வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 13, 2014

காணவில்லை



கடந்த 8 ம் தேத்தியிலிருந்து காணாமல் போன மலேஷிய விமானத்தை உலகமே சேர்ந்து தேடிக்கொண்டிருக்கிறது. அதில பயணம் செய்த 239 பேரின் நிலை என்ன ஆனதோ என்ற பரிதவிப்பில் அனைத்து தரப்பு மக்களும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

عالم الغيب  ஆன இறைவன் மக்களின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியளிக்கிற ஒரு செய்தியை தந்தருளவானாக! இந்தப் பிரிவை தாங்கிக் கொள்கிற பக்குவத்தை சம்பந்தம்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்குவானாக! காணாமல் போன விமானத்தை தேடிப்பிடிக்கிற அபரிமிதமான முய்றசிக்கு சீக்கிரமே ஒரு தீர்வை கொடுப்பானாக! இது போன்ற விபத்துக்களிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!

மனித வாழ்க்கையில் எதுவும் காணாமல் போவது என்பது மிகவும் துக்க்கரமான விசயம். த்னிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக அளவிலும்.

சில மளையாள் தொலைக்காட்சிகளில் வெளிநாட்டிற்கு வேலைக்குப் போய காணாமல் போய்விட்ட உறவினர்களைப் பற்றி அவர்களுடைய குடும்பத்தின்ர் பேசுவார்கள். இன்னாலில்லாஹி,,, அந்த சோகத்தை காது கொடுத்து கேட்க முடியாது. பாசம். பாதுகாப்பு, வாழ்வாதாரங்களில் ஏற்பட்ட நஷ்ட்த்தின் விளைவுகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கும்.

குழந்தையை தவறவிட்டவகள்தவறவிடப்பட்ட குழந்தைகள்

காணாமல் போன் பர்ஸுசான்றிதழ்தகள் - டிக்கட்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் வடுக்கள் ஆழமானவை.  ஆற்றமுடியாத்வை.

காஷ்மீரில் இந்திய இராணுவத்தாலும் தீவிரவாதிகளாலும் பிடித்துச் செல்லப்பட்ட   பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுடைய மனைவியர் அரைவிதவையர் half-widows’  என்றழைக்கப் படுகிறார்கள். அவர்களுடைய கண்ணீர் கதைகள் உலகின் மிக் மோசமான வரலாற்றின் பக்கங்களுக்குரியவை.

a key human rights group in the region Jammu and Kashmir Coalition of Civil Societies (JKCCS) estimates the number of ‘half-widows’ at around 1,500.

பழைய இஸ்லாமிய வரலாற்றிலும் காணாமல் போன சில பொருட்களால் பெருத்த மன வேதனை ஏற்பட்டதுண்டு,

முஹம்மது நபி (ஸல்) அவர்கள செய்த வெள்ளி மோதிரம். உஸ்மான் ரலி அவர்களின் கையிலிருத மோதிரம் குபா பள்ளிவாசலின் அருகிலிருக்கிற கிண்ற்றில் விழுந்து காணாமல் போனது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. இன்று வரை அதை தேடும் ஆர்வம் மக்களிடம் இருக்கிறது. அரசு பொதுமக்கள் அதை அணுக முடியாமல் மறைத்து வைத்திருக்கிறது.

قيل لرسول الله عندما أراد إرسال كتبه إلى الملوك يدعوهم فيها إلى الإسلام إنهم لا يقرأون الكتاب إلا إذا كان مختوما فاتخذ خاتما من فضة وكان نقشه ثلاثة أسطر: (محمد) سطر، (رسول) سطر، (الله) سطر، والأسطر الثلاثة تُقرأ من أسفل إلى فوق فمحمد آخر الأسطر، ورسول في الوسط والله فوق، وكانت الكتابة مقلوبة لتكون على الاستواء إذا ختم به فكان ذلك الخاتم في يده ثم في يد أبي بكر ثم في يد عمر ثم في يد عثمان رضي الله عنهم حتى وقع في بئر أريس في السنة التي قُتل فيها عثمان رضي الله عنه فالتمسوه ثلاثة أيام فلم يجدوه.

