வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, April 09, 2014

வாக்களிப்பீர்!

(ஆலிம் சகோதர்ர்களுக்கு!அஸ்ஸலாமு அலைக்கும்!!. 
தேர்தல் தொடர்பான் பல கருத்துக்களையும் இக்கட்டுரை தாங்கியுள்ளது, உங்களது மஹல்லாவின் தேவைகேற்ப பயன்படுத்த்திக் கொளுங்கள். சிவப்பு வண்ணத்தில்ருக்கிற செய்திகள் தேவையில்லை என்றால் நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.)

16 வது நாடாளுமன்ற மக்களைவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
நம்முடைய பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. அவை மாநிலங்களவை ( Rajya Sabha)   மற்றும் மக்களவை (Lok Sabha)

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் சேர்த்த் மொத்தம் 544உறுப்பினர்களை  கொண்ட்தாகும்..  மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்

நம்முடைய நாட்டில் வழக்கில் இருக்கிற தேர்தல் நடை முறை பிரிட்டிஷ்கார்ர்களின் நடைமுறையாகும்.

பிரிட்டிஷ் காரர்களிடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற போது பிரிட்டிஷாரின் பாராளுமன்ற அமைப்பு முறையை தங்களது நாடுகளுக்கேற்ப சில திருத்தங்களை செய்து அமுல்படுத்தத் தொடங்கின
.
தனால் 20 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பாணி பாரளுமன்ற ஆட்சி முறை சரசரவென்று பரவத் தொடங்கியது. பண்டைய மன்னராட்சி முறையின் கெடுங்கோன்மைக்கும், சர்வாதிகாரத்திற்கும்  மாற்றாக கிடைத்த சிறந்த ஏற்பாடாக உலகின் பல பாகத்து மக்களும் இதை ஏற்றுக் கொண்டனர். இதைத் தவிர அவர்களுக்கு வேறு சிறந்த ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை.

ந்த  தேர்தல் பாணி ஜனநாயத்தில் சில வபரீதங்கள் உண்டு என்பதை இதனை விரும்பும் ஆய்வாளர்களே ஒத்துக் கொள்கிறார்கள். பிரபல வரலாற்றாய்வாளர் லேன்பூல் சொல்வது போல ‘”பத்து பணக்காரர்கள் செய்கிற முடிவை பதினோறு ஏழைகளால் மாற்றிவிட முடியும் என்பது ஜனநாயத்தின் பலம் என்றால் பத்து அறிவாளிகள் செய்கிற முடிவை பதினோறு முட்டாள்களால் மாற்றிவிட முடியும் என்பது ஜனநாயகத்தின் பலவீனம். ண்ணிக்கை அடிப்படையிலான தேர்வு முறை இந்த பலவீனத்திற்கு காரணம்.

ஒரு பொறுப்பற்ற பெரும்பான்மை ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் வேட்டு வைத்து விடக் கூடும் என்ற அச்சம் பொதுவான அரசியல் ஆய்வாளர்களிடமும் உண்டு.  இஸ்லாமிய அறிஞர் கர்ழாவி போன்றோர் இதை சுட்டிக்காட்டுகின்றனர்.

தேர்தல் ஜனநாயகத்தின் இந்த பலவீனத்திற்கு இடம் தராத மிகச்சிறப்பான ஒரு ஜனநாயகத்திற்கு இஸ்லாம் வழிகாட்டி உள்ளது.

இஸ்லாமிய் தேர்வு முறை எண்ணிக்கை சார்ந்த்து அல்ல. அது தகுதியையும் பண்பாட்டையுமே அடிப்படயாக் கொண்டது.  தகுத்யும் பண்பாடும் உடையவர் இரு சமூகத்தால் அல்லது ஒரு குழுவால் அல்லது ஒரு மதிப்பிற்குரிய ஒரு தனி நபரால் முன்னிறுத்தப் படுவார், அவரை பக்தியும் பண்புமுள்ள் மக்கள் அல்லாஹ்வுக்கும் அவனது கட்டளைகளை செயல்படுத்தும அதிகாரிக்கும் கட்டுப்படுதல் என்ற் அடிப்படைய்ல் உடன் படுவார்கள்.  ஒப்புகை ( பைஅத் ) அளிப்பாகள்     

இந்த உன்னதமான நடைமுறைக்கான சூலை தொடர்ந்து தக்க்வைக்கவும் பரப்பவும் பிற்கால  இஸ்லாமிய அரசியல் உலகு தவறவிட்டு விட்ட்து.

