வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 03, 2014

வெற்றிச் சின்னங்கள்சின்னங்களுக்குள்ள முக்கியத்துவம் பிதமாதமாக வெளிப்படுகிற தேர்தல் காலம் இது.
ஒரு வேட்பாளரின் வெற்றியை அவரது சின்னம் தீர்மாணிக்கிறது,
திருமதி இந்திரா காந்தி  படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசியல் விமர்சகர்கள் சொன்னார்கள்.  கை சின்னத்தில் ஒரு கழுதையை நிறுத்தினாலும் வெற்றி பெறும். “

( இப்போதும் அப்படித்தான் பல கழுதைகள் சின்னங்களின் தயவில் வெற்றிபெறுகின்றன )
சின்னங்கள், அரசியல் கட்சிகளின் சார்பை,  இயக்க அமைப்புக்களின்  கொள்கையைபண்பாட்டைபாரம்பரியத்தைபிரதிபலிக்கின்றன.

புறா சின்னம் அமைதியை பிர்திபலிக்கிறது. ரெட்கிராசும் ரெட்கிரஸண்டும் ஆபத்தில் காப்பாற்றுவதை குறிக்கின்றன, ஸ்வெஸ்திக் சின்னம் நாஜிகளின் கொடூரத்தை சுட்டி நிற்கின்றது. தமிழக வரலாற்றில் வில்லும் அம்பும் சேர வம்சத்தை குறிக்கிறது. மீனும் புலியும் பாண்டிய சோழ அரசுகளை குறிக்கின்றன,
சின்னங்கள் மதிக்கப்படுகிற போது அது சார்ந்தவர்கள் மதிக்கபடுகிறார்கள் சின்ன்ங்கள் அவமதிக்கப்படுகிற போது அது சார்ந்தவர்கள் இழிவுபடுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

அல்லாஹ்வுக்கும் சில சின்ன்ங்கள் உண்டு என்று குர் ஆன் கூறுகிறது

அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்ற மனிதர்களின் ஆவலை தீர்த்துக் கொள்ளும் ஒரு ஆறுதலுக்கான அம்சமாக  தன்னுடைய அடையாளங்களாக சிலவற்றை அல்லாஹ் குறிப்பிட்டிருப்பதாக் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் கூறுகிறார். உதாரணத்திற்கு கஃபா - அல்லாஹ்வை காண் வேண்டும் என்று பொங்கி வழிகிற அடியார்களின் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாக அமைந்திருக்கிறது என்கிறார் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலி நத்வி

அல்லாஹ்வின்சின்ன்ங்களை மதிக்க வேண்டும். அது  இறையச்சத்தின் உண்மையான அடையாளம் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ(158
ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ(32)

அறிஞர்கள் தீனின் வெளிப்படையான் அடையாளங்களே அல்லாஹ்வின் சின்ன்ங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர், அவைஇரண்டு வகையுண்டு என்கின்றனர்

أن شعائر الله هي: المعالم الظاهرة من دينه، التي جعل الله تبارك وتعالى بعضها زمانيًا، وجعل بعضها مكانيًا
சில இடம் சார்ந்தவை சில காலம் சார்ந்தவை
1 கஃபா சபா மர்வா குர்பானி பிராணிகள் இடம் சார்ந்த தன்னுடைய சின்ன்ங்களாக அல்லாஹ் நிலைநாட்டியுள்ளான். அதுபோலவே பூமியில் உள்ள் அனைத்து பள்ளிவாசல்களும். அவற்றில் பாங்கு சொல்லப்படுவதும்இவற்றை கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் அடையாளமாகும்.

فالمساجد من شعائر الله، ورفع الأذان فيها من شعائر الله، وتعظيمها من تعظيم شعائر الله.
இந்த அல்லாஹ்வுடைய சின்ன்ங்களுக்கு இருக்கிற ஒரு மாபெரிய சிறப்பு என்ன வென்றால் அல்லாஹ்வின் சின்ன்ங்களான அவை சின்ன்ங்களாகவே இன்று வரை திகழ்கின்றன. அவை தெய்வங்களாக வணங்கப்படவில்லை.

2 பெருநாட்கள், ரமலான் , யுத்தம் தடை செய்யப்பட்ட மாதங்கள், அரபா நாள், ஆஸூரா நாள் போன்ற சிறப்பான நாட்களும் அல்லாஹ்வுடைய சின்ன்ங்களாகும் .

