வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 17, 2014

தேசத்தை காப்போம் . சதிகாரர்களை முறியடிப்போம்கடந்த 4 ம் தேதி தி ஹிந்து நாளேட்டில் இந்த தேர்தல் அறிக்கையைப் பற்றி நாம் பேசியாக வேண்டும் என்ற தலைப்பில் திரு ராம் அவர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். இந்தியாவின் பிரதான் அரசியல் கட்சிகளில் ஒன்றான் பாஜவின் தேர்தல் அறிகையை அதில் அவர் கடுமையாக விமர்ச்சித்திருந்தார்..
காரணம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற காங்கிரஸ் அரசின் மீது அதிருப்தியுற்ற மக்கள் அதற்கு மாற்றாக மற்றொரு அரசு அமைந்தால நல்லது என்று நினைக்கத் தொடங்கியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பாஜக் கட்சி முன்னேற்றம் வளர்ச்சி என்ற கோஷத்தை முன் வைத்து அதற்கு அடையாளமாக குஜராத் முதல்வர் மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியது. இதனால் பாஜகவை ஆதரித்தால் என்ன என்ற ஒரு மனோநிலைக்கு வந்திருப்பதாக் ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் பாஜாகவின் உண்மை முகம் என்ன என்பதை அதனுடைய தேர்தல அறிக்கை வெளிப்படுத்தியது. பூனைக்குட்டி வெளியே வந்து விட்ட்து எனறு ஒரு அரசியல் தலைவர் கூறினார்.
முன்னேற்றம் வளர்ச்சி என்று சொல்வதெல்லாம் வெளி வேஷம், அவர்களுடைய மறைவான அஜண்டா இந்து தேசமும் இந்த நாட்டில் இருக்கிற சிறுபான்மை மக்களை அச்சுறுத்திஅடிமைப் படுத்தி வைப்ப்பதும் தான் என்பதை தேர்தல் அறிக்கை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்ட்து.
இது பொதுவான இந்திய வாக்காளர்களையும் நடுநிலையாளர்களையும் பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
உலகில் உள்ள ஏழமை நிறைந்த மற்ற நாடுகளை காட்டிலும் நம்முடைய நாட்டில் குடிமக்கள் சிறப்பான உரிமைகளைப் பெற்றூ வாழ்கிறார்கள், அடக்கு முறை அடாவடித்தனம் இங்கு இல்லை என்றே சொல்ல்லாம். பொதுவாக அமைதி தவழ்கிறது. அதே போல அறிவியல் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டும் வருகிறது,
இத்தனைக்கும் காரணம் இந்தியாவில் காப்பாற்றப் பட்டு வரும் தேசிய ஒருமைப் பாடும் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்குமாகும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளும் , நாட்டின் உன்னதமான தலைவர்களும் கட்டிக் காத்து வந்த தேசிய ஒருமைப் பாட்டுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அல்ல பெரும ஆபத்தாக பாரதீய ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது என தேசிய அக்கறை கொண்ட மக்கள் கருதுகிறார்கள்.
அதனால் தான் பாஜாகவின் தேர்தல் அறிக்கை வெளியானதற்கு அடுத்த நாள் தி ஹிந்து நாளேட்டில் இந்த தேர்தல் அறிக்கையைப் பற்றீய் நாம் பேசியாக வேண்டும் என்ற தலைப்பில் திரு ராம் அவர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். ஊடகங்கள் மோடி ஜபம் நடந்திக் கொண்டிருந்த நிலையில் திரு ராம் அவர்களின் கட்டுரை தேசிய அக்கறையின் வெளிப்பாடாகவும் இந்த அறிக்கையால் பதற்றம் கொண்டிருந்த மக்களுக்கு ஆறுதலாகவும் அமைந்த்து. தீய சக்திகளின் வேஷத்தை தகுந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய் ராம் அவர்களுக்கு இந்த தேசத்தின் பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜாவின் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது என்பதையும் திரு ராமின் கவலைக்கான காரணத்தையும் ஜும் ஆ மேடையிலும் நாம் பேசியாக வேண்டும்.
ஏனெனில் பாஜக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்க்ளுக்கு எதிரான அப்பட்டமான திட்டமிடுதல்களும் அச்சுறுதல்களும் அடங்கியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஒரு வேளை இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டால் என்னவெல்லாம் நடக்குமோ என்ற எண்ணம் ஒரு பேச்சாக பரவிவருகிறது.
தேர்தல் அறிக்கை
முதலில் பாரதீய ஜனதாவின் தேர்தல அறிக்கை என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
·         தேர்தல் அறிக்கையின் உட்புத்தில் சியாம் ஷரன் சுந்தர், டை தீனதயாள் உபாத்யாயாவுடைய படம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே தற்போதையை இந்திய அரசியலமைப்புச் சட்ட்த்தையே ஏற்றுக் கொள்ளாதவர்களாவார்களாகும்.  இந்திய கலாச்சாரத்திற்கும் பன்பாட்டிற்கும் ஒத்துவராத தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் ஆவார்கள். இந்த இரு படமும் இந்த தேர்தல அறிக்கை இந்த தேசத்தின் மரபுக்கும் பண்பாட்டு வழிமுறைக்கும் எதிரானது என்பதை பறைசாற்றிவிடுகிறது.
·         பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இட்த்தில் ராமர் கோவில் கட்டப்படும்
·         பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரப்படும்
·         காஷமீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிற அரசியல் சாசனத்தின் 370 பிரிவு நீக்கப்படும்
·         பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்படும்
·         மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படும்
·         மதரஸாக்கள் நவீனத்துவம்
மக்களுக்கு நன்மையளிக்கிற எந்த திட்டங்களும் தேர்தல அறிக்கையில் இல்லை.
ஒரு உதாரணம் இராமர் பாலத்தை பாதுகாப்போம் என்று சொல்கிற தேர்தல் அறிக்கை இலங்கை தமிழர் பிரச்சினையை பற்றி வாய் திறக்கவில்லை.
சுருக்கமாக சொல்வதானால் முழுக்க முழுக்க மத ரீதியான ஆதிக்கத்தை வலியுறுத்தும் ஒரு செயல்திட்ட்த்தை தான் இந்த தேர்தல அறிக்கை வெளிப்படுத்துகிறது.
அதனால் தான் திரு ராம் அவர்கள் இந்த தேர்தல அறிக்கையின் அடிநாதம் இந்துத்துவமே என்றும் மீண்டும் இறுகிய இந்துத்துவா இதில் வெளிப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்

