வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 01, 2014

மூன்றாம் பாலினம்



கடந்த  15 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது

மூன்றாம் பாலினம் என்ற அறிவிப்போடு வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு உரிய உரிமையை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கவும், பொருளாதாரம் மற்றும் சமுகரீதியில் அவர்களை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் ஒரு கேலிப் பொருளாகவும் ஆபாச அமசமாகவும் கருதப் பட்ட திருநங்களைகளின் வாழ்க்கையில் இத்தீர்ப்பு  முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது,

இந்தியாவில் வாழும் பல லட்சம் திருநங்கைகள் சுயமரியாதையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான துவக்கமாக இது அமையும் என்கிறார் திருநங்கை ரோஸ் வெங்கடேசன் ராணி

இந்த தீர்ப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இனி பொருத்திருந்து பார்க்க வேண்டிய விசயம் என்றாலும் கூட அலி அரவாணி என்று அழைக்கப்பட்ட இப்பிரிவினரின் பரிதாபகரமான வாழ்க்கையைப் பற்றி ஒரு அக்கறையுள்ள சிந்தனை ஏற்படுவதற்கு இத்தீர்ப்பு வழி வகை செய்துள்ளது.

மூன்றாம் பாலினம் என்றால் யார்?

அல்லாஹ்வின் படைப்பில் மனிதர்களில் ஆண் பெண் என்ற பிரிவை இயறகையாக அல்லாஹ் அமைத்திருக்கிறான்,
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَتَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا(1)

ஆண் பெண் என்ற இந்த ஜோடி அமைப்புத்தான் உலகை அழகு படுத்து கிறது, இனப்பெருக்கத்திற்கு காரணமாகிறது, அத்தோடு பரஸ்பரம் அன்பையும் நெருக்கத்தையும் உண்டு பண்ணுகிறது.

குழந்தை ஆணா பெண்ணா என்பது அவர்களுடை இன உறுப்பை கொண்டு அடையாளம் காணப்படுகிறது,

இதில் மிக அதிசயமாக ஆண் பெண் இரண்டினுடை அடையாளத்துடனும் சில குழந்தைகள் பிறக்கின்றன, இது விபத்தாக அரிதாக நடக்கிறது. இந்தியாவில் 110 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் 

இதிக் சுமார் ஒண்ண்ரை லட்சம் திருநங்களை இருப்பதாக தொலைக் காட்சிச் நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை கூறினார். தமிழகத்தில் சுமாராக 30,000 திருநங்கைகள் இருக்கிறார்கள். என்று தினமணியின் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது,

இந்த எண்ணிக்கை சதவீதக் கணக்கில் மிக குறைந்த எண்ணிக்கையாகும்,

ஆதலால் திருநங்க்கள் பற்றி குர்ஆன் எந்த கருத்தையும் சொல்லவில்லை, பெரும்பாலும் இது பற்றி கேள்விகளும் எழவில்லை.

ஆனால் ஹதீஸ்களிலும் இஸ்லாமிய சட்ட நூல்களிலும் அரவாணிகளுக்கான சட்டங்களும் அவர்களோடு கலந்துறவாடும் முறைகளும் கூறப்ப்பட்டுள்ளன,

இந்திய உச்சநீதிமன்றம் 21 ம நூற்றாண்டில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது,  இப்போதும் கூட உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினமாக அறிவிக்க மட்டுமே செய்துள்ளது, அவர்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் இறுதியாக முடிவு செய்யவில்லை, இன்னும் ஆறு மாத காலத்தில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்ள மட்டுமே செய்து ள்ளது, இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முனே அரவாணிகளை மூன்றாம் பாலினத்தவராக அறிவித்து, அது மட்டுமல்ல அவர்களுக்கான சமூக பாதுகாப்பு  சொத்துரிமை ஆகியவற்றையும் உறுதி செய்துள்ளது ,

