ஆண்டு தோறும் மனித சமூகத்திற்கு சிறப்பாக பங்களித்த ஆளுமைகளுக்கு நோபlல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த நோபல் பரிசு என்பதே ஒரு குற்றத்தை மறைப்பதற்கான முன்னெடுப்புதான்.
ஆல்பிரட் நோபல் என்பவர் ஸ்பெயின் நாட்டை சார்ந்த ஒரு பெரும்
ஆய்வாளர். சுமார் 355 கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியுள்ளார். அதில் பெரும்பாலானவை
ஆயுதங்கள் சார்ந்தவை,
தற்காலத்தில் பாலிஸ்டிக் ஏவுகளைகள் பயன்படுத்தப்படுவதை நாம் அதிகம் கேள்விப்படலாம். ஒரு கனமான ஆயுதம் அதிக தூரத்திற்கு
பயணம் செய்ய பாலிஸ்டிக் பயன்படுகிறது. அனுகுண்டு போன்ற ஆயுதங்களை தூக்கி செல்லவும் கண்டம் விட்டு கண்டம்
பாயும் குண்டுகளை தூக்கிச் செல்லவும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளே பயன்படுத்தப்படுகின்றன.
டயனமைட்டு (Dynamite
எனும் வெடி பொருளை
கண்டு பிடித்தவரும் ஆல்பிரட் நோபள் ஆவார்.
ஆயுத
தயாரிப்புகளுக்கான
உரிமை பெற்றிருந்த அவருக்கு ஏராளமான செல்வம் திரண்டது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவிலான
சண்டைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு மக்கள் கொத்துக்கொத்தாக
பலியானார்கள். அதனால் ஆலிபிரட்டுக்கு சேர்ந்த தாராளமான செல்வம் ஏராளமான மரணங்களின் இரத்த வாடையை கொண்டிருந்தது.
அப்போது ஒரு விந்தை நடந்தது.
1888 ம் ஆண்டு ஆல்பிரட்டின் சகோதரர் லுட்விக் என்பவர் இறந்து போனார். ஆனால் ஆல்பிரட் தான் இறந்து
விட்டார் என்று தவறாக புரிந்து கொண்ட பிரன்சு செய்தித்தாள் ஒன்று அவருடை இறப்புச் செய்திக்கு
“மரணத்தின் வியாபாரி இறப்பு” "The
Merchant of Death Is Dead" என்று தலைப்பிட்டிருந்தது.
இதப் படித்த ஆல்பிரட்டின்
மனது மிகவும் வருத்தமுற்றது. மனித சமூகத்திற்கு தான் பெரிய தவறு இழைத்து விட்டதாக
வருந்த வைத்தது.
அதனால்
அவர் தனது சொத்துக்களில்
பெரும்பாலானாதை அதாவது 94 சதவீதத்தை
மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு
இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய
துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமென உயில்
எழுதி வைத்தார்.
எனவே நோபள் பரிசு என்பது புனிதமான
ஒன்று என்று கருதுவதற்கில்லை. அது தன்னால் நிகழ்ந்து விட்ட துயரங்களுக்காக மருந்திடுகிற ஒரு
மாற்று உத்தியாகவே கருதப்பட வேண்டும்.
நோபல் பரிசு பிரமாதமாக கவனிக்கப்படுவதற்கு
முக்கியமான நான்கு காரணங்கள் உள்ளன.
1. பரிசின் மதிப்பு அதிகம்.
நோப: தானமாக கொடுத்த சொத்தின் மதிப்பு 2008 ம் ஆண்டின் கணக்கின் படி 186 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 650 கோடியாகும். .இதிலிருந்து கிடைக்கிற வருமானத்திற்கு
ஏற்ப தற்போது பரிசு பெறுபவர்களுக்கு வெகுதிமதிகள் வழங்கப்படுகின்றன.
2.
பரிசின் பூர்வீகம் பழமையானது.
இந்த பரிசு சுமார் 135 வருட பாரம்பரியத்தை கொண்டது.
1897 ல்
நார்வே பாராளுமன்றத்தில் ஆல்பிரட் நோபளின்
உயில் இறுதி செய்து
அங்கீகரிக்கப்பட்டது.