அதனால் இப்போதைக்கு கிடைத்திருக்கிற இருப்பதில் சிறந்த்து என்ற வகையில் இந்த தேர்தல் பாணி நடை முறையை இஸ்லாமி உலகும் ஏற்று க் கொண்டு வருகிறது.

ஸ்லமின் தேர்வு முறையை மற்றதெனோடும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது தான் என்றாலும் தற்போதைய தேர்தல் பாணி ஜனநாயகம் இஸ்லாம் வலியுறுத்துகிற மதிப்பீடுகளுக்கு இசைவாக நெருங்கி வருவதாக பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல்கர்ழாவி குறிப்பிடுகிறார். (மின் பிக்ஹி த் தவ்லா பில் இஸ்லாம்.)

இஸ்லாமிய அரசு முறையும் தேர்தல் ஜனநாய அரசு முறையும் மக்கள் விரும்பும் தலைவரை ஏற்கின்றன என்ற அடிப்படையில்; ஒன்று படுவதால் தற்கால தோதல் பாணி அரசு முறையை பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் கையாண்டு வருகின்றனர்.

துருக்கிய கிலாபத் வீழ்ச்சியடைந்த பிறகு எகிப்து துருக்கி ஆகிய நாடுகள் வழியாக தேர்தல் பாணி அரசியல் முஸ்லிம் நாடுகளிலும் நுழையத் தொடங்கயது


இப்போது துருக்கி இரான் எகிப்து ஜோர்டான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷியா செனகல் நைஜீரியா போன்ற நாடுகளில் தேர்தல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது.

இந்தியா தொன்னாப்ரிக்கா ஐரோப்பா வடஅமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தேர்தல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறார்கள.

முஸ்லிம் உலகின் பெரும் பகுதியில் இந்நடைமுறையை தழுவியோ அல்லது இதற்க ஆதரவாகவோ முஸ்லிம்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கியக காரணம் இந்த பாணி அரசியல் சிறந்தது என்பது அல்ல. இஸ்லாமிய அரசியலமைப்புக்கு அடுதபடியாக இதுவே சிறப்பானது என்பதாலும் இதை விடுத்தால் இன்றைய சூழலில் சர்வாதிகாரம் தலை தூக்கும் ஆபத்து நிகழும் என்பதாலுமே இந்த நடைமுறைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ந்தியாவில்  தேர்தல் பாணி அரசியலாம் மக்களாட்சி அமைப்பு முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

குறைகள் இருந்தாலும் ஒரு ஏழை தேசம் 60 ஆண்டகளாக தனது குடியரசுத் தத்துவத்தை தொடர்நது பாதுகாத்து வைத்திருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒரு விசயமேயாகும்.

இந்திய மக்கள் தேர்தல்கள் மூலம் தனக்கு பிடிக்காதவரை தூக்கி வீசி விடுகிறார்கள். அவர்கள் எத்தகைய பிரபலங்களாக இருந்தாலும் சரி.

அதே போல இந்தியத் தேர்தல்கள் குறைப்பிரசவமாக இல்லாமல் நிலையான அரசுகளை தந்ததால் உலகில் மதிக்கத்தக்க  குடியராசாக இந்தியா திகழ்கிறது.

இந்தியத் தேர்தல்களில் முஸ்லிம் வாக்காளரின் பங்கு அதிகாரத்தை தீர்மாணிக்கும் அளவு முக்கயத்துவம் பெற்றதாகும்.

முஸ்லிம் வாக்காளர் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அரசியல் தெளிவு பெற்றவராக எப்பொதும் இருந்து வந்திருக்கிறார். இந்தியாவில் நிலையான அரசுகள் அமைவதற்கு முஸ்லிம்களின் அரசியல் தெளிவும் பங்களிப்பும் முக்கியக் காரணங்களாகும்.

60  ஆண்டுகால இந்தியாவின் அரசியல வரலாற்றில் முஸ்லிம் ஓட்டு என்பது எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசயமாகவே இருந்துள்ளது, அதற்கு காரணம் இந்தியாவிலுள்ள வேறெந்த சமுதாயத்தையும் விட வாக்களிப்பதில் முஸ்லிம்கள் முந்தியிருந்த்தும் நிலையான அரசுகள் அமைவதற்கேற்ப வாக்களித்துமாகும்.