அபூஹுரைரா ரலி அவர்களிடமிருந்த அற்புதமான பேரீத்தம் பழப் பை காணாமல் போனது.


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ – ترمذي 3839

مزود: هو وعاء من جلد وغيره، يجعل فيه الزاد.
الحقو: الوسط، والمراد: موضع شد الإزار

அல்லாஹ் இத்தைகைய சோதனைகள் அனைத்திலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!

தொழில் நுட்பமும் தகவல் தொடர்ப்ம் வளர்ந்து விட்ட காலத்தில் காணாமல் போவது குறைந்து விட்ட்து.
உதாரணம் தற்காலத்தில் ஹஜ்ஜில் காணமல் போகிறவர்களின் எண்ணிக்கை மிக்க் குறைவு. இந்த ஆண்டு எங்களது குழுவில் நினைவு தப்புகிற ஒரு முதியவர் தன்னுடைய அனைத்து அடையாளங்களையும் மனைவியிடம் கொடுத்து விட்டு – இஹ்ராமிலிருந்த் வெளியேற மொட்டை அடித்து விட்டு குளிக்கச் சென்றவரை காணவில்லை. அவரிடம் எந்த அடையாளமும் இல்லை. தன்னுடைய குழுவை பற்றி சரியாகச் சொல்லவும் அவருக்கு தெரியாது. மொத்தக் குழுவும் வேதனையிலும் பிரார்த்தனையிலும் மூழ்கியது. இறுதியாக அவர் விச்யத்தை கவனித்துக் கொள்ள ஹஜ்குழுவின் பொறுப்பாளரை அங்கு தங்க்வைத்து விட்டு நாங்கள் ஊருக்குப் பயணமானோம். ஜித்தாவுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது அவர் கிடைத்து விட்டார் என்ற செய்தி வந்த்து.

இது போல பல இடங்களிலும் காணாமல் போவது குறைந்துள்ளது என்றாலும் கூட மனித அறிவிற்கும் ஆற்றலுக்க்ம் சவால்விடுகிற இழப்புக்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

மலேஷியாவின் விமான விபத்திற்கு ஒரு உதாரணம்,

கொஞ்சம் பெரிதான் தீப்பொறி எங்காவது ஏற்பட்டாலும் அதை அமெரிக்கா நாசாவின் ராடார்கள் காட்டிக் கொடுத்து விடும் என்கிறர்ர்கள்.

பூமி முழுக்க விரித்து வைக்கப்பட்டிருக்கிற சல்லடை கண்களாய ராடார்க்ளும் அவற்றை கவனித்து பதிவு செய்துகொண்டிருக்க சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும். வான்வெளியை குப்பையாக்கிக் கொண்டிருக்கிற செயற்க் கோள்க்ளும் அவற்றிலிருக்கிற சக்திவாய்ந்த கேமராக்களும் இந்த விமானம் எப்படி காணாமல் போனது என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

இன்று எத்தகைய ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.?

ஆரம்ப கட்ட தேடல்களில்மலேசியா, சீனா ஜப்பான் ரஷ்யா அமெரிக்கா வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆற்ற்ல் முழு அளவில் பயன்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாட்கள் செல்லச் செல்ல இறைவன் என்ன நினைக்கிறானோ என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

விஞ்ஞான மீடியாக்கள் கடவுளின் முன் மண்டியிட்டு கிடப்பதை பார்க்கிறோம். பத்ரிகைகள்  போஸ்புக்  வலைத்தளங்கள் அனைத்திலும் பிரார்த்தனை மயமாகிக் கொண்டிருக்கின்றன.