   
وأمَّا الشعائر الزمانية- الأشهر الحرم وشهر رمضان
அவற்றையும் உரிய முறையில் கன்னியப்படுத்தவேண்டும்,

இஸ்லாமிற்கும் சின்ன்ங்கள் உண்டு.
தொழுகை இஸ்லாமின் சின்னம்

عَنْ أَبِي سُفْيَانَ قَالَ سَمِعْتُ جَابِرًا يَقُولُا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ

இஸ்லாம் வலியுறுத்தும் மற்ற கடமைகளும் இஸ்லாத்தின் சின்னமாகும்.
திருமணம் செயவது,உண்மை பேசுவது ,நீதியோடு நடப்பது , ஒழுக்க கேட்டை தவிர்ப்பது வட்டியை தவிர்ப்பது திருட்டு கொலை வஞ்சகம் செய்வதை தவிர்ப்பது சுருக்கமாக சொல்வதானால் அல்லாஹ்வின் உத்தரவுகளை செயல்படுத்துவதும் அல்லாஹ் ஹராமாக்கியதை நெருங்காமலிருப்பது இஸ்லாமின் சின்ன்ங்களாகும்

நாம் இப்படி நடந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி நடப்பவர்களை மதிக்க வேண்டும். இதற்கு மாறானவர்களை மதிக்க கூடாது . அதுவே இஸ்லாமின் சின்னங்களை மதிப்பதாகும்.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் சின்ன்ங்கள் உண்டு
லாயிலாக இல்லல்லாஹ் என்ற கலிமா முழக்கமும் அல்லாஹ் அக்பர் என்ற பாங்குச் ச்த்தமும் திருக்குர்ஆன் ஓதப்படுதலும். முஸ்லிம்களுக்கான் ஜனாஸா தொழுகை நிற்றவேற்றப்படுதலும் பிஸ்மில்லாஹ் சுப்ஹானல்லா இன்ஷா அல்லாஹ் இன்னாலில்லாஹ் போன்ற திக்ருகளும் முஸ்லிம் சமுதாயத்தின் சின்ன்ங்களாகும்

இந்தச்சின்ன்ங்களை மதிப்பதும் கடைபிடிப்பதும் முஸ்லிம்களின் இறையச்சத்திற்கு அடையாளமாகும்.

இதைத்தவிர பச்சை நிறமும் பிறை வடிவமும் உலகம் முழுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தின் சின்னமாக கருதப்படுகிறது.  இது முஸ்லிம் சமுதாயத்தின் தேர்வு காரணமாக் அமைந்து விட்ட அடையாளங்களாகும். இவற்றை கண்ணியப்படுத்தியாகவேண்டும் என்பது கடமை அல்ல. முஸ்லிம்கள் பச்சை நிரத்தை  தேர்ந்தெடுப்பதற்கு காரணஙகள் உண்டு. ஆனால் அதே நேரத்தில் பச்சைதான் இறையச்சத்தின் அடையாளம் என்று கருதி விடக்கூடாது. 

يعتبر اللّون الأخضر ذو دلالة رمزية خاصة في الإسلام, وقد تجلى ذلك في نواح عديدة كرايات وأعلام الدول والجيوش الإسلامية وفي فن العمارة الإسلامي وخاصة القِباب.

ومن أهم أسباب هذه الرمزية هو ما جاء في القرآن الكريم والسنة النبوية الشريفة بخصوص اللون الأخضر.
الَئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهِمُ الْانْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ ، وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا.. (31) سورة الكهف

عن أبي رمثة قال : رأيت رسول الله صلى الله عليه وسلم وعليه بُردان أخضران . رواه الترمذي وقال : هذا حديث حسن غريب ورواه النسائي 5224

அதுபோல வே பிறை பிறப்பதை வைத்து முஸ்லிம்கள் மாத்த்தை கணிப்பதால பிறை வடிவம் முஸ்லிம்களின் அடையாளமாயிற்று.

காலம் காலமாக பச்சை நிரமும் பிறை வடிவமும் முஸ்லிம் சமுதாயத்தின் கலாச்சார சின்னங்களாக இருப்பதால் அவற்றை மதித்து தேர்வு செய்தால் அது ஏற்புடையதே! வேனுமென்றே அதை மறுப்பதும் இழிவு படுத்துவதும் முஸ்லிம்களின் பண்டைய கலாச்சாரத்தை அவமதிப்பதாகவே அமையும்.

முஸ்லிம் தனி நபர்களுக்கும் சில சின்ன்ங்கள் உண்டு
ஆண்களுக்கு தாடியும் தொப்பியும் மரியாதையான ஆடையும் பெண்களுக்கு பர்தாவும் முஸ்லிம் தனி நபர் சின்ன்ங்களாகும்.