பள்ளிவாசலில் அரவாணிகளுக்கான சப் அணியை தனியாக இஸ்லாமிய சட்டம் வகுத்துள்ளது ஒரு ஆச்சரியமான அம்சமாகும்,

அதே நேரத்தில் அரவாணிகள் என்ற பெயரில் நடைபெறக் கூடிய தவறான் போக்குகளை கலைவதிலும் அரவாணீகள் என்ற பிரிவு சமூகத்தில் பெருகாமல் இருப்பதற்கும் இஸ்லாம் திட்டம் வரைந்துள்ளது,

முதலில் அரவாணிகள் குறித்த தவறான புரிதல்களை இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது,

இது நம்முடைய நாட்டு நீதிமன்றங்களும் பொது அமைப்புக்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.

உண்மையான  அரவாணிகள் யார் என்பதில் இன்னும் நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தவில்லை, பொது சமூகத்திற்கும் இதில் தெளிவில்லை, 

அரவாணிகள் அல்லாத அரவாணிகளின் சாயல் கொண்டவர்கள் அரவாணிகளாக சேர்க்கப்படுவதே இன்றைய சமூகத்தின் பெரும் பிரச்சினையாகும். இது பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருப்பதே
இன்றைய சமூகத்தில் திருநங்களின் கூட்டம் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

ஒரு ஆணிடம் பெண்ணின் சில இயல்புகள் உதாரண்மாக உடல் அசைவுகளில் ஒரு நளினம், அல்லது பெண்மை கலந்த குரல் வளம் தோற்ற அமைப்பில் பெண்ணின் சாயல் இருந்து விட்டாலே அவனை சந்தேகத்தோடு சமூகம் பார்க்கிறது, அவனும் தனது ஆண்மை குறித்து சந்தேக இயல்புக்கு ஆளாகி தன்னை பொதுச் சமூகத்திலிருந்து பிரித்துக் கொள்கிறான்,

இதை இஸ்லாம் ஏற்கவில்லை ஆண் உறுப்பு இருந்து அதன வழியாக சிறு நீர் வெளியேறினால் அவன் ஆண மகன் தான் என்றும் ,ஆண்களைப் போலவே அவன் நடத்தப்பட வேண்டும். அவனும் ஆண்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இதே போல உடல் ரீதியாக பெண்ணாக, பெண்ணிறுப்பின் வழி சிறு நீர்கழிப்பவளாக இருக்கும் பெண்ணுக்கு கரகரப்பான குரல்,  முறுக்கான உடல்வாகு போன்ற ஆண் தன்மையின் சாயல் இருக்கும். இத்தகைய பெண் பெண்ணாகவே கருதப்படுவாள். மகளிருக்கான சட்டங்களும் உரிமைகளும் அவளுக்கு பொருந்தும் அவள் அதுபோலவே நடந்து கொள்ள வேண்டும்.

இந்த குணமாற்றங்கள் இயற்கையாக இருந்தால் அது குற்றமில்லை.  வேண்டு மென்றே தங்களை மாற்றுப் பாலினமாக கருதி அவ்வாறு நடக்க முயற்சி செய்வார்கள் எனில் அது பாவம் குற்றம் என்றும் இஸ்லாமிய சட்டம் சொல்கிறது,

المذهب الشافعي هو من يتخلق بأخلاق النساء في حركة أو هيئة، فإن كان ذلك خلقة فلا إثم- مغني المحتاج

المذهب الحنفي أَنَّهُ إذَا كَانَ مُخَنَّثًا فِي الرَّدَى مِنْ الْأَفْعَالِ فَهُوَ كَغَيْرِهِ مِنْ الرِّجَالِ بَلْ مِنْ الْفُسَّاقِ يُنَحَّى عَنْ النِّسَاءِ. وَأَمَّا مَنْ كَانَ فِي أَعْضَائِهِ لِينٌ وَفِي لِسَانِهِ تَكَسُّرٌ بِأَصْلِ الْخِلْقَةِ وَلَا يَشْتَهِي النِّسَاءَ وَلَا يَكُونُ مُخَنَّثًا فِي الرَّدَى مِنْ الْأَفْعَالِ- المبسوط

இயற்கையாக இல்லாமல் செயற்கையாக பெண்களைப்போல நடந்து கொள்கிற ஆண்களையும் ஆண்களைப் போல நடந்து கொள்கிற பெண்களையும் பெருமானார் சபித்தார்கள்.