தென்சீனக் கடலில் தேடுதலில் ஈடுபட்டிருக்கிற வீர்ர்கள் பாங்கு சொல்லிக் கொண்டு தேடும் காட்சியை youtube ல் காணலாம்.

(பிறந்த குழந்தை, கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டவர், ஜின்களின் தொல்லையால் பாதிக்கப்பட்டவர், கோபப்படுபவர், தீய நடத்தை கொண்ட மனிதன் அல்லது விலங்கு இவர்களின் காதுகளில் பாங்கு சொல்வதும்,  போரிடுவற்காகப் படைகள் சந்திக்கும் பொழுது, நெருப்புப் பற்றிக் கொள்ளும் பொழுது. மனிதர்களற்ற இடங்களில் வழி தவறிவிடும் பொழுதும் பாங்கு சொல்வது (ஷாஃபிஈ மத்ஹபின்படி).. சுன்னத் ஆகும் என்ற தகவலை இணைய தளங்கள் பிரச்சாரம் செய்கின்றன.)

இந்த் துக்கரமான் சூழ்நிலையில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய விச்ய்ங்கள் சில உள்ளன,

ம்னிதன் எவ்வளவு தான்  விஞ்ஞானம் தொழில் நுட்பம் என்று வளர்ந்தாலும் அவனுடைய இயற்கையான உணர்வு அல்லாஹ் என்ற தன்க்கு மிஞ்சிய ஒரு ச்க்தியை நோக்கியே திரும்பி நிற்கிறது. அந்த இறைவனுக்கு முன் அது பணிந்து நிற்கிறது,

இந்தப் பிரம்மாண்டப் பேரண்ட்த்தின் சில ரக்சியங்களுக்கு முன் நிபுணர்களான மனித்ர்கள் தலை குனிந்து நிற்கிற போது  ( பெர்முடா முக்கோனம் பல விமான்ங்களை சாப்பிட்டு விட்ட்து, இது மாதிரியான் சில இடங்களை குறிப்பிட்டு அந்தப் பகுதிகளில் விமானமோ கப்பலோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறார்கள்.)

இவற்றை படைத்தவனுக்க் முன் மனித குலம் தன்னுடைய இயலாமையை ஒத்துக் கொள்வதும் அவனுக்குப் பணிவதும் கடமையாகிறது.

இஸ்லாம் இந்த த்த்துவத்தை தான் உலகிற்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது,

இஸ்லாம அறிவியலுக்கோ விஞ்ஞானத்திற்கோ எதிரானது அல்ல. அது வலியுறுத்துவது ஒன்று தான் எந்த நிலையிலும் இறைவனை சரணடைதல் வேண்டும்.

ஏதேனும் ஒன்று காணாமல் போனால் அல்லது ஒரு இழப்பு ஏற்படுமானார்ல் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் சொல்லிக் கொடுத்த வார்த்தை

இன்ன்லில்லாஹி

இந்த வார்த்தையும் நம்பிக்கையும் ஆறுதலையும் நல்ல மாற்றையும் தரக்கூடியது,

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ(156) أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُوْلَئِكَ هُمْ الْمُهْتَدُونَ(157)

  روى مسلم عن أم سلمة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: (ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله عز وجل إنا لله وإنا إليه راجمون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أخلف الله ل خيرا منها
 قال سعيد بن جبير رحمه الله تعالى: لم تعط هذه الكلمات نبيا قبل نبينا, ولو عرفها يعقوب لما قال: يا أسفي على يوسف.

இன்னா லில்லாஹ் என்பதன்  கருத்து இயந்திரத்தனமாக இந்த வார்த்தையை சொல்வார்கள் என்பதல்ல. அல்லாஹ்வின் சக்தியையும் தங்களது இயலாமையையும் உணர்வார்கள் என்பதாகும். அப்படி உணர்ந்தால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும்.
يقول إبن كثير :
أي تسلوا بقولهم هذا عما أصابهم وعلموا أنهم ملك لله يتصرف في عبيده بما يشاء وعلموا أنه لا يضيع لديه مثقال ذرة يوم القيامة فأحدث لهم ذلك اعترافهم بأنهم عبيده وأنهم إليه راجعون في الدار الآخرة.