1900 ல் இதற்காக நோபல் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்ட்து.
அது முதல் இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் என்று குறிப்பிட
பட்டாலும் சில வருடங்களில் சூழ்நிலை நெருக்கடிகள் காரணமாக இது வழங்கப்பட வில்லை. எனினும் குறைந்த்து ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறையாவது இப்பரிசு வழங்கப்பட்டுவருகிறது. .
3.
சிஸ்டம்
இப்பரிசை
வழங்கும் அமைப்பும் அதன் நடைமுறைகளும் முறைப்படுத்தப்பட்ட்தாக
இருப்பதும் இதன் சிறப்பம்சங்களில்
ஒன்றாகும்.
நோபல் அறக்கட்டளை துவங்கப்
பட்ட போது நாவேயும்
ஸ்வீடனும் ஒன்றாக இருந்தன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும்
சுவீடனும் பிரிந்தன.
அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன்
பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும்
அமைப்புகளின் வசமும் உள்ளது
வருடந்தோறும் ஆல்பர்ட் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் பத்தாம் நாள் அன்று, இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் சுவீடனில்
உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு அதே டிசம்பர் பத்தாம் நாள், நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது.
இதற்கு
முதல் நாள் இரவில் பரிசு பெறுகிறவரக்ளின் உரை நடைபெறும்.
4.
பிரபலமடைதல்
நோபல் பரிசு பெருகிறவர்கள்
உலகம் முழுக்க அறியப்படுவார்கள். சில சந்தர்பர்ங்களில் இதற்கு முன் உலகின் கவனத்திற்கு வராதவர்களாக அவர்கள் இருந்திருப்பார்கள்.
உதாரணத்திற்கு
தற்போதைய பங்களாதேஷின் அதிபர் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது மிக எளிமையான அவர் உலக அரங்கிற்கு அறிமுகமானா. இது போல பல விஞ்ஞானிகளும் அவர்களது கண்டுபிடிப்புகளும் இப்பரிசுகளின்
மூலம் உலகிற்கு அறிமுகமாகின்றன.
அதனால் உலக தலைவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பலருக்கும் நோபல் பரிசு என்பது ஒரு கனவாகவும் மரியாதையாகவும்
இருக்கிறது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசைப்பட்டார்.
அவருக்கு அவ்விருதை கொடுக்கும் படி இஸ்ரேல் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கையும் வைத்தன.
ஆனால் இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப்பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கோரினா machado-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெனிசுலாவின்
ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக இந்தப் பரிசைப் பெற்றார் என்று கூறப்பட்டுள்ளது.
அமைதி பரிசு வழங்குவதற்கு மூன்று
இலக்குகளை நோபல் அறக்கட்டளை தீர்மாணித்துள்ளது
1. நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தை
மேம்படுத்துதல்
2. ராணுவ ஆட்சியை தடுக்க முயற்சித்தல்
3.
அமைதிக்கான மாநாடுகளை நடத்துதல்
நோபல் பரிசு விவகாரத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் அதில் காட்டப்படுகிற ஐரோப்பிய பேதம் மற்றும் முதலாளித்துவ மனப்போக்கு ஆகியவை பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
2009 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட போது அவரே ஆச்சரியமடந்தார். ஏனெனில் அவர் அதிபராக பொறுப்பேற்ற மிகச் சில மாதங்களிலேயே அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நோபல் பரிசுக்கு ஆசைப்பட்ட்து பலத்த விவாதத்தை கிளப்பியது.
அவர் சில சண்டைகளை நிறுத்தினார் தான் எனினும் மிக முரட்டுத்தனமான அணுகுமுறையிலேயே சண்டைகள்ள நிறுத்தினார். அது போல பல சந்தர்ப்பத்திலும் அக்கிரமம் செய்பவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே அவர் கொண்டிருந்தார். தற்போதும் கூட அவர் வெளிப்படையாக இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
ஒருவேளை நார்வே நோபல் அமைப்பு நெருக்கடிகளுக்கு பணிந்து அவருக்கு அமைதிக்கான பரிசை வழங்கியிருக்குமெனில் அது ஒரு ரவுடிக்கு வழங்கப்படட புனிதர் பட்டம் போல மாசு பட்டிருக்கும்.