 
عن ابن عباس قال : لعن النبي صلى الله عليه و سلم المخنثين من الرجال والمترجلات من النساء وقال ( أخرجوهم من بيوتكم ) . قال فأخرج النبي صلى الله عليه و سلم فلانا وأخرج عمر فلانا .رواه البخاري

சட்டங்கள் இதற்கேற்ப வழங்கப்படும்

இத்தகைய இயல்பு வேறுபாட்டு பிரிவினர் ஆண்களாக இருந்தால் பெண்களோடு இருக்க அனுமதிக்க படமாட்டார்கள், பெண்களாக இருந்தால் ஆண்களோடு இருக்க அனுமதிக்கப் பட மாட்டார்கள், சொத்துரிமை விசயத்தில் ஆண்களுக்கு ஆண்களுக்குரிய பங்கும் பெண்களுக்கு பெண்களுக்குரிய பங்கும் வழங்கப்படும்.

இதில் ஒரு சலுகை என்னவென்றால் ?

இந்தப் பிரிவினரில் பெண் சாயலில் உள்ள ஆண்கள் காமச் இசை அற்றவர்களாக இருந்தால் அவர்கள் பெண்கள் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஹனபி மத்ஹபின் சட்டம் சொல்கிறது,
فَقَدْ رَخَّصَ بَعْضُ مَشَايِخِنَا فِي تَرْكِ مِثْلِهِ مَعَ النِّسَاءِ- المبسوط

திருக்குர் ஆனில் உள்ள غيراولي الإربة     என்ற வசனத்தின் பின்னணியில் இந்த அனுமதி தரப்படுகிறது.

மூன்றாம் பாலினரின் எண்ணிக்கை பெருக காரணம்.

பொது சமூகம் இத்தையை இயல்பு மாற்றங்களை உடையவர்களை சந்தேக்க்க் கண் கொண்டு பார்ப்பதும் கேலி கிண்டல் செய்வதும் அவர்களை பொது சமூகத்திலிருந்து வேறுபடுத்து கிறது, நெருக்கடிக்கு ஆளாகிற அவர்கள் மூன்றாம் பாலினத்தவரோடு சேர்ந்து கொள்கிறார்கள்.

ஆகையால் இக்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம் எதார்த்தமானது அல்ல.

இஸ்லாமிய சட்டம் இவர்களை மூன்றாம் பாலினராக ஏற்பதில்லை, அவர்களை அவர்களுக்கு உரிய அடையாளங்களின் படி நட்த்த உத்தரவிடுகிறது.

திருநங்களைகளை ப் பற்றி ஒரு கட்டுரை இந்த உண்மையை அப்படியே சொல்கிறது,
பெரும்பாலான திருநங்கைகள் ஆணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு,ஆணாகத்தான் பிறக்கிறார்கள். ஆண் உடலுடன் பெண்ணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை அவர்களிடம் இருக்கும். அதுபோலவே பெண்ணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, பெண்ணாக பிறந்தாலும் ஆணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை அவர்களிடம் இருக்கும்.

