வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 01, 2014

சென்னை குண்டுவெடிப்பு

சென்னையில் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ ஆறுதலையும் பிர்தியையும் அளிப்பானாக!
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
வழக்கம் போல அவரசர அவரசரமாக முஸ்லிம்களை கைது செய்து பைலை மூடிவைத்து விட தமிழக  காவல் துறையும் இந்திய உளவுத்துறையும் மத்திய மாநில அரசுகளும் முய்ற்சிக் கூடாது,
இன்று முஸ்லிம்கள் இருக்கிற பரிதாபகரமான சூழ்நிலையில கொசுவுக்கு மருந்தடிப்பதை விட் முஸ்லிம்களை கைது செய்வது அரசாங்கத்திற்கு இலேசான விச்யமாக இருக்கலாம். ஆனால் இந்தப் போக்கினால் உண்மையான குற்றவாளிகள தொடர்ந்து  தப்பி விடுகிறார்கள். தொடர்ந்து நாட்டில் அப்பாவி மக்களை குறிவைத்து இத்த்கையை பயங்கரவாதச் செயல்கள் நடந்து வருகின்றன, அது தடுக்கப் பட வேண்டுமெனில் சம்பந்தப் பட்டவர்கள் நிதானமாகவும் உறுதியாகவும் புலனாய்வு செய்து உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும்  குற்றம் நிகழ்ந்தது எப்படி ? குற்றத்திற்கான காரணம் என்ன? திட்டம் தீட்டியது எவ்வாறு என்ற விவரங்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
சமீப காலமாக் நாட்டிற்கு பிடித்த சோதனை  இது போல ஏதாவது ஒரு விபத்து  நடந்து விட்டால்  முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதோடு கதை முடிக்கப் பட்டுவிடுகிறது, மற்ற விபரங்கள் தெரிவதே இல்லை.
இந்த நாட்டின் உளவ் அமைப்பை மூடி இருக்கிற மர்மத்திரையையே இது புலப்படுத்துகிறது.

No comments:

Post a Comment