ஹமாஸ் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்த்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய அவர் சாலமன் காலத்திற்கு பிறகு 3000 ஆண்டுகளாக இல்லாத அமைதியை தான் இப்போது கொண்டு வந்திருப்பதாக கூறினர்.
இது அவருடைய அறியாமையாகும்.
காஸா வில் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் அமைப்பை இன்றும் அழைத்து வந்திருப்பவர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவார்கள்.
அதிபர் டிரம்பும் இந்த உலகமும் கவனிக்க வேண்டிய ஒரு தகவலை சில நாட்களுக்கு முன் ஹமாஸின் தலைவர் ஒருவர் ஊடக்ங்களுக்கு தெரிவித்தார். அல்ஜஸீரா தொலைக்காட்சியில் இது வைரலானது.
“2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது போர் தொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் எங்களது ஹமாஸ் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு தகவல் அனுப்பினோம். நாம் ஒரு யுத்தத்தை தொடங்கப் போகிறோம். உங்களில் யாருக்காவது வேறு பணிகள் தேவைகள் இருக்குமானால் நீங்கள் விலகிக் கொள்ளலாம் என்று அதில் கூறினோம். மாஷா
அல்லாஹ். எங்களது அமைப்பில் இருந்த 1400 போர் வீர்ர்களில் ஒருவர் கூட பின்வாங்க வில்லை
என்று அவர் அதில் கூறியிருந்தார்.
தொடர்ந்து
அவர் பேசும் போது இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மனோ உறுதியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்
கூடாது என்று அவர் கேட்டுக் கொள்ளவும் செய்தா.
(https://www.facebook.com/reel/1385489489814465)
இவ்வளவு
உறுதியோடு ஒரு யுத்த்த்தை எதிர் கொண்டு நின்ற ஹமாஸ் அமைப்பினர் உலகம் முழுவதும் தங்களது
நீண்ட நாள் கோரிக்கையான் சுதந்திர பாலஸ்தீன த்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில்
அமெரிக்க அதிபர் மரியாதையற்ற வகையில் – மிரட்டும் தொனியில் உடன்படிக்கை அழைத்த போது
ஹமாஸ் உடன்பட்டது என்றால் டிரம்ப் போன்ற அதிபர்களும் உலகமு புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களுக்கான
வழிகாட்டுதல்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்தவையாகும்.
ஹுதைபிய்யா
உடன்படிக்கையின் போது இஹ்ராம் உடையில் உம்ரா செய்ய வந்த முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப்
பட்ட போதும், அந்த உடன்படிக்கையின் கூறுகள் பல வகையில் முஸ்லிம்களீன் மரியாதையை சிதைத்த
போதும் கூட நபி (ஸல்) அவர்கள் அந்த உடன்படிக்கைகு ஒப்புக் கொண்டர்கள்.
ஏனெனில்
உடன்படிக்கைகள் சண்டையை முடிவு செய்து உடனடியாக
அமைதியை கொண்டு வருபவை/
ஹுதைபிய்யாவின்
போதும் முஸ்லிம்கள் 1400 பேர் இருந்தார்கள். அவர்களும் பைஅத்துஷ் ஷஜரா என்ற ஒரு அவசர
உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு எந்த வித ஆயுதமும் கையில் இல்லாத நிலையிலும் மக்காவிலிருந்த
எதிரிகளோடு திடீர் என ஒரு போருக்கு தயாராகி நின்றார்கள்.
بايع فيها الصحابة النبي محمد على قتال قريش وألا يفروا حتى الموت
அல்லாஹ்
அதை பாராட்டித்தான் இந்த வசனத்தை அருளினான்.