இவற்றைப் பேணுவது முஸ்லிம்களுக்கு கடமையாகவும் சிறப்பாகவும் அமையும்.
தாடி வளர்ப்பது நபிமார்களதும், குறிப்பாக இறுதி நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களதும் ஒரு சிறப்பான ஸுன்னஹ்ஆகும். இதனை வளர்ப்பது கடமை என்பதையும், சிரைப்பது ஹராம் என்பதையும் ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன:
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீசைகளை கத்தறிக்குமாறும், தாடியை வளர்க்குமாறும் ஏவினார்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) (முஸ்லிம்,259,
 இணைவைப்பவர்களுக்கு மாறுசெய்யுங்கள் மீசைகளைத் கத்தறித்துக் கொள்ளுங்கள், தாடிகளை வளருங்கள்என்று நபி அவர்கள் கூறினார்கள் -அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) (முஸ்லிம்)
மீசைகளை வெட்டிவிடுங்கள், தாடிகளை வளர விடுங்கள், நெருப்பு வணங்கி (மஜூஸி;) களுக்கு மாறுசெய்யுங்கள்என்று நபி (சல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்)
தாடியை சிரைப்பது பாரசீகர்களது வழமையான நடைமுறையாகும். இதனை ஷரீஆ தடைசெய்துவிட்டது. ஹதீஸில் கையாளப்பட்டுள்ள தாடிகளை வளர விடுங்கள்என்ற சொற்பிரயோகமும் இதனையே உறுதி செய்கின்றது என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களது தீர்ப்பாகும்என்று இமாம் அந்-நவவீ (ரஹ) குறிப்பிட்டுள்ளார்கள்.
 தாடியை சிரைப்பது மக்ரூஹ் தஹ்ரீம்’ (ஹராம் எனும் தரத்தை நெருங்கியது) என்று இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும், தாடியைச் சிரைப்பது ஹராம்ஆகும் என்று இமாம்களான மாலிக், அஹ்மத் (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். (அத்-துர்ருல் முக்தார் : பாகம் : 02, பக்கம்; : 155, அல்-ஃபிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹு : பா :04, பக் : 2659)
எனினும், தாடியில் மேலதிகமாக உள்ள பகுதிகளை சீர்செய்து கொள்ளவும் அனுமதி உண்டு. இதனை பின்வரும் தகவல் தெளிவு படுத்துகின்றது:
ஹஜ்ஜோ, உம்ராவோ நிறைவேற்றினால் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் தனது தாடியை ஒரு பிடியளவு பிடித்துக் கொண்டு அதிகமுள்ளதை வெட்டிவிடுவார்கள்’.(அல்-ஃபிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹு : பா : 01, பக் : 462)
தாடியை அது இயற்கையாக எப்படி வளர்கின்றதோ அப்படியே அதனை வளர விடவேண்டும். அதில் ஒரு சிறு பகுதியையும் எடுத்தலாகாது என்று சில அறிஞர்கள், கூறியுள்ளனர்.
தாடியை ஒரு பிடியை விடக் குறைப்பது ஆகுமானதல்ல என்பதுவே பெரும்பாலான மார்க்கச் சட்ட அறிஞர்களது ஏகோபித்த கருத்தாகும்.


عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ  - البخاري 5892

جمهور الفقهاء من أحناف ومالكية وحنابلة وقول عند الشافعية  على وجوب إعفاء اللحية وحرمة حلقها
,من المعروف أن المعتمد عند الشافعية كراهية حلق اللحية لا حرمته . ذكر ذلك شيخا المذهب الشافعي: الإمام النووي والإمام الرافعي،

نص كثير من الفقهاء على تحريم حلق اللحية مستدلين بأمر الرسول بإعفائها. والأصل في الأمر الوجوب، وخاصة أنه علل بمخالفة الكفار، ومخالفتهم واجبة.

தொப்பிதலையை மறைத்தல்

பெருமானார் (ஸல்) அவர்கள் தொப்பி தலைப்பாகை அணிந்தார்கள். அணிவித்தார்கள்.
ஒற்றை ஆடையோடு பெருமானார் (ஸல்) தொழுதார்கள் என்பது ஆடை பற்ற்றக்குறை இருந்த சமயத்தில் மட்டுமே

வெள்ளைத் தொப்பி அணீந்த பெருமானார் (ஸல்)
عن ابن عمر قال‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم يلبس قلنسوة بيضاء‏.‏ رواه الطبراني ) كتاب: مجمع الزوائد ومنبع الفوائد(

தொப்பியும் அதற்கு மேல் தலைப்பாகை அணிவது நமது பண்பு என்றார்கள் பெருமானார்(ஸல்)