பத்து வயதுவரை பெண்தன்மை கொண்ட குழந்தைகளை அடையாளம் காண்பது பெற்றோருக்கு சிரமம்தான். பத்து வயதுக்கு மேல் பெண் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, அழகுணர்ச்சி அதிகமாகி சிறுமிகள்போல் அழகுப்படுத்திக்கொள்வது, வண்ண வண்ண உடைகள் மீது ஈர்ப்பு கொள்வது, சிறுவர்களிடம் இருந்து விலகிக்கொண்டிருப்பது போன்றவை பெண்தன்மை கொண்ட ஆண்குழந்தைகளிடம் காணப்படும். பெண்மை குணங்கள் கொண்ட சில ஆண் குழந்தைகளுக்கு தங்களுடைய பாலினம் பற்றிய குழப்பம் இருக்காது. பெண்தன்மை இருந்தாலும் தன் பாலின அடையாளம் ஆண்தான் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஒரு சிறுவன் திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் பருவ மாற்றத்தின் போது அவனுக்குள்ளும் சராசரியான ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். உயிரணு உற்பத்தியும் தொடங்கும். அதே நேரத்தில், அதைவிட வேகமாக பெண்தன்மைக்கான குணாதிசயமும், செயல்பாடும் அவனுக்கும் வளரும். இதனால் பருவமாற்றத்தின்போது ஆண், பெண்ணை விட இவர்கள் அதிக மனக்குழப்பத்தை அடைவார்கள். இந்த மனக்குழப்ப அறிகுறியை பெற்றோர் எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிந்தால். வீட்டில் அவர்களின் பழக்க வழக்க முரண்பாடுகளை பெற்றோர் புரிந்துகொள்வது போல், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களில் சிலரும் அந்த முரண்பாட்டை கண்டறிந்து கேலி, கிண்டல் செய்யக்கூடும். சில ஆசிரியர்கள்கூட தண்டனை வழங்குவது மட்டுமின்றி `பாலியல்கண்ணோட்டத்தோடும் அணுகக்கூடும். இதனால் கோபம், எரிச்சல் தோன்றி, மன அழுத்தத்தின் உச்சத்திற்கு திருநங்கைகள் சென்றுவிட வாய்ப்புண்டு.. 
இயல்புகளின் மாற்றத்தால் தங்களது குழந்தைகள் அடையாளச் சிக்கல்களுக்கு உள்ளாகிற போது பொறுப்பாக அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடமையாகும் அக்கட்டுரை தொடர்ந்து சொல்கிறது.

பாலியல் மாறுபாடு கொண்ட குழந்தைகளை பெற்ற பெற்றோர், உன் உணர்வுகளை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். யார் உன்னை கொச்சைப்படுத்தினாலும் சும்மா விடமாட்டோம். உனக்கு எங்கே, எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் எங்களிடம் சொல்என்று தன் குழந்தையை அரவணைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் பேசி யாரும் கேலி, கிண்டல் செய்யாத அளவிற்கு நன்றாகப் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

இத்தைய குழந்தைகளை பெற்றோரே தனிமைப் படுத்தக்கூடாது . இன்னொன்றையும் இங்கே கவனிக்க வேண்டும், ஆண் குழந்தைகளை பெண் பிள்ளைகளைப் போல் சிங்காரிப்பதை வழக்கமாக கொள்வது அவர்களுடனேயே பழகவிடுவது ஆகியவை ஆண் குழந்தைகளிடம் பெண்ணியல்புகளை தோற்று விக்கவும் அதன் பால் ஈர்ப்பு ஏற்படவும் காரணமாகலாம்.

குணத்தளவில் மாறுபாடுடையவர்களுக்கு சரியான கவுன்சிலிங்கும் அத்தைகைய குழந்தைகளை பெற்றவர்களுக்கு சரியான கவன்சிலிங்கும் வழங்கப்படுமானாம் சமூகத்தின் கேளிவிக்குரியான் நிலையிலிருந்து ஆண்களையும் பெண்களையும் பாதுகாக்க முடியும்,

இது விச்யத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதல்களை நீதிமன்றங்களும் பொது அமைப்புக்களும் கை கொள்ளுமானால் இந்த பரிதாபரகமான பிரச்சினைக்கும் சரியான தீர்வை தேடிக்கொள்ள முடியும்.