இதை முன்னமே வெளிப்படுத்தினால் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரத் தயங்குவார்கள் எனப்தை உணர்ந்து குள்ளநரித்தனமாக தேர்தல் கூட்டணிகள் அனைத்தும் முடிவான பிறகுகடைசியாக ஆந்திராவில கூட்டணி முடிவான பிறகுஇனி தேர்தல் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று சொல்லி விட்ட பிறகு பாஜக தனது தேர்தல அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

வளர்ச்சி முன்னேற்றம் என்று பேசத்தொடங்கியிருக்கிற பாஜ க மாறிவிட்ட்து என்று நினைத்தால் அது தவறு அவர்களுடையை பழைத திட்டங்கள் அப்படியே இருக்கின்றன. பாஜாவின் குணம் மாறாது என்பதை காட்டுவதால ராம் போன்றவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த தேர்தல் அறிக்கை குறித்து நமது நிலை என்ன?
·         இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நினைக்கிறார்கள் உண்மையில் இத்தேர்தல் அறிக்கை அப்பட்டமாக தேசத்திற்கு தேச நலனுக்கும் எதிரானதாகும்.
பாஜா கவின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் புதிதாக அதிர்ச்சியடைய எதுவும் இல்லை.
இந்தியாவில் பாஜக் என்ற கட்சி இந்து என்ற தன்னுடைய சொந்த அடையாளத்தின் மீது எழுந்து நிறக் முடியாது
ஏனெனில் இந்து என்று சொன்னாலே வர்ணாசிரமும் தீண்டாமையையும் தானாக வந்து விடும்
வர்ணாசிரம்ம் மக்களை பிறப்பிலேயே நான்கு வர்ணத்தினராக (பிரிவின்ராக) பிரிக்கிறது.
·         வேதம் ஓதுகிற பிராமணர்கள் + பிரம்மாவின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்
·         போர் செய்கிற சதிரியர்கள் + பிரம்மாவின் தோளிலிருந்து படைக்கப்பட்டவர்கள்
·         வியாபாரம் செய்கிற வைஷ்யர்கள் + பிரம்மாவின் தொடையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்
·         அடி நிலை தொழில் செய்கிற சூத்திர்ர்கள்   + பிரம்மாவின் காலிலிருந்து படைக்கப்பட்டவர்கள்

இந்த அடிப்படையிலேயே மக்களுடையை உரிமைகளும் மரியாதையும் தீர்மாணிக்கப்பட்ய்ம்.
பிராமணர்கள் எதுவும் செய்யலாம். அவர்கள் ஒரு சூத்திரனை கொன்றால அது ஒரு அற்ப பூச்சியை கொன்றதைப் போல
அதே நேரத்தில் சூத்திர்ர்கள் ஒரு பிராமணனை திட்டி விட்டால் அது மரண் தண்டனைக்குரிய குற்றம்
என்றெல்லாம் வாணாசிரம்ம் சொல்கிறது. அது மக்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் தீண்டாமையை நிலை நாட்டுகிறது, இதனடிப்படையில் செயல் பட்ட மேல் சாதிக் கார்ர்கள், தங்களது தெரு வழியே சூத்திர்ர்கள் நடக்க கூடாது. அப்படி நடக்க அனுமதித்தாலும் ஆண்கள் செருப்பணியக் கூடாது, பெண்கள் மேலாடை அணியக் கூடாது பக்கத்தில் வரக்கூடாது. ஒரு பாத்திரத்தை பயனபடுத்தக் கூடாது என்றெல்லாம் விதியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அம்பேக்தக் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். நாடு சுந்தந்திரம் பெறுவதற்கு முன் அவர் படித்த பள்ளிக் கூடாத்தில் வகுப்பறையின் கடைசியில் கீழே தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். ஆசிரிய அழைத்தார் என்பதற்காக அவர் முன்னால் வந்தார். அப்போது உயர் சாதியினர் வைத்திருந்த சாப்பாட்டு பைகளை அவர் கடந்து சென்றார். அதனால் அந்த வகுப்பிலிருந்து உயர் சாதியினர் அனைவரும் தங்களது அந்த  மதியச் சாப்பாட்டை கீழே கொட்டினார்கள்.