விமான காணாமல் போனதிலிருந்து கிடைக்கிற மிக் முக்கியமான அனுபவம் இது,

காணவில்லை என்பதன் இரண்டாவத் பாடம்

இன்னொரு முக்கியமான செய்தியும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வதை பொருத்தம் என நினைக்கிறேன்,

எப்போதும் ஒரு பொருள் காணாமல் போகிற போது உடனே நாம் பழியை அடுத்தவர் மீத் போட்டுவிட முயற்சி செய்கிறோம்.

பேனாவை வைத்த இட்த்தை மறந்து விட்டு எங்க போச்சு அந்தப் பேனா என்பது தான் மனித இயல்பு.

காணவில்லை என்ற எந்த ஒரு சொல்லும் மனிதனுடைய பலகீனத்தின் அடையாளமாகும். இயலாமைக்கான சாட்சியாகும்.

பேனா சாவி பர்ஸு  எதுவும் காணாம்ல் போவதில்லை. அது தானாக காணாமல் போவதில்லை

எந்த ஒன்று காணாமல் போகிற போதும் முதலில் நமது தரப்பிலான குறை என்ன என்பதை கண்டறிய முயல வேண்டும்.

நமது தரப்பிலான குறையை உணர்வதிலும் ஒத்துக் கொள்வதிலும் இரண்டு நிலை இருக்கிறது, முதலாவது ஆன்மீக நிலை இரண்டாவது ஆய்வு நிலை

ஆன்மீக நிலை
وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِي لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنْ الْغَائِبِينَ- 2027:

இது முதல் நிலை, ஹுத் ஹுதை காணவில்லை என்றதும் எங்கே அது என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்கவில்லை. என்னால் ஏன் அதை என்னால் பார்க்க முடியவில்லை என்றார்கள்.
நான் என்ன பாவம் செய்தேன் இந்த நட்டம் எனக்கு ஏற்பட்டது ? . என்று யோசித்தார்கள்.
தமக்கு ஏற்படுகிற எந்த நட்டத்திற்கும் தமது ஒழுக்க வாழ்வில் ஏறபட்ட குறைகளை பரிசீலித்துப் பெரியவர்களின் இயல்பு
إذا فقدوا مالهم تفقدو اعمالهم
ஏதேனும் காணவில்லை என்றால். தங்களுடைய செயல்களை சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
(தப்ஸீர் மஆரிபுல் குர்ஆன்)

எங்களுடைய உஸ்தாது அல்லாமா சித்தையன் கோட்டை  கமாலுத்தீன் ஹஜ்ரத் (ரஹ்)  அவர்கள் ஏதேனும் கவலை திடீரென்று ஏற்படும் என்றால். இன்னைக்கு நான் சுன்னத் எல்லாம் சரியா தொழுதேனா? வழீபா சரியா ஓதினேனா? ஜும்ஆ அன்னைக்கு கஹ்பு ஓதினேனா என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்வார்கள்.

அவர்கள் துணை முதல்வராக இருந்த போது ஒரு முறை ஒரு பிரச்சினைக்காக  மாணவர்கள் மதிய சாப்பாட்டிற்கு செல்ல  மறுத்து விட்டார்கள். ஹஜரத் அவர்கள் சொன்ன பிறகும் கூட.
பின்னர் அந்த மாணவர்கள் மீது ஹஜ்ரத் கோப்ப்படவில்லை. எங்க உஸ்தாதிடமும் இது போல ஒரு முறை நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் இப்போது நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை என்றார்கள். அத்தோடு நிறுத்தவில்லை தன் வாழ்க்கையே பாடமாக தந்த ஹஜ்ரத் வெள்ளந்தியாகச்  சொன்னார்கள் இது போல ஒரு நிகழ்வை நீங்களும் சந்திப்பீர்கள்!
தூத்துக்குடியில் உஸ்தாதாக இருந்த போது நான் அப்படி நிகழ்வை சந்தித்தித்தேன்.

