வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 16, 2014

நபி (ஸல்) அவர்களின் பூர்ணத்துவம்


وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِيْن مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை – பரிபூர்ணத்துவம் மிளிர்கிற ஒரு வாழ்க்கையாகும். எல்லா அம்சத்திலும்.

அவர்களுடைய இறுதி நிமிடங்களும் அப்படித்தான்.

பலருக்கு அவர்களுடைய இறுதி நாட்கள் மரியாதைக்குரியதாய் இருந்ததில்லை.

  • சக்ரடீஸ் சிறையில் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்
  • ரஷ்ய தத்துவஞானி லியோ டால்ஸ்டாய் இரயில் நிலைய பிளாட்பார பெஞ்சில் கேட்பாரற்று இறந்து போனார்.
  • நெப்போலியன் போனபர்ட் செயீன் ஹலீனா தீவில் தனிமைச் சிறையில் இறந்தான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான், இறப்பதற்கு முன்பே அதற்கான அறிகுறிகளை உணர்ந்தார்கள். இறுதிப் பயணத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்கள். சஹாபாக்களுக்கு மறைமுகமாக உணர்த்தினார்கள். தள்ளாடும் பருவத்தை எட்டும் முன்பே மிக அமைதியாக மனைவி ஆயிஷா ரலி அவர்களின் செஞ்சில் சாய்ந்தவாறு உயர்ந்த நன்பனிடம் போகிறேன் என்று சொல்லி இறுதி மூச்சை விட்டார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் 63 வயதில் வபாத்தானார்கள்.

فقال الإمام النووي: " تُوفي ـ صلى الله عليه وسلم ـ وله ثلاث وستون سنة، وقيل: خمس وستون سنة، وقيل: ستون سنة، والأول أصح وأشهر،

63 வயது ஒரு பெரிய வயதல்ல.

தள்ளாமைக்கு தள்ளப்படுவதிலிருந்து பாதுகாப்பது பெருமானாரின் பழக்கமாக இருந்தது

وَفِي حَدِيث سَعْد بْن أَبِي وَقَّاص قَالَ كَانَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذ يَقُول ( وَأَعُوذ بِك أَنْ أُرَدّ إِلَى أَرْذَل الْعُمُر ) الْحَدِيث . الْبُخَارِيّ

தள்ளாத முதுமை என்பதற்கு அலி ரலி அவர்கள் 75 வயது என பொருள சொன்னார்கள்.

وأخرج ابن جرير عن علي كرم الله تعالى وجهه أن " أَرْذَلِ ٱلْعُمُرِ "خمس وسبعون سنة؛ وعن قتادة أنه تسعون، وقيل: خمس وتسعون

எனினும் அறிஞர்களின் தீர்மாணம். தள்ளாமை என்பது ஆட்களை பொறுத்து மாறுபடும். தன் செயலகளை தானே செய்ய முடியாத நிலை தள்ளாமை

அப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பே ரஸீல் ஸல் வபாத்தானார்கள்.

முஸ்லிம்களுக்கு பெருமானாரின் மரணம் துக்க கரமானதாக இருந்தாலும் .அது பெருமானாரது வாழ்க்கையின் கம்பீரத்திற்குரிய அம்சங்களில் ஒன்றாகிப்போனது.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹ்ஜிரி 11 ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை முற்பகல் நேரத்தில் வபாத்தானார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களுக்கான காலம் நெருங்குவதை ஹிஜ்ரி 10 ரமலானிலியே பெருமானார் (ஸல்) உணர்ந்து கொண்டார்கள்

ஒவ்வொரு ரமலானிலும் அதுவரை இறங்கியுள்ள குர் ஆன் வசனங்களை ஒரு முறை ஓதிக்காட்டும் ஜிப்ரயீல் அலை அந்த ரமலானில் இரு முறை ஓதிக் காட்டினார்கள். அந்த வருடம் நபியவர்கள் இருபது நாள் இஃதிகாப் இருந்தார்கள்.