இன்றைக்கு முஸ்லிம் ஓட்டு என்பதை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கிற எந்த ஒரு நியாயவானும் முஸ்லிம்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையையும் முனைப்பையும் கண்டு கொள்வதே இல்லை; தேர்தல் கமீஷனையும் எந்த ஒரு தன்னார்வ அமைப்பை விடவும் வாக்களிக்குமாறு மக்களை தூண்டியதில் முஸ்லிம் அறிஞர்கள் காட்டிய அக்கறையையும் கண்டுகொண்ட்தில்லை.

ஓட்டுப்போடுவது மார்க்க கடமை

முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை மட்டுமல்ல சமயக் கடமையுமாகும்.  ஒட்டுப் போடுவதும் நன்மையை பெற்றுத்தருகிற ஒரு இபாதத் ஆகும்.

இந்தக் கருத்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது சுதந்திரப் பெற்ற பிறகுண்டான காலகட்ட்த்தில் முஸ்லிம் அறிஞர்களில் பிரபலமான பலரும் குறிப்பாக தில்லி தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னால் ஷைகுத்தப்ஸீரும் பின்னாட்களில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதியாக இருந்தவருமான மொலானா முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் இது குறித்து மிகவும்  வலுயுறுத்திப் பேசி வதுள்ளார்கள்.  

இஸ்லாமியப்பார்வையில் ஓட்டுப் போடுவது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ அவருடைய திருக்குர் ஆன் விhவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்3 பக்கம் 71 வசன எண் 5.8)

திருக்குர்ஆன் போதிக்கிற شهادة  (சாட்சியமளித்தல்) شفاعة (சான்றளித்தல்) وكالة (ஒப்புவித்தல்) அகிய மூன்று தார்மீகக் கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை என அவர் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமின் பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது இவர் இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர் என்று சாட்சி (ஷஹாதத்) சொல்வதும். பரிந்துரைப்பதும் (ஷபாஅத்) ஆகும். அதுபோல் பொறுப்பை ஒப்படைப்பது (வகாலத்) துமாகும்.

இந்த பொறுப்பின் அடிப்படையில் நாம் சில அம்சங்களை கவனிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

1.      சாட்சியை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அது போல ஓட்டளிப்பதும் கடமையாகும்.

தேர்தல் நாளை விடுமுறை நாள் என்று கருதி சும்மா இருந்து விடக்கூடாது.

படித்தவர்களும் பண வசதி படைத்தவர்களும் வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.

முன்னாள் தேர்தல் கமிஷனர் ஒருத்தர் சொன்னார்:

அடுத்த ஐந்து வருடத்திற்கு அரசியல் நடத்துவது யார் என்பதை தீர்மாணிக்கிற சக்தியை நமது விரல் நுனிக்கு இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம்..”  

முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு சரியான ஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்ற நிய்யத்தோடு வரிசையில் நிற்கிற ஒவ்வொரு நிமிடமும் சவாபிற்குரியதாகும்.
إنما الأعمال بالنيات
சும்மா முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு என்ற நிய்யத்தோடு முகம் கழிவினால் சுத்தத்துடன் நன்மையும் சேர்ந்து கிடைக்கிறது அல்லவா? அது போல!

·         சிலர் என் ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.
·         கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.
·         நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.
·        ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை அரசியல் வாதி புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.

 
2.  சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலி வாங்கக் கூடாதோ அது போல ஓட்டுக்கு காசு பொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.

இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு 200 க்கும் 500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களை விற்றுவருவது.

ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு.

3.  பொய்சாட்சி சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டு போடக்கூடாது என்று பொருளாகும்.
பொய்சாட்சி எப்படி நீதியை தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து விடும்.

4.  ஜாதி இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை தேர்வு செய்து விடக்கூடாது.
தங்களுடையவர் என்பதற்காக சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.
وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.

عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ  - ابوداوود -4453

அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.

 عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ عَنْ امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فُسَيْلَةُ قَالَتْ سَمِعْتُ أَبِي يَقُولُ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ قَالَ لَا وَلَكِنْ مِنْ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ-  إبن ماجة 3939

என்வே கொலை கொள்ளை மோசடி ஆட்கடத்தல் போன்ற குற்ற வழக்கில் ஈடுபட்ட கிரிமினல்களை முஸ்லிம் புறக்கணிக்க வேண்டும். அவர் முஸ்லிம் வேட்பாளராக இருந்தாலும் சரி.