அல்லாஹ் கூறுகிறான். உங்களுக்கு ஏற்படுகிற சோதனைகளுக்கு நீங்களே காரணம். அல்லாஹ் பலதையும் மன்னித்து விடுகிறான்.

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِير ٍ - 30 40;
ஆய்வு நிலை

ஒன்று ஏன் காணாமல் போனது என்பதை அறிவார்த்தமாக் ஆராய்கிற போது காணாமல் போனது திரும்ப கிடைக்கவும் இனிமேல் அத்தகை விபத்து ஏற்படாமல் இருக்கவும் அது காரணமாகும்.

சாவி அல்லது வாட்சு அல்லது பர்ஸ் காணவில்லை என்று தேடுகிற போது இன்று அதை எங்கு வைத்தேன் என்று ஆழ்ந்து யோசிப்பது பல நேரங்களிலும் அதை பெற்றுத்தந்து விடுகிறது.

ஒரு வேளை கிடைக்காவிட்டாலும் கூட காணாமல் போனதற்கான காரணத்தை ஆராய்வது அடுத்து இன்னொரு இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானம் பறக்க குறைந்தளவு காற்றழுத்தம் தேவைப்படுகிறது. அப்போதுதான் வான்வெளியில், எஞ்சின் கட்டுப்பாட்டில் விமானம் கீழிறங்காமல் முன்னோக்கி செல்லும்.
மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் ‘VACCUM PACKET’ எனப்படும் (Negative Place) வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். இதை முன்னரே விமானகட்டுபாட்டு அறை அடையாளம் கண்டு கொள்ளும். அதன் அடிப்படையில் விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வழங்கப்படும்.
சில சமயங்களில் கட்டுபாட்டு அறை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்கள் அருகில் விமானம் வரும் போதுதான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் தெரியும்.
இத்தகைய சூழல்களில் இடுப்புப் பட்டையை கட்டாத பயணிகளை பட்டைக் கட்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தும் அடையாளமாக பயணிகளின் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவார்கள். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியுமான சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வுடன் பறக்க ஆரம்பிக்கும்.
பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கிக் கொண்டிருக்கும். மற்றொரு எஞ்சினோ அணைக்கப்பட்டு, அவசர நிலைத் தேவைக்கு பயன்படுத்த தயாராக இருக்கும்.
மேலே சொன்ன வெற்றிடத்தில் விமானம் நுழையும் போது, விமானத்தின் இரு எஞ்சின்களையும், அதிகபட்ச வேகத்துடன் விமானி இயங்கச் செய்வார்.
ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். நீண்ட தூரம் செல்லும் விமானங்களில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானிகள் விமானத்தை இயக்குவார்கள். இந்த சமயத்தில் அடுத்த விமானி ஓய்வு எடுப்பார்.
சாதாரண பருவ நிலைகளில் இரு விமானிகளும் ‘AUTO BELT’ எனப்படும் தானியங்கி விமான இயக்க நிலைப்பாட்டில் விமானத்தை ஓட விட்டு சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள்.
இத்தகைய சூழல்களில் திடீரென எதிர்பாராமல் எதிர்படும் சிறிய வெற்றிடங்களில் விமானம் கட்டுபாட்டை இழந்து விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு. இந்த விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
தற்போது நிகழ்ந்துள்ள மலேசிய விமான விபத்தும் இப்படிப்பட்ட ஒரு வெற்றிடச் சூழலில் சிக்கிக்  கொண்டிருக்க வாய்ப்புண்டு என்று முன்னாள் விமானமோட்டிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்
நமக்கான பாடம்
பெரும்பாலும் பொருட்கள் காணாமல் போவதற்கு அலட்சியமே காரணமாகும்.
அலட்சியம் எந்த விசயத்திலும் ஆபத்தானது அலட்சியம் ஈமானைக் கூட பாதித்து விடும்.
وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الْأَعْمَالِ فَإِنَّ لَهَا مِنْ اللَّهِ طَالِبًا-  إبن ماجة 4233

எந்த ஒரு பொருளும் காணாமல் போய்விடக்கூடாது என்ற உஷார் நிலை எப்போதும் இருக்க வேண்டும்.