  • إنه تدارسه جبريل القرآن مرتين ،
  • اعتكف في رمضان من السنة العاشرة عشرين يوماً، بينما كان لا يعتكف إلا عشرة أيام فحسب،

இரண்டு மாதம் கழித்து ஹஜ்ஜத்துல்  வதாவின் பொருத்தமான சந்தர்ப்பத்தில் – அரபா மைதானத்தில் இலட்சக்கணக்கில் கூடியிருந்த மக்களின் முன்னிலையில் இதை சூசகமாக உணர்த்தினார்கள்,

  • وقال في حجة الوداع‏:‏ ‏(‏إني لا أدري لعلى لا ألقاكم بعد عامي هذا بهذا الموقف أبداً‏)‏،

அதற்கடுத்த இரண்டு நாட்களில் மினாவில் வைத்து ஹஜ்ஜின் அமல்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதும்   

  • وقال وهو عند جمرة العقبة‏:‏ ‏(‏خذوا عني مناسككم، فلعلي لا أحج بعد عامي هذا‏)‏،

அய்யாமுத்தஷ்ரீக்கின் நார்ட்களின் நடுவே இதா ஜாஆ எனும் நஸ்ர் அத்தியாயம் அருளப்பட்டது.

  • وأنزلت عليه سورة النصر في أوسط أيام التشريق، فعرف أنه الوداع

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அந்த அத்தியாயம் பெருமானாரின் வயதை குறிக்கிறது என்று கூறினார்கள்.

இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு பெருமானார் (ஸல்) அல்லாஹ் நோக்கிய பயணத்திற்கு முழுக்க தன்னை தயார்ப்படுத்திக் கொண்டவர்களாக இருந்தார்கள்.

நோய் வயப்படல்

தீடீரென்று ஏற்படக்கூடிய மரணத்திலிருந்தும் பெருமானார் (ஸல்) பாதுகாப்பு தேடுபவராக இருந்தார்கள். அத்தகை  மரணம் வாழ்க்கையின் ஒரு குறைவாகவே அமையும். இறுதி நேரத்தில் உணர வேண்டியதை உணரும் வாய்ப்பு அதில் கிடைக்காமல் போகும்.

عن أبي أمامة قال‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من موت الفجأة، وكان يعجبه أن يمرض قبل أن يموت‏.‏ -رواه الطبراني في الكبير

ஹிஜ்ரி 11 சபர் பிறை 28 ம் நாள் ஜன்னத்துல் பகீல் நடந்த ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டு திரும்புகிற போது பெருமானாருக்கு முதன் முதலாக கடும் தலைவலி ஏற்பட்டது அது காய்ச்சலாக மாறியது

وفي اليوم الثامن أو التاسع والعشرين من شهر صفر سنة11هـ ـ وكان يوم الاثنين ـ شهد رسول الله صلى الله عليه وسلم جنازة في البقيع، فلما رجع، وهو في الطريق أخذه صداع في رأسه، واتقدت الحرارة، حتى إنهم كانوا يجدون سَوْرَتَها فوق العِصَابة التي تعصب بها رأسه‏.‏

சுமார் பத்து நாட்கள் உடல் நலக்குறைவுடனேயே முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழவைத்தார்கள்.

கடைசி பிரசங்கமும் இமாமத்தும்

மவ்தாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் லுஹர் தொழுகைக்கு முன்னதாக பெருமானார் மிம்பரில் ஏறி பிரசங்கம் செய்தார்கள். அதில் அன்சாரிகளை கவனித்துக் கொள்ளும் படி அறிவுறுத்தினார்கள்.

عن أنس بن مالك ـ رضي الله عنه ـ قال: ( مرَّ أبو بكر والعباس ـ رضي الله عنهما ـ بمجلس من مجالس الأنصار وهم يبكون، فقال: ما يبكيكم؟ قالوا: ذكرنا مجلس النبي ـ صلى الله عليه وسلم ـ منا، فدخل على النبي ـ صلى الله عليه وسلم ـ فأخبره بذلك، قال: فخرج النبي ـ صلى الله عليه وسلم ـ وقد عصب على رأسه حاشية برد، قال: فصعد المنبر، ولم يصعده بعد ذلك اليوم، فحمد الله وأثنى عليه، ثم قال: أوصيكم بالأنصار، فإنهم كرشي وعيبتي (بطانتي وخاصتي)، وقد قضوا الذي عليهم، وبقي الذي لهم، فاقبلوا من محسنهم، وتجاوزوا عن مسيئهم ) رواه البخاري .


தொடர்ந்து தன் மீது யாருக்கும் குறை இருக்கும் எனில் அதை தீர்த்துக் கொள்ள அழைத்தார்கள் லுஹர் தொழுக்கைப் பிறகு மிம்பரில் அமர்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தார்கள்

  • من كنت جلدت له ظَهْرًا فهذا ظهري فليستقد منه، ومن كنت شتمت له عِرْضاً فهذا عرضي فليستقد منه‏)‏‏.‏
  • ثم نزل فصلى الظهر، ثم رجع فجلس على المنبر، وعاد لمقالته الأولي في الشحناء وغيرها‏.‏ فقال رجل‏:‏ إن لي عندك ثلاثة دراهم، فقال‏:‏ ‏(‏أعطه يا فضل‏)‏، ثم أوصي بالأنصار قائلاً‏:‏

 யாரையாவது நான் அடித்திருந்தால் இதோ என் முதுகு தயாராக இருக்கிறது

யாரையாவது திட்டி இருந்தால் அவர் பழி தீர்த்துக் கொள்ள்லாம்.