இந்தியா சுத்ந்திரம் அடைவதற்கு முன் இந்த ஜாதிய பிரிவால் இலாபம் அடைந்து கொண்டிருந்தவர்கள் சுதந்திரத்தை எதிர்த்தார்கள். நாடு சுந்தந்திரம் அடைந்து விட்டால் தங்களுடை அதிகாரம் காணாமல் போய்விடும் என்று நினைத்தார்கள். அதனால் தான் இந்துத்துவ வாதிகள் எவரும் இந்திய சுத்ந்திரப் போராட்ட்த்தில் கலந்து கொள்ள வில்லை, மாறாக ஆங்கிலேயருக்கு உளவு வேலையும் உதவும் வேலைகளையும் செய்தார்கள். ஆங்கிலேயரை எதிர்ப்பது இந்து தர்மத்துக்கு செய்கிற சேவை அல்ல என்றார்கள்.

அதனால் தான் சவர்க்கார் உள்பட இன்று இந்த்துதுவ சக்திகள் கொண்டாடும் எந்த தலைவரும் தேசத்திற்காக எந்த பங்கையும் ஆற்றவில்லை

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்து என்ற அடிப்படையில் மக்களை அழைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டவர்கள் இந்துக் களிடையே முஸ்லிம் எதிர்ப்புணர்வை உண்டு பண்ணி அதனடிப்படைப்படையில் இந்துக்களை ஒன்றினைக்கவும் அதன் பிற்கு தமது சனாதன தர்மத்தை நிலை நாட்டவும் திட்டமிட்டார்கள்

எனவே பாஜக பிறந்த்தே முஸ்லிம் எதிர்ப்புணர்வு அரசியலால் தான். அதனால் அவர்களுடைய திட்டங்களும் செயல்பாடுகளும் ஆரம்பத்திலிருந்தே இந்த திசையில் தான் இருந்தன்.

இந்துத்துத்துவா என்பது இந்துக்களின் நலனுக்கான இல்லை என்பதை இந்துப் பெருமக்களும் புரிந்துதான் வைத்திருந்தனர், அதனால தான் 65 சதவீதம் இந்துக் களை கொண்ட நாட்டில் இந்துதுத்துவா இதுவரை ஏகபோக வரவேற்பை பெறவில்லை.

மக்களின் இந்த மனப்போக்கு இந்துத்துவ சக்திகளுக்கும் புரிந்தே இருந்த்து. அதனால் தான் முஸ்லிம் எதிர்ப்பு அம்சங்களை முன்னிறுத்தி வஞ்சகமாக மக்களை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிடுகின்றனர்.

முஸ்லிம் தலைவர்கள் ஆரம்ப முதலே இந்திய முஸ்லிம்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்து வந்துள்ளனர் நம் நாட்டில் தம்முடைய சொந்தக் கால்களில் நிற்க முடியாத இந்துத்துவ சக்தி முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதன் மூலம் ஆதாயம் பார்க்க முயல்கிறது, கலவரங்களை உண்டு பண்ணுவதன் மூலம் தங்களது தரப்புக்கு தீவிர ஆதரவாளர்களை திரட்ட முயல்கிறது.

என்வே முஸ்லிம்கள் அவர்களின் அறிவிப்புக்கள் திட்டங்களை கண்டு அச்சப் பட வேண்டாம் நமது நாட்டின் ஜனநாயக அமைப்பும். அரசியல் சாசனமும் நமக்கு தக்க பாதுகாப்பை வழங்கியுள்ளன, நீதி மன்றங்களின் தாமதமகாவேனும் நமக்கான் நீதி கிடைக்கும். முஸ்லிம்களே எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தி வந்தனர்.

பொது சிவில் சட்டம் பற்றி பேச்சு எழுகிற பொழுதெல்லாம் முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம்கள் இப்படித்தான் அமைதிப்படுத்தினர்.
நம்மிடம் சிறப்பான வாழ்க்கை திட்டம் இருக்கிறது. அதை நாம் உறுதியாக கடை பிடிப்போம். இந்துக்களிடையே அத்தகைய வாழ்க்கை திட்டம் எதுவும் இல்லை. இந்து மதம் ஊருக்கு ஒரு மாதிரி இருக்கிறது.