பள்ளிவாசலில் தொலைத்து விட்டு தேடுபவர் விச்யத்தில் பெருமானார் இப்படி அறிவுறுத்தி உள்ளார்கள்
أَنَّ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا و حَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا الْمُقْرِئُ حَدَّثَنَا حَيْوَةُ قَالَ سَمِعْتُ أَبَا الْأَسْوَدِ يَقُولُ حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ مَوْلَى شَدَّادٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ – مسلم 568
அலட்சியத்தால் ஒரு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு பள்ளிவாசலை சத்தமிடும் மேடையாக மாற்றிவிடக் கூடாது என்பதே இந்த கண்டிப்புக்கு காரணம்

ஒருத்தர்  ஒரு வழக்கு கொண்டு வந்தார், அவர் தன் வாதத்தை நிலை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தீர்ப்பு அவருக்கு எதிராகப் போனது. அப்போது ஹஸ்பியல்லாஹ் என்று சொல்லிக் கொண்டு திரும்பினார், அவரை பெருமானார் கண்டித்தார்கள்.

 عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ أ  َنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ لَمَّا أَدْبَرَ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَلُومُ عَلَى الْعَجْزِ وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ   - أبوداوود 3143

குடும்பம் குழந்தைகள் உடமைகள் வியாபாரம் எது விச்யத்திலும் நாம் காட்டுகிற சிறு அலட்சியமும் பெரிய பாதிப்புக்களை ஏறபடுத்தி விடக்கூடும். என எப்போதும் எச்சரிக்கை அவசியம். விபத்து ஏற்படும் சமயங்களில் மட்டுமல்ல.

மனிதச் சக்தியை மீறியும் சில விபத்துக்கள் நடப்பதுண்டு. எந்தக் காரணமும் இருக்காது,

காரணங்கள் க்ண்டு பிடிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் அல்லாஹ்வின் அளவில் திரும்புவது ஒன்று மட்டுமே மன அமைதிக்கான வழி!

விபத்துக்களில் ஏற்படுகிற இழப்புகளுக்கு உண்மையான மாற்றை தறுகிற சக்தி அவன் ஒருவனிடம் தானே இருக்கிறது.


عالم الغيب  ஆன இறைவன் மக்களின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியளிக்கிற ஒரு செய்தியை தந்தருளவானாக! இந்தப் பிரிவை தாங்கிக் கொள்கிற பக்குவத்தை சம்பந்தம்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்குவானாக! காணாமல் போன விமானத்தை தேடிப்பிடிக்கிற அபரிமிதமான முய்றசிக்கு சீக்கிரமே ஒரு தீர்வை கொடுப்பானாக! இது போன்ற விபத்துக்களிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!


7 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ். வழமைபோல் சரியான தருணத்தில் தறப்பட்ட தலைப்பும், குறிப்பும். ஜஸாக்கல்லாஹ்.

    ReplyDelete
  2. alhamdhu lillah.. ungalin muyarchiku allah sirandha narkooliyai allah thandharulavaanaaha.

    ReplyDelete
  3. Airforce arugil imamath seiyum anakku usefull subject zajakumullah

    ReplyDelete
  4. ياسر عرفات كنيوري12:36 AM

    جزاك الله خيرا في الدارين

    ReplyDelete
  5. டைமிங் பயான் அருமை !ஜஸாக்கல்லாஹ் !

    ReplyDelete