لَّقَدْ رَضِيَ
اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا
فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا
قَرِيبًا (18
ஆயுதங்கள் இன்றியோ முஸ்லிம்கள் ஒரு யுத்த்திற்கு தயாராகி விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட சூழலில் தான் மக்காவின் காபிர்கள் தங்களது பழம் பெருமையை வைத்துக் கொண்டு பெருமானாரிடம் ஒரு மோசமான உடன்படிக்கையை நீட்டினார்கள். ஆயினும் பெருமானார் அந்த உடன்படிக்கையை ஒப்புக் கொண்டார்கள்
இந்த உடன்படிக்கையை
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا
என்றும்
அல்லாஹ் எடுத்துக் கூறீனான். முஸ்லிம்கள் அந்த வெற்றியின் பயன்ன பிற்காலத்தில்
சிறப்பாக அனுபவித்தார்கள்.
எனவே
எந்த ஒரு நிர்பந்த சூழலிலும் – எந்த அளவு இழிவுபடுத்தப் பட்டாலும் – உரிமைகளை மரியாதையை
சிதைத்திருந்தாலும் – உடன்படிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளும் போது அல்லாஹ் ஒரு பெரிய
வெற்றியை வைத்திருப்பான் என்ற ரகசியத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்
சமூகத்திற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த
வழிகாட்டுதல் தான் இப்போது ஹமாஸ் அமைப்பினரை கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் கூட ஒரு உடன்படிக்கை ஒப்புக் கொள்ள வழி வகுத்திருந்திருக்கிரது.
உலக
அமைதிக்கான முஹமம்து நபி (ஸல்) அவர்களின் உழைப்பையும் செல்வாக்கையும் புரிந்து
கொள்வதற்கான ஒரு சிறப்பான நிகழ்வு இது
முஸ்லிம்
சமுதாயம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்கையுலும் சமூக வாழ்விலும் இந்த தத்துவத்தை
நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த
ஒரு காரியத்திலும் உடன்படிக்கைகளுக்கு இறங்கி செல்ல தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு
தாழ்ந்து செல்வோர் நிச்சயம் உயர்வடைவார்கள்.
எனக்கு
தெரிந்த ஒரு பெரும் செல்வந்தர் ஒரு உடன்படிக்கைகாக தனது தம்பியிடம் இறங்கிச்
சென்றார். ஆனால் பிற்காலத்தில் தம்பியை விட அவர் அதிக மரியாதையை பெற்றார்.
அமைதிக்காக உழைப்பது எப்படி ?
ஹம்மத் நபி (ஸல் அவர்கள் அமைதிக்காக எப்படி
உழைத்தார் என்பது மனித வரலாற்றுக்கான ஒரு பெரும் பாடம் ஆகும்.
அதிபர் டிரம்பை போன்றவரக்ள் பாடத்தை முஹ்ம்மது நபி (ஸல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அமைதிக்கு ஆசைப்படு
அனைத்திற்கும் ஆசைப்படு என்று தமிழில் ஒரு புத்தகம் இருக்கிறது..
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் அமைதி வழி தான் சிறந்த்து என்பதை மிக உறுதியாக
நம்பினார்கள். அதனால் அதன் படியே வாழ்ந்தார்கள். அவர்களது நாடி நரம்பெங்கும்
அமைதிக்கான சிந்தனையே ஓடியது. (பெருமானாரின் பெரிய வெற்றிகளுக்கு பின்னே இருந்த
முக்கிய காரணி இது)
திருக்குர் ஆனின் வாசகங்கள் பெருமானாருக்கு வழிகாட்டின.
وَالصُّلْحُ خَيْرٌ ۗ
وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا
இதில் நம்மில் ஒவ்வொருவரின் சிந்தனையை சீர் படுத்துவதற்கும் இதில் சிறப்பான வழிகாட்டுதல் இருக்கிறது.
சண்டை போடும் உணர்வை விட சமாதான உணர்வு தழைக்கனும்.
அமைதிக்கு ஆசைப்படனும்.
ஏனெனில் வாழ்க்கையில் பிரதான அம்சமே அமைதி தான்.
உணவை விட அமைதி அதி முக்கியமானது,
அதனால் தான் இபுறாஹீம் அலை அமைதிக்கு
முதல் இடம் கொடுத்தார்கள்
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا
آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ
وَالْيَوْمِ الْآخِرِ
எப்போதும் அமைதியே இலக்காக வாழ வேண்டும்
மோதலுக்கு வருகிறவர்களிடம் சலாம் என்று சொல்லிவிடுவதே முஃமின்க்ளின் குணம் என்கிறது குர் ஆன்.