தமிழக பிராமணர்களிடம் முட்டை அசைவம் கல்கத்தா பிராமணர்களிடம் அது சைவம்
சொந்த சகோதரியை திருமணம் செய்யும் வழக்கம் இராஜஸ்தானை சேர்ந்த சில இந்துக்குழுக்களிடம் இருக்கிறது.

அக்கா மகளை திருமணம் செய்வது தமிழ இந்துக்களின் வழக்கத்தில் இருக்கிறது. அது தான் முறை என்கின்றனர். கேரளாவிலோ இந்துக்களிடம் அது பாவம்.

ஒரே ஜாதியிலே கூட வேவ்வேறு ஓர்களின் பழக்கங்களும் வேறு.

கேரளாவில் சில பிரிவினரிடையே மகனை விட மருமகனுக்கு சொத்து கொடுக்கிற பழக்கம் இருக்கிறது.

இவற்றை ஒன்று ப்டுத்துவது முதல் வேளை. இந்த்துவ வாதிகளே முதலில் உங்களிடை பொது சிவில் சட்ட்த்த்தை பற்றீ முதலில் ஜாதிகள் கவலைப் படட்டும், பிறகு முஸ்லிம்கள் கவலைப் பட்டால் போதுமானது என்பது முஸ்லிம் அறிஞர்களின் அறிவுரையாகும்,


இப்போது இந்த தேர்தல் அறிக்கை விச்யத்திலும் அப்படித்தான். முஸ்லிம்கள் இந்த அறிக்கை குறித்து அச்சப் படத்தேவையில்லை..

பாஜ்க வின் தேர்தல் அறிக்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தால் தான் ஆச்சரியம். எதிரானதாக் இருப்பதில் முஸ்லிம்களுக்கு ஆச்சரியமும் இல்லை அதிர்ர்சியும்  இல்லை.

உண்மையில் இந்த தேர்தல் அறிக்கை, இந்திய முஸ்லிம்களுக்கு அல்ல இந்திய ஒருமைப்பாட்டுக்கும் சமய சமூக நல்லுறவுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான அறிக்கையாகும்.

குஜராத் மாநிலம் முன்னேறியிருப்பது போல் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்து வதில் பாஜக முய்ற்சி செய்தது. அந்த பொய்யான கோஷத்தில் பலரும் நம்பி விட்டனர்,

குஜராத்தின் நிலை.

கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் பாஜகவுடன் சேர்ந்து கொண்டிருக்கிற தமிழ்க கட்சிகளை பார்த்து அருமையாக கேட்டார்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. குஜ்ராத்தில் விவசாயிகளிடம் ஒரு யூனிட்டுக்கு 7.50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்காகவா தமிழகம் குஜராத்தா ஆக வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்றார். குஜராத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்றால் அங்குள்ள மக்கள் தொகை 3.5 கோடி தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியல்லவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்ர்,

எனவே குஜராத்தின் வளர்ச்சி என்பது ஒரு மாயை.

குஜராத் மக்களை அச்சத்தில் வைத்து 3 முறை ஜெயித்து விட்டார் என்பது மட்டுமே திரு மோடியின் சாதனை . இதைப் புரிந்து கொள்ளாமல் பாஜக போட்ட வளர்ச்சி வேஷ்த்தில் மயங்கி கிடந்தவர்களுக்குத்தான் இந்த தேர்தல் அறிக்கை பெரும் அதிர்ச்சியாகும்

முஸ்லிம்களுக்கு அல்ல.

முஸ்லிம்களை பொருத்தவரை பாஜகவை இந்த தேசத்தின் நலனுக்கு எதிரான ஒரு கட்சியாகவே பார்க்கிறார்கள். தங்களது சமயத்துக்கு எதிரானதாக பார்ப்பது இரண்டாவது கட்டம் தான்.

இதற்கு முன்னாலும் சரி. இப்போதும் சரி பாரதீய ஜனதா கட்சி இந்திய நாட்டில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக செய்துவருகிற சதித்திட்டங்களை , பழிப் பிரச்சாரங்களை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி கொள்வார்கள்.

முஸ்லிம்கள் அப்பாவிகள் . பெரும்பாலும் குற்றச் செயல்களுக்கு அப்பாற்பட்டவர்கள்,. நியாயாமாக உழைத்து சம்பாதித்து தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் வளர்ப்பவர்கள், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும்  சமத்துவ உணர்வோடு நடந்து கொள்கிறவர்கள். முஸ்லிம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வளர்ச்சி இருக்கும். அங்கு பாதுகாப்பும் அமைதியும் இருக்கும் தங்களது சமய்ப்படியான வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறவர்கள்.

இது தான் இந்தியாவில் குறீப்பாக தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் நிலை,.