உண்மையான அரவாணிகளின் யார் என்பதை தீர்மாணிப்பதில் சரியான இஸ்லாம் கூறும் வழியில சரியான கவனம் செலுத்தப்பட்டால் அரவாணிகளின் சிக்கலை பெருமளவில் தீர்த்து விடலாம்,

உண்மையில் அரவாணிகள் என்போர் சிக்கலான் உடமைப்பை கொண்டவர்களேயாகும்,

ஆண், பெண்ணுக்குரிய இரு பால் உறுப்புகளும் சேர்ந்த நிலையில் பிறப்பவர்கள், இரண்டு உறுப்போடு தோன்றி, அவை வளராத நிலையில் இருப்பவர்கள், ஒரு உறுப்புகூட இல்லாமல் பிறப்பவர்கள் இவர்களே உண்மையில் அரவாணிகள் ஆவார்.

இத்தகையேர் மிக மிக குறைவானவர்களே!

இவர்களை ஆண் அல்லது பெண் என்ற ஒரு இனத்தோடு சேர்ப்பதற்கான முயற்சிகளை இஸ்லாம் வகுத்திருக்கிறது,

உடலில் சிக்கலான் தோற்றங்கள் அதவாது இரண்டு உறுப்புக்களும்  இருந்தால் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வைத்து முடிவு செய்யப்படும்
அதே போல தாடி முளைத்தல்  இந்திரியம் வெளிப்படல் ஆகியவற்றை கவனித்து ஆண் என்றும் மார்பு வளருதல் மாதவிலக்கு ஏற்படுதல் ஆகியவற்றை கவனித்து பெண் என்றும் முடிவு செய்யப்படும்.

இத்தகைய ஆய்வுகள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு  வந்து விடமுடியும் என்பதனால் ஷாபி மத்ஹபைச் சார்ந்தோர் பெரும்பாலும் மூன்றாம் பாலினம் என்ற பிரிவிற்கு தயாராவதில்லை, இன்னும் ஏராளமான அடையாளங்களை கூறி அதனடிப்படையில் அத்தகையோரை ஒரு பிரிவில் சேர்க்க முயல்கின்றனர்,
,
இதனடிப் படையிலும் முடிவு செய்ய முடியாவிட்டால் அது குன்ஸா முஸ்கில் சிரமமான பாலினம் என்று கருதப்படும்.
இந்தப் பிரிவினரை மட்டுமே இஸ்லாமிய சட்டங்கள் மூன்றாம் பாலினமாக காட்டுகின்றன, பிக்ஹு சட்டநூல்களில் இவர்களுக்கான சட்டங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

இவர்களுக்கான் சட்டங்கள்
தொழுகையில் ஆண்கள் சிறுவர்களுக்கு பின்னால் தனி அணியாக நிறுத்தப்படுவார்கள்.
பெண்களுடன் இருப்பதையோ பெண்களின் தனி இடங்களுக்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள், (இவர்களது பேச்சு வழக்குகள் பெரும்பாலும் ஆபாசமாக இருப்பதே காரணம்)
ذهبت الشّافعيّة وأكثر الحنفيّة إلى أنّ المخنّث - ولو كان لا إرب له في النّساء - لا يجوز نظره إلى النّساء ، وحكمه في هذا كالفحل : استدلالاً بحديث « لا يَدخلنَّ هؤلاءِ عليكنَّ:مغني المحتاج (3 / 128)

عن أم سلمة رضي الله عنها : دخل النبي صلى الله عليه و سلم وعندي مخنث فسمعه يقول لعبد الله بن أمية يا عبد الله أرأيت إن فتح الله عليكم الطائف غدا فعليك بابنة غيلان فإنها تقبل بأربع وتدبر بثمان وقال النبي صلى الله عليه و سلم ( لا يدخلن هؤلاء عليكن ) .متفق عليه

உம்மு சலமா (ரலி) கூறுகிறார்
என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்)"அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்
அந்த "அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், "அப்துல்லாஹ்வே!நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால்நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள்
ஏனென்றால் அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன்
(இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள் அறிவிப்பவர் : நூல் : புகாரி (4324)

இவர்கள் அறுத்த்தை சாப்பிடலாம்
نصّ الحنفية على جواز ذبيحة المخنث .الجوهرة النيرة (5 / 258) ،الفتاوى الهندية (5 / 286).

