலி அவர்கள் குளீப்பாட்டி சந்தூக்கில் வைக்கப்படும் போது அலி ரலி சொன்னது இது

فعن ابن عباس، قال:(إني لواقف في قوم، ندعوا الله لعمر بن الخطاب وقد وضع على سريره، إذا رجل من خلفي قد وضع مرفقه على منكبي فقال: رحمك الله، إن كنت لأرجو أن يجعلك الله مع صاحبيك؛لأني كثيراً ما كنت أسمع رسول الله يقول:(كنتُ وأبو بكر وعمر، وفعلتُ وأبو بكر وعمر، وانطلقت وأبو بكر وعمر) فإن كنت لأرجو أن يجعلك الله معهما، فالتفتُّ فإذا عليُّ بن أبي طالب  - رواه البخاري (3677)இரண்டாவதாக நபியின் குடும்பத்தை அல்லாஹ் பரிசுத்தப் படுத்தியிருப்பதாக குர் ஆனில் கூறியிருப்பதன் பொருள் அவர்கள் தவறான வழியில் செல்லாத வகையில் அவர்களுக்கு நேர்வழி காடுவான் என்பதாகும். تطهير بالشريعة     அவர்கள் ஷரீஅத்தின் வழி முறைப்படி நடப்பார்கள் என்பதாகும் .   அவர்கள் தவறிழைக்கவே  முடியாது  என்பதல்ல   تطهير بالتكوين   அல்ல. நபிமார்கள் மட்டுமே அந்தச் சிறபிபிற்குரிய்வர்கள் அவர்கள் மட்டுமே ம்ஃசூம் கள், நபியின் குடும்பத்தினர் ம்ஃசூம்கள் அல்ல. 
وقد سئل الإمام الشوكاني -رحمه الله وأكرم مثواه-عما قيل في أن العصاة من أهل بيت النبوة لا يُعاقَبون على ما يرتكبون من الذنوب، بل هم من أهل الجنة على كل حال تكريماً وتشريفاً! هل ذلك صحيح أم لا ؟.
 فأجاب بقوله:(أقول: لاشك ولا ريب أنَّ أهل هذا البيت المطهَّر لهم من المزايا والخصائص والمناقب ما ليس لغيرهم، وقد جاءت الآيات القرآنية والأحاديث النبوية شاهدة لهم بما خصهم الله به من التشريف والتكريم، والتبجيل والتعظيم، وأما القول برفع العقوبات عن عصاتهم، وأنهم لا يُخاطَبون بما اقترفوه من المآثم، ولا يُطالَبُون بما جنوه من العظائم، فهذه مقالة باطلة ليس عليها أَثارةٌ من علم، ولم يصح في ذلك عن الله ولا عن رسوله -صلى الله عليه وسلم- حرف واحد، وجميع ما أورده علماء السوء المتقربون إلى المتعلِّقين بالرياسات من أهل هذا البيت الشريف فهو إما باطل موضوع، أو خارج عن محل النزاع؛ بل القرآن أعدل شاهد وأصدق دليل على زجر قول كل مكابر جاحد، فإنه قال-عز وجل-في نساء النبي-صلى الله عليه وسلم-:{ مَن يَأتِ مِنكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُضَاعَفْ لَهَا العَذَابُ ضِعْفَيْنِ وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيراً } الأحزاب: 30، وليس ذلك إلا لما لهن من رفعة القدر، وشرافة المحل بالقرب من رسول الله-صلى الله عليه وسلم، إلى أن قال: ولو كان الأمر كما زعم هذا الزاعم لم يكن لقوله تعالى: { وَأَنذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } الشعراء: 214، معنى ولا كبير فائدة، وإذا كان المصطفى يقول لفاطمة البتول-التي هي بضعة منه، يغضبه ما يغضبها ويرضيه ما يرضيها-:(يا فاطمة بنت محمد لا أُغني عنكِ من الله شيئاً) فليت شعري مَنْ هذا مِن أولادها الذي خصه الله بما لم يخصها، ورفعه إلى درجة قصَّرت عنها؟! فأبعد الله علماء السوء وقلَّل عددهم؛ فإن العاصي من أهل هذا البيت الشريف المطهر إذا لم يكن مستحقاً على معصيته مضاعفة العقوبة، فأقل الأحوال أن يكون كسائر الناس.         
فيا من شرفه الله بهذا النسب الشريف! إياك أن تغتر بما ينمقه لك أهل التبديل التحريف"
நபியின் குடும்பத்தினர்களை எல்லா சஹாபாக்களையும் விட உயர்ந்தவர்களாகவும்  மஃசூம்களாகவும் ஷியாக்கள் தவறாக கருதிவருகிறார்கள் அது. தீனை தடம் மாற்றும் முயற்சியாகும். அதே போல நபியின் மனைவியர்களை அவர்கள் குடும்பத்தினர் அல்ல என்றும் கூறுகிறார்க்ள் அதுவும் ஒரு தவறான அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட  கருத்தாகும். .

2 comments:

  1. marhaba! jazakalla khairan kaseera!pls write tamil meaning.few hadis is not meaning tamil.reading u r page reqularly also non ulama

    ReplyDelete