இந்த அப்பாவிச் சமுதாயத்திற்கு எதிராக  அரசியல் இலாபத்திற்காக சதி செய்பவர்களை அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்பது மட்டுமே முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கை

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ(54)
பெருமானார் (ஸல்) அவர்களை கொன்று விடலாம் என்று தாருன்னந்தவாவில் மக்காவின் காபிர்கள் சதி செய்தார்கள், அந்தப் பெரும் சதிகார்ரிகளின் சதியை எதிர் கொள்வதற்குரிய வலிமை எதுவும் அப்போது பெருமானாரிடமோ முஸ்லிம் உம்மத்திடமோ இருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் காப்பாற்றினான்,
அகல வாய் திறந்திருந்த ஒரு குகை கொண்டும் சிலந்திப் பூச்சியின் வலை கொண்டும் புறாகூடு கொண்டும் அல்லாஹ் அந்த வஞ்சம் மிக்க சதிகார்ர்களிடமிருந்து நபியை காப்பாற்றினான்.
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ(30)
عَنِ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ قَالَ تَشَاوَرَتْ قُرَيْشٌ لَيْلَةً بِمَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ إِذَا أَصْبَحَ فَأَثْبِتُوهُ بِالْوَثَاقِ يُرِيدُونَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ اقْتُلُوهُ وَقَالَ بَعْضُهُمْ بَلْ أَخْرِجُوهُ فَأَطْلَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ذَلِكَ فَبَاتَ عَلِيٌّ عَلَى فِرَاشِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ اللَّيْلَةَ وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى لَحِقَ بِالْغَارِ وَبَاتَ الْمُشْرِكُونَ يَحْرُسُونَ عَلِيًّا يَحْسَبُونَهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَصْبَحُوا ثَارُوا إِلَيْهِ فَلَمَّا رَأَوْا عَلِيًّا رَدَّ اللَّهُ مَكْرَهُمْ فَقَالُوا أَيْنَ صَاحِبُكَ هَذَا قَالَ لَا أَدْرِي فَاقْتَصُّوا أَثَرَهُ فَلَمَّا بَلَغُوا الْجَبَلَ خُلِّطَ عَلَيْهِمْ فَصَعِدُوا فِي الْجَبَلِ فَمَرُّوا بِالْغَارِ فَرَأَوْا عَلَى بَابِهِ نَسْجَ الْعَنْكَبُوتِ فَقَالُوا لَوْ دَخَلَ هَاهُنَا لَمْ يَكُنْ نَسْجُ الْعَنْكَبُوتِ عَلَى بَابِهِ فَمَكَثَ فِيهِ ثَلَاثَ لَيَالٍ  -احمد
தன்னந்தனியாளாக இபுறாகீம் நபி (அலை) அவர்கள் நம்ரூதின் சதியை எதிர் கொண்டார்கள்.  அல்லாஹ் அவர்களுக்கு எதிராக் திட்டமிட்டான். அவர்களது சதித்திட்டங்கள மலையை யே அசைத்து விடும் என்றாலும் அல்லாஹ்வின் திட்ட்த்திற்கு முன் அவை எம்மாத்திரம்.
وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ(46) - إبراهييم
 அப்பாவி மக்களுக்கு எதிரான சதிகாரர்கள் மிருகங்களை விட  கொடியவர்கள் அவர்களது முயற்சியை அல்லாஹ் நீண்ட நாட்களுக்கு அனுமதிப்பதில்லை 

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَلْعُونٌ مَنْ ضَارَّ مُؤْمِنًا أَوْ مَكَرَ بِهِ -  ترمذي

மனித சமூகத்தின் நலன்களுக்கு எதிரான சதிகார அரசியல்வாதிகள் வரலாற்றில் அவ்வப்போது சிறு வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். மக்களிடம் குறுகிய உணர்ச்சியை அவர்கள் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்திருக்கலாம். ஆணால் அத்தகைய சதிகார்ரகள் நிலைத்த்தில்லை.

19 ம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லர் ஜெர்மனியர்களே இந்த உலகின் உயர்குல மக்கள், உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று பேசி ஜெர்மனியர்களை உணர்ச்சி வசப்பட வைத்து இரண்டாம் உலக யுத்ததில் உலகையே அச்சப்படுத்திக் கொண்டிருந்தான்,
அவன் இறப்பதற்கு முதல் நாள் வரை அவன் தோற்பான் என்று யாரும் நினைத்திருக்க முடியாது, அந்த அளவு வலிமையோடும் செல்வாக்கோடும் அவன் முன்னேறிக் கொண்டிருந்தான், பிரிட்டனும் பிரான்ஸும் ரஷயாவும் அவனுக்கு எதிராக் திண்டாடிக் கொண்டிருந்தார்கள்

ரஷ்யாவில் வீசிய பனிப்புயல் ஹிட்லர் எதிரபாராத வகையில் ஜெர்மனியர்களை பலி வாங்கியது, ஹிட்லர் தோற்றான்.

பெருமானார் (ஸ்ல்) அவர்களுக்கு எதிராக மக்காவின் காபிர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு எதிர்க்க முடியாத பெரும் படையோடு மதீனாவை முற்றுகையிட்ட அகழ் யுத்த்தின் போது இது போலத்தான் பெரும் பனிக்காற்றை அனுப்பி அல்லாஹ் எதிரிகளை பின்ன்ங்கால் பிடறியில்பட ஓட வைத்தான். குச்சியில் கட்டியிருந்த குதிரையின் கயிற்றை அவிழ்ப்பதற்கு  கூட கீழே இறங்க அச்ச்சப்பட்ட எதிர்கள் அப்படியே பிய்த்துக் கொண்டு ஒடினார்கள்.