والخلاصة أن مذهب الجمهور إباحة ذبيحة المخنث ،عدا المالكية الذين كرهوا ذلك ،والكراهة لا تنافي الجواز .


தீய நட்த்தை இல்லாத மூன்றாம் பாலினரின் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படும்

صرّح الحنفيّة أنّ المخنّث الّذي لا تقبل شهادته هو الّذي في كلامه لين وتكسّر ، إذا كان يتعمّد ذلك تشبّهاً بالنّساء . وأمّا إذا كان في كلامه لين ، وفي أعضائه تكسّر خلقةً ، ولم يشتهر بشيء من الأفعال الرّديئة ، فهو عدل مقبول الشّهادة .


சொத்துரிமை உண்டு

மூன்றாம் பாலினத்தவராக இருப்பவரை ஆணாகவும் பெண்ணாகவும் கருதி கண்க்கிட்டு பார்க்கிற போது எது குறைந்த படச அளவாக வருகிறதோ அதை அவருக்கு கொடுக்கப்படும்.


وقد أجمع العلماء على أن الخنثى يورث حسب ما يظهر فيه من علامات مميزة، فمثلا: إن بال من حيث يبول الرجل ورث ميراث الرجل، وإن بال من حيث تبول المرأة ورث ميراث المرأة، وقد نقل الإجماع على هذا ابن المنذر وغيره.
أما إذا لم يظهر حاله، فهو خنثى مشكل، وللخنثى المشكل حالتان:
الأولى: أن يرجى اتضاح حاله من ذكورة أو أنوثة، وفي هذه الحالة يوقف أمره وينتظر اتضاحه إن أمكن،
الحالة الثانية: هي أن يبقى الخنثى مشكلا ولم يتضح، فميراثه على النحو التالي:

إن كان إرثه واحدا على تقدير ذكورته أو أنوثته أعطي نصيبه كاملا، وكذلك من كان معه من الورثة، أما إذا كان إرثه يختلف باختلاف التقدير بأنثى أو ذكر، فقد اختلف العلماء في توريثه على مذاهب:
الأول: وهو مذهب الحنفية، أنه يعامل بالأضر وحده دون من معه من الورثة.
الثاني: وهو مذهب الشافعية، أنه يعامل كل من الخنثى ومن معه بالأضر، سواء كان يُرجى اتضاحه أو لا يُرجى.


இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களிலிருந்து கீழ் காணும் வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன,

·         ஆய்வுகளின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தார் என்பதை கூடுமானவரை தடுக்க முடியும்.
·         இந்த முயற்சியை உறவினர்களும் சமூகமும் செய்ய வேண்டும்.
·         எந்த வகையிலும் தீர்வு காண முடியாவிட்டால் அவர்கள் மூன்றாம் பாலினத்தவரா கருதப்படுவர்,
·         இத்த்கையோருக்க்கான அடிப்படை உரிமைகளும் மரியாதையும் வழங்கப்படும்,
·         அவர்களும் இஸ்லாமின் ஒழுக்க வழிகாட்டுதல்களுக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும்.
·         அதே நேரத்தில் இத்தகையோரிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
·         தவறான இயல்பு கொண்டவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்.
·         வேண்டும் என்றே மூன்றாம் பாலினத்தவராக காட்டிக் கொள்ள முய்றசிப்பது சாபத்திற்குரிய குற்றமாகும்
·         இத்தகைய மூன்றாம் பாலினத்தவரில் தீய வழக்கங்கள் இல்லாதவர்களிடம் அன்புடனும் கருணையுடனும் மனிதாபிமானமாகும். ஊனமுற்றவர்களிடம் நடந்து கொள்வதைப் போல
·         இவர்களை கேலி கிண்டல் செய்வது மிமிக்ரி செய்வது சீண்டுவது உடல் அசைவுகளை நடித்துக் காட்டுவது மனிதாபிமானத்திற்கு எதிரானதாகும்.
·         இத்தகைய செயல்களே அவர்களை தனி வழியில் செல்லத் தூண்டுகின்றன,
·         وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ(1)
·         குறை சொல்லிப் புறம் பேசித்திரியும் ஒவ்வொரு வருக்கும் கேடுதான் என்ற இந்த ஆயத்திற்கு முப்தி ஷபீ சாஹிப் கேலி நக்கல் நையாண்டி மிமிக்ரி என என எந்த வகையிலும் பிற்றை குறை கூறக் கூடாது என அற்புதமாக விளக்கம் எழுதியுள்ளார்கள்
·         பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக  கைவிடப்படுகிறவர்களே எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். இத்தகைய சூழ்நிலை உருவாகாமல் இருக்க நம்மால் இயன்றவரை ஒத்துழைப்பாக இருப்போம்,
இத்தகைய மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்