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا
سَلَاماً
லைலத்துல் கத்ரின் பரிசு என்ன ?
تَنَزَّلُ المَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا
بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ * سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الفَجْرِ ﴾ [القدر: 4 ، 5].
அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ் சலாம் என்று நம்மிடம் கூறுவான்.
تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ
وَأَعَدَّ لَهُمْ أَجْرًا كَرِيمًا
تحيتهم ) أي : من الله تعالى يوم يلقونه ) سلام – இப்னு கஸீர்
மலக்குகளின் வாழ்த்தும் அதுவே
وَالمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ
سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ ﴾ [الرعد: 24].
சொர்க்கத்தின் பெயரும் அதுவே
والجنة اسمها دار السلام: ﴿ لَهُمْ دَارُ السَّلَامِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا
كَانُوا يَعْمَلُونَ ﴾
ஈமானுக்கு பிறகு பெரிய செல்வம் அமைதியே என பெருமானார் மதீனாவில் தனது முதல் உரையில் அறிவுறூத்தினார்கள்
فقالَ أبو بَكرٍ الصِّدِّيقُ قامَ
رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم عامَ الأوَّلِ على المنبرِ ثمَّ بَكى فقالَ
سلوا اللَّهَ العفوَ والعافيةَ فإنَّ أحدًا لم يُعطَ بعدَ اليقينِ خيرًا منَ
العافيةِ
எனவே அமைதிக்காக உழைப்பவர்கள் இயல்பிலேயே
அமைதியை விரும்புகீற மனோ நிலை கொண்டவரக்ளாக இருக்க வேண்டும்.
(அதிபர் டிரம்ப் அவர் பொறுப்பேற்ற காலத்திலிருந்து
முரட்டுத்தனமாக பிறரை அச்சுறுத்துவதையே வாடிக்க்கயாக கொண்டிருப்பவர் அவர் அமைதியை
ஏற்படுத்தினார் என்பது போலித்தனமான ஒரு வாதமாகும். )
மக்களிடையே அமைதியை ஏற்படுத்த பெருமானார் கையாண்ட உத்திகள்
(Peaceful conflict resolution)
தனது 35 வது வயதில் மக்காவின்
மக்கள் கஃபாவை கட்டிய போது ஹஜருல் அஸ்வத் கல்லை எடுத்து
வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையை இந்த வழியிலேயே பெருமானார் தேர்ந்தெடுத்தார்கள்.
மக்கா மக்களின்
தீர்மாணப்படி புனிதக் கல்ல்ல எடுத்து வைக்கும் வாய்ப்பு பெருமானாருக்கு மட்டுமே கிடைத்தது.
அவர்கல் தானே அந்த கல்லை எடுத்து வைத்திருக்க முடியும், ஆனால் ஒரு போர்வையை கொண்டு
வர செய்து அதில் கல்லை வைத்து மக்காவின் சண்டையிட்டுக் கொண்ட ஒவ்வ்ரு குடும்பத்தையும்
அதில் பங்கேற்க வைத்தது பிரச்சன்னகளுக்கு
அமைதியான வழியில் தீர்வு காணும் பெருமானாரின் அடிப்படை சிந்தனையின் விளைவே ஆகும்.
2. 2 சமரசம் மன்னிப்பு
பெருமானாரின் இரண்டாவது உத்தி சம்சரம்
காண்பதும் அதற்காக மன்னிக்கும் வழிமுறையுமாகும்.
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ
الْجَاهِلِينَ
ஒரு
யூதப் பெண் பெருமானாருக்கு விசம் கொடுத்தாள். அதை பெருமானார்
மன்னித்தார்கள்/
அமைதிக்கா பாடுபடுதலின் அடுத்த அம்சம் பச்சாதாப்படுதல்
ஆகும். அதாவது அவர்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தல்
هُم إخوانُكم خَوَلُكم، جَعَلَهم اللهُ تحت أيْديكم، فمَن كان أخُوه
تحت يَدِه فلْيُطعِمْه ممَّا يَأكُلُ، ويُلبِسْه ممَّا يَلبَسُ، ولا تُكلِّفوهم ما
يَغلِبُهم، فإنْ كَلَّفتُموهم فأعينُوهم، ومَن لم يُلائِمْكم منهم فبِيعوهم، ولا
تُعذِّبوا خَلْقَ اللهِ.