அப்பாவி மக்களுக்கு எதிரான சதிச் செயல்களை அற்புதமாக முறியடிக்க சக்தி படைத்த அல்லாஹ் இந்த இந்துதுதுவ தேசவிரோத சக்திகளின் சதித்திட்ட்த்தயும் முறியடிப்பான், இன்ஷா அல்லஹ்.

இத்தீய சக்திகளின் திட்டங்கள் அறீவிப்புக்களை கண்டு அச்சப் பட வேண்டியதில்லை. உணர்ச்சி வசப்படவும் கூடாது.

உணர்ச்சி வசப்பட்ட்டு காரியங்களில் இறங்கினால் அது தவறாகவும் நமக்கு எதிராகவும் அமைந்து விடும்.

கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லிப்பட்டினத்தில் ஓட்டுக்கேட்டு பள்ளிவாசல் வழியே சென்றே தீருவேன் என்று பள்ளிவாசலை கடந்து செல்ல முயன்ற பாஜகாவின் வேட்பாளரை ஊர் தலைவர்களின் பேச்சை மீறி சில இளைஞர்கள் கல் வீசித்தாக்கினார்கள்.

அதன் விளைவு என்ன பள்ளீவாசலில் வாசலில் வைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த்து, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க முன்னதாக திட்டமிட்டு வைத்திருக்கிற இந்துதுவ சக்திகள்  இது மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்குத்தான் காத்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் சொத்துக்கள் ஏராளமாக சேதப்படுத்தப் பட்டுள்ளது. ஏதோ தெருவில் நடந்த சண்டை என்று கருதிய மூஸ்லிம்கள் நிம்மதியாக இரவில தூங்கப் போயவிட்டார்கள், கடற்கரையில் அவர்களுடைய மீன்பிடி படகுகளை திட்டமிட்டு எதிரிகள் தீ வைத்தும் தண்ணீருக்குள் மூழ்கடித்தும் சேதப்படுத்தி விட்டார்கள் சேத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று அங்குள்ள மீன பிரதிநிதி சொல்கிறார்.. அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ஓட்டுக் கேட்க வந்த வேட்பாளரை முஸ்லிம்கள் தடுத்தார்கள் என்ற பெயர்தான் மிச்சம், இதே இட்த்தில் ஊர்மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து அவர் போக அனுமதிக்க மாட்டோம் இவர் இவ்வளவு மோசமானவர் என்று மக்கள் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தியிருந்தால் குறைந்தபட்ச ஒரு வேட்பாளரை உள்ளே விட மறுத்த்தற்கான காரணாமாவது வெளிப்பட்டிருக்கும். உணர்ச்சி வசப்பட்ட்தனால் நஷ்ட்த்திற்கும் வழக்குகளுக்கும் நாம் ஆளாகியிருக்கிறோம்.

கல்வீசி வீட்டு ஓடியவர்கள் அடுத்து அப்பாவி மக்களுக்கு என்ன நேரும் என்று யோசித்தார்களா? மக்களை பாதுகாக்க திராணியற்றவரகள் ண்ணுக்கு இருந்தால் டேலா மணல் கட்டியை கூட கையில் எடுக்க கூடாதல்லவா?

ஒரு வேட்பாளரின் முகத்தில் கரியை பூச, விரல் மையை விட வீரியம் வேறு எதற்கு இருக்கிறது ?

ஏற்பட்ட் நட்ட்த்திற்கும் இனி தொடரும் சிரமங்களுக்கும் ஏதாவது பயன் உண்டா?

தேர்தலுக்குமுன் எப்படியாவது கலவரங்களை உருவாக்கி விடும் இந்துத்துவாவின் தந்திரம் .பி யில் அரங்கேறி வெறியாட்டம் போட்டது. முஸ்ப்பர் நகர் பெரும் கொடுமையை சந்தித்த்து, அப்பாவி கிராம வாசிகள் பலர் இப்போதும் முகாம்களில் இருக்கிறார்கள்.   இப்போது அதை அறுவடை செய்ய அமித்ஷாவை அனுப்பி வைத்திருக்கிறது. அவர் இது பழி தீர்க்கும் தேர்தல் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் அத்தகைய ஒரு சூழ்நிலைக்கு நாள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கோவை சேலம் உள்ளிட்ட பல இடங்களிலும் முய்றசி செய்தார்கள். இப்போது  மல்லிப்பட்டினம் மாட்டிக் கொண்ட்து.

முஸ்லிம் பெருமக்களே! கவனமாக இருங்கள்.
நாய்கள் குறைக்கட்டும், பயம் இல்லை எனில் அமைதியாக இருங்கள். பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பு இருக்குமெனில காவல் துறை , தேர்தல் ஆனையத்தை முறையாக அனுகுங்கள். பொருளாதார அமைப்புக்களின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திக் கொள்ளுங்கள்.  கோபத்தை தூண்டும் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள். அதே நேரத்தில் நியாயத்திற்கு எதிராக நடந்து கொள்ளாதீர்கள் நியாயம் நீதிக்கு எதிராக யார் நடந்தாலும் அவர்கள் நஷ்ட்த்தை சந்திப்பார்கள்.