கத்தர் பல்கலைகழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல்கர்ழாவியும் தேர்தல் முறையை ஒருவகை பரிந்துறையே என்றும் அது நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.
திருக்குர்ஆன் கூறுகிறது

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا(135)
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

நாம் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்தால் அவர் செய்கிற நன்மைகள் ஒவ்வொன்றிலும் நமக்கும் ஒரு பங்கு கிடைக்கிறது, தீயவரை தேர்வு செய்தால்..?

தேர்தலில் ஜெயித்த பிற்கு அவர்கள் மாறிப்போனால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

மந்தை தனமாக இல்லாமல் சிந்தித்து வாக்களித்தால், யாருக்கு வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு தான்.

அரபியில் تحري தஹர்ரீ என்ற ஒரு சொல் உண்டு. தேடித்தெரிதல் என்பது அதன் பொருள்.
ஒரு புது ஊருக்கு செல்பவர் யோசிக்காமல் கொள்ளாமல் ஏதாவது ஒரு திசையைப் பார்த்து தொழுவிட்டார். பின்னர் கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டும்.

அதே நபர் விசாரித்து அல்லது தேடிப்பார்த்து ஒரு திசையைப் நோக்கி தொழுதார். பிறகு அவருக்கு கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டியதில்லை என்று இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.

إذا شك ولا يتحري – أن صلوته علي الفساد وإذا شك وتحري  ان الصلوة علي الجواز ولو تبين الخطأء- حاشية القدوري

சிந்தித்து, ஒன்றை நல்லதென உணர்ந்து செயல்படுவதற்கும் சிந்திக்காமல் செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  

முஸ்லிம் வாக்களர் சிந்தித்து வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு நன்மையாய் அமையும். அவருக்கும் நன்மையை தேடித்தரும். மீண்டும்

திருக்குர்ஆன் மேலும் கூறுகிறது

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

இந்த வசனத்தின் அடிப்படையில் வாக்களிக்க செல்லாமல் இருக்க கூடாது. அது சாட்சியை மறைக்கிற குற்றமாகிவிடும்,

ஒரு வழக்கில் சாட்சி பின்வாங்கி விட்டாலோ அல்லது பிறழ்ந்த விட்டாலோ நீதி நிலை தடுமாறிப் போய்விடுமல்லவா அது போலவே ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் தனது கடமையை நிறைவேற்றாவிட்டால் தவறான மனிதர்களிடம் சமூகத்தை ஒப்புக் கொடுத்த பிழையை செய்தவிட்டவர் ஆவார்.


தீயவர்கள் ஆட்சிப் பொறுப்புகு வந்து விடாமல் தடுக்கிற கடமையை ஓட்டுப்போடுகிற வாக்காளர் நிறைவேற்றுகிறார்.

தங்களது தேர்தல் கடமையை (வாஜிபல் இன்திகாபி) நிறைவேற்றாத முஸ்லிம்கள் தீயவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்கிறார்கள் என்றே அர்த்தம் யூசுப் அல்கர்ழாவி கூறுகிறார்.

பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ

 مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ -  أَبُو دَاوُد 3775

மக்கள் அநியாயக்காரனை பார்த்து விட்டு அவன் கையையைப்பிடித்து தடுக்காவிட்டால் அதற்கான தண்டனையை அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தருவான்.

பாவங்கள் ஒரு சமூகத்தில் அதிகரித்து , அதை மாற்றும் ச்கதி அவர்களிடம் இருந்தும் அவர்கள் அதை மாற்றாவிட்டால் அல்லாஹ்வின் த்ண்டனை அவர்களை மொத்தமாக வந்தடையும் .

தற்காலத்தில் தேர்தலைப் பற்றி ஒரு அவநம்பிக்கை பரவிவருகிறது. யாருக்கு ஓட்டு போட்டு என்ன பயன் ? எல்லோரும் திருட்டுப் பயல்கள் ஒருத்தனும் நமக்கு நல்லத் பன்றதில்லை என்ற விரக்தி பலரிடமும் இருக்கிறது.