أبو ذر الغفاري- لبخاري
எந்த ஒரு பிரச்சினையின் போது சச்சரவு செய்கிறவர்கள் பச்சாதாப்படுகிற
நிலையில் இருந்தால் அமைதிக்கான அவர்களது
உழைப்பு சிறப்பானதாக இருக்கும்.
அதிபர் டிரம்ப் அவருடைய நாட்டின் பொருளாதார இழப்பு ஏற்படுவதை
எவ்வளவு கடுமையாக அணுகுகிறார் .
அமெரிக்கா விற்கு உழைக்க வந்த மக்களை குப்பை போல் அவர்களுடைய
நாடுகளில் கொண்டு போய் கொட்டுகிறார்.
திடீர் என 100 சதவீத வரி உயர்வை அறீவிக்கிறார்.
தங்களுடைய நிலம், செல்வம், உயிர் அனைத்தையும் இழந்து நிற்கிற
பாலஸ்தீன் மக்களின் மனோ நிலையை அவர் உணர்ந்து பார்த்து நடப்பவராக இருந்தால் மட்டுமே
அவர் அமைதிக்காக உழைத்தவர் என்ற பெருமையை பெற முடியும்.
இந்த பச்சதாப
உணர்வு இருந்தால் பிடிவாத
சண்டைக்கு இடம் இருக்காது. சிலர் சகராத் வரை சண்டை போடுகிறார்கள். சிலர்
வாழ்நாள் எல்லாம் பேசிக் கொள்வதில்லை.
அல்லாஹ் குர் ஆனில் ஒரு த்த்துவத்தை கற்றுக் கொடுக்கிறான்.
ஒரு வேளை தவறு நீங்கள் செய்திருந்தால் அத்த அல்லாஹ்
மன்னிக்க வேண்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்களா என்று கேட்கிறான்.
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ
لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
எனவே தான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறீனார்கள்,
وقال صلى الله عليه وسلم "لا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمُ الَّذِي يَبْدَأُ بِالسَّلامِ" متفق علي
4. 4 சந்தேகம் தவிர்த்தல்
பொதுவாக
சச்சரவுகள் உருவாகவும் பெருகவும் காரணமாக இருப்பது தப்பான எண்ணங்களே ஆகும்/.
முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் யார் குறித்தும் ஒரு தப்பான கண்ணோட்டத்தை விரும்புவராக இருக்கவில்லை
الراوي
: عبدالله
بن مسعودك أخرجه
أبو داود
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் மக்களை மதிக்கனும், மற்றவர்களை மதிக்கனும்.
மதிக்க வேண்டிய வற்றை மதிக்க தவறுவது ஆகும்.
இஸ்லமிய வரலாற்றில் மிகப்பெரிய அமைதி இழப்பு ஏற்பட்டது தாத்தாரிகளின் படை எடுப்பால் ஆகும்
அதில் 18 இலட்சம் முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர்.
இத்தனைக்கும்
காரணம் முஸ்லிம் அரசாங்கத்தின் எல்லை புறத்தில் இருந்த ஒரு முஸ்லிம் அரசர் செங்கிஸ்கானிடமிருந்து
வந்த இரண்டு தூதர்களை கொலை செய்ததாகும்.
அதுவரை
செங்கிஸ்கான முஸ்லிம்களின் பகுதிக்குள் நுழைய விரும்ப வில்லை.
இந்த
செய்தி வந்த போது சிறிது நேரம் மலை உச்சியில் இருந்த தனது தனியறைக்குள் சென்று அமர்ந்து
கொண்ட செங்கிஸ்கான் வெளியே வந்து சொன்னான். ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க கூடாது.
ஒன்று நான் அல்லது முஸ்லிம்கள் என்றான்.
வரலாறு
வலி மிகுந்த பக்கங்களை கண்டது.
நோபல் பரிசு
ReplyDeleteஅவசியம் அறிய வேண்டிய தகவல்.
ஜஸாக்கல்லாஹ்.....