قَالَ رُكَانَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ فَرْقَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ – الترمذي

عَمْرِو بْنِ حُرَيْثٍ - قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ مسلم 2431

عَنْ جَابِرٍ قَالَ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَالَ وَفِي الْبَاب عَنْ عَلِيٍّ

يَقُولُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي- ابوداوود 2557

أن ابن عمر - رضي الله عنهما - رأى مولاه نافعاً يصلي حاسر الرأس ، فقال له: " أرأيت لو أنك ذهبت إلى مقابلة أحد هؤلاء الأمراء أكنت تقابله وأنت حاسر الرأس ؟ قال: لا . قال: فالله أحق أن يتزين له

وعن عائشة قالت‏:‏ عمم رسول الله صلى الله عليه وسلم عبد الرحمن بن عوف وأرخى له أربع أصابع وقال‏:‏ ‏"‏إني لما صعدت إلى السماء رأيت أكثر الملائكة معتمين‏"‏‏.‏ رواه الطبراني في الأوسط
-وعن أبي عبد السلام قال‏:‏ قلت لابن عمر‏:‏ كيف كان رسول الله صلى الله عليه وسلم يعتم‏؟‏ قال‏:‏ كان يدور كور عمامته على رأسه ويغرزها من ورائه ويرسلها بين كتفيه‏.‏   رواه الطبراني في الأوسط
وعن أبي موسى أن جبريل نزل على النبي صلى الله عليه وسلم عمامة سوداء قد أرخى ذوائبه من ورائه‏.‏ رواه الطبراني

இன்றைய சவூதியின் செல்வச்செழுப்பின் பின்னணியில் இஸ்லாத்தை அறிந்து கொண்ட நண்பர்களே இதோ சவூதி அரசின் பத்வா

சவூதி அரசின் அதிகாரப்பூர்வ பத்வா இணைய தளமான  alifta.net  இது பற்றிய் ஒரு கேள்விக்கான பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
هل من سنن الصلاة تغطية الرأس؟ يعني لبس العمامة أو القلنسوة أو غيرها من سنن الصلاة؟
السنة للمصلي: أن يكون على أحسن وأجمل هيئة، وأكمل طهارة ونظافة؛ لقول الله تعالى: يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ أي: عند كل صلاة، ولما أثر عن ابن عمر رضي الله عنهما أنه قال لما سئل عمن يصلي مكشوف الرأس: (الله أحق أن يتجمل له من الناس) ، فتستحب تغطية الرأس في الصلاة ؛ لأنها من الزينة، وتصح صلاة مكشوف الرأس.    


சவூதி அரசு சார்ந்த இணைய தளமான islamway.net இணைய தளத்தில் ஒரு கேள்வியும் பதிலும்

ما هو حكم لبس القلنسوة؟
الإجابة: القلنسوة كان يلبسها النبي صلى الله عليه وسلم، والهدي العملي في عصر النبي صلى الله عليه وسلم وصحبه، بل يبقى هذا الإسناد متصلاً صحيح النسبة إلى عصر أجدادنا، فكانوا يعتبرون من مشى كاشف رأسه فاسقاً، حتى
لكن السنة العملية للنبي صلى الله عليه وسلم، وصحبه ستر الرأس. له صور ثلاثة كان يفعلها النبي صلى الله عليه وسلم، وهي القلنسوة، أو بالعمامة فوق القلنسوة، أو بالعمامة دون القلنسوة. فستر الرأس أحب إلى الله من كشفه.

தவ்ஹீதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சகோதர்ர்களின் தற்போதைய ஞானச்சூரியனான அல்பானி என்ன சொல்கிறார்? கேளுங்கள்.
قال الألباني في تمام المنّة
والذي أراه في هذه المسألة أن الصلاة حاسر الرأس مكروهة ذلك أنه من المسلم به استحباب دخول المسلم في الصلاة في أكمل هيئة إسلامية للحديث المتقدم في الكتاب : " . . فإن الله أحق أن يتزين له " وليس من الهيئة الحسنة في عرف السلف اعتياد حسر الرأس والسير كذلك في الطرقات والدخول كذلك في أماكن العبادات، بل هذه عادة أجنبية تسربت إلى كثير من البلاد الإسلامية حينما دخلها الكفار وجلبوا إليها عاداتهم الفاسدة فقلدهم المسلمون فيها فأضاعوا بها وبأمثالها من التقاليد شخصيتهم الإسلامية فهذا العرض الطارئ لا يصلح أن يكون مسوغا لمخالفة العرف الإسلامي السابق ولا اتخاذه حجة لجواز الدخول في الصلاة حاسر الرأس

தொப்பி துருக்கியர்களின் பழக்கம் வேதக்கர்ர்களின் பழக்கம் என்றும் மக்களை சிலர் ஏமாற்றி வருகிறார்கள். அவர்களே சமூகத்தில் அந்தஸ்து வேண்டும் என்பதற்காக தொப்பி  அணிந்தே எப்போதும் காட்சி தருகின்றனர். தொப்பியை வைத்தே சமூகத்தை பிளந்த திருவாளர் பிஜே தொப்பியை கழற்றினாராரா?