ஒரு நபித்தோழ்ர தனக்கு மூன்று திர்ஹம்கள் வரவேண்டியிருப்பதாக கூறினார், அதை கொடுக்கும் படி தன் பெரிய தந்தையின் மகன் பழ்ல் ரலியிடம் கூறினார்கள்.

 அன்றைய மஃரிபில்

وكان ـ صلوات الله وسلامه عليه ـ قد صلى بالناس مغرب هذا اليوم وقرأ بالمرسلات، فعن أم الفضل بنت الحارث قالت: (سمعت النبي ـ صلى الله عليه وسلم ـ يقرأ في المغرب بالمرسلات عرفا، ثم ما صلى لنا بعدها حتى قبضه الله ) رواه البخاري .

அன்றைய இஷா விற்கு பள்ளிக்கு வர முயற்சி செய்தார்கள்

وعند العشاء زاد ثقل المرض، بحيث لم يستطع الخروج إلى المسجد‏.‏ قالت عائشة‏:‏ فقال النبي صلى الله عليه وسلم‏:‏ ‏(‏أصَلَّى الناس‏؟‏‏)‏ قلنا‏:‏ لا يا رسول الله، وهم ينتظرونك‏.‏ قال‏:‏ ‏(‏ضعوا لي ماء في المِخْضَب‏)‏، ففعلنا، فاغتسل، فذهب لينوء فأغمي عليه‏.‏ ثم أفاق، فقال‏:‏ ‏(‏أصلى الناس‏؟‏‏)‏ ـ ووقع ثانياً وثالثاً ما وقع في المرة الأولي من الاغتسال ثم الإغماء حينما أراد أن ينوء ـ فأرسل إلى أبي بكر أن يصلي بالناس،



மவ்தாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அன்றைய  மஃரிபை பெருமானார் ஸல் அவர்கள் தொழ வைத்ததே அவர்கள் இமாமாக நின்ற கடைசி தொழுகையாக இருந்தது.

மூன்று நாட்களுக்கு முன் – நோய்ப்படுக்கையில் சமூகத்தைப் பற்றிய கவலை – தேவையான அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்

وقبل موته ـ صلى الله عليه وسلم ـ بثلاثة أيام  أوصى بإحسان الظن بالله، وإخراج المشركين من جزيرة العرب،

قال جابر ـ رضي الله عنه ـ: ( سمعت رسول الله ـ صلى الله عليه وسلم ـ يقول قبل موته بثلاث: أحسنوا الظن بالله عز وجل ) رواه مسلم .

عن عبيد الله بن عبد الله أن ابن عباس وعائشة أخبراه أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ لما حضرته الوفاة جعل يلقي على وجهه طرف خميصة، فإذا اغتم بها كشفها عن وجهه فقال وهو كذلك: ( لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد ) تقول عائشة: يحذر مثل الذي صنعوا ) رواه مسلم .

இரண்டு நாட்களுக்கு முன் அபூபக்கர் ரலி அவர்களின் அருகே நின்று லுஹர் தொழுகையை தொழுதார்கள். மஸ்ஜிதுன்னபவியில் அவர்கள் தொழுத கடைசி தொழுகை அது,

ويوم السبت أو الأحد وجد النبي صلى الله عليه وسلم في نفسه خفة، فخرج بين رجلين لصلاة الظهر، وأبو بكر يصلي بالناس، فلما رآه أبو بكر ذهب ليتأخر، فأومأ إليه بألا يتأخر، قال‏:‏ ‏(‏أجلساني إلى جنبه‏)‏، فأجلساه إلى يسار أبي بكر، فكان أبو بكر يقتدي بصلاة رسول الله صلى الله عليه وسلم ويسمع الناس التكبير‏.‏

ஒரு நாளைக்கு முன்

தனது அடிமைகளை விடுதலை செய்தார்கள். தன்னிடமிருந்த7 தீனார்களை தர்மம் செய்தார்கள்.

ஆயிஷா ரலி தன் வீட்டின் விளக்கை மற்ற மனவியரிடம் அனுப்பி எண்ணை வழ்ங்குமாறு கேட்டார்கள்.