திருட்டுக் குற்றத்திற்காக ஒரு ஆசாமியை சிறையில் அடைத்தார்கள். அங்கேயும் அவன் சும்மா இருக்கவில்லை. சிறைக்கூடத்தின் கம்பிகளையே திருடிவிட்டான். அவனை எந்த செல்லில் போடுவது ஜெயிலர் யோசித்தக் கொண்டிருந்த போது ஒரு அனுபவ சாலி சார் இவனை சட்டசபையில் போடுங்கள் என்று சொன்னாராம்.

இத்தகைய போக்கினால்  அரசியலில் பங்கேற்பதையும் தேர்தலில் நிற்பதை ஓட்டுப் போடுவதையும் சிலர் தவிர்க்கிறார்கள்

இது தவறான போக்கு. இதன் விளைவு. சமூகத்திறகு தீங்கு விளைவிக்கக் கூடியது. 

தேர்தலில் நாம் செய்ய வேண்டிய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் கடமையை செய்வதில்லை, அல்லது அக்கிரம்ம் செய்கிறார்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் அவர்களே!.

அடுத்தவர்கள் தமது க்டமையை செய்வதில்லை என்பது நாம் நமது கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக அமைந்து விடக்கூடாது. அது அறிவார்த்தமும் பொறுப்புணர்ச்சியும் அல்ல.

மட்டுமல்ல நாம் ஒட்டுப் போடும் போடும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் நல்ல மாற்றங்கள் நிகழும் வாய்ப்புண்டு அல்லவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
كما تكونوا يولى عليكم . رواه البيهقي عن أبي إسحاق السبيعي مرسلاً

தேர்தல் புறக்கணிப்பு தவறு

நம்முடைய நாட்டில் கிலாபத்தை உருவாக்குதல் என்ற போர்வையில் தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை சிலர் செய்து வருகிறார்கள்.. இது இளைஞர்களின் முளையிலிருக்கிற அமைதியை கலைத்து கலகப் பேய்பிடிக்ச் செய்கிற நடவடிக்கையே தவிர வேறில்லை.

லா ஹுக்ம இல்லா லில்லாஹ் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது என்ற தொன்மையான வரலாற்று வாசகத்தை சிலர் உரத்து ஒலித்த போதெல்லாம் அது அசத்தியத்தின் கூக்குரலாகத்தான் ஒலித்தது என்பதை இஸ்லாமிய வரலாற்றை ஆழ்ந்து படிக்கிற எவரும் விளங்கிக் கொள்ள முடியும்.

காரிஜிய்யா என்ற கலகப்படையினர் முதன் முதலாக இந்தக் கோஷத்தை எழுப்பிய போது ஹஜ்ரத் (அலி) அவர்கள் இதுவார்ததை நல்ல வார்ததை தான். ஆனால் தீய நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
كلمة حق أريد بها الباطل
என்று சொன்னார்கள் என வரலாற்று எழுத்தாளர் முஹ்யித்தீன் ஹய்யாத் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதும் இந்த வாசகத்தை  பயன்படுத்தி இளைஞர்கள் மத்தியில் தேர்தலுக்கு எதிரான கருத்தை சிலர் பரப்பி வருகின்றன.

பாலஸ்தீன் எகிப்து போன்ற நாடுகளில் ஆய்தம் ஏந்தி போராடிய குழுக்கள் கூட இப்போது தேர்தலின் பாதையை தேர்ந்தெடுத்து தங்களதூ பக்குவத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய விசயம் இது. இந்தியா பல்வேறு பட்ட சமய மக்கள் தங்கள் சமய நம்பிக்கை களுடன் மகிழ்சிகரமாக வாழ்ந்த வருகிற தேசம். முன்னேறிய தேசங்களில் பார்க்க முடியாத அமைதியும் மகிழ்சியும் நமது நாட்டில் பாரம்பரியமாக கிடைத்து வருகிறது.

ங்குள்ள தேர்தல நடைமுறையை புறக்கணிக்குமாறு யாரேனும் கூறினால் அவர்களை இந்த நாட்டின் அமைதிக்கு எதிரானவர்கள் என்பது மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு எதிரானவர்களும் கூட  

தேர்தல் பாணி அரசு முறை, சுதந்திரத்தையும் மனித உரிமைககளையும் பேணுவதோடு மக்கள் தங்கள் தலைவரை சுதந்திரமாக தேர்வு செய்யும் அமைப்பையும், அதிகார மாற்றத்திற்கான சுமூகமான ஏற்பாட்டையும் வழங்குகிற தென்றால் இந்த முறையை எதிர்க்க முஸ்லிம்களிடம் இஸ்லாமிய அடிப்படையில் எந்த நியாயமும் இல்லை என்று சொல்லுகிறார். துனீசிய முஸ்லிம்களின் தலைவர் ரஷீத் கானூஷி.