சதித்திட்டங்களுக்கு உள்ளாகும் போது அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் கற்றுத்தருகிறார்கள்.  

பிறர் நமக்கெதிராக சதி செய்கிற போது நாம் கை கொள்ள வேண்டிய முதல் ஆயுதம் பொறுமை. இரண்டாவது துஆ முன்றாவது தவக்குல்அல்லாஹ் நாடியது நடக்கும் என்பதி உறுதியாக் இருப்பது.


 وسائل النَّجاة مِن كيد الكائدين
1.      الصَّبر والتَّقوى:   إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُواْ بِهَا وَإِن تَصْبِرُواْ وَتَتَّقُواْ لاَ يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ [آل عمران: 120].

2.     دعاء الله عزَّ وجلَّ بصدق وإخلاص

3.     التَّوكُّل على الله عزَّ وجلَّ: قال تعالى عن نبيِّه هود -عليه السَّلام- وقومه: قَالَ إِنِّي أُشْهِدُ اللّهِ وَاشْهَدُواْ أَنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ مِن دُونِهِ فَكِيدُونِي جَمِيعًا ثُمَّ لاَ تُنظِرُونِ إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللّهِ رَبِّي وَرَبِّكُم مَّا مِن دَآبَّةٍ إِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ [هود: 54–56].


பொறூமை என்றால் சும்மா இருப்பது என்று அர்த்தமல்ல. இஸ்லாத்தில் பொறுமைக்கு அப்படி அர்த்தம் கிடையாது,

அல்லாஹ் பொறுமையைப் பற்றிச் செல்லும் போது பலநற்செயல்களை சேர்த்தே சொல்கிறான்.

பொறுமை என்பது தளர்ந்து உட்கார்ந்து விடுவதல்ல

فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ(3:146  )

பொறுமைக்கு அடுத்த்தாக் தொழ வேண்டும்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ(153)

பொறுமைக்கு அடுத்த்தாக இறையச்சத்திற்குரிய காரியங்களில் ஈடுபட வேண்டும்

وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ(3:120

பொறுமை என்பது  மீட்சி அடைவதறிகான காரணங்களை நிதானமாகவும் தொடர்ச்சியாகவும் திட்டமிடுவதாகும்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(3: 200

இதுவே உறுதிமிக்கவர்களின் போக்காகும்

وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ(3: 186

இன்றையை இந்த தேர்தல் சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமான சதித்திடங்களை கேள்விப்படுகிற போது

முஸ்லிம்களாகிய முதலில் பொறுமையை கைகொள்வோம். அதாவது
·         பத்ட்டத்திற்கு உள்ளாகாமல் காரியமாற்றுவோம்
·         சதிகார்ர்கள் வெற்றி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு நம்மாலான முய்ற்சிகளை மேற்கொள்வோம்.

இது விச்யத்தில் இந்த தேர்தலில் இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரண்டு கருத்துக்களில் ஒன்று பட்டு நிற்கிறார்கள்

1.   இந்துதுதுவ சக்திகளுக்கும் அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கும் எதிராக வாக்களிப்பது,
2.   நம்முடைய வாக்குகள் சிதறிப்போகாமல்வீணாகிவிடாம்ல் பார்த்துக் கொள்வது,
அந்த அடிப்படையில் தமிழத்தில் வருகிற 24 ம் தேதி நடைபெறுகிற நாடாளுமனற மக்களைவைக்கான தேர்தலில் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு எதிராக வாக்களிப்போம்.

நம்முடைய தொகுதியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ள திமுக அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.

(அதிமுக வின் தலைவி வேலூர் கூட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் மூன்றாவது அணிக்குத்தான் ஆதரவு கொடுப்போம் என்று சொல்லியிருக்கிற நிலையில் -  பிஜேபியை விமர்ச்சித்திருக்கிற நிலையில் தி முகவை நாம் முழு மூச்சாக எதிர்க்கத் தேவையில்லை. அரசியலில் எல்லா மட்டைகளுக் ஒரு குட்டையில் ஊரியவைதான்.)

அதனால் இந்துதுதுவா வெற்றி பெறக் கூடாது எனில் அதற்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்போம். நமது ஓட்டுக்கள்  சிதறிவிடாமல் காப்போம்.
இதில் தான் நமது நமது பொறுமை அறிவார் தனமை தேசிய அக்கறை அடங்கியிருக்கிறது.
கொலை ஆள்கட்த்தல் போதப்பொருள் விற்பனை ஜாதிவெறி போன்ற குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களை புறக்கணிப்போம்.