وقبل يوم من الوفاة ـ يوم الأحد ـ أعتق النبي صلى الله عليه وسلم غلمانه، وتصدق بستة أو سبعة دنانير كانت عنده ، ووهب للمسلمين أسلحته، وفي الليل أرسلت عائشة بمصباحها امرأة من النساء وقالت‏:‏ أقطري لنا في مصباحنا من عُكَّتِك السمن ، وكانت درعه صلى الله عليه وسلم مرهونة عند يهودي بثلاثين صاعاً من الشعير‏.‏

பெருமானார் (ஸல் அவர்கள் மவ்தாகிற போது அவர்களது கவச ஆடை முப்பது படி கோதுமைக்கு அடகு வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடைசி நாள்

ஹ்ஜிரி 11 ரபீஉல் அவ்வல் பிறை 12

காலை சுபுஹ் தொழுகையில் சமுதாயத்தை கடைசிப் பார்வை பார்த்தார்கள்

 

 

روى أنس بن مالك ـ رضي الله عنه ـ: ( أن المسلمين بينا هم في صلاة الفجر يوم الاثنين وأبو بكر يصلي بهم لم يفجأهم إلا رسول الله ـ صلى الله عليه وسلم ـ كشف ستر حجرة عائشة فنظر إليهم، وهم في صفوف الصلاة، ثم تبسم يضحك، فنكص أبو بكر على عقبيه، ليصل الصف، وظن أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ يريد أن يخرج إلى الصلاة، فقال أنس: وهمّ المسلمون أن يفتتنوا في صلاتهم فرِحا برسول الله ـ صلى الله عليه وسلم، فأشار إليهم بيده رسول الله صلى الله عليه وسلم أن أتموا صلاتكم ثم دخل الحجرة وأرخى الستر ) رواه البخاري،

ثم لم يأت على رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقت صلاة أخرى .

கடைசி உபதேசம்

وعن أنس بن مالك ـ رضي الله عنه ـ قال: ( كانت عامة وصية رسول الله ـ صلى الله عليه وسلم ـ حين حضرته الوفاة وهو يغرغر بنفسه: الصلاة وما ملكت أيمانكم ) رواه ابن ماجه .

கடைசி நிமிடங்கள்

وبدأت ساعة احتضاره ـ صلى الله عليه وسلم ـ فأسندته عائشة ـ رضي الله عنها ـ إلى صدرها وكانت تقول: ( إن من نعم الله علىَّ أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ تُوفي في بيتي وفي يومي وبين سَحْرِي ونَحْرِي (على صدري)، وأن الله جمع بين ريقي وريقه عند موته، دخل عبد الرحمن بن أبي بكر وبيده السواك، وأنا مسندة رسول الله ـ صلى الله عليه وسلم ـ فرأيته ينظر إليه، وعرفت أنه يحب السواك، فقلت: آخذه لك ؟ فأشار برأسه أن نعم، فتناولته فاشتد عليه، وقلت: ألينه لك؟ فأشار برأسه أن نعم، فلينته فأمرَّه (استاك به)،وبين يديه ركوة أو علبة - شك الراوي- فيها ماء، فجعل يدخل يديه في الماء فيمسح بها وجهه يقول: لا إله إلا الله إن للموت سكرات، ثم نصب يده فجعل يقول: في الرفيق الأعلى حتى قُبِض فمالت يده ـ صلى الله عليه وسلم ـ ) رواه البخاري .

கடைசி நிமிடம் வரை சுய நினைவோடு தனது கொளைகை வழியை நிலை நாட்டியவர்களாக பிரியமான மனைவியின் மடியில் பெருமானார் (ஸல்) வபாத்தானார்கள்.

அல்லாஹ் பெருமானாரின் பெருமைக்குரிய உம்மத்தின் அங்கமாக திகழக நமக்கு தவ்பீக் செய்வானாக!

3 comments:

  1. Mohammed Ameen Faizee Bilali8:18 AM

    Maasha Allah it takes me to the reality......naam paarkaatha nabiyin pirivunilaiyai padithaale nenjam padharugirde......avrgalodu uravaadiya sahabakkal eppadi adhai thaanginaargal endru karpanai kooda seiya mudiyavillai

    ReplyDelete
  2. Subhanallah.this page is very touch my heart.jazakallah. hazrath pls write last propertys of nabi(sal.. ) vs kamarajar

    ReplyDelete
  3. அன்பு நண்பரே மிக்க நன்றி
    அப்துல்முஜீப் பாகவி மேட்டுப்பாளையம்

    ReplyDelete