சம காலத்தில் நிலவும் பிரச்சினை எத்தகையது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கடமை இஸ்லாமிய அறிஞர்களுக்கு இருக்கிறது. எனவே தான் கர்ழாவி போன்ற அறிஞர்கள் தேர்தல் பாணி ஜனநாகத்தில் உள்ள குறைபாட்டை ஒத்துக் கொண்ட போதும் சமயச்சார்பற்ற ஜனநாகத்திற்கு இடையூறு செய்வதை தவிர்ககுமாறு இஸ்லாமிய அறிஞர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக அரங்கில் முன்னேறிய இஸ்லாமிய நாடுகள் பலவும் சாத்தியப்பட்ட தொரு சரியான திசைiயில் நடைபோடத் தொடங்கியிருக்கும் போது, ஆயதம் ஏந்திய குழுக்கள் கூட ஓட்டுப் பாதைiயில் ஒய்யாரமாய் நடைபேடத் தொடங்கியிருக்கிற போது, ஒன்றிரண்டு நிகழ்வுகளைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால் மக்கள் நிம்மதியாகவும் மரியதையுடனும் உரிமைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சிறந்த குடியரசு நாட்டில் கிலாபத்தை உருவாக்குதல் என்ற போர்வையில் நடைபெற்று வருகிற தேவையற்ற பிரச்சாரத்திற்கு செவிசாய்ப்பது மார்க்கப்பற்றோ அறிவுடமையோ அல்ல. இது இளைஞர்களின் முளையிலிருக்கிற அமைதியை கலைத்து கலகப் பேய்பிடிக்ச் செய்கிற நடவடிக்கையே தவிர வேறில்லை.
ஓட்டுப் போடுங்கள்
ஓட்டுப் போடுவது உங்கள் கடமை
உங்கள் குடும்பத்தில் உள்ளோரை வாக்களிக்கச் செய்யுங்கள்!
உங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாக்களிக்கச் செல்ல அனுமதி கொடுங்கள்
இது உங்களது தேசீய கடமை மட்டுமல்ல சமயக் கடமையும் கூட

முடக்குவாத்ததால் பாதிக்கப்பட்டுள்ள தேனி யை சேர்ந்த  .பி.பழனிவேல் (57) என்ற முதியவர் சொல்வதைக் கேளுங்கள்

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஆட்டோவில் சென்றாவது, தவறாமல் ஓட்டுரிமையை செலுத்தி விடுவேன். பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது குற்றம். வாக்குரிமையை விற்க கூடாது. நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் பணத்தை அருகில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அந்த பணத்தை நான் எனது சொந்த செலவுக்கு பயன்படுத்த மாட்டேன். நான் நினைக்கும் வேட்பாளருக்கே ஓட்டு போடுவேன்.:

நாம் கடை வைத்தாலும் ரிஜ்கு தருகிறவன் அல்லாஹ், நாம் உழவு செய்தாலும் விளைச்சலைத் தருகிறவன் அல்லாஹ். நாம் ஓட்டுப்போட்டாலும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது. அவனே நல்ல தீய ஆட்சியாளர்களைத்தறுகிறான்.

நமக்கு நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க பெருமானார் கற்றுத்தந்த அருமையான பிரார்த்தனை.

ربنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا

அற்புதமன் இந்தப் பிரார்த்தனை நல்ல  ஆட்சியாளர்களுக்கான் இலக்கணத்தை அற்புதமாக படம் பிடிக்கிறது.
நல்ல் ஆட்சியாளர் என்பர்
மக்கள் விச்யத்தில் இறைவனை பயபடுகிற்வராக இருக்க் வேண்டும்,
மக்கள் விச்யத்தில் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.


அல்லாஹ் நம் விசய்த்தில் இறைவனை பயந்து கொள்ள்க் குடிய நம் மீது அன்பு காட்டக் கூடிய ஆட்சியாளர்களை த்ந்தருளவானாகா!

(இன்றைய சூழ்நிலையில் யாருக்கு வாக்களிப்பது? இன்ஷா அல்லாஹ் அடுத்த் வாரம்)

No comments:

Post a Comment