பாஜக் தேமுதிக பாமக மதிமுக கொங்கு கட்சி ஈஸ்வரன் ஆகிய கட்சிய்களுக்கு வோட்டுக்கள் விழாமல் தடுப்பதற்கேற்ற பிரச்சாரத்தை முடிந்த வரை செய்வோம்,

தன்னுடை ஆட்சி காலத்தில் 2000 அப்பாவிகளை கொன்று விட்டு இது வரை அது குறித்து வருத்தம் கூட தெரிவிக்காத ஒருவர் இந்த நாட்டின் பிரதமர் ஆனால் நாடு நலம் பெறுமா? சிந்திப்பீர் ! மோடிக்கு எதிராக் வாக்களிப்பீர்!

வண்ண வண்ண் ஆடை அணிந்துதொலைக்காட்சி சானல்களை சரிக்கட்டி வசீக்ரம் காட்டுகிற வஞ்சகத்தை நம்பி ஏமாந்து விடவேண்டாம். இந்தியப் பாரம்பர்ரியத்திற்கு எதிராகவா உங்கள் ஒட்டு ? மோடிக்கு எதிராக் வாக்களியுங்கள்!

காந்தியை உதறி விட்டு கோட்சேக்களை கொண்டாடுகிறவர்களுக்கா உங்கள் ஓட்டு? சிந்திப்பீர் ! மோடிக்கு எதிராக் வாக்களிப்பீர்

இது வரை ஏழை இந்திய ஜனநாயகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இனி ஒரு சர்வாதிகாரிக்கா உங்கள் ஒட்டு? சிந்திப்பீர் மோடிக்கு எதிராக வாக்களிப்பீர்!

இந்தியாவை காப்பாற்ற மோடிக்கு எதிராக வாக்களியுங்கள்

என்பது போன்ற பிரச்சாரத்தை இந்த நாட்டு மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். இதுதான் பொறுமையான வழிமுறையாகும். (இந்தப் பிரச்சாரத்தில் புதிய வாக்காளர்கள் அதாவது கல்லூரிகளில் படிக்கிற - நிறுவன்ங்களில் பணியாற்றுகிற இளைஞர்கள் போஸ்டர்கள் எஸ் எம் எஸ் மின்ன்ஞ்சல் வாட்ஸ் அப் மெசேஜ்கள் மூலம் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்

அடுத்து நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்  ஹாஜரா அம்மையாரின் பிராத்தனை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَاجَرَ إِبْرَاهِيمُ بِسَارَةَ دَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنْ الْمُلُوكِ أَوْ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا فَأَرْسَلَ بِهَا فَقَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ فَلَا تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ

أَنَّ ابْنَ عُمَرَ قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنْ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلَا تَجْعَلْ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا ترمذي 3424

எங்கள் இறைவா! எங்கள் மீது கருணை காட்டாத ஆட்சியாளர்களை எங்கள் மீது திணித்து விடாதே!

அடுத்த்தாக நாம் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்போம். அல்லாஹ் நாடியதே நடக்கும் . அல்லாஹ் நமக்கு நன்மை தருவான்.

உலகத்தில் அதிக சதிகளை எதிர் கொண்ட மனிதர்  யூசுப் (அலை). 
அவரது சகோதர்ர்கள் அவரை விரும்பியவர்கள் அவருக்கு எதிராக சதி செய்தார்கள்,
சில சமயங்களில் அவர் பக்கம் நியாயம் இருந்தும் சோதனைகளை அனுபவிக்க நேர்ந்த்து.
அவர் பொறுமை காத்தார், யார் மீதும் பழி சுமத்திக் கொண்டிருக்கவில்லை. செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே செய்தார். இறுதியில் அற்புதமான் வெற்றி அவருக்கு கிட்டியது, அவருக்கு எதிராக சதி செய்தவர்கள் அவருக்கு முன்னாள் தலை குனிந்து நின்றார்கள்.

அல்லாஹ் சதி காரர்களிடமிருந்து முஸ்லிம் உம்மத்தையும் இந்த நாட்டு மக்களையும் பாதுகாப்பானாக!

6 comments:

 1. Aameen.Allah soolchikkararhalidamirundhu Muslim samudhayatthai kappatruvanaha . Hazrath, Allah ungal kavalaiyai - akkaraiyai etrukkolvanaha . Muslimgal udane padikkavendiya avasiyamana padhivu. Ella Imamgalum indha ganamana subject-i jumma vil pesamudiyuma Theriyavillai.but mudindhavari idhai jumma vil pesuvom& facebookkil parappuvom Insha Allah.

  ReplyDelete
 2. faasista ku edhirana pirachaaram good masha allah .idhai padikum imamkal comment koduppadhodu ninru vidamal pjp ku edhirana prachaarathai theevirapaduthungal shottime dhan iruku .muyarchippom allah udhavi seivan insha allah

  ReplyDelete
 3. طلحة مصباحي6:19 PM

  جزاكم الله خيرا كثيرا

  ReplyDelete
 4. ஆமீன்.
  அல்லாஹ் சூழ்ச்சிகாரர்களின் தீங்கை விட்டும் பாதுகாப்பானாக.

  ReplyDelete
 5. Anonymous4:51 AM

  insha allah

  ReplyDelete