தொப்பி மரியாதையின் அடையாளம் என்று கருதுகிற சுன்னத் வல் ஜமாத்தின் பள்ளிவாசலில் தொழுகிற நண்பர்களே நீங்கள் நாகரீகம் தெரிந்தவர்களாக இருந்தால் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் தொழுகிற போது தொப்பியோடு தொழுங்கள். இல்லை உங்களால் அது முடியாது என்றால் உங்களுக்கேற்ற இடங்களுக்கு சென்று விடுங்கள்.

மறந்து விடாதீர்கள் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களுக்குள் சென்று தொப்பியில்லாமல் தொழுவது குழப்பம் செய்யும் ஒரு வழிமுறையேயாகும்.

சமுதாயம் பாழ்பட்டுக்கிடக்கிற நிலையில் குழப்பத்தை தவிர்த்து விடுவதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

தொப்பியும் தாடியும் பண்பான ஆடையும் முஸ்லிமின் புறச் சின்ன்ங்களாக அமைந்து விட்டன. ஆகையால்  இந்தச் சின்ன்ங்களை கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

ஆனால் இந்தப் புறச்சின்ன்ங்கள் மட்டுமே ஒருவரை முழுமையான முஸ்லிமாக்கிவிடாது இஸ்லாமின் வழிகாட்டுதல்களை அவர் பின்பற்றினால் மட்டுமே அது அவருக்கு அழகாக அமையும்.

தொப்பியையும் தாடியையும் வைத்துக் கொண்டு இஸ்லாமின் வழி காட்டுதல்களுக்கு எதிராக நடந்தால் அது இஸ்லாமை நாமே அவமதிப்ப்பதாகவும் பிறர் அவமதிப்பதற்கு காரண்மாகவும் அமைந்து விடும்.

சில மேதாவிகள் இந்த அடையாளங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை. உண்மையாக இருப்பதும் நேர்மையாக நடப்பதுமே உண்மையான முஸ்லிமின் இலக்கணம் என்றெல்லாம் அப்படி நடந்து கொண்டால் தொப்பியும் தாடியும் தேவையில்லை என்று பேசுவார்கள். அத்தகையோ தங்களது வாழ்க்கையில் இஸ்லாமின் அடையாளத்தை முன்னெடுக்கத் தயாராக இல்லாத கோழைகள் என்று நாம் ஒதுக்கி விடுவோம். இத்தகையோ பெருமானர்ருக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்கிற அதிகப் பிரசங்கிகள் என்று நாம் ஒதுங்கிக் கொள்வோம் அல்லாஹ் இத்தகையோருக்கு ஹிதாயத் செய்வானாக! சின்ன்ங்கள்   தேவையற்ற்வை என்று சொல்கிறவர்கள் தேர்தலை ஒரு முறை சிந்தித்துக் கொள்ளட்டும்.

முஸ்லிம் பெண்களின் சின்னம் பர்தா

عَنْ أَنَسٍ قَالَ قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ  - البخاري 4790

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(59) الأحزاب
பர்தா, முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்கும். அவர்களுக்கு  கண்னியத்தைப் பெற்றுத்தரும். எந்த வகையிலும் அவர்களது பண்பட்ட வாழ்க்கைகு இடையூறாக இருக்காது.

சின்ன்ங்கள் பரபரப்பாக இருக்கிற இன்றை கால கட்ட்த்தில் நாம் அல்லாஹ்வின் சின்ன்ங்களை மதிப்போம் மார்க்கத்தின் சின்ன்ங்களை கடைபிடிப்போம். முஸ்லிம் என்ற அடையாளத்தோடு வாழ முயற்சி செய்வோம்.

இஸ்லாம் முஸ்லிம் என்ற் சின்னம் நமக்கு இரு வாழ்க்கையிலும் வெற்றியை தரும்.

1 comment:

  1. நல்ல கட்டுரை ஆலிம் அல்லாதவர்களுக்காகதமிழ் மொழிபெயர்ப்புஅல்லது எண்தேவை

    ReplyDelete