·          وإننا لننصح المخنث :بالتوبة إلى الله تعالى،
وأن يتعلم العلم الشرعي الذي يرغبه في الطاعة، وينفره من المعصية،
وأن يلزم الصحبة الصالحة التي تحضه على الخير، وتعينه عليه،
وليعلم أن أعظم الناس خسارة الذي يخسر دنياه وأخراه، والله أعلم

·         மூன்றாம் பாலினத்தவரில் தீய நட்த்தை உள்ளவர்களிடமிருந்து முற்றாக விலகி இருக்க வேண்டும். அவர்களோடு சிரித்து விளையாடுவது கும்மாளமடிப்பது சேர்ந்திருப்பது அனைத்தும் தீயதாக முடியும்.

واعلم أن الواجب على المسلمين هجرهم والإنكار عليهم فلا يقصد المكان الذي هم فيه ولا يستأجرون في العمل في البيوت والمطاعم ومحلات الحلاقة ونحوها من الأماكن ولا يسمح لهم بالاختلاط بالرجال أو النساء اتقاء لشرهم وإنكاراً عليهم، وإذا اتفق أن تواجد الشخص في مكان فيه هؤلاء فيغض الطرف عنهم وينكر عليهم حسب الإمكان

இன்றைய சூழலில் உச்ச நீதிம்னறம் மூன்றாம் பாலினம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது,
அது இந்தப் பிரிவினர் அல்லது இதன் பெயரால் இயங்குபவர்கள் சமூகத்தில் தீய செயல்களுக்கான களமாக இருக்க அனுமதிப்பதாக அமைந்து விடக்கூடாது,
மனிதாபி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு நல்ல விளைவை தரவேண்டு மெனில் இஸ்லாமிய கருத்தோட்ட்த்தின் அடிப்படையில் சரியான் ஆய்வுகள் மூலம் மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாம் பாலினமாக தங்களை கருதிக் கொள்வோருக்கு தகுந்த கவுன்சிலிங்க் உள்ளிட்ட மனோத்த்துவ சிகிட்சைகள் வழங்கப்படுவதற்கான் முன் முயற்சிகளுக்கு உச்சநீதிமன்றம் வழிகாணவேண்டும். அது வே சரியான மனிதாபிமான வழிமுறையாக இருக்கும்.
அவ்வாறில்லாமல் இன்றைய இந்த தீர்ப்பு நாளை ஒருபாலினச் சேர்க்கைகு அனுமதிக்கிற முன்னோடியான தீர்ப்பாக இருக்கும்மென்றால் இந்த நடவடிக்கை மனித குலத்திற்கு எதிரானதாக அமையும்,
அல்லாஹ் பாதுகாப்பானாக!



2 comments:

  1. Ungalin uyarntha arivaatralukku matrumor ariyaasanam...
    Jazaakkallah khairan...

